Pages

செவ்வாய், டிசம்பர் 12, 2017

அம்மாவின் சட்டமன்ற கட்டிடமும் ஐந்து குடிசை அம்மாக்களின் ஆலோசனையும்

                         ஏ.பாக்கியம்

           

தமிழக சட்டமன்ற கட்டிடம் இடம் நெருக்கடியால் செயல்படமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று முடிவெடுத்து திமுக ஆட்சியில் புதிய சட்டமன்ற கட்டிடம் அரசினர் தோட்டத்தில் அவசர அவசரமாக கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அன்று நடைபெற்ற தேர்தலில் திமுக ஆடசியை இழந்து அதிமுக தலைமையில் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். புதிய சட்டமன்ற கட்டிடத்தை அவர் விரும்பவில்லை. எனவே, இடம் நெருக்கடி இருந்தாலும் பழைய சட்டமன்ற கட்டிடம் பாரம்பரியமான கட்டிடம் என்று பாரம்பரியத்தை பாதுகாக்கக்கூடிய முறையில் அதே இடத்தில் சட்டமன்றத்தை நடத்தினார். 

           இதே பாரம்பரியத்தை நகர்புற ஏழை மக்கள் மீது அவரின் அரசு ஏன் காட்டக்கூடாது. பாரம்பரியமாக குடியிருந்து வரும நகர்புற ஏழைகளையும், குடிசைவாழ் மக்களையும் சென்னையை விட்டு துரத்தக்கூடிய செயலை அவர் தலைமை தாங்கிய இன்றைய அரசு செய்து வருகிறது. தற்போது சென்னை நகரில் அடையாறு, கூவம் நீர்நிலை குடியிருப்புகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சிந்தாதரிபேட்டையில் உள்ள ஐந்து குடிசை என்ற பகுதி மக்களை வெளியேற்றுவதில் மாநில அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.

             சிந்தாதரிபேட்டை 62வது வட்டத்தில் ஐந்து குடிசை என்று பெயரில் சுமார் 950 குடிசைகள் இருக்கிறது. பலபத்தாண்டுகளுக்கு முன்பு ஐந்து குடிசை என்ற நிலையிலிருந்து இந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த 950 வீடுகளில் மாநில அரசு தீப்பிடிக்காத வீடுகள் என்ற முறையில் 350 வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளது. இந்த குடிசைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளது. ஆதார் கார்டு உள்ளது. மின் இணைப்பு உள்ளது. வங்கி கணக்கு உள்ளது. இது போன்ற அரசின் அனைத்து ஆதாரங்களையும் வைத்துள்ளனர். ஆனால் தற்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு என்ற முறையில் இவர்களை அப்பறப்படுத்த அரசு நிர்வாகம் முயற்சிக்கின்றது. நீர்நிலைகளை ஆக்கிரமித்தால் அவற்றை அப்புறப்படுத்துவது நியாயமானது.

           இந்த முயற்சியை யாரும் எதிர்ப்பதில் நியாயம் இருக்காது. அதே நேரத்தில் இம்மக்களை 40 கி.மீ தாண்டி பெரும்பாக்கத்தில் குடியமர்த்துவதை மனித உரிமை அடிப்படையிலும், இயற்கை நியதி அடிப்படையிலும் ஏற்று கொள்ள முடியாது. அருகிலேயே வீடு கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தால் எங்கே இடம் இருக்கிறது என்று அதிகாரிகளும் அரசும் ஏழை மக்களை பார்த்து கேள்வி கேட்கிறது. ஆனால் ஐந்து குடிசை மக்கள் இருக்கிற இடத்தை சுட்டகாட்டினால் அந்த இடத்தில்  வீடு கட்டி கொடுக்க மறுக்கிறார்கள். இதோ அதற்கான விவரங்களை அரசிடம் மீண்டும் பாரம்பரிய குடியிருப்பாளர்கள் முன்வைக்கிறோம்.

            ஐந்து குடிசை பகுதியில் தற்போது அரசு கட்டிக் கொடுத்த கல்நார் வீடுகள் உட்பட 950 வீடுகள் உள்ளன. அரசின் திட்டப்படி ஆற்றின் மையப்பகுதியிலிருந்து 50 மீ தூரம் வரை இரு கரைகளிலும் எந்த கட்டுமானமும் இருக்கக்கூடாது என்றும் 50 மீ வரையிலான ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் என்றும் திட்டம் உள்ளது. ஆனால் ஐந்து குடிசை பகுதியில் ஆற்றின் நடு பகுதியிலிருந்து குடிசை பகுதி வரை 246 அடி உள்ளது. இதில் 50 மீ போக மீதம் 76 அடி அகல நிலம் உள்ளது. மறுபுறத்தில் சிந்தாதரிப்பேட்டை காவல்துறை சாவடியிலிருந்து நெடுஞ்செழியன் காலனி வரை 800 அடி நீளம் உள்ளது. இந்த இடங்களில்தான் பெரும்பாலான குடிசைகள் உள்ளன.

        எனவே, இந்த இடத்தின் மொத்த அளவு 60,800 சதுர அடியாகும். ஆற்றிலிருந்து 50 மீ க்கு அப்பால் உள்ள இந்த இடத்தில் ஏன் எங்களுக்கு மாடி வீடு கட்டிக்கொடுக்கக்கூடாது என்று அப்பகுதி மக்கள் கேள்விகள் கேட்கிறார்கள். 60,800 சதுர அடியில் கட்டிட பயன்பாடுகளுக்கு பொது இடமாக 20,000 சதுர அடியை அதவாது 33 சதவீதம் இடத்தை ஒதுக்கிவிட்டாலும் மீதி 40,800 சதுர அடி இருக்கிறது. இந்த நிலத்தில் அரசு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 சதுர அடி என்று வீடு கட்டிக் கொடுத்தால் கூட தரைத்தளத்தில் 102 வீடுகள் கட்டலாம். எனவே, இதையே செம்மஞ்சேரியில் கட்டியது போல் 8 அடுக்குகள் கட்டினால் 816 வீடுகள் கட்ட முடியும். இப்பகுதி மக்களின் 99 சதவிதம் குடும்பங்களுக்கு இங்கேயே வீடு கொடுக்க முடியும். இந்த ஐந்து குடிசையில் வாழக்கூடிய மக்கள் வானகரம் மீன் மார்கெட்டிலும், சிந்தாதரி  மீன் மார்கெட்டிலும், மீன்கள் ஏற்றுமதி செய்யக்கூடிய கூடங்களிலும், சிந்தாதரிபேட்டை சுற்றுவட்டாரத்தில் முறைசாரா தொழிலிலும் ஈடுபடக்கூடியவர்கள்.

           இவர்களின் குழந்தைகள் இங்கிருக்கக்கூடிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வருகிறார்கள். பெரும்பாக்கத்தில் வீடு கட்டிக் கொடுப்பதற்கு ஒரு வீட்டிற்கு ரூ 6.5 லிருந்து 7 லட்சம் வரை (கமிஷன் எவ்வளவு என்று தெரியாது) செலவழிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னைக்குள்ளேயே இதே தொகையில் வீடு கட்டிக் கொடுக்க முடியும் என்று பல நிறுவனங்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளன. மேற்கண்ட 816 வீடுகளை கட்டுவதற்கு ரூ 57 கோடி மட்டும்தான் செலவாகும். (சேகர் ரெட்டி வகையறாக்களிடம் இதை விட பலமடங்கு பணம் இருக்கிறது.) இதை ஏன் அரசு செய்யக்கூடாது என்று அப்பகுதி பெண்கள் கேள்வி கேட்கிறார்கள்.

         ஆற்றின் ஓரத்தில் இவளே பெரிய அடுக்குமாடி வீடுகளை கட்டிக் கொடுக்க முடியாது என்று அரசு அதிகாரிகள் மறுக்க முடியாது. காரணம் ஐந்து குடிசைக்கு அருகாமையிலேயே நெடுஞ்செழியன் என்ற பெயரில் நான்கு மாடி உயரத்தில் பல அடுககுமாடி கட்டிடங்களை இதை குறைவான இடத்தில் குறைவான அளவில் வீடுகளை கட்டிக் கொடுத்திருக்கிறார்கள். பல பத்தாண்டுகளாக அந்த வீடுகள் பழுதடையாமல் இருக்கிறது. ஆகவே அரசு எந்த காரணத்தை சொல்லியிம் இந்த நியாயமான கோரிக்கையை தட்டிக் கழிக்க முடியாது.

              இதை மீறி அரசு இதை தட்டிக் கழிக்க முயற்சிக்கிறது என்றால் அந்த இடத்தை வசதி படைத்தவர்களுக்கு தாரை வார்ப்பதற்காக தயாராகிவிட்டது என்றுதான் அர்த்தம். ஏற்கனவே,  போரூர், சித்ரா தியேட்டர் எதிரில் உள்ள நிலம், சிட்டி சென்டர் உள்ள இடம் ஆகிய இடங்களிலிருந்து நகர்புற ஏழைகள் வெளியேற்றப்பட்ட உடன் அங்குள்ள நிலங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம்விளக்கு பகுதியில் திடீர் நகரும் இதில் சேரலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேப்பாக்கம் பகுதியிலேயே பூதபெருமாள் கோயில் தெருவில் உள்ள மக்களுக்கு அருகாமையிலுள்ள காலி இடங்களில் வீடு கொடுக்க முடியும்.

               

இதே போன்று துறைமுக தொகுதிக்குட்பட்ட காந்தி நகர், இந்திரா நகர் பகுதிகளிலும் அடுக்குமாடி வீடுகளை கட்டி கொடுக்க முடியும். இதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. அனைத்து மக்களுக்கான அரசு என்று மார்தட்டிக் கொண்டால்மட்டும் போதாது. அடித்தட்டு மக்களுக்கு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இது போன்று வெளியேற்றப்படும் ஒவ்வொரு பகுதியிலும் அம்மக்களை குடியமர்த்த இடங்கள்  இருக்கிறது. அதை கண்டுபிடித்து அமுலாக்க வேண்டும்.

தீக்கதிர் 10.12.2017

வியாழன், டிசம்பர் 07, 2017

பாரதிய ஜனதாவும் பத்மாவதியும்

அ.பாக்கியம்



வரலாற்றை திரிப்பது தேசத் துரோக குற்றத்திற்கு சமமானதுஎன்று பாஜ உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். பத்மாவதி படம் எடுத்த பன்சாலி கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். வரலாற்றை திருத்துவதன் மூலம் தேசத்துரோக குற்றம் இழைத்துள்ளார் என்று உ.பி.யின் பாஜ தலைவர்களில் ஒருவரான அர்ஜூன் குப்தா உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வரலாற்றை திரிப்பதற்கும், தவறாக சித்தரிப்பதற்கும் யாரும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று பன்சாலிக்கு அரியானா மாநில பாஜ அமைச்சர் விபுல் கோயல் மிரட்டல் கடிதம் எழுதியுள்ளார்.

வரலாற்றை திரிப்பதற்கும், தவறாக சித்தரிப்பதற்கும் தேச துரோகி பட்டம் சூட்ட முடியும் என்றால் பிரதமர் மோடியில் ஆரம்பித்து பாஜ - சங்பரிவார தலைவர்களுக்குத்தான் முதலில் தேச துரோகி பட்டம் சூட்ட வேண்டும். அந்த அளவிற்கு வரலாற்றை திரிப்பது மட்டுமல்ல : மாற்றி எழுதுவது, மறைப்பது, புரட்டுகளை முன்வைத்து பாடப்புத்தகங்களை நிறைப்பது என பல பணிகளை பாஜ - சங்பரிவாரங்கள் செய்து வருகின்றன.

பொய் வரலாறு உற்பத்தியாளர்கள்
பொய்யிலே கால்படி, புரட்டிலே முக்கால்படி என பொய் வரலாறுகளை உற்பத்தி செய்திட பாஜ - சங் பரிவாரங்கள் பல ஆயிரம் கோடி மூலதனத்தில் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கியுள்ளன. மேக் - இன் - இந்தியா ஆரம்பித்து தோல்வி அடைந்துவிட்டார்கள். அவர்களால் தொழிலையும் வளர்க்க முடியவில்லை ; வேலை வாய்ப்பையும் உருவாக்க முடியவில்லை. எனவே தற்போது மேக்-இன்-ஹிஸ்ட்ரியை உற்பத்தி செய்ய ஆரம்பித்துவிட்டனர். நாங்கள் உற்பத்தி செய்து கொடுக்கும் வரலாற்றைத்தான் அனைவரும் வாங்க வேண்டும் ; பேச வேண்டும் ; எழுத வேண்டும் ; படிக்க வேண்டும் என அதிபயங்கர மிரட்டலுடன் பவனி வருகின்றனர். வரலாற்றை இந்துத்துவா வகுப்பு வெறிக்கு பயன்படுத்தக்கூடிய முறையில் மாற்றி எழுதி வருகின்றனர். இந்த பொய் வரலாறு உற்பத்தி சாலையின் தற்போதைய வெளியீடு, ராஜ்புத் கர்ணிசேனாவின் பத்மாவதி வரலாறாகும். இந்த கர்ணிசேனா மிகப்பெரிய போராட்டம் நடத்துவதற்கோ, கலவரம் செய்வதற்கோ சக்தி படைத்த அமைப்பு அல்ல. ஆனால், ராஜஸ்தான் முழுவதும் கலவரம், படக்குழுவை தாக்குவது, தலைக்கு விலை பேசுவது போன்ற வன்முறைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு பின்னால் பாஜ - சங் பரிவாரங்களின் ஆதரவு இல்லாமல் இவை நடக்காது என்பது ஊரறிந்த உண்மை. ராஜபுத்திர கௌரவம், மக்கள் உணர்ச்சி என்பதை முன்வைத்து மக்களிடையே பிரிவினையை உருவாக்குவதற்கு கர்ணிசேனா என்ற முகமூடி சங் பரிவாரங்களுக்கு தேவைப்படுகிறது.
தற்போது பன்சாலி இயக்கி தீபிகா படுகோன் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஜபுத்திர கௌரவத்தை சீர்குலைக்கிற எந்த காட்சிகளும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுவிட்டது. தணிக்கைக்குழுவும் தடை விதிக்கவில்லை. உச்சநீதிமன்றமும் சங் பரிவார அமைப்புகள் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது. இவை அனைத்தையும் விட பாஜ - சங் பரிவாரங்களின் ஊடக குருவான ரிபப்ளிக் அர்னாப் கோஸ்வாமி, இந்த படத்தில் ராஜபுத்திர பெருமை பேசப்படுகிறது, கர்ணிசேனா முட்டாள் தனமாக நடந்து கொண்டு இருக்கிறது என்று சான்றிதழ் அளித்துவிட்டார். அப்படி இருந்தும் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய ராஜஸ்தான் அரசு சட்டத்தை சீர்குலைப்பதற்கு பக்கபலமாக இருக்கிறது. உ.பி உட்பட பல பாஜ அரசுகள் இதே நிலைபாட்டை எடுத்துள்ளன. குஜராத் தேர்தல் மற்றும் பொருளாதார கொள்கையின் தோல்வியால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே இந்த கலவரங்களை சங் பரிவாரங்கள் ஏற்படுத்தி வருகின்றன என்றால் அதில் மிகையில்லை.

ஆதாரமே இல்லை
ராணி பத்மாவதி அல்லது பத்மினி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் மிக குறைவு. மல்லிக் முகமது ஜெயசி என்ற சுஃபி கவிஞரின் படைப்புதான் இப்போது ஆதாரமாக இருக்கிறது. அது ஒரு கதையாடலாகவே நீடிக்கிறது. இதுபோன்ற கதை கட்டமைப்புகள் அடுத்தடுத்து உருவாக்கப்பட்டன. இதை அடிப்படையாக வைத்தே வரலாற்று சம்பவங்களும் சொல்லப்படுகிறது. பாஜ - சங் பரிவாரங்கள்  தெரிவிக்கும் பத்மாவதி, சித்தூர் கோட்டையில் முகமது கில்ஜி படையை எதிர்த்து போராடி வீர மரணம் எய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அல்லது படையால் சூழப்பட்டவுடன் நூற்றுக்கும் அதிகமான பெண்களுடன் தீக்குளித்தார் என்பதற்கும் ஆதாரம் இல்லை. இவை அனைத்தும் மல்லிக்கின் படைப்புகள் மூலமாகவே வெளிப்படுகிறது. பன்சாலியும், பத்மாவதியை சிறுமைப்படுத்துவது போல் எந்த கதையும் அமைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார். மேற்கண்ட படைப்புகளை முழுமையான வரலாற்று நிகழ்வாக வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனினும் சிறு துரும்பு கிடைத்தாலும் அதை வைத்துக் கொண்டு கலவரத்தை உருவாக்குவதுதான் பரிவாரங்களின் கொள்கை. இதற்கு பின்னால் மிகப்பெரும் அரசியல் வர்க்க நலன் இருக்கிறது.

வரலாற்று திரிபுகள்
ராஜஸ்தான் மாநில அரசு பள்ளி பாடங்களில் வரலாற்றை திருத்தி தவறான விஷயங்களையும் திணித்து வருகிறது. 2017-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடத்தில் ஹால்டிகாட் என்ற இடத்தில் 1576-ல் அக்பருக்கும் மகாராணா பிரதாப் சிங்கிற்கும் நடைபெற்ற போரில் அக்பர் தோல்வி அடைந்தார் என்று தலைகீழாக மாற்றி எழுதி விட்டனர். ராணா பிரதாப்சிங் ஒரு வீரம் செறிந்த மன்னன் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. முகலாயர்களுக்கு அடிபணியாமல் போரிட்டார் என்பதும் உண்மை. எனினும் பத்தாயிரம் பேர் கொண்ட முகலாயர் படையுடன் 3400 பேர் கொண்ட ராணாவின் படை வெற்றி கொள்ள முடியவில்லை. போரின் முடிவில் முகலாயப் படையிடம் பிடிபடாமல் ராணா தப்பித்து விட்டார். ஹால்டிகாட் உட்பட கோகுண்டா, கும்பால்மீர் பகுதிகளும் பல ராஜபுத்திர சிற்றரசுகளும் கிழக்கு மேவார் பகுதிகள் முழுவதும் முகலாய ஆட்சிக்கு கீழ் வந்தன. ஹால்டிகாட் யுத்தத்தில் அக்பரின் முகலாய படைக்கு தலைமை ஏற்றவர் ஜெய்ப்பூரை சேர்ந்த ராஜாமான்சிங் என்ற தளபதி ஆவார். ராணாபிரதாப் சிங்கின் படைக்கு தலைமையேற்றவர் அக்கிம்கான்சூர் என்ற ஆப்கான் பகுதியை சேர்ந்த இஸ்லாமியர் ஆவார்.

1579-ம் ஆண்டிற்கு பிறகு அக்பரின் முகலாயர் ஆட்சி இந்தியாவின் பிற பிரதேசங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் மேவாரின் மேற்கு பகுதியில் இழந்த சில பகுதிகளை ராணாபிரதாப்சிங் மீண்டும் பெற்றார். இதை சங் பரிவாரங்கள், இந்து முஸ்லீம் போராக, ராஜபுத்திர கௌரவமாக மாற்ற முயற்சிக்கிறது. மாறுபட்ட மதத்தை சார்ந்தவர்கள் தலைமையேற்று நடைபெற்ற ஒரு போர் என்ற பொது புத்தியை குழிதோண்டி புதைக்க முயற்சிக்கின்றனர். இந்த போரில் முகலாயர்களை எதிர்த்து வெற்றி பெற முடியவில்லை என்றாலும் போரிட்ட பெருமை ராணாபிரதாப் சிங்கின் வீரத்தை சாருமே தவிர இங்கே மதத்திற்கோ, இனத்திற்கோ முக்கியத்துவம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று ஆசிரியர் சதிஷ்சந்திரா ஹால்டிகாட் போர் என்பது பிரதேச சுதந்திரத்தை பாதுகாப்பதற்கான குறிக்கோள் கொண்டது என்பதை தெளிவுப்படுத்தியுள்ளார். பாடப்புத்தகத்திலேயே இப்படி ஒரு புரட்டை செய்பவர்களை தேசத்துரோகிகள் என்று சொல்லலாமா?

சாவர்கர் தியாகியாம்
ராஜஸ்தானில் 10-ம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடப்புத்தகத்தில் இந்து மகா சபையின் தலைவராக இருந்த வி.டி.சாவர்கர் பற்றி புகழ்ந்து எழுதி உள்ளனர். நாட்டின் சுதந்திரத்திற்காக அவரின் (சாவர்கர்) தியாகத்தை விளக்கிட வார்த்தைகள் இல்லை. அவரைப் போன்ற துணிச்சலான புரட்சியாளர் யாரும் இல்லை. அவர் மட்டும்தான் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றார்... அவர் நாடு துண்டாடப்படுவதை தடுக்க பெருமுயற்சி செய்தார் என்று சேர்க்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர போராட்டத்தில் காந்தியின் பங்கு பற்றி, நேருவின் பங்கு பற்றி மேலோட்டமாக ஒருசில வரிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரலாற்றை இதைவிட அதிகமாக யாரும் திருத்தி - திரித்து எழுத முடியாது. வி.டி.சாவர்கர் அந்தமான் சிறையில் இருந்தபோது வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதினார் என்பது வரலாற்று உண்மை. அந்த விபரத்தை பார்ப்போம்..

அந்தமானில் குற்றவாளிகள் குடியேற்றம் என்ற தலைப்பில் கல்வியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அரசிதழ் வெளியீட்டு அமைப்பால் வெளியிட்ட புத்தகத்தில் நவம்பர் 14, 1913 தேதியிட்ட சாவர்க்கர் எழுதிய மன்னிப்பு கடிதம் உள்ளது. அதில், ஊதாரித்தனமாக திரிந்த மகன் அரசாங்கம் என்ற பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதற்காக கதவைத் தட்டுகிறேன் என்று தன்னைப் பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு முன்பு 1911-ம் ஆண்டு எழுதிய கருணை மனுவை சுட்டிக்காட்டி, அரசாங்கமானது தனது பயனாளர்களின் பட்டியலில் என்னையும் சேர்த்து என் மீது இரக்கம் காட்டி சிறையிலிருந்து விடுவித்தால், பிரிட்டிஷ் அரசின் மீதான என்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வளர்ச்சிக்காக தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்வேன். இப்பிரச்சாரமே பிரிட்டிஷ் அரசியல் சட்டத்தின் வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்க முடியும். இரத்த உறவானது மற்ற உறவுகளைவிட வலிமையானது என்பதால், நாங்கள் சிறையில் இருக்கும் வரை, மாட்சிமை பொருந்திய பிரிட்டிஷாரின் பாசத்திற்குரிய நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான இந்திய குடும்பங்களில் உண்மையான சந்தோஷத்தையும், நிம்மதியையும் பார்க்க முடியாது. எங்களை விடுவித்தால் மக்கள் தங்கள் மகிழ்ச்சியையும், அரசாங்கத்தின் மீதான நல்லெண்ணத்தையும் ஆர்ப்பரித்து வெளிக்காட்டுவார்கள். பிரிட்டிஷ் அரசின் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பது என்ற எனது மனமாற்றமானது, என்னை குருவாக ஏற்றுக் கொண்டு தவறான வழியில் பயணித்து கொண்டிருக்கும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் எண்ணற்ற இந்திய இளைஞர்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வரும். என்னுடைய இந்த மனமாற்றமானது உண்மையானதாகவும் மனசாட்சி அடிப்படையிலும் இருப்பதால் இந்த அரசாங்கத்திற்காக எந்த மட்டத்திலும் சேவை புரிவதற்கு தயாராக இருக்கிறேன். வலிமையானவர்கள் மட்டுமே இரக்கம் காட்ட தகுதி படைத்தவர்கள் என்பதால்தான் ஊதாரித்தனமாக திரிந்த மகன் என்ற முறையில் அரசாங்கம் என்ற பெற்றோரின் அரவணைப்பில் வாழ்வதற்காக கதவைத் தட்டுகிறேன்என்று கெஞ்சி கூத்தாடி மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் விடுதலை செய்யப்பட்ட பிறகு பிரிட்டிஷாரை எதிர்த்து எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. அவர் மட்டுமல்ல அவரின் வாரிசுகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் விடுதலை போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது நிதர்சனமான உண்மை. சுதந்திர போராட்டத்தின் தலைவர்களாக இருந்த காந்தி, நேரு போன்றவர்களை புறந்தள்ளி, வெள்ளையர்களிடம் மன்னிப்பு கடிதம் எழுதி தர மாட்டேன் என்று தூக்குமேடை ஏறிய கத்தார்சிங் சராபா, பகத்சிங், ராஜகுரு, சுகதேவ், அஷ்வக்குல்லாகான் போன்றவர்களை மறைப்பது தான் வரலாற்று திரிபாகும். போலி வரலாற்றை உற்பத்தி செய்வது பாஜ - சங் பரிவாரங்கள்தான் என்பது இதிலிருந்து புலப்படும்.

ராஜஸ்தானில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நேருவின் பெயரை நீக்கிவிட்டனர். அங்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்கி உள்ளனர். அவை அனைத்திலும் மோடி அரசின் வெளிநாட்டுக் கொள்கை உட்பட அனைத்து திட்டங்களும் புகழ்ந்து பேசப்படுகிறது. அரசியல் விஞ்ஞானம் 12-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பணமதிப்பு நீக்கம் - வரலாற்று சிறப்புமிக்க முடிவு என்று புகழாரம் சூட்டி கருப்பு பணத்தை ஒழித்ததாக பீற்றிக் கொள்கிறது. மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நூற்றுக்கும் அதிகமானோர் இறந்த வரலாறு மூடி மறைக்கப்பட்டிருக்கிறது.

10-ம் வகுப்பு ஆங்கில புத்தகத்தில் தாமரையின் வெற்றி, இந்திய கலாச்சாரத்தின் வெற்றி என்று எழுதி மனப்பாடம் செய்ய சொல்கின்றனர். சுகாதாரம் மற்றும் கல்வி சம்பந்தமான பாடப்பிரிவில் உணவருந்தும் முன் சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்கவும், சைவ உணவின் பெருமைகளை பேசவும் சொல்லிக் கொடுக்கின்றனர். சங் பரிவாரங்களின் ராஜஸ்தான் ஆட்சி, வரலாற்றை திரிப்பது மட்டுமல்ல ஒட்டுமொத்தமான மனித உணர்வுகளுக்கு எதிராக, வாழ்க்கைக்கு எதிராக பயணித்து கொண்டிருக்கிறது.

