Pages

ஞாயிறு, நவம்பர் 12, 2017

மோ(ச)டி அரசு?


           

                  மோசடித்தனங்களை, தில்லு முல்லைகளை தடுக்க வேண்டிய அரசே அப்படடமான மோசடித்த னதில் ஈடுபட்டால் நாடு எப்படி வாழும். இப்படிப்பட்ட காரியங்களை மோடி அரசால் மட்டுமே செய்ய முடியும். இந்திய கிராமபுற ஏழைகளில் ஒரு பெரும்பகுதி உயிரோடு இருக்கிறார்கள் என்றால் இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால்  கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதிதிட்டம் தான் என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

                 இத்திட்டத்தை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று மோடி அரசு முயற்சிக்கின்றது.  தற்போது 19 மாநிலங்களில் இத்திடடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக கூலிகொடுக்க வில்லை. பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்தும் அந்த நிதியை அனுப்பவில்லை. எவ்வளவு தொழிலாளர்களுக்கு தெரியுமா? 9 கோடியே 20 லட்சம் தொழிலாளர்களுக்கு கூலிகொடுக்கவில்லை. 

                     அரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கூலிகொடுக்கவில்லை. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில்  செப்டம்பர் மாதம் வரையும், திரிபுரா உட்பட 6 மாநிலங்களில் அக்டோபர் முதல் கூலி கொடுக்கவில்லை. மொத்தம் 3066 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 2016-17 ம் நிதியாண்டில் 51 சதம் கூலிதொகையை காலதாமதமாக வழங்கியது மத்திய அரசு.
               வேலை செய்த தொழிலாளிக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதற்குமேல் காலதாமதமானால் உரிய இழப்பீட்டுடன் கூலிகொடுக்க வேண்டும். உரியகாலத்தில் கொடுக்காமல்  இழுத்தடிப்பது ஒரு மோசடித்தனம். மறுபுறத்தில் காலதாமதமானதற்கு  கொடுக்கவேண்டிய தொகையை குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளையடிப்பது மற்றொரு மோசடித்தனம்.  

              2016-17 ம் ஆண்டு காலதாமதத்திற்கு கொடுக்கவேண்டிய தொகை 1208 கோடியாகும். முத்திய அரசு மோசடித்தனம் செய்து 519 கோடி அதாவது 43 சதம் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டது. இந்த நிதியாண்டில் மட்டும் 34,7 கோடி காலதாமத இழப்பீட்டுத்தொகை கொடுக்க வேண்டும். கொடுத்தது 3.6 கோடி மட்டுமே.  ஜார்கண்ட், பிஹார், சத்தீஷ்கர், கர்நாடகா, உபி, ராஜஸ்தான் , மபி, ஒடிசா, மேற்குவங்கம், கேரளா ஆகிய 10 மாநிலங்களில் இந்த நிதியாண்டில் சட்டப்படி 36 கோடி 82 லட்சம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு 15 கோடி 61 லட்சம் என்று மோசடிக்கணக்கை போட்டு கொடுத்துள்ளது. 

                        15 நாட்கள் பணிமுடித்து பட்டியல் அனுப்பிவைத்தாலும் மத்திய அரசு நிதிகொடுப்பதற்கு 63 நாட்கள் காலதாமதம் செய்கிறது. பனிமுடித்து 15 நாட்கள் கடந்து காலதாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 0.05 சதவிகிதம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும். இதைக்கூட கொடுக்காமல் மோசடி செய்து வயிற்றில் அடிக்கும் அரக்கனாக மத்திய அரசு செயல்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...