Pages

திங்கள், அக்டோபர் 02, 2017

ஓசான்குளம் கிருஷ்ணன்: களச்செயற்பாட்டின் மறுபெயர்


                   கடந்த 29.09.2017 அன்று ஓசாங்குளம் தோழர்.கே.கிருஷ்ணன் தனது 68-வது வயதில் மரணமடைந்தார். நான் அண்ணாநகர் கமிட்டியில் செயல்பட்டபோது அவருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. தனது சிறு வயதிலேயே சென்னைக்கு வந்தவர். சற்று உயரம் குறைவான  சிறுத்த உடல், எப்போதும் மடித்து கட்டிய  வேஷ்டி, நரைத்தமுடி,  கள்ளங் கபடமற்ற சிரித்த முகம் இதுதான் அவரது தோற்றம். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலை புல்லாபுரத்திற்கு பின்புறம் கட்டப்பட்டடுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் டீக்கடை நடத்திவந்தார். 1990-ம் ஆண்டு முதல் கட்சியில் செயல்பட்டு வந்தார். கடைவைத்திருப்பவர்கள் கட்சியில் அன்றாட பணிகளில் ஈடுபடுவது கடினமாக இருக்கும். அதுவும் டீக்கடை என்றால் கேட்கவே வேண்டாம். ஆனால் இவர் கடையையும் நடத்திக்கொண்டே கட்சியின் முக்கிய நிகழ்வுகளில் கலந்துகொள்வார். கிளைக்கூட்டத்தை இவர் தவிர்ப்பதே இல்லை.கிளைக்கூட்டத்தில் அரசியல் விவாதங்களை நம்பிக்கை அளிக்கும் வகையில் புதியவர்கள் பயனடையும் வகையிலும் பேசுவார். 

     ட்சியின் லெவி செலுத்துவதில் முன்னுதாரணமாக இருப்பார். மாதாமாதம் லெவிசெலுத்துவார். உடல்நிலை சரியில்லாதபோதும் இந்து ஆண்டு டிசம்பர்வரை லெவி செலுத்தியிருப்பதாக பகுதிக்குழு உறுப்பினர் ஆறுமுகம் தெரிவித்தார். இங்கு குறிப்பிட பட வேண்டிய முக்கிய அம்சம் இவரது உயிரோட்டமான  மக்கள் தொடர்பு. கட்சி நிதிவசூல் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். வருடந்ததோறும் சுமார்  ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் டீக்கடையில் இருந்துகொண்டே நிதிவசூல் நடத்துவார். தொகை என்பதைவிட அவர் சந்திக்கும் அனைவரிடமும் நிதிவாங்கிவிடுவார். அவரது கடையில் ஒரு முறைக்குமேல் டீக்குடிக்க வந்தால் அவரிடம் கண்டிப்பாக நிதிகேட்டிருப்பார். டீ போட்டுக்கொடுக்கும் போதே ரசீது புத்தகத்தையும் நீட்டிவிடுவார்.பத்து ரூபாய் முதல் நூறு ரூபாய்வரைதான் ஒருவரிடம் வசூலிப்பார். அங்கு வருகின்றவர்களும் அப்படிப்பட்டவர்கள்தான். சுமார் 300 முதல் 400 பேர்கள் வரை உள்ளுரிலேயே வசூலித்துவிடுவார். உடனடியாக ரசீதை கொடுத்துவிடுவார்.நாங்கள் பலநேரங்களில் அவரது கடையில் நிற்கிறபோது பலர் நிதிகொடுத்துச் செல்வதை பார்த்துள்ளோம். 

            இப்படிப்பட்ட வேலைகளையெல்லாம் அவர் எப்போதும் ஒரு பெரும் வேலையாக பேசாமல் இயல்பாக செய்தார் என்பதுதான் குறிப்பிட வேண்டியது  என்பதைவிட கற்றுக்கொள்ள வேண்டியதாக உள்ளது. கடையில் இருந்து கொண்டே முறைசாரா சங்கத்தை அமைத்து வாரிய உதவிகளை வாங்கிக்கொடுத்து வந்தார். ஓசான் குளத்தில் பல குழந்தைகள் படிக்க வைக்க கட்சிவேறுபாடின்றி பலரின் உதவியை பெற்று படிப்புக்கு உதவினார். அருகாமையில் உள்ள பூபதிநகர் உட்பட சில இடங்களில் வாலிபர் அமைப்பை கட்டுவதற்கு காரணமாய் இருந்தார். அதுமட்டுமல்ல அங்குள்ள கட்சிக்கிளையை செயல்படுத்திக்கொண்டே இருந்தார். பொறுப்புக்களில் இளைவர்களை முன்னிருத்தி தான் எந்த பொறுப்பையும் ஏற்காமல் அதற்கெல்லாம் மேலாக பணியினை செய்தார். 

       லட்டிக்கொள்ளாமல் அமைதியாக ஆக்கப்பூர்வமான பணியினை மேற்கொள்வது என்பதற்கு ஆசானாக தோழர்.கிருண்ன் இருந்தார். அவரது டீக்கடை உள்ளுர்மக்களின் உதவிசெய்யும் அலுவலகமாகவும், அவர் உதவும் கரங்களாகவும் வாழ்ந்தார் என்பதற்கு அவரின் இறுதியாதிரையே சாட்சியமாக அமைந்தது. கருத்தாளர்களுக்கே இன்று செயற்பாட்டாளர் என்ற அடைமொழி கொடுக்கப் படுகிறது. ஆனால் உண்மையில் களச்செயற்பாட்டாளர் என்பதற்கு மறுபெயராக தோழர்.கிருஷ்ணன் வாழ்ந்தார். 
பாக்கியம் 
30.09.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...