முழுவதுமாக அகற்றம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் முகலாயர்களை பற்றிய வரலாற்றையும், டெல்லி சுல்தான்களின் ஆட்சி பற்றிய வரலாற்றையும் முழுவதுமாக அகற்றிவிட்டனர். அவர்களால் கட்டப்பட்ட நினைவு சின்னங்ளையும், டெல்லியின் முதல் பெண் அரசி ரசியா சுல்தான் பற்றியும், முதல் செப்பு நாணயத்தை அறிமுகம் செய்த முகமது பின் துக்ளக் பற்றியும், இப்பொழுதும் பயன்படுத்தப்பட்டு வரும் ஜி.டி.ரோடு என்று அழைக்கக்கூடிய கிராண்ட் டிரங்க் சாலையை அமைத்தவரும், சாலைகளை மேம்படுத்தியவருமான ஷெர்ஷா - சூரி அரசர் பற்றியும் இந்த மாணவர்கள் அறிந்து கொள்ள முடியாத அளவிற்கு வரலாற்றை மறைக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநில அரசும் புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. அதில் முகலாயர்களின் ஆட்சி முன்னோர்களின் ஆட்சி என்று சொல்ல மாட்டோம். கொள்ளையர்களின் ஆட்சி, படையெடுப்பாளர்கள் ஆட்சி என்று சொல்லப்படும் என அமைச்சர்களே அறிவித்து வருகின்றனர்.

ஹிட்லர் மாபெரும் தலைவராம்
குஜராத் முதல்வராக மோடி இருந்தபோது பல வரலாற்று திரிபுகளையும், குரோதங்களையும் அரங்கேற்றி உள்ளார். முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், பார்சிகள் ஆகியோர் வெளிநாட்டவர்கள் என்று அப்பட்டமான பொய் மூட்டைகளை பதிவு செய்துள்ளனர். இதுமட்டுமல்ல 10-ம் வகுப்பு சமூக விஞ்ஞான பாடப்புத்தகத்தில் ஹிட்லர் மாபெரும் தலைவர் (ழவைடநச ளுரயீசநஅடி) என்று புகழப்படுகிறார். (ஹிட்லரின் வாரிசுகள் அல்லவோ இவர்கள்) பாசிசம் - நாசிசம் புகழ்ந்துரைக்கப்படுகிறது. அதன் சாதனைகள் (?) விளக்கப்படுகிறது. பாசிசத்தால் தேச பக்தி நிலைநாட்டப்பட்டது என்று போதிக்கப்படுகிறது. ஹிட்லர் ஆட்சியின் கீழ் ஜெர்மனியில் அதிகார வர்க்க திறமையும், நிர்வாக திறமையும் போற்றப்படுகிறது. அதே நேரத்தில் பாசிசத்தால் விஷவாயு செலுத்தி மற்றும் வதை முகாம்களில் 60 லட்சத்திற்கும் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டதை பற்றியோ, தொழிலாளர்கள், இடம் பெயர் தொழிலாளர்கள், ஜெர்மானியர் அல்லாத மற்றவர்கள் வேட்டையாடப்பட்டது பற்றி ஒருவரி கூட இல்லை. (டைம்ஸ் ஆப் இந்தியா செப் 30, 2004). காந்தி பிறந்த மாநிலத்திலேயே காந்தியை பற்றிய பாடங்கள் வெட்டி சுருக்கப்பட்டுள்ளது. மேடை தோறும் காந்தியை பற்றி மோடி முழங்கி வருகிறார். ஆனால் குஜராத்தில் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றி பேசப்படுகிறது. 

பிள்ளையாரும், பிளாஸ்டிக் சர்ஜரியும்
இதுமட்டுமல்ல, விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிராகவும் கூட மூட நம்பிக்கைகளை முன்வைத்தும் பிரதமர் மோடியே வரலாற்றை தவறான திசையில் வழிநடத்தி செல்கிறார். வேதகாலம் இந்துக்களின் உரிமை என்று முழங்குகிறார். கடந்த நூறாண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவம், விஞ்ஞானம், தொழில்நுட்பங்கள் அனைத்தும் வேதகாலத்தில் இருந்தது என்று பெருமை பேசுகின்றனர். மரபணு விஞ்ஞானம் வேதகாலத்திலே இருந்தது என்று மோடி, மருத்துவமனை திறப்பு விழாவில் பேசினார். இதற்கு மகாபாரத கர்ணன் உதாரணம் என்கிறார். பண்டைய காலத்திலேயே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை இருந்தது என்றும் அதற்கு விநாயகர் உதாரணம் என்று பேசினார். (றுந றடிசளாயீ பயநேளாத, வாநசந அரளவ யஎந நெந ய யீடயளவஉ ளரசபநசல அரளவ யஎந ளவயசவநன வாந) வரலாற்று திரிபுகளை பிரதமர் இத்தோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மகா அலெக்சாண்டரை தோற்கடித்த பெருமை பீஹாரிகளையே சாரும். ஏனெனில், தட்சசீலம் அப்போது பீகாருடன் இருந்தது என்று தேர்தல் காலத்தில் மோடி பேசினார். எனவே வரலாற்று திரிபு தேசத்துரோக குற்றமென்றால் அதை முதலில் செய்த பெருமை பிரதமர் மோடியையே சாரும்.

வரலாற்று அறிவு?
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன் 2015-ல் புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டார். கணக்கியலில் அல்ஜிப்ராவும், பித்தாகரஸ் சூத்திரத்தை இந்தியர்கள் கண்டுபிடித்தார்கள். வெளிநாட்டு அறிஞர்கள் அதை எடுத்து செல்ல அனுமதி கொடுத்துவிட்டார்கள் என்று பேசியுள்ளார்.

மற்றொரு மத்திய கல்வித்துறை அமைச்சர் சத்யபால்சிங், ரைட் சகோதரர்கள் 1903 ஆம் ஆண்டு விமானத்தை கண்டுபிடிப்பதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே ஷிவ்கர் பாபுஜி தல்படே என்ற இந்திய விஞ்ஞானி விமானத்தை கண்டுபிடித்தார் என்று பறைசாற்றியுள்ளார். இதுதான் நமது மத்திய அமைச்சர்களின் வரலாற்று அறிவு.. அல்ல வரலாற்று திரிபு.

இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஆட்சி பீடம் ஏறியவுடன் பள்ளிக் குழந்தைகளின் சிந்தனையில் பிரிவினை, வகுப்புவாதம், குரோதம் ஆகிய வன்முறைகளை விதைக்கின்றனர். மனிதர்கள் என்ற மாபெரும் சமூக கட்டமைப்பை உடைக்கிறார்கள். பத்மாவதி படத்தின் மூலம் வரலாற்று திரிபை கண்டிக்கிற சங் பரிவாரங்கள் செய்து வரக்கூடிய வேலைகள் இவைதான்.

வரலாற்றை கடவுளால் கூட அழிக்க முடியாது. ஏனெனில் அத்தகைய சக்தி அவர்களுக்கு இல்லை என்று ஆப்பிரிக்க அறிஞர் அகதான் கூறினார். ஆனால் கடவுளை படைத்தவன் மனிதன் தான். அவனின் அச்சத்தை போக்கவும், வாழ்வை பாதுகாக்கவும் வணங்க ஆரம்பித்து பல கடவுள்களை படைத்தான். தன்னுயிரை பாதுகாக்க படைக்கப்பட்ட கடவுள் உருவங்களை சங் பரிவாரங்கள் கைப்பற்றி கொண்டு மக்களை வேட்டையாடவும் பிரித்தாளவும் செய்கின்றன.

முறியடிப்போம்
தற்போது பாஜ அரசின் பொருளாதார கொள்கை தோல்வி அடைந்துள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள், சிறு தொழில் உற்பத்தியாளர்கள், வேலை இல்லாதவர்கள் என அனைத்து தரப்பினரும் போராட்டக்களத்திலே குதித்து விட்டனர். தேர்தல் தோல்வி பயமும் அவர்களை தொற்றிக் கொண்டது. பொருளாதார வளர்ச்சி பற்றி பேசி தொடர்ந்து ஏமாற்ற முடியாது. எனவே உணர்ச்சிகளும், வெறிகளுமே இனி சங் பரிவாரங்களின் மூலதனமாக இருக்கும். நீங்கள் கண்மூடித்தனமாக பின்பற்றும் கும்பலை பெற்றுவிட்டால் வளர்ச்சி ஒரு பிரச்சனை அல்ல (னுநஎநடயீஅநவே டி டடிபேநச யள வடி நெ ளைளரந. றாந லடிர யஎந டெனே கடிடடடிறநசள) என்ற வார்த்தைகள் சங் பரிவாரங்களின் வழிகாட்டியாக அமைந்துள்ளது. வகுப்புவாத துவேஷத்தை தூண்ட, மக்களை பிளவுப்படுத்த, சங் பரிவாரங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. அந்த முயற்சிகளை முறியடிப்பது அனைவரின் கடமையாகும்.

செவ்வாய், நவம்பர் 14, 2017

குஜராத்: சுவாசிக்க முடியாத சிசுக்கள்.




       குஜராத் கௌரவம் என்ற பெயரில் மோடியும் அமித்ஷாவும் குஜராத்தில் பெரும்விழாக்களை நடத்தினர். ஜப்பான் பிரதமருடன் வீதி வலம் நடத்தினார். புல்லட் ரயில் விடப்போகிறோம் என்று படோடமான பிரச்சாரங்களை செய்தார். இதையெல்லாம் குஜராத்தின் பெருமை என்று பீத்திக் கொண்டு திரிகிறார்கள். மறுபுறத்தில் குஜராத் மக்களின் வாழ்க்கை பிய்ந்துபோய்க் கிடக்கிறது. 
            
                த்திரப்பிரதேசத்தை தொடர்ந்து சமீபத்தில் (அக்டோபர் 27) குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள அன்சாரவில் அரசு மருத்துவமனையில் புல்லட் இரயிலை விட துரிதமாக 18 குழந்தைகள் மூன்றே நாட்களில் இறந்துவிட்டன. சத்துக் குறைவாலும், எடை குறைவாலும் பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டன. மருத்துவமனை அதிகாரி முதலில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்தார். பிறகு விஷயம் படத்துடன் வெளி வந்தவுடன் மறுக்காமல் ஒத்துக்கொண்டார்.

          குஜராத் தொழில் வளர்ச்சியில் 2-வது இடத்திலும், தனிநபர் வருமானத்தில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 5-வது இடத்திலும் இருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை இறப்பில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 17வது இடத்தில் உள்ளது. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் விகிதத்தில் 25வது இடத்தில் உள்ளது. குஜராத்தைவிட பல சிறிய பின்தங்கிய மாநிலங்கள் கூட பொது சுகாதாரத்தில் இதைவிட முன்னேறி உள்ளன. குஜராத்தில் 1000 குழந்தைகள் பிறந்தால் 33 குழந்தைகள் சிசு நிலையிலேயே இறந்துவிடுகிறது. இது கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 19, மகாராஷ்டிராவில் 21, பஞ்சாபில் 23 என்ற அளவில் உள்ளது. குஜராத் பெருமை கொண்டாடும் மோடி வகையறாக்கள் சுகாதார வளர்ச்சியில் இந்த மாநிலங்களை விட பின்தங்கி உள்ளன.


                தேசிய அளவில் 35 சதவிகிதம் எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக அதாவது 39 சதவிகிதம் எடை குறைவான குழந்தைகள் இருக்கிறது. இவை கேரளாவில் 16 சதம், பஞ்சாபில் 21 சதம், தமிழ்நாட்டில் 23 சதம், மகாராஷ்டிராவில் 36 சதமாக உள்ளது. குஜராத்தைவிட பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டுமே. சிறிய மாநிலமான மிசோராமில் 11.9 சதமும், மணிப்பூரில் 13.8 சதம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன.

        குஜராத்தின் தனிநபர் வருமானம் 1,22,502 ஆகும். ஜம்மு-காஷ்மீரின் தனிநபர் வருமானம் 60,171 ஆகும். குஜராத்தைவிட சரிபாதி தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் பிறந்த குழந்தைகள் (IMR) இறப்பது 1000த்திற்கு 26 மட்டுமே. தற்போது இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 41 ஆகும். நமக்கு அண்டை நாடான பங்காதேசில் 31, நேபாளில் 29 என்ற அளவில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. 

           குஜராத்தில் தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவை ஏழை மக்களுக்கு சேரவில்லை. அதானிகளும், அம்பானிகளும், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போன்றவர்களுக்குத்தான் கோடிகள் குவிந்துகிடக்கிறது. மருத்துவமனைகளிளோ குழந்தைகளின் மரணக் குவியல்கள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்தின் வளர்ச்சி கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது நிதர்சனமான உண்மையாகிறது.

          மீபத்தில் இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேசம், அசாம், இராஜஸ்தான் என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து பொது சுகாதாரத்தை மத்திய அரசு வேகமாக புறக்கணித்து வருகிறது என்பது அம்பலமாகிறது. 

               இந்த ஆண்டு ஜார்கண்ட், ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 30 நாட்களில் 52 குழந்தைகள் இறந்தன. உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் பாபா ராகவா தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு வாரத்தில் 70 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைந்தனர். இந்தியாவின் வளர்ச்சி பற்றியும், வல்லரசு பற்றியும், துல்லிய தாக்குதல் பற்றியும் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் கூட இதுபற்றி வாய்திறக்க அச்சப்படுகின்றன.
                                                          ------------------------------------------

ஞாயிறு, நவம்பர் 12, 2017

மோ(ச)டி அரசு?


           

                  மோசடித்தனங்களை, தில்லு முல்லைகளை தடுக்க வேண்டிய அரசே அப்படடமான மோசடித்த னதில் ஈடுபட்டால் நாடு எப்படி வாழும். இப்படிப்பட்ட காரியங்களை மோடி அரசால் மட்டுமே செய்ய முடியும். இந்திய கிராமபுற ஏழைகளில் ஒரு பெரும்பகுதி உயிரோடு இருக்கிறார்கள் என்றால் இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால்  கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதிதிட்டம் தான் என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

                 இத்திட்டத்தை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று மோடி அரசு முயற்சிக்கின்றது.  தற்போது 19 மாநிலங்களில் இத்திடடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக கூலிகொடுக்க வில்லை. பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்தும் அந்த நிதியை அனுப்பவில்லை. எவ்வளவு தொழிலாளர்களுக்கு தெரியுமா? 9 கோடியே 20 லட்சம் தொழிலாளர்களுக்கு கூலிகொடுக்கவில்லை. 

                     அரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கூலிகொடுக்கவில்லை. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில்  செப்டம்பர் மாதம் வரையும், திரிபுரா உட்பட 6 மாநிலங்களில் அக்டோபர் முதல் கூலி கொடுக்கவில்லை. மொத்தம் 3066 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 2016-17 ம் நிதியாண்டில் 51 சதம் கூலிதொகையை காலதாமதமாக வழங்கியது மத்திய அரசு.
               வேலை செய்த தொழிலாளிக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதற்குமேல் காலதாமதமானால் உரிய இழப்பீட்டுடன் கூலிகொடுக்க வேண்டும். உரியகாலத்தில் கொடுக்காமல்  இழுத்தடிப்பது ஒரு மோசடித்தனம். மறுபுறத்தில் காலதாமதமானதற்கு  கொடுக்கவேண்டிய தொகையை குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளையடிப்பது மற்றொரு மோசடித்தனம்.  

              2016-17 ம் ஆண்டு காலதாமதத்திற்கு கொடுக்கவேண்டிய தொகை 1208 கோடியாகும். முத்திய அரசு மோசடித்தனம் செய்து 519 கோடி அதாவது 43 சதம் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டது. இந்த நிதியாண்டில் மட்டும் 34,7 கோடி காலதாமத இழப்பீட்டுத்தொகை கொடுக்க வேண்டும். கொடுத்தது 3.6 கோடி மட்டுமே.  ஜார்கண்ட், பிஹார், சத்தீஷ்கர், கர்நாடகா, உபி, ராஜஸ்தான் , மபி, ஒடிசா, மேற்குவங்கம், கேரளா ஆகிய 10 மாநிலங்களில் இந்த நிதியாண்டில் சட்டப்படி 36 கோடி 82 லட்சம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு 15 கோடி 61 லட்சம் என்று மோசடிக்கணக்கை போட்டு கொடுத்துள்ளது. 

                        15 நாட்கள் பணிமுடித்து பட்டியல் அனுப்பிவைத்தாலும் மத்திய அரசு நிதிகொடுப்பதற்கு 63 நாட்கள் காலதாமதம் செய்கிறது. பனிமுடித்து 15 நாட்கள் கடந்து காலதாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 0.05 சதவிகிதம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும். இதைக்கூட கொடுக்காமல் மோசடி செய்து வயிற்றில் அடிக்கும் அரக்கனாக மத்திய அரசு செயல்படுகிறது.

வெள்ளி, நவம்பர் 10, 2017

மத்திய மோடி அரசுக்கு சமர்ப்பணம்;

            

               
                        இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து  மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம்  ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.  

வெள்ளி, அக்டோபர் 27, 2017

குடியாட்சியிலிருந்து முடிவற்ற கும்பல் ஆட்சிக்கு?


- அ.பாக்கியம





  கஸ்ட் 19 பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் 71வது சுதந்திரதின கொடியேற்றி வழக்கம்போல் எழுச்சியுரையாற்றி மூன்றே நாட்கள் முடிந்தநிலையில்அ ந்தக்கொடுரம்அரங்கேறியது.. ..ஜார்கண்ட் மாநிலம் சாஹேப்கன்ஞ் மாவட்டத்தில் ஒரு பெண்ணின் தலைமுடிகத்தரிக்கப்பட்டசம்பவத்திற்காக அங்கு பிச்சை எடுத்துக்கொண்டிருந்தஒருபெண்ணையும்அவரதுமகனையும்கொடூரமாகதாக்கி அப்பெண்ணை அதே இடத்தில் இரத்த வெள்ளத்தில் சாகடித்துள்ளனர்.ஜார்கண்ட்மாநிலத்தில் இது முதல் தடவை அல்ல. வாரத்திற்கு முன்னால் சிறுவன் ஒருவனை திருடன் என சந்தேகப்பட்டு கும்பல் அடித்துக் கொன்றது. இந்த சம்வங்கள் எதை வெளிப்படுத்துகிறது? இந்தியாவில் சட்டத்தின் ஆட்சியும் குடியாட்சியும் கொஞ்சம் கொஞ்சமாக குழிதோண்டி புதைக்கப்படுகிறது என்பதைத்தான். 

        இந்திய அரசியல் சட்டமும் இதர சட்டங்கள் அனைத்தும் நடுநிலையானது, அனைத்து மக்களின் உரிமைகளை பாதுகாப்பது என்ற பிரமை என்றைக்குமே இருந்தது இல்லை. முதலாளித்துவ ஜனநாயகத்தில் உள்ள இவை அனைத்தும் அடிப்படையில் சுரண்டல் அமைப்பை பாதுகாக்க கூடியதுதான். எனினும் இவற்றில் உழைப்பாளி மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் பாதுகாக்க அல்லது அடுத்த கட்ட உரிமைகளை பெற்றிட பல அம்சங்சங்கள் உள்ளன. இந்த உரிமைகளும் உழைப்பாளி மக்களின் உதிரம் சிந்திய போராட்டத்தால் கிடைக்கப்பெற்றதும் பாதுகாக்கபட்டதும் ஆகும். தற்போது ஆட்சிபீடத்தில் உள்ள மோடி தலைமையிலான சங்பரிவாரங்களின் அரசு தீவிர சுரண்டலுக்கு தேவையான கொள்கைகளை கையாள்வதால் முழுமையற்ற இந்த உரிமைகளை பறிக்கிற பணியில் தீவிரமாக இறங்கி உள்ளது.  கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. 

                சூழ்ச்சிக்கலையின் பிதாமகன் - அவசரசட்டங்களின் அவதாரம்:
மோடி அரசு சங்பரிவாரங்களின் இலக்கை அப்பட்டமாக அமுல்படுத்தி வருகின்றது. பாராளு மன்ற ஜனநயாகத்திற்கு வேட்டு வைப்பது. அதன் செயல்பாட்டை வெட்டிச்சுருக்குவது. அரசு இயந்திரத்தில் இந்துத்துவா வாதிகளை அம்ரவைப்பது. அரசியல் சட்டத்தை திருத்தி சங்கபரிவாரங்களின் கொகைக்கு ஏற்ப மாற்றி அமைப்பது. நாடு முழுவதும் இந்துத்வா வன்முறைபடைகளை உருவாக்குவது.

        
   முதலாவதாக, பாராளுமன்ற அவை அதிகாரங்களையும், வரம்புகளையும் மீறி சூழ்ச்சிகளால் சட்டத்தை எவ்வாறு நிறைவேற்றுகின்றனர் என்பதை சீத்தாராம் யெச்சூரி அம்பலப்படுத்தியுள்ளார். “இந்த நிதி சட்ட முன்வடிவு குறித்து நான் மிகவும் சங்கடத்திள்கு உள்ளாகி உள்ளேன். உண்மையில் இதை நிதி சட்ட முன்வடிவு என்று என்னால் கருத முடியவில்லை. மாறாக இது நிதி அடாவடித்தனம். இதற்குள் நிதிக்கு சம்பந்தமற்ற 40 புதிய சட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இவை மக்களையில் நிறைவேற்றப்பட்ட பின்னரும் கூட ஏராளமான திருத்தங்கள் கொண்டுவரப்படலாம்.” என்று பேசினார். இந்த சட்டத்திற்குள் திணித்துதான் ஆதார் கட்டாய சட்டம், தீர்ப்பாயங்கள் தொடர்பான சட்டங்கள், கம்பெனிச்சட்டங்கள் ஆகியவற்றையும் இந்த சூழ்ச்சியின் மூலமாகவே நிறைவேற்றி உள்ளனர்.

   இரண்டாவதாக, பாராளுமன்றத்திற்கு வெளியே அவசரசட்டத்தின் மூலமாகவே ஆட்சி நடத்துகின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் வரலாற்றில் இல்லாத அளவில் 29 அவசர சட்டங்ளை பிறப்பித்துள்ளனர். 2014-ல் 4 அவசர சட்டத்தையும், 2015-ல் 12 அவசர சட்டத்தையும், 2016-ல் 8 அவசர சட்டத்தையும் 2017-ல் 5 அவசர சட்டத்தையும் கொண்டுவந்தனர்.  2014-ல் மே மாதம் 26-தேதி பதவி ஏற்றவுடன் 28-ம் தேதி தனக்கான ஒரு அதிகாரியை நியமித்துக் கொள்வதற்காக முதல் அவசர சட்டம் கொண்டு வந்தார். விவசாயிகளின் நிலத்தை பறித்து கார்பொரேட்களுக்கு கொடுப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் சட்டம், தனிநபர்களின் அந்தரங்கத்தில் தலையிட ஆதார் அட்டைக்காக சட்டம் ,  சரக்கு மற்றும் சேவை வரி விதித்திட சட்டம், நீட் தேர்வை திணித்திட சட்டம்  என அனைத்தும் அவசர சட்டங்களால் ஆட்சிநடத்தி மக்கள் பிரதிநிதிகளின் பாராளு மன்றத்iத் முடக்கினார். 

     மூன்றாவதாக, அரசியல் அமைப்புச் சட்டங்களைவிட வேதம் உயர்வானது, பாராளுமன்றத்தைவிட தர்மம் உயர்வானது, எனவே தர்மத்தை தேர்தல் மூலமாக தீர்மானிக்க முடியாது என்பதை கொள்கையாக கொண்டுள்ள சங்பரிவாரங்கள் தலைமையிலான ஆட்சி நடக்கிறது.  இந்த நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகள் முடக்கப்பட்டு இவர்களின் கொள்கைகளுக்கு ஏற்ப மாற்று நிர்வாகம் கட்டமைக்கப்படுகிறது.

பசு குண்டர்கள்
 
      பேய் ஆட்சி செய்தால் பிணம் திண்ணும் சாஸ்திரங்கள் என்னும் பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ இன்றைய மத்திய ஆட்சியாளருக்கு அப்படியே பொருந்தக் கூடியதாகும். நரவேட்டையாளர்களை நடுவண் அரசின் நாயகர்களாக இருப்பதனால் சாதாரண மக்கள் அடித்துக் கொல்லப்படும் காட்சிகள் அன்றாடம் அரங்கேறி கொண்டே இருக்கிறது. தவறுகள் நடந்தால் புகார் செய்வது, வழக்கு பதிவு செய்வது,விசாரணை நடத்துவது, நீதிமன்றத்தின் மூலமாக தண்டனை வழங்குவது என்ற சட்டத்தின் ஆட்சிக்கு சமாதி கட்டி சனாதன கொள்கைகளை சிங்காரித்து சிம்மாசனத்தில் வைத்து விட்டனர். இதன் விளைவு தேசத்தின் தெருக்களில் வன்முறை கும்பல் வலம் வந்து கொண்டிருக்கிறது. மக்களின் வாழ்விடங்கள், தெருக்கள் கொலைக்கூடங்களாக மாற்றப்பட்டு வருகிறது.  ஒருசிலர் சேர்ந்து ஒருவரை சாகடித்தால் அது கொலை. ஒரு கும்பல் சேர்ந்து ஒருவரை சாகடித்தால் அது தேசப்பற்று என்று இந்த சங்பரிவாரங்களின் “கும்பல் வன்முறையாளர்கள்” புதிய குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதற்காக பசு பாதுகாவலர்கள், மத பாதுகாவலர்கள், கலாச்சார படை என பல வன்முறை குழுக்களை உருவாக்கி வளர்த்து வருகின்றனர். தேசம் முழுவதும் இந்த வன்முறை கும்பல்களுக்கு மிகப்பெரும் ஆயுதமாக இருப்பது பசு பாதுகாப்பு என்ற போலி பிரச்சாரமாகும். பசு குண்டர்கள் தொடர் கொலைகளில் அரசின் ஆதரவோடு செயல்படுகின்றனர். 

            வன்முறை கும்பல்களுக்கு பகைவெறியூட்டப்பட்டு பணம் பெரும் வாய்ப்பும் கிடைத்துவிட்டால் தொழில்முறை வன்முறையாளர்களாக மாறிவிடுகின்றனர்.   71 வது ஆண்டு சுதந்திரதின உரையில் பிரதமர் மோடி பெரும்பாலும் இந்துஸ்தான் என்றுதான் பயன்டுத்தினார். இது அவர்களின் விருப்பபடி இந்துஸ்தானாக மாறுகிறதோ இல்லையோ வேகமான முறையில் லிஞ்சிஸ்தானாக (டுலnஉhளைவாயn) "அடித்துக் கொல்லும் நாடாக" மாற்றி வருகின்றனர்.  பண்டைய ரோமாபுரியில் ஆம்பி தியேட்டரில் மிருகங்களையும் அடிமைகளையிம் மோதவிட்டு கூட்டம் ஆர்பரிக்கும். அங்குகூட சில சட்டவிதிகள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இப்போது அதையெல்லாம் மீறி கும்பல் ஆட்சிதான் இந்தியாவில் கோலோட்சுகிறது. சங்பரிவாரங்கள் இதை திட்டமிட்டு கட்டமைக்கிறது.
        
   மோடி ஆட்சிபீடம் ஏறியவுடன் அடித்துக்கொல்லும் நிகழ்வுகள் அமோகமாக அரங்கேற்றப்படுகிறது.சில வன்முறை சம்பவங்கள் தேசத்தையே உலுக்கியது. பெகுலு-கான் (ஞநாடரமாயn) என்பவர் அரியானா மாநிலத்தை சேர்ந்த பால் உற்பத்தி செய்யும் விவசாயி. இவர் ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற கால்நடை சந்தைக்கு எருமை மாடு வாங்க சென்றுள்ளார். சந்தையில் அதிக அளவு பால் கறக்கும் பசு மாட்டை கண்டவுடன் அதை வாங்கியுள்ளார். வாங்கிய பசுவை தனது சொந்த ஊரான அல்வாருக்கு   கொண்டு வந்துள்ளார். இந்த நேரத்தில் பசு குண்டர்கள் (05.04.2017) அவரையும், அவருடன் வந்தவர்களையும் தாக்கினர். பெகுலுகானை அதே இடத்தில் அடித்துக் கொலை செய்தனர். இவை அனைத்தும் காவல்துறை சுற்றி நிற்க, பட்டப்பகலில் நடைபெற்றது. அது மட்டுமல்லல அடித்து கொள்வதை காணொளி எடுத்து வளைதளத்தில் பரப்பினர்.
 
       மற்றொரு மோசமான   நிகழ்வு முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டது. தலைநகர் டெல்லியிலிருந்து 50 கி.மீ.தூரத்தில் உ.பி.யின் தாத்திரி என்ற இடத்தில் இது நடக்கிறது. அவரது வீட்டில் குளிர்சாதனப் பெட்டியில் மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று கூறி கோயிலில் உள்ள ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து ஆட்களை திரட்டி கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.  

        16வயது நிரம்பிய ஜூனைத் என்ற இளைஞன் தனது இரு சகோதரர்கள் ஹசிம், மௌசிம் ஆகியோருடன் ஈத் பண்டிகைக்காக 22.06.2017 அன்று டெல்லிக்கு சென்று பொருட்கள் வாங்கி கொண்டு தனது சொந்த ஊரான அரியானா காந்தவால் கிராமத்திற்கு இரயிலில் திரும்பிக் கொண்டி ருக்கையில், பசு குண்டர்கள் இவர்களை ரயிலில் தாக்குகின்றனர். இவர்கள் மாடுகளையோ மாட்டிறைச்சியையோ கொண்டு செல்லவில்லை. முஸ்லீம்கள் என்ற ஒரே காரணத்துக்காக ரயிலுக்குள் வைத்து 2 மணி நேரம் தாக்கியுள்ளனர். இதில் கத்தியால் குத்துப்பட்டு ஜூனைத் இறந்தான். உடன் வந்த இரு சகோதரர்களும் வாங்கிய ஈத் பொருட்களை கைவிட்டு இரத்தம் தோய்ந்த தனது தம்பியின்  உடலை  பகலில் மக்கள் கூட்ட நடுவில், ஆயுதம் தரித்த காவலர்கள் வேடிக்கை பார்க்க தூக்கிச் சென்றனர் 
.
            “இது இனியும் வெறும் சகிப்புத்தன்மையின்மை என வகைப்படுத்தக் கூடாது. இது ஒரு அடக்குமுறை ஆட்சியின் தோற்றமும் நிலைநிறுத்தமும ஆகும். அது இந்தியாவின் சிறுபான்மையினரை உண்மையிலேயே வெளியேற்றவும், ராஷ்டிரிய சுயம்சேவக்(ஆர்.ஆர்.எஸ்)-ஐ தோற்றுவித்தவர்களால் உருவாக்கப்பட்ட இந்துராஷ்டிரா-வை பிரகடனம் செய்ய விரும்புவது ஆகும்.” 

(டெல்லி உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ராஜிந்தர் சச்சார் பிரண்ட்லைன் பத்திரிக்கையில்)
             
மே 18, 2017 அன்று ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் 7 பேர் கும்பல் வன்முறையாளர்களால் தாக்கப்பட்டனர். தாக்கப்பட்டதை, வேடிக்கை பார்த்தவர்களில் துணை காவல் கண்காணிப்பாளர், வட்டார காவல் ஆய்வாளர், இரு உதவி ஆய்வாளர்கள் மற்றும் 30 போலீஸ்காரர்கள் அடங்குவார்கள். வன்முறை குண்டர்கள் மற்றும் காவல்துறை இணைப்பு எப்படி நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

          ஏப்ரல் 30, 2017 மத்திய அசாம் நவகான் மாவட்டத்தில் அபு அனிபா (23) ரிசாவுதின் அலி (24) ஆகிய இரு இளைஞர்கள் பசுத் திருடர்கள் என பழி சுமத்தி அடித்து ரத்த வெள்ளத்தில் சாலையில் போட்டுச் சென்றனர்.
ஏப்ரல் 22, 2017 டெல்லி கால்கஞ்சி பகுதியில் வாகனத்தில் கால்நடைகளை கொண்டு சென்றவர்கள் 4 பேர்களை அடித்து காயப்படுத்தினர். கால்நடை கடத்தல்காரர்கள் என்று முத்திரை குத்தினர்.

ஏப்ரல் 21, 2017 ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், ரெய்சி மாவட்டத்தில் (சுநுஹளுஐ) மந்தைகளை ஓட்டிச் சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர்களை அடித்துக் கொலை செய்ய முயற்சித்தனர்.

2017-ம் ஆண்டில் மேற்குவங்கத்தில் அடுத்தடுத்து ஐந்துபேர்கள் அடித்துகொல்லப்பட்டுள்ளர். கூச்பிஹார் மாவட்டத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்களிடம் கும்பல் 50000 பணம் கேட்டு அவை கொடுக்க இயலாததால் 3 பேர்களை அடித்து கொலை செய்த கொடுரம் நடந்துள்ளது. 

கடந்த 2010 முதல் 2017 வரை உள்ள 8 ஆண்டுகளில் பசுதொடர்பான தாக்குதல்கள் 75 நடந்துள்ளன. இவற்றில் மோடி ஆட்சிக்கு வந்த மே 2014-க்கு பிறகு நடைபெற்ற வன்முறைகள் 73 ஆகும்.அதாவது 97 சதம். இதில் முஸ்லிம்களை குறிவைத்து தாக்கியது 56 சதமாகும். மேற்கண்ட 75 வன்முறைகளில் 86 சதவிகிதம் மரணத்தில் முடிந்துள்ளது.

ஒரு துப்பாக்கி இருகொலைகள்:
  இவர்கள் பாமர மக்களை மட்டுமல்ல பகுத்தறிவாளர்களை, முற்போக்குவாதிகளை, ஜனநாயக சிந்தனையாளர்களையும் கொலை செய்வதற்கான கும்பல்களையும் தயார்படுத்தி கொலை செய்துவருகின்றனர். சமீபத்தில் கௌரி லங்கேஷ்(செப்,5-2017) என்ற பத்திரிக்கையாளர் தனது வீட்டு வாசலில்  துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று பூனாவில் நரேந்திர தபோல்கர் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.  2015-பிப்.16  அன்று கோவிந்த் பன்சாரே மராட்டியத்தில் சுடப்பட்டு பிப்-20-ல் மரணடைந்தார்.  2015-ல் ஆகஸ்ட் 30-ல் கர்நாடகாவின் டர்வாத் மாவட்டத்தில் எம்.எம்.கல்புர்கி சுட்டுக்கொல்லப்பட்டார்.  4ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் இந்து ஜனஜாகுரிதி சமிதி(hதள)யின் மேற்குபகுதி கமாண்டர் டாக்டர்.வீரேந்திர தவ்டே மீது குற்றப்பதிவு நடந்துள்ளது.  

தற்போதைய அதிர்ச்சியான தகவல் இரு ஆண்டுகளுக்க முன்பு பகுத்தறிவாளர் கல்புர்கியை சுட்டுக்கொன்ற அதே துப்பாக்கிதான் கௌரி லங்கேஷ் படுகொலைக்கும் பயன்படுத்ப்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் படுகொலைகளை செய்துவருவது இந்து ஜனஜாகுரிதி சமிதி என்ற என்ற  அமைப்புதான என்று அம்பலமாகி உள்ளது.  கோவாவில் நடைபெற்ற சங்பரி வாரங்களின்  மாநாட்டில் இந்த அமைப்பு முற்போக்காளர்கள், பகுத்தறிவாளர்கள் இந்து மதத்தினருக்கு எதிரானவர்கள் அவர்களை சுட்டுகொல்ல வேணடும் என்று பேசி இருக்கிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் 19வது பிரிவு பேச்சு சுதந்திரத்தையும், 21 வது பிரிவு தனிமனித உரிமையும், 25-வது பிரிவு வழிபாட்டு உரிமையையும் அளித்துள்ளது. அரசியல் சட்டப்படி ஆட்சிக்கு வந்த மோடி அரசு அவற்றை பாதுகாக்காமல் குண்டர்களின் படைகளை உருவாக்கி  குறைந்தபட்ச உரிமைகளை வழங்கிடும் குடியரசையும் குழிதோண்டி புதைக்கிறது.
 
ராஜ குருவும்-சீடகோடிகளும்
    மேற்கண்ட வன்முறைகள் தன்னெழுச்சியாகவோ, எதேச்சையாகவோ நடப்பது இல்லை. மாறாக நன்கு திட்டமிடப்பட்டு, திரட்டப்பட்டு நடக்கிறது. அடித்துக் கொள்வதை காணொளி எடுத்து சமூக வளைதளங்களில் பரப்புகிறார்கள் என்றால், அவர்களுக்கு எதிலும் எந்த பாதிப்பும் வராது என்று தெரியும். மன்னர் ஆட்சி காலத்தில் மந்திரி சபையில் ராஜ குரு ஒருவர் அவசியம் (?) இருப்பார். அவரின் ஆலோசனையே எந்த ஒரு விஷயத்திலும் இறுதி முடிவுக்கு இட்டுச்செல்லும். அதுபோல் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சர்சங்கசால மோகன் பகவத், அதிகாரப்பூர்வமற்ற ராஜ குருவாக கோலோச்சுகிறார். இவர், பசுவதை தடை சட்டத்தை நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். உ.பி.யில் யோகி ஆதித்யநாத் இறைச்சிக் கூடங்களுக்கு தடை விதித்த பிறகும் மோகன் பகவத், நாடு தழுவிய பசு வதை தடையை வலியுறுத்தி வருகிறார். சட்டம் வரும் முன்பே, பாஜ ஆளும் மாநிலத்தில் அமல்படுத்த அறிவுறுத்தினார். "ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் எங்கெல்லாம் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அங்கெல்லாம் பசு பாதுகாப்பில் உள்ள உள்ளூர் சிக்கல்களை தீர்க்க ‘சுட்டிக்காட்டிய திசை வழியில் செல்வார்கள்’ என நான் நம்புகிறேன்" என்று அமலாக்கத்திற்கான அதிகாரப்பூர்வமற்ற ஆணையை பிறப்பித்தார் (ஏப் 9, 2017).

ராஜகுருவே இப்படி என்றால் சீடகோடிகள் பற்றி கேட்கவா வேண்டும்.  யோகி ஆதித்தியநாத் உத்திர பிரதேசத்தில் பசுவதை தடை மட்டும் செய்யவிலலை அனைத்து இறைச்சிக் கடைகளுக்கும் எதிராக தாக்குதல் தொடுத்துள்ளார்.  குஜராத் மாநிலத்தில் தற்போதைய சட்டத்தை திருத்தி பசுவதைக்கு ஆயுள் தண்டனை என அறிவித்து விட்டனர். விரைவில் குஜராத் மாநிலத்தை ஒரு சைவ மாநிலமாக மாற்றுவோம் என் அறிவித்து வருகின்றனர். சத்தீஷ்கர் மாநிலத்தில் பசுவதைக்கு தூக்கு தண்டனை என அமைச்சர்கள பேசி வருகின்றனர். அதே மாநிலத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பசுவை அவமதித்தால் கை கால்களை உடைப்பேன் என்கிறார்; ஒட்டு மொத்தமாக மாட்டிறைச்சிக்கே தடைவிதிக்க வேண்டும் என்கிறார். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பசுவை மட்டுமல்ல எந்த மாடுகளையும் ஏற்றிச் செல்லக் கூடாது என்று தடை விதித்துவிட்டனர். மத்திய அமைச்சராக இருந்து தற்போது துணை குடியரசுத்தலைவராக மாறியுள்ள  வெங்கய்யாநாயுடுவோ "உங்களுக்கு நான் ஒன்றும் சளைத்தவன் இல்லை" என்பதுபோல், "உணவு உண்பது அவரவர் உரிமைதான் என்றாலும், அரசியல் சட்டப்படிதான் உண்ண வேண்டும்" என்று மிரட்டுகிறார். அரியானா உள்துறை அமைச்சர் பெகுலுகான் பசுவை கடத்தியதால்  அடித்துக் கொல்லப்பட்டார் என்று படுகொலையை நியாயப்படுத்தினார்.
   இந்த செயல்பாடுகள் சங்பரிவாரங்களின் பாசிச அரசியல் அணிதிரட்டலுக்கே பயன்படும். இந்த நடவடிக்கைக்கு பின்னால் ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு தலைவன், ஒரு மதம், ஒரே உணவு என்ற பாசிச கொள்கையின் நீட்சி மறைந்து கிடக்கிறது.

பிரதம சீடகோடியின்  நாடகம
         நமது நாட்டின் பிரதமர் அடித்துக்கொல்லும் கொள்கைகளுக்கு எதிராக பேசவில்லை. முhறாக கூட்டுக்கொலை நடந்தாலும் அது பற்றி பொதுவான வாய்சவடால்தான் பேசுகிறார். இந்த பேச்சுக்களை சங்கபரிவாரங்கள் துளியளவும் ஏற்றுக்கொள்வதில்லை. "பசு ரட்சகர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டு கடை திறந்திருப்பவர்கள் என்னை அதிகம் கோபப்படுத்தியுள்ளனர்". "பலர் இரவில் சமூக விரோதிகளாகவும், பகலில் பசு பாதுகாவலர்களாகவும் வேஷம் போடுவதை நான் பார்க்கிறேன்". (2016, ஆக 6) என பிரதமர் நரேந்திர மோடி பசு ரட்சகர்களை எச்சரித்த பிறகு இந்த படுகொலைகள் அதிகமாக அரங்கேறி வருகின்றது. இது மோ(ச)டி வேஷம் தரித்த பேச்சு என்பதை தொடரும் படுகொலைகள் அம்பலப்படுத்துகின்றன. 
    இவரது கட்சி ஆளும் மாநிலங்களில்தான் அவர் குறிப்பிடும் படுகொலைகள் நடக்கின்றன. அதற்கும் மேலாக இவரது தாய் கழகமான ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஎச்பி அமைப்புகள் இவரது இந்த போலி கூற்றைக்கூட ஏற்கவில்லை. "பிரதமர் சொன்னது எங்களுக்கு பொருந்தாது. மோடி பிஜேபி-யில் இல்லாத காலத்திலிருந்து நாங்கள் இந்த பசு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றோம். எனவே இந்த குற்றச்சாட்டு எங்களை கட்டுப்படுத்தாது" என்று விஎச்பியின் பசு ரட்சகர்கள் பிரிவு தலைவர்களில் ஒருவரான உக்கம்சிங் சாவ்லா அறிவித்துவிட்டார் (2016, ஆக 8). "மோடி இப்படி பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்" என ஆர்.எஸ்.எஸ். செய்தி தொடர்பாளர் மன்மோகன் வைத்தியா தெரிவித்துள்ளார். அவர், "பசு ரட்சகர்கள் நடத்தும் சம்பவங்கள் சட்டம் ஒழுங்கு சம்பந்தபட்ட பிரச்சனை. நிர்வாக நடவடிக்கை சார்ந்தது. இதில் பிரதமர் தலையிட வேண்டிய அவசியம் இல்லை" (ஆக 7, 2016) என்றும் கூறியுள்ளார். 2014-ம்ஆண்டு மேமாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் குறிப்பாக மோடி கலந்துகொண்ட கூட்டங்களில் “மோடிக்கு வாக்களியுங்கள் பசுவை வாழ வையுங்கள்” “பசு பாதுகாக்கப்பட்டால் நாடு பாதுகாக்கப்படும்” என்று பாஜகவின் உட்பிரிவான பசுமுன்னேற்ற செல்(உடிற னநஎநடடியீஅநவே உநடட) பிரச்சாரம் செய்தது. இப்போது பிரதமர் சொல்வதை அவர்கள் எப்படி கேட்பார்கள். 
                    
    நாட்டில் நடைபெற்று வரும் கூட்டுக்கொலை அல்லது அடித்துக்கொல்லப்படும் நிகழ்வுகளுக்கு எதிராக மோடி இதுவரை மூன்று முறை பேசிஉள்ளார். அதற்கான காரணம் உள்ளது. சில சம்பவங்கள் பொதுமக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தியது. பாஜகவின் பொதுவான செல்வாக்iக் கேள்விக் குள்ளாக்கியபோது சம்வங்களை கண்டிக்காமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறாமல் பொதுவான தளத்தில் நாடக நடிகர் போல் தனது வசனத்தை மோடி ஒப்புவித்தார். 

2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிஹாரில் தேர்தல் நடைபெற இருந்தது. செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தாத்ரி கிராமத்தில் முகமது அக்லக் அடித்துக் கொல்லப்பட்டபோது நாடுமுழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு பிஹார் தேர்தலை பாதிக்கும் என்பதால் “ இந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து ஏழ்மைக்கு எதிராக போராட வேண்டும்” என்று பேசினார்.

2016-ம் ஆண்டு ஜுலை மாதத்தில் குஜராத்தில் உனா மாவட்டத்தில் இறந்த மாட்டின் தோலை உரித்தற்காக நான்கு தலித் இளைஞர்களை கட்டி வைத்து தாக்கியது வீடியோ காட்சியாக நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. உலக அளவில்கூட  எதிர்ப்பை கிளப்பியது.  பாஜகவின் பிம்பத்தை சிதைத்தது.  எனவே மோடி சற்று கூடுதல் நடிப்புடன் பேசினார்.“ சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட ஒருசிலர் இரவு முழுவதும் அவ்வாறு செய்தததை நான் பார்த்தேன். அந்நாளில் அவர்கள் பசுபாதுகாவர்கள் என்ற ஆடையை போர்த்தி இருந்தார்கள்” என்று பேசினார். மேலும் “ அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், தாக்கவேண்டும் என்றால் என்னை தாக்குங்கள் எனது தலித் சகோதரனை தாக்குவதை நிறுத்துங்கள், நீங்கள் சுடவேண்டும் என்றால் என்னை சுடுங்கள் எனது தலித் சகோதரனை சுடாதீர்கள் , இந்த விளையாட்டு நிறுத்தப்பட வேண்டும்” என்று பேசினார். ஆனால் இந்த விளையாட்டு நிறுத்தபட வில்லை. மேலும் கூடுதாலக நடக்க ஆரம்பித்தது.

மீண்டும் மூன்றாவது முறையாக 2017-ம் ஆண்டு  ஜுன் 29ம் தேதியன்று மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் சாத்தான் வேதம் ஓதியது போல் அகிம்சையை பற்றி அற்புதமாக பேசினார்.  “இந்தியாவில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிபோக்குகள் பற்றிய எனது வலியையும் கண்டனத்தையும் நான் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த நாடு ஒரு எறும்பைக்கூட கொன்றதில்லை. இந்த நாடு சுற்றித்தெரியும் தெருநாய்களுக்குகூட உணவளித்த நாடு. கடலில் உள்ள மீன்களுக்கு உணவளித்த நாடு. இந்த நாட்டில்தான் பாபு என்ற மனிதர் நமக்கு அகிம்சையை போதித்தார்.  நமக்கு என்ன நேர்ந்து விட்டது? இந்த நாடு பாபுவின் நாடு தானா? நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? ” என்று பேசிமுடித்தார்.

இவரின் இந்த பேச்சுக்கு அடுத்த நாள் ஜுன் 30-ம் தேதி ஜுனைத் என்ற 16 வயது நிரம்பிய இளைஞன் ரயிலில் அடித்துக்கொல்லப்பட்டான். இப்படி பேசும் பிரதமர் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தாத போது இந்த பேச்சுக்கள் அனைத்தும் பகல்வேஷம் என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும். அது மட்டுமல்ல தலித் மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று மட்டும் பிரித்து பேசி முஸ்லிம் மக்களை தனிமைப்படுததும் பணியையும் சாதுரியமாக செய்தது வருகிறார்.

வன்முறை புதியதல்ல... நோக்கம் புதிது, படை புதிது.

இந்தியாவில் கும்பல் வன்முறை புதியதல்ல. வரலாற்றில் பல காலங்களில் வன்முறைகள் நடந்துள்ளன. குறிப்பாக சூனிய வேட்டை என்ற பெயரில் கிராமங்களில் பிள்ளை பிடிக்க வந்துள்ளார்கள் என்று அடித்துக் கொன்ற சம்பவங்கள் நடந்துள்ளது. இதே போன்று மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மந்திரம், தந்திரம் செய்யக்கூடியவர்களை பல  நேரங்களில் அடித்து சாகடித்துள்ளனர். இந்தியாவில் 2000 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டுகள் வரை சுமார் 2097 பேர்கள் 12 மாநிலங்களில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக நடைபெற்றுள்ளது. மற்றொரு விதம் தலித்துகளுக்கு எதிராக பாலியல் வன்முறை, கொலைகள் மற்றும் இதர தாக்குதல்கள் போன்ற கும்பல் வன்முறை நடந்துள்ளது. வேறொரு வகையில் வகுப்புவாத காட்டுத் தீ பரவியபொழுது 1984 ல் சீக்கியர்களுக்கு எதிராகவும், 2009 ல் காந்தமஹாலில் கிறிஸ்த்துவர்களுக்கு எதிராகவும், 2002 ல் குஜராத்தில், 2013 ல் முசாபர் நகரில், 2015 ல் பக்ஷா போன்ற இடங்களில் கும்பல் வன்முறை நடைபெற்றது. ஆனால் இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களும், வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கும் இடையிலான பிரச்சனைகள் வெவ்வேறு அம்சங்களை உள்ளடக்கி இருந்தது. 

தற்போது பாஜக ஆட்சியில் பிரவாகம் எடுத்துள்ள கும்பல் வன்முறை மாறுபட்ட வடிவமும், குறிப்பிட்ட நோக்கத்தை கொண்டதாக உள்ளது.  பெரும்பாலான வன்முறைகள் பசு குண்டர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது. 2014 மோடி ஆட்சிக்கு வந்தபிறகு பசுபாதுகாப்பு சட்டத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள், திருத்தங்கள், கெட்டித்தன்மை ஆகியவற்றின் விளைவால் இந்த வன்முறைகள் அரங்கேறி உள்ளது. பசு பாதுகாப்பு குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டவர்களில் 86 சதவீதம் முஸ்லீம்கள் ஆவார்கள்.  பெரும்பாலான படுகொலைகள் தவறான குற்றச்சாட்டுகளால் நடந்துள்ளது. 

இந்த வன்முறையின் மற்றொரு வடிவம் இந்துத்துவா அமைப்புகளால் அரங்கேற்றப்பட்டுள்ளன. கோயில் ஒலிப்பெருக்கி மூலமாகவோ இதர தகவல் தொடர்பு சாதனங்கள்  மூலமாக குறிப்பிட்ட பகுதியினரை திரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். விஷ்வ இந்து பர்ஷித், பஜ்ரங் தள், கௌ ரக்ஷா தள், கௌ ரக்ஷா சமிதி ஆகிய அமைப்புகளால் நடைபெற்றுள்ளது என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மறுபுறத்தில் ஆட்சியாளர்களின் நேரடி ஆதரவு இந்த வன்முறையாளர்களுக்கு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி வார்த்தைகள் அளவில் இந்த வன்முறைகளை கண்டித்தாலும், அவர் குஜராத் முதல்வராக இருந்தபொழுது வன்முறையாளர்களுக்கு முழு ஆதரவாக இருந்தார். அவரது அரசு இதற்காக நிதி ஒதுக்கீடுகளை கூட செய்தது. 2011 ஆம் ஆண்டு குஜராத்தில் கௌசேவா மற்றும் கௌசார் விகாஸ் வாரியத்திற்கு (ழுழுஏக்ஷ) 1.5 கோடியிலிருந்து 150 கோடியாக நிதி ஒதுக்கீடு செய்தார். 2011 முதல் 2014 ஆம் ஆண்டு வரை இடைப்பட்ட காலத்தில் 1394 பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு ரூ.75 லட்சம் அளவில் வெகுமதி வழங்கியுள்ளார். 1999 ல் அமைக்கப்பட்ட இந்த வாரியம் 2010 வரை செயல்படவில்லை. மோடி 2011 ல் பெருந்தொகை ஒதுக்கீடு செய்து புத்துயிரூட்டினார். பசுவை எடுத்துச் சென்றாலோ அல்லது வதை செய்வதை பசு குண்டர்கள் பிடித்துக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.500 வெகுமதி அளிக்கப்பட்டது. சிறந்த பசு பாதுகாவலர் என்ற பட்டமளித்து ரூ.25000 வெகுமதி கொடுத்தார். அரியானா அரசு கௌவான்ஷ் சன்ரக்ஷான் அண்டு கௌசம்வதன் சட்டம் 2015 ஐ கொண்டு வந்து அதன் மூலமாக பசு குண்டர் படைகளை உருவாக்கியது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பேர்களுக்கு அடையாள அட்டை கொடுத்தனர். 2017 ஆம் ஆண்டு மட்டும் மகாராஷ்டிராவில் 1900 பேர்கள் பசு பாதுகாவலர்கள் அடையாள அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். 

இந்தியாவில் நடைபெற்று வரக்கூடிய வன்முறைகளின் தன்மைகள் மாறுபடுகிறது. கலவரங்கள் நடப்பதும், தனிநபர் குரோதங்களால் நடைபெறக்கூடிய வன்முறைகளில் பல  நேரங்களில் கும்பபல் வன்முறைகள் தலை தூக்குவது தனி ரகம். ஆனால் பாஜக ஆட்சியில் வந்த பிறகு நடைபெறக்கூடிய வன்முறைகள் கும்பல் ஆட்சி வன்முறைகளாக உருவம் எடுத்துள்ளது. சிறுபான்மையினரை அழிப்பது, ஆட்சியாளர்களின் அங்கீகாரத்தையும், நிதி உதவியும் பெறுவது, அமைப்புகளை உருவாக்கி அடையாள அட்டை பெற்றுக் கொண்டு வன்முறையில் ஈடுபடுவது புதிய வகையிலானது.  பெரும்பான்மை மக்களின் உணர்வு என்ற போர்வையில் இந்த வன்முறைகளை முடிவில்லாமல் நடத்தி கொண்டே வருகின்றனர்.

