உலகம்
முழுவதும் உள்ள சுமார் 140 கோடி கத்தோலிக்க
கிறிஸ்தவர்களின் மதத் தலைவராக வாடிகன் நாட்டில் உள்ள போப் செயல்படுகிறார். ஏப்ரல் 21 அன்று போப் பிரான்சிஸ்
இறந்ததை அடுத்து, அடுத்த போப்பை
தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் துவங்கி விட்டது. வருகிற மே 7ஆம் தேதி இதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
135 கார்டினல்கள் வாக்களித்து புதிய போப்பை தேர்ந்தெடுக்க
உள்ளனர். இது தேர்தலுக்கான மாநாடு என்று அழைக்கப்படுகிறது. புதிய போப் மூன்றில் இரண்டு பங்கு (90 வாக்குகள்) பெரும்பான்மை
பெற வேண்டும். ஒரு போப்பை தேர்ந்தெடுக்க எவ்வளவு நாட்கள்
ஆகும். சில தேர்தல்கள் ஒரு சில நாட்களில் முடிந்து விடும்.
சில தேர்தல் பல மாதங்கள் கூட நீடிக்கும் இதற்கு கால வரம்பு இல்லை.
முதல்
நாள் நடைபெறும் வாக்கெடுப்பில் யாரும் வெற்றி பெறவில்லை என்றால், அடுத்த இரண்டு நாட்களில் காலையில் இரண்டு வாக்கெடுப்புகளும், பிற்பகலில் இரண்டு வாக்கெடுப்புகளும் நடத்தப்படும்.
இந்த மூன்று நாட்களில் முடிவுகள் வரவில்லை என்றால் ஒரு நாள் இடைவெளி விடப்படும். அந்த நாட்களில் கார்டினால்களில் இடையே
கலந்துரையாடல் செய்வதற்கான அனுமதி வழங்கப்படுகிறது. பெரும்பான்மை கிடைக்கும் வரை
இந்த செயல்முறை காலவரையின்றி தொடரும்.
2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் ஐந்து முறை வாக்குச்சீட்டுகள்
பயன்படுத்தப்பட்டு 27 மணி நேரத்தில் புதிய போப் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2005 ஆம் ஆண்டு நான்கு முறை
வாக்கு சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு புதிய போப் 24 மணி நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மிக
நீண்ட நாட்கள் நடந்த தேர்தல் 1268 ஆம் ஆண்டு
நடந்தது. போப் ஆறாம் கிளமெண்ட் மரணம் அடைந்ததை தொடர்ந்து,
அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் தேர்தல் நடைபெற்றது. அதாவது 1006 நாட்கள் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகுதான் புதிய போப்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.அப்பொழுது கார்டினால்கள் வெளி
உலகத்தில் தொடர்போடு இருந்தார்கள். வெளி உலகத்தின் அரசியல், மதம், குடும்பம் என பல்வேறு தலையிடுதல் போப்பின்
தேர்தலில் இருந்து கொண்டே இருந்தது.
இந்த
நீண்ட நாட்கள் நடைபெற்ற தேர்தல் 1271 ஆம் ஆண்டு
முடிவுக்கு வந்தது. போப் பத்தாம் கிரிகோரி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகு சில கட்டுப்பாடுகள் தேர்தல் முறைகளில் கொண்டு வரப்பட்டது. 1268-71 என மூன்று வருட கால நடைப்பெற்ற தேர்தல்கள் சரி செய்வதற்காக
தேர்ந்தெடுக்கப்பட்ட போப் பத்தாம் கிரிகோரி தேர்தல்கள்
ரகசியமாக நடைபெறுவதற்காக சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். கார்டினால்கள் கான்கிளவே என்ற முறையில் தனிமையில் அடைத்து வைக்கப்பட வேண்டும் என்று
அறிவித்தார். இது எந்த ஒரு அரசியல் அல்லது தனிப்பட்ட தலையிடும் இல்லாமல் கார்டினால்கள் கத்தோலிக்க திருச்சபையின் அடுத்த தலைவரை
தேர்ந்தெடுக்கும் பணியில் கவனம் செலுத்த முடியும் என்பதற்கான கொண்டு வந்தார்கள் என்று
சொல்லப்படுகிறது.
