Pages

வியாழன், ஜூன் 25, 2015

ஊற்றெடுக்கும் ஊழல் ஆண்டு?


       ஊழலற்ற ஓராண்டு  என்று மோடி அரசின் சுயவிளம்பரம் மைய் காய்வதற்குள் ஊழல் ஊற்று வெளிப்படத் துவங்கி விட்டது. இது பெருவெள்ளமாக பெருக்ககெடுப்பதை தடுக்க முடியாது. ஏற்கனவே பங்காரு லட்சுமணன் எடியூரப்பா  போன்றவர்களை தலைவர்களா இருந்த கட்சிதான். மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது கார்பொரேட் கம்பெனிகளுக்கு சலுகை கொடுத்து பலரை சம்பாதிக்க வைத்தவர்தான்.தற்போது அடுத்தடுத்த ஊழல் நடவடிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளது.

                மூத்த அமைச்சர் சுஷ்மா  சுவராஜ் தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு விசா வாங்க பணதாபிமான அல்ல அல்ல  மனிதாபிமான அடிப்படையில் உதவியுள்ளார்.இவரது கணவர் லலித்மோடியின் 22 ஆண்டுகால வழக்கறிஞர்.மகள் பாஸ்போர்ட் வழக்கிலேயே லலித்மோடிக்கு வழக்கறிஞர்.

              பாரதிய ஜனதா கட்சியின் இராஜஸ்தான் மாநில முதல்வர் தொழிலாளர்களுக்கான தொழிற்சங்க உரிமைகளை பறித்தவர் வசுந்தரா ராஜே..லலித் மோடிக்கு பாஸ்போர்ட்  ஆவணங்களில் ரகசிய கையெழுத்திட்டுள்ளார்.அத்துடன் நின்றாரா? லலித்மோடியின் மனைவி சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போர்ச்சுகல் நாட்டு மருத்துவமனையுடன் ஒப்பந்த்ம் போட்டுள்ளார்.


                     மத்திய கல்வித்துறை கவனிக்கும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர்  ஸ்மிருதி இராணி பள்ளிக்கல்வி முடித்து விட்டு பட்டம் பெற்றதாக சான்றிதழை கொடுத்து தேர்தலில் போட்டியிட்டுள்ளார்.அதுவும் ஒரு தேர்தலில் பி.ஏ. மற்றொரு தேர்தலில் பி,காம்.என்று கொடுத்துள்ளார். 

                    மராட்டிய மாநில பா.ஜ.க.அரசின் அமைச்சர் பங்கஜ் முண்டே 230 கோடி ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகி உள்ளார்.
    கடந்த காலத்தில் ஐ.மு.கூட்டணி அரசு ஆட்சியின்போது முதல் முறையில் ஊழல்வெளிப்படவிலில்லை. இரண்டாவாது முறையில்தான் ஊழல் மடைதிறந்த வெள்ளமாக வெளிப்பட்டது.இப்போதுமோடியின் முதலாமாண்டு முடிந்து  ஊழல் ஆண்டு துவங்கிவிட்டது..

1 கருத்து:

  1. ஊழலில் பெண்கள் பலியாகி உள்ளனரே! இதில் ஏதாவது இருக்குமா? இந்த கார்பரேட் ஆதரவு அரசில் இதுவரை ஊழல் தாக்குப்படித்து நின்றதே ஆச்சரியமே! இனிமேல் இவர்களது முகமூடி ஒன்று ஒன்றாக கிழியும்! அதை சமாளிக்க ஒரு கட்டத்தில் அத்வானி சொன்னதுபோல் "அது" வந்தாலும் வரலாம்! பாம்பின் கால் பாம்பு அறியுமாம்! ராஜ்நாத்சிங் திமிரான பதிலே "அதற்கான" வலுவான சந்தேகத்தை ஏற்படுகிறது!

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...