ஆட்சியாளர்களின் ஆதரவுடன்தான் நடைபெறுகிறது என்பதற்கு பீஹார் சிறந்த உதாரணம் ஆகும். லாலு-நிதிஷ் கூட்டணி ஆட்சியில் பசுவின் பெயரால் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை. ஆனால் நிதிஷ் கட்சிமாறி பாஜகவுடன் கூட்டணி அமைத்தவுடன் பசுவின் பெயரால் தாக்குதல் துவங்கிவிட்டது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 17 அன்று பிஹார் மாநிலம் சம்பரான் மாவட்டத்தில் டுமா கிராமத்தில் முகமது சஹாபுதின் என்பவர் வீட்டில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்று விஎச்பி தலைமையில் 50 பேர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் 4 பேர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் காவல்துறை பாதிக்கப்பட்டவர்கள் மீது “திட்டமிட்டு பெரும்பான்மை மக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக” வழக்கு தொடுத்துள்ளது. தாக்கியவர்கள் மீது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்றால் அப்படி எந்த புகாரும் வரவில்லை என்று காரணம் கூறுகின்றனர். நிதிஷ் கட்சிமாறி பாஜகவுடன் கூட்டு வைத்த கடந்த 15 நாட்களில் இரு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. பிஹாரில் கடந்த 2010-லிருந்த இப்படி எந்த சம்பவமும் நடைபெற்றதில்லை. ஆட்சியாளர் ஆதரவில்லை என்றால்  பசு குண்டர்கள் வாலை சுருட்டி இருக்கின்றனர். அதிகாரம் கையில் வந்தால் அடித்துக்கொல்கின்றனர். 

இந்த கும்பலாட்சி வன்முறைகள் பல இடங்களில் காவல்துறையின் ஆதரவுடனோ அல்லது அவர்களின் பங்களிப்புடனும் நடந்துள்ளதாக ஆய்வுகள் வெளிப்படுத்துகிறது. சம்பவ இடத்திலேயே படுகொலைகள் நடந்த பிறகும் தண்டனை சட்டம் 302 என்ற குற்றப்பிரிவை பதிவு செய்வதே இல்லை. பொது மக்களின் போராட்டத்திற்கு பிறகே சில இடங்களில் பதிவு செய்கிறார்கள். பெரும்பாலான மரணங்களில்  பாதிக்கப்பட்டவரின் மரண வாக்குமூலத்தில் குற்றவாளிகளின் பெயர்கள் உட்பட தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தாலும் அடையாளம் தெரியாதவர்கள் என்று முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்கின்றனர். பரிதாபாத், பானிபட், யமுனா நகர், அகமதாபாத், உ.பி போன்ற இடங்களில் நடந்த சம்பவங்கள் இதற்கு உதாரணம் ஆகும். பல இடங்களில் பாதிக்கப்பட்டு காயமடைந்தவர்கள், மரணமடைந்தவர்கள் மீதும் வழக்குகளை பதிவு செய்கின்றனர். பசு திருடர்கள், பசு வதையாளர்கள், ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்தார்கள், விலங்குவதை சட்டத்தை  மீறியவர்கள், பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை புண்படுத்தியவர்கள் என்ற பிரிவில் பதிவு செய்தனர். இதுவரை நடைபெற்றுள்ள இந்த கும்பலாட்சி வன்முறை படுகொலைகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை. வழக்கில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே இவை அனைத்தும் ஆட்சியாளர்களால் சட்டத்திற்கு அப்பாற்பட்ட கூட்டத்தினரால் நடத்தப்படக்கூடிய நிகழ்வாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. 

ஊடகம், நீதித்துறை பாராமுகம்

  நமது நாட்டின் “ஜனநாயகத்தின் கண்காணிப்பாளன்”(றயவஉhனடிப டிக னநஅடிஉசயஉல) என்று பெருமிதபட்டுக்கொள்ளும் ஊடகங்கள் இந்த கும்பலாட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கவலைப்படுவது இல்லை என்பதைவிட இருட்டடிப்பு செய்கின்றனர். போலி தேசவெறியை தூண்டும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து உண்மை விஷயங்களை மறைக்கும் அநீதியை செய்துகொண்டுள்ளன.  

       மறுபுறத்தில் நீதித்துறையும் இதுபோன்ற சம்பவங்களில் போதுமான தலையீடு செய்வதில்லை. துடிப்பாக செயல்படும் நீதிதுறை (தரனiஉயைட யஉவiஎளையஅ) என்று அழைத்துக்கொள்ளும் இக்காலத்தில் பல தனிநபர் விஷயங்களில் செய்திகள் மூலம் தானாக தலையிட்டு  நடவடிக்கை எடுக்கும் நீதித்துறை இதுபோன்ற கும்பல் வன்முறைகளில் தலையிடுவதில்லை. உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி அஹமதி 

“செயல்துடிப்புள்ள நீதித்துறை என அதிகம்பேசும் இக்காலத்தில்  வகுப்புக் கலவரங்கள், துவேஷ பேச்சுக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் குறிவைத்து தாக்கப்படும் நிகழ்வுகளின் வாசலுடன் ஏன் இந்த நீதித்துறை நின்றுவிடுகிறது” 
என்ற முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை எழுப்பியுள்ளது நினைவுகூறத்தக்கது.

    பசுபாதுகாப்பு என்பதில் ஆரம்பித்து  மதநிந்தனை, காதல், என்று பரவி இப்போது சந்தேகத்தினி பெயரிலேயே அடித்துகொள்வது அன்றாட நிகழ்வாக உள்ளது. இவை அனைத்தும் சட்டத்தின் ஆடசியை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை மற்றும் நிர்வாக அதிகாரிகள் முன்னிலையிலேயே நடைபெறுகிறது. அனைத்துக்கும் பெருபான்மையினரின் நம்பிக்கை என்ற வகையில் சட்டரீதியாக நியாயப்படுத்தப்படுகிறது. இட்லரின் பாசிச நெடி இந்த வார்த்தைகளில் வீசுகின்றது.  அமெரிக்காவின் மனித உரிமை போராளி மார்ட்டின் லூதர் கிங் 

“அடால்ப் இட்லர் ஜெர்மனில் என்னசெய்தாரோ அவை அனைத்தும் சட்டபூர்வமானது என்றும் ஹங்கேரி விடுதலை  போராட்ட வீரர்கள் தங்களது விடுதலைக்காக என்ன செய்தார்களோ அவை அனைத்தும் சட்டவிரோதமானது  என்றும் பார்க்கப் பட்டது. இட்லரின் ஜெர்மனியில் ஒரு யூதருக்க உதவிசெய்வது அல்லது ஆறுதல் கூறுவதுகூட சட்டவிரோதம் என்றனர். இருந்தாலும் அக்காலத்தில் நான் ஜெர்மனியில் வாழ்ந்திருந்தால் நிச்சயமாக எனது யூத சகோதரனுக்கு உதவி யிருப்பேன் ஆறுதல் கூறி இருப்பேன். இவை அனைத்தையும் நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.” 
(பெர்மிங்காம் சிறையிலிருந்து எழுதிய கடிதம்)

இங்குமட்டுமல்ல.. சனாதன நீட்சியெங்கும்

எங்கெல்லாம் மதம் பழமைவாதம் அரசியல் ஆதாயத்திற்கு தேவைப்படுகிறதோ, எங்கெல்லாம் மதம் பொருளாதாhத சுரண்டலுக்கு பயன்படுத்தப்படுகிறதோ உழைப்பாளி மக்களும் அவர்களது சிந்தனையாளர்களும் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நமது அண்டை நாடான பாகிஸ்தான் இதற்கு விதிவிலக்கல்ல.  பாகிஸ்தானில் கைபர்-பதுன்கவா நான்கு முக்கிய ஆட்சி பிரதேசங்களில் ஒன்றாகும். இங்குள்ள கான் அப்துல் வாலி கான் பல்கலை கழகத்தில் இதழியல் படித்து வந்த மாஷெல் கான் என்ற மாணவன் 50-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து அடித்து துன்புறுத்தி கடைசியாக தலையில் சுட்டுக்கொன்றனர். மதம் பற்றி விமர்சன அடிப்படையில் பேசியதால்   தெய்வநிந்தனை குற்றம் சுமத்தி கொலை செய்தனர். 

இதே போன்று பாகிஸ்தாள் லாகூருக்கு அருசில் கோட் ராதா கிஷன் தாலுகாவில் ஷாமா மற்றும் ஷஷாத் மசி என்ற கிறிஸ்துவ தம்பதியினர் தஞ்சம் கேட்டு வந்தனர். அவர்களை தெய்த்திற்கு விரோதமானவர்கள் என்று குற்றம் சுமத்தி 100-க்கும் மேற்பட்ட கும்பல் சேர்ந்து 10அடி குழியில் தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர். 

1987 முதல் 2015 வரை பாகிஸ்தானில் தெய்வநிந்தனை என்ற பெயரில் 62 பேர்கள் நடுவீதியில் அடித்துக்கொல்லப்பட்டுள்ளனர். இதற்காக இதுவரை ஒருவர்கூட தண்டிக்கப்படவில்லை. இதே காலத்தில் 1462 பேர்கள் தெய்வநிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளனர் என்று சமூகநீதி மைய்யம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் 730 முஸ்லீம்கள், 501 அகமதியர்கள், 205 கிறிஸ்துவர்கள், 26 இந்துக்கள் ஆவார்கள். தெற்காசிய நாடுகளில் பல முஸ்லீம் அமைப்புகள் இதுபோன்ற அடித்துக்கொல்லும் நிகழ்வுகளில் ஈடுபடுகின்றனர்.

வகுப்பசிந்தாங்களை கொண்டுள்ள அமைப்பள் எங்கெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அங்கெல்லாம் அனைத்துவிதமான சுதந்திரங்களும் தனிமனித உரிமைகளும் தூக்கி எறியப்படுகிறது. இந்தியாவின் 71-ம் ஆண்டு  சுதந்திர தினத்தன்று கட்டுரை எழுதிய (டைம்ஸ் ஆப் இந்தியா) பாஜக செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் வாஜ்பாய் அரசில் பாஜகவில் இருவர் மட்டுமே அரசியல் சட்டபதவியில் இருந்தனர் (வாஜ்பாய், பைரோன் சிங் கெய்க்வாட்), தற்போது பிரதமர், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, சபாநாயகர் என அனைத்து அரசியல் சட்ட பதவிகளும் எங்களிடமே உள்ளது என்று எழுதியுள்ளார். இதன் அர்த்தம் விரைவில் இந்துராஷ்டிரா அறிவிக்கப்படும் என்பதாகும்.  எனவே இன்றைய தேவை இந்த குடியாட்சியையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியுள்ளது. பாசிசம் தனது கோரமுகங்களை வேகமாக வெளிப்படுத்தி வருகிறது. தடுக்கப்பட வேண்டிய ஆகப்பெரும் கடமையாக ஜனநாயக சக்திகள் முன் உள்ளது. 
- அ.பாக்கியம்
                                                                                                                                                                       bakkiam1960@gmail.com
மார்க்சிஸ்ட் மாத இதழ் அக்டோபர்.2017

       

திங்கள், அக்டோபர் 02, 2017

ஓசான்குளம் கிருஷ்ணன்: களச்செயற்பாட்டின் மறுபெயர்


                   கடந்த 29.09.2017 அன்று ஓசாங்குளம் தோழர்.கே.கிருஷ்ணன் தனது 68-வது வயதில் மரணமடைந்தார். நான் அண்ணாநகர் கமிட்டியில் செயல்பட்டபோது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தனது சிறு வயதிலேயே சென்னைக்கு வந்தவர். சற்று உயரம் குறைவான  சிறுத்த உடல், எப்போதும் மடித்து கட்டிய  வேஷ்டி, நரைத்தமுடி,  கள்ளங் கபடமற்ற சிரித்த முகம் இதுதான் அவரது தோற்றம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை புல்லாபுரத்திற்கு பின்புறம் கட்டப்பட்டடுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் டீக்கடை நடத்திவந்தார். 1990-ம் ஆண்டு முதல் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடைவைத்திருப்பவர்கள் கட்சியில் அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அதுவும் டீக்கடை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் இவர் கடையையும் நடத்திக்கொண்டே கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வார். கிளைக்கூட்டத்தை இவர் தவிர்ப்பதே இல்லை.கிளைக்கூட்டத்தில் அரசியல் விவாதங்களை நம்பிக்கை அளிக்கும் வகையில் புதியவர்கள் பயனடையும் வகையிலும் பேசுவார். 

     ட்சியின் லெவி செலுத்துவதில் முன்னுதாரணமாக இருப்பார். மாதாமாதம் லெவிசெலுத்துவார். உடல்நிலை சரியில்லாதபோதும் இந்து ஆண்டு டிசம்பர்வரை லெவி செலுத்தியிருப்பதாக பகுதிக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். இங்கு குறிப்பிட பட வேண்டிய முக்கிய அம்சம் இவரது உயிரோட்டமான  மக்கள் தொடர்பு. கட்சி நிதிவசூல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வருடந்ததோறும் சுமார்  ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் டீக்கடையில் இருந்துகொண்டே நிதிவசூல் நடத்துவார். தொகை என்பதைவிட அவர் சந்திக்கும் அனைவரிடமும் நிதிவாங்கிவிடுவார். அவரது கடையில் ஒரு முறைக்குமேல் டீக்குடிக்க வந்தால் அவரிடம் கண்டிப்பாக நிதிகேட்டிருப்பார். டீ போட்டுக்கொடுக்கும் போதே ரசீது புத்தகத்தையும் நீட்டிவிடுவார்.பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய்வரைதான் ஒருவரிடம் வசூலிப்பார். அங்கு வருகின்றவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். சுமார் 300 முதல் 400 பேர்கள் வரை உள்ளுரிலேயே வசூலித்துவிடுவார். உடனடியாக ரசீதை கொடுத்துவிடுவார்.நாங்கள் பலநேரங்களில் அவரது கடையில் நிற்கிறபோது பலர் நிதிகொடுத்துச் செல்வதை பார்த்துள்ளோம். 

            இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் அவர் எப்போதும் ஒரு பெரும் வேலையாக பேசாமல் இயல்பாக செய்தார் என்பதுதான் குறிப்பிட வேண்டியது  என்பதைவிட கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. கடையில் இருந்து கொண்டே முறைசாரா சங்கத்தை அமைத்து வாரிய உதவிகளை வாங்கிக்கொடுத்து வந்தார். ஓசான் குளத்தில் பல குழந்தைகள் படிக்க வைக்க கட்சிவேறுபாடின்றி பலரின் உதவியை பெற்று படிப்புக்கு உதவினார். அருகாமையில் உள்ள பூபதிநகர் உட்பட சில இடங்களில் வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு காரணமாய் இருந்தார். அதுமட்டுமல்ல அங்குள்ள கட்சிக்கிளையை செயல்படுத்திக்கொண்டே இருந்தார். பொறுப்புக்களில் இளைவர்களை முன்னிருத்தி தான் எந்த பொறுப்பையும் ஏற்காமல் அதற்கெல்லாம் மேலாக பணியினை செய்தார். 

       லட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஆக்கப்பூர்வமான பணியினை மேற்கொள்வது என்பதற்கு ஆசானாக தோழர்.கிருண்ன் இருந்தார். அவரது டீக்கடை உள்ளுர்மக்களின் உதவிசெய்யும் அலுவலகமாகவும், அவர் உதவும் கரங்களாகவும் வாழ்ந்தார் என்பதற்கு அவரின் இறுதியாதிரையே சாட்சியமாக அமைந்தது. கருத்தாளர்களுக்கே இன்று செயற்பாட்டாளர் என்ற அடைமொழி கொடுக்கப் படுகிறது. ஆனால் உண்மையில் களச்செயற்பாட்டாளர் என்பதற்கு மறுபெயராக தோழர்.கிருஷ்ணன் வாழ்ந்தார். 
பாக்கியம் 
30.09.2017

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

பாஜக; பின்தொடரும் பாலியல் வக்கிரம்

.
      அரியானா  பாஜக மாநில தலைவராக சுபாஷ் பர்லா உள்ளார். இவரது மகன் விகாஷ் அவரது நண்பர்  ஆசிஷ் இருவரும் சண்டிகரில்  இளம்பெண்ணை இந்த மாதம் 5ம் தேதி காரில் பின்தொடர்ந்து பாலியல் வக்கிரம் செய்ய முயற்சித்தனர். காவல்துறை அப்பெண்ணை மீட்டனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்து 9 சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை என்று கூறி குற்றவாளிகளை தப்பிக்கவைக்க முயற்சி செய்கின்றனர். 

      பாஜக ஆட்சிபீடம் ஏறிய விடன் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுவது அதிகமாகி உள்ளது.

       2017 ஜுலை மாதம் டெல்லியில் 21 வயதுள்ள விமானப்பணிப்பெண் பின்தொடர்ந்த இளைஞனால் தெருவில் குத்தி கொலை செய்யப்பட்டாள். பலமுறை புகார் செய்தும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.

     இதே ஆண்டு மே மாதம் டெல்லியில் 24 வயதுள்ள பெண் பின்தொடர்ந்தவன் வீட்டுவாசலில் வந்து குத்தி கொலை செய்கிறான். 

       2016 செப்டம்பர் மாதம் டெல்லியில் 22 வயதுள்ள பெண் பட்டபகலில் பின்தொடர்ந்தவனால் படுகொலை செய்யப்படுகிறாள்.
        
          2014-ல் பெண்கள் மீதான பின்தொடர்ந்த பாலியல் வன்முறை 4699 இருந்தது. 2015-ல் இது 6266 ஆக அதிகரித்துள்ளது.
           
            2015-ல் டெல்லியில் அதிகபட்சமாக 1124 வன்முறைகள்  அதாவது மொத்த குற்றங்களில் 12.1 சதமாக உளளது. அடுத்ததாக மராட்டியத்தில் 1399, தெலங்கானாவில் 766  ஆந்திரபிரதேசதில் 551 ஆக உள்ளது. 

               பெண்களை பின்தொடர்ந்து பாலியில் வன்முறை நடைபெறுவதில் மிகவும் ஆபத்தான நகரங்களாக டெல்லி, மும்பைய்,பூனே, அவுரங்காபாத், கொல்கத்தா உள்ளது.

              மொத்தமாக 2015-ல் விசாரிக்கப்படவேண்டிய 9083 வழக்குகளில் 146 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது அல்லது திரும்பபெறப்பட்டுள்ளது. மற்றபை அப்படியே உள்ளது.

         
மொத்தமாக நடைபெறும் குற்றங்களில் நாடுமுழுவதும் 46.9 சதம் தண்டிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களில் 26.4 சதம் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்.

புதன், ஆகஸ்ட் 02, 2017

அதிகார பித்தலாட்டங்கள்


         திகார பித்தலாட்டங்கள் அம்பலமாகி  வருகிறது. பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை விட இந்த செய்திகளை பத்திரிக்கைகளில் வெளிவர விடாமல் தடுப்பதுதான் மிகப்பெரும் ஆபத்தாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே நீக்கிவிட்டனர். நீக்கப்பட்டதற்கான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. அதற்கான பொறுப்பையும் இதுவரை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதுமட்டுமல்ல இதனுடைய துணை பத்திரிக்கையான நவபாரத் டைம்ஸ், எகானமிக் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் வெளி வந்ததையும் உடனடியாக நீக்கிவிட்டனர். இதேபோன்ற ஒரு செய்தி ஜூலை 29 அன்று டி.என்.ஏ என்ற இணையதள பத்திரிக்கையில் வெளிவந்ததும் உடனடியாக நீக்கப்பட்டது. பிஜேபி தலைவர்களை பற்றி, அவர்களது ஊழலை பற்றி 99 சதவீதம் செய்திகள் வெளிவராமல் மிரட்டி தடுத்துவிடுகின்றனர். வெளிவரக்கூடிய ஒரு சதவீதத்தையும் உடனடியாக அச்சுறுத்தி நீக்கிவிடுகின்றனர். அமித்ஷா சொத்து சம்பாதித்ததை விட அச்செய்திகள் வெளிவராமல் தடுக்கிற அதிகாரமே இன்று கோலோச்சுகிறது. 
              
             ஆனால் நமது நாட்டு பிரதமர் இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல்  இந்த  ஆண்டு மே 3ம் தேதி சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினத்தில் பத்திரிக்கை சுதந்திரத்தை தயக்கமின்றி பாதுகாப்போம், அது ஜனநாயகத்தின் உயிர் என்றெல்லாம் பேசியுள்ளார். ஒரு சதம் ஊழலை வெளியிட்டால் கூட மிரட்டுவது, உடனடிய்hக நீக்குவது, ஒளிபரப்பை தடைசெய்வது என்று வேட்டையாடுகின்றனர். இந்தியா, உலக அளவில்  பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படும் நாடுகளில் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கிறது.

பித்தலாட்டம் 1
             பாஜக தலைவர் அமித்ஷா தற்போது குஜராத்திலிருந்து இராஜ்ய சபாவிற்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு தாக்கலில் அவரின் சொத்து வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அறிய முடிந்தது. 2007 மற்றும் 2012 ஆகிய காலத்தில் அவர்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது 6 கோடி சொத்து அதிகரித்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். 2012லிருந்து 2017க்குள் அவரது சொத்து 34 கோடியாக உயர்ந்துள்ளது. அசையும் சொத்து 1.91 கோடியிலிருந்து 19.01 கோடியாக உயர்ந்துள்ளது. அசையா சொத்து 6.63 கோடியிலிருந்து 15.30 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் 2.60 கோடியிலிருந்து 47.69 லட்சமாக குறைந்துள்ளது. 13.54 கோடியிலிருந்து 34.40 கோடியாக சொத்தை உயர்த்தியுள்ளார். இதில் பரம்பரை சொத்து 10.38 கோடி என்று தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் மொத்த சொத்தாக காண்பித்திருப்பது 11.15 கோடி மட்டுமே. இந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு எப்படி அதிகமானது என்று தெரியவில்லை. எங்கு சம்பாதித்தார். எப்படி சம்பாதித்தார் என்ற விவரம் அநேகமாக மோடிக்கு மட்டும் தெரியலாம்.


பித்தலாட்டம் 2
இதேபோன்று ஜவுளி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிரிதிராணியின் பட்டப்படிப்பு பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது. 2004 சாந்தினிசௌக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறபொழுது டெல்லி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் 1996 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் முடித்ததாக எழுதி கொடுத்துள்ளார். 2014 ல் ராகுல்காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டுயிடுகிறபொழுது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் டெல்லி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் 1994 ஆம் ஆண்டு பி.காம் முடித்ததாக எழுதி கொடுத்துள்ளார். தற்போது குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் பட்டபடிப்பை முடிக்கவில்லை என்று எழுதி கொடுத்துள்ளார். இதுதான் இந்தியாவின் கல்வி அமைச்சராக, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய, தற்போது ஜவுளி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சருடைய லட்சணம். 

பித்தலாட்டம் 3 
இவர் மீது தற்போது பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதியை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய குஜராத்தில் மக்ரோல் என்ற கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார். இங்கு நிதி ஒதுக்கிடு செய்ததில் ஒரு நிறுவனத்திற்கு 1.23 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் முழு பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு நிறுவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 50 லட்சத்திற்கு மேல் ஒப்பந்த ஒதுக்கிடு செய்ய கூடாது என்ற விதி உள்ளது. இது 2014 - 15 மற்றும் 2016 - 17 நடைபெற்றுள்ளது. நிதி தவறாக கையாளப்பட்டுள்ளது என சிஏஜி மற்றும் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பித்தலாட்டம் 4
தற்போது துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜகவினுடைய மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தெலுங்கானா அரசாங்கம் காவல்துறைக்கு வாகனம் வாங்குவதற்காக 271 கோடியை ஒப்பந்தம் கோராமல் அர்ஷடோயோட்டா (ழயசளாய வடிலடிவய) என்ற நிறுவனத்திற்கும் ஹிமான்சுமோட்டார்ஸ் (ழiஅயளோர ஆடிவடிசள) என்ற நிறுவனத்திற்கும் ஒதுக்கியுள்ளது. இதில் முதல் கம்பெனி வெங்கையா நாயுடுவின் மகளுக்கு சொந்தமானது. இரண்டாவது கம்பெனி தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் மகனுக்கு சொந்தமானது.

பித்தலாட்டம் 5
2017 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தெலுங்கானா அரசாங்கம் இரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது வெங்கையா நாயுடுவின் மகள் செயல்படுத்தி வரக்கூடிய சுவர்ண பாரத் டிரஸ்ட்டிற்கு விதிவிலக்கு கொடுத்து 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பித்தலாட்டம் 6
வெங்கய்யா நாயுடு பாஜக தலைவராக இருந்தபோது , குஷாபாபு தாக்ரே அறக்கட்டளைக்கு தலைவராக இருந்தார். அப்போது இந்த அறக்கட்டளைக்கு 2004-செப்டம்பர் 25-ல் மத்தியபிரதேச அரசிடமிருந்து  பலநூறுகோடி மதிப்புள்ள 20 ஏக்கர்  நிலத்தை  25 லட்சம் பணத்தை செலுத்தி வருட வாடகை ஒரு ருபாய் செலுத்தி பெற்றுக்கொண்டார். இந்த இடம் வணிகமயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. 2011 ஏப்ரல் 6-ம்தேதி உச்ச நீதி மன்றம் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

பித்தலாட்டம் 7
வெங்கய்யா நாயுடு நெல்லூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 2002ம் ஆண்டு ஏழை, தனிப்பெண்கள், நிலமற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 4.95 ஏக்கரை அபகரித்துக்கொண்டார்.  ஸ்தல மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் அந்த இடத்தை மீண்டும் ஒப்படைத்தார்.
மேற்கண்ட மும்மூர்த்திகள் தான் பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள்.

புதன், மே 17, 2017

மோடியின் மூன்று ஆண்டுகள்-2


       இந்திய வரலாற்றில் இந்த அளவில் கார்பொரேட் கம்பெனிகள் வேகமாக வளர்ந்துமில்லை மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதும் இல்லை. இத்தனை சாதனைகளும் சங்பரிவாரம் பாஜக ஆட்சியில்தான் நடைபெறும். 

      2014-15-ல் மோடி ஆட்சிபீடம் ஏறும்போது முற்றும் துறந்த முனிவர் பாபா ராம்தேவின் சொத்த மதிப்பு 2007கோடியிலிருந்து 2015-16-ல் 5000 கோடியாக உயர்ந்து 2016-17-ல் 10,561 கோடியை எட்டியுள்ளது.  

           வேகமாக  விற்பனையாகும் நுகர்பொருள் வணிகத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளார். தேசி நெய் விற்பனையில் 1467 கோடி, பற்பசை 940 , தலைக்கு தேய்க்கும் எண்ணெய் 825, குளியல் சோப் 574, கடுகு எண்ணெய் 522 , ஆட்டா 407, பிஸ்கட் 380, தேன் 385, துணிசோப் 325, தோல் மருந்து 231, முகம்கழுவும் ஆயில் 228 கோடிகள் , என 20க்கும் மேற்பட்ட தொழில் சாம்ராஜ்ஜியத்தை இந்த மூன்று ஆண்டுகளில் கட்டமைத்துள்ளார். 

            இந்தியாவின் மொத்த ஷாம்பூ வணிகத்தில் 15 சதமும், தேன் விற்பனையில் 50 சதமும், பாத்திரம் கழுவும் சோப்விற்பனையில் 35 சதத்தையும், பற்பசையில் 14 சதத்தையும் முகம்கழுவும் ஆயில் விற்பனையில் 15 சதம் பிடித்துள்ளார். இவை மந்திரமல்ல தந்திரமல்ல மோடி வித்தையால் மட்டுமே சாத்தியம்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...