வெளியில்
இருந்து செல்வாக்கு செலுத்துவதற்கு
காடினல்கள் கூடியிருக்கும் சிஸ்டைன்
தேவாலயத்திற்கு கொண்டுவரப்படும் உணவில் துண்டு சீட்டுகள் மறைக்கப்பட்டு
கொண்டுவரப்பட்டன. இதற்கு உணவு பைகள்,
கோழிகள், கட்டிலரிகள் போன்ற உணவு வகைகள் துண்டு சீட்டுகளை
கொண்டு வருவதற்கு வசதியாக இருந்தது. எனவே போப் தேர்தல்
நடைபெறும் இக்காலத்தில் இந்த உணவுகள் தடை செய்யப்பட்டு கன்னியாஸ்திரிகள்
கார்டினர்களுக்கு வேகவைத்த காய்கறிகள் மற்றும் திரவ உணவுகளை உள்ளே தயாரித்துக்
கொடுத்தனர். இப்போது தேர்தல் முறைகளில் மாற்றம் ஏற்பட்டு
அதாவது கட்டுப்பாடுகள் கொண்டு வந்தாலும் வெளி தலையீடு இல்லை
என்று சொல்ல முடியாது.
புதிய
போப்
தேர்ந்தெடுக்கப்பட்டால் வெளி உலகத்திற்கு அறிவிப்பதற்கு
தேவாலயத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புகைக்கூண்டு மூலம்
புகைகள் வெளியேற்றப்படும். ஒவ்வொரு சுற்று வாக்கெடுப்பிற்கு பிறகும் அந்த வாக்குச் சீட்டுகள் எரிக்கப்படும். பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் வாக்குச் சீட்டுகளில் பொட்டாசியம், பெர்க்ளோரேட், ஆந்திராசீன், சல்பர் ஆகியவை சேர்க்கப்பட்டு
கரும்புகை உருவாகும். போப் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டால்
பொட்டாசியம், குளோரைடு, லாக்டோஸ், குளோரோஃபார்ம் பிசின் ஆகியவற்றின் வேறுபட்ட செய்முறைகளை வாக்குச்சீட்டு
காகிதங்களில் சேர்த்து எரிக்கப்பட்டு வெள்ளைப்புகை உருவாகும்.
மே
7ஆம் தேதி நடைபெறுகிற தேர்தலுக்காக தற்போது முடிவுகளை அறிவிக்கக்கூடிய
புகைக்கூண்டு மே 2ம் தேதி முதல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்கு பல நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான
கத்தோலிக்கர்கள் வாடிகனில் கூடுவார்கள். 2013 ஆம் ஆண்டு போப்
பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரு லட்சம்
மக்கள் கூடி இருந்தார்கள்
கத்தோலிக்க
திருச்சபையில் தற்பொழுது 252 கார்டினல்கள்
பணியாற்றி வருகின்றனர் இவர்களில் 135 பேர் மட்டுமே
மாநாட்டில் வாக்களிக்க தகுதி உடையவர்கள். (தற்போது ஒருவர் இதில் கலந்து
கொள்ளவில்லை) 80 வயதுக்கு மேற்பட்ட கார்டினால்கள் இந்த தேர்தலில் பங்கு பெறுவதற்கு அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தக்
கட்டுப்பாடு 1970 ஆம் ஆண்டு போப் ஆறாம் பால் நடைமுறைக்கு
கொண்டு வந்தது. அவர் ஒரு புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் போது
அதிகபட்சமாக 120 கார்டினால்கள் இருந்தால் போதும் என்று பரிந்துரைத்தார். தற்போது 135 கார்டினால்கள் வாக்களிக்க இருக்கிறார்கள். கடந்த சில நூற்றாண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு போப்பும் ஒரு கார்டினாலாக இருந்திருந்தாலும் அது ஒரு
கட்டாயம் இல்லை. உண்மையில் ஞானஸ்நானம் பெற்ற எந்த கத்தோலிக்க ஆணும் (பெண்கள்
இல்லை) போப்பாக
தேர்ந்தெடுக்கப்படலாம். ஆனால் கார்டினாளாக இல்லாத ஒருவரை தேர்ந்தெடுப்பது மிக
அரிதான விஷயமாகும். கார்டினலாக இல்லாத ஒருவர் 1378 ல் ஆறாம்
அர்பன் தேர்வு செய்யப்பட்டார்.
பழமையான பொருத்தமற்ற முறையில் மாற்றத்திற்கு உள்ளாவது தவிர்க்க முடியாதது. அது எங்கும் எதிலும் நடக்கும்.
அ.பாக்கியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக