Pages

சனி, ஜூன் 17, 2023

கோர்பச்சேவின் மரணம் குறித்து


ஜியுகனோவ்!

தமிழில் அ.பாக்கியம்

(Gennady Zyuganov இப்போது ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் ஸ்டேட் டுமாவில் கம்யூனிஸ்ட் கட்சி பிரிவு தலைவர். இங்கே ரஷ்ய மொழியிலிருந்து தோராயமான மொழிபெயர்ப்பு உள்ளது)

அவர் அரசியல் அதிகாரத்தின் திரைக்கு அவர் வந்தது பெரும் சோகமாகவே கருதுகிறேன்.

கோர்பசேவ் மரணம் தொடர்பாக உலகின் மிகப்பெரிய நாடுகளின் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தது என் கைகளில் இருக்கிறது. அமெரிக்க அதிபர், பிரான்ஸ் அதிபர், ஆஸ்திரிய அதிபர், ஐநா பொதுச் செயலாளர், பிரிட்டன் பிரதமர், ஆகியோர் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர் இந்த கருத்துக்களின் சாராம்சம் என்னவென்றால் கோர்ப்பச்சேவ் தனது கொள்கையால் உலக மக்களுக்கு சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றை கொண்டு வந்ததாக கூறுகிறார்கள்.

நான் ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கலாச்சாரம் மற்றும் சோவியத் தேசபக்தியின் மரபுகளினால் வளர்க்கப்பட்டவன், எனவே மறைந்தவர்களின் நல்லதைப் பற்றியோ அல்லது அவர்களைப் பற்றி ஒன்றும் இல்லை என்பதை பற்றியோ பேசவேண்டும் என்ற விதியை நான் எனது மரபில் இருந்து கடைப்பிடிக்கிறேன். இவையெல்லாம் பெரிய அரசியல்வாதிக்கு பொருத்தம் இல்லாத விஷயமாக இருக்கலாம். உலகின் தலைவிதி, மக்களின் நல்வாழ்வு, அரசுகளின் முழுமையான கண்ணியம், இந்த தலைவர்களின் செயல்பாடுகளை சார்ந்து இருந்தது.

நான் முதலில் குறிப்பிட்டுள்ள உலக ஆட்சியாளர்களின் மதிப்பீடுகளை பகிர்ந்து கொள்ள மாட்டேன் என்பதை நீங்கள் நன்றாக அறிவீர்கள். ரஷ்யாவின் ஆயிரம் ஆண்டு கால வரலாற்றில் ஆட்சியாளர்களில்  ஒருவராகவே நான் கோர்ப்பச்சேகை பார்க்கிறேன். அவர் நம் நாட்டின் மக்களை மட்டும் அல்ல, நமது கூட்டாளிகள், மற்றும் நண்பர்கள் அனைவரின் துரதிஷ்டமாக, துக்கத்தையும் துரதிஷ்டத்தையும் கொண்டு வந்தவராக இருக்கிறார் என்று கருதுகிறேன்.

நான் சி.பி,எஸ்.யூ வின் மத்திய குழுவில் பணிபுரிந்துள்ளேன். வடக்கு காகஸ் பகுதியில் மேற்பார்வையாளராக பணியாற்றி உள்ளேன் அப்போது எனது சான்றிதழில் ஆண்ட்ரபோவ் கையெழுத்திட்டு கொடுத்தார். கோர்பச்சேவின் சொந்த ஊரான ஸ்டாரோபோவிற்கு பலமுறை சென்றிருக்கிறேன். அங்கு உள்ளூர் தலைவர்களை நான் சந்தித்து பேசிய பொழுது கோர்ப்பச்சேவ் பற்றிய அவர்களின் முகஸ்துதி அற்ற மதிப்பீடுகளை தெரிந்து கொண்டிருக்கிறேன். ஒரு காலத்தில் கோர்ப்பச்சேவ் அங்கு கட்சி அமைப்பின் தலைவராக இருந்தார் என்பதை நினைவூட்டுகிறேன்.  கோர்ப்பச்சேவுடன் இணைந்து பணியாற்றியவர்கள் அவரை அறிந்தவர்கள். அவரால் ஒன்று செய்ய முடியாது என்றும் ஒருவேளை அவர் மறுசீரமைப்பை தொடங்கி மக்களை தட்டி எழுப்பலாம் என்றும் கூறினார்கள். அரசியல் அதிகாரத்திற்கு அவர் வந்ததை நாங்கள் ஒரு பெரிய சோகமாக கருதுகிறோம் என்று அவர்கள் வெளிப்படையாக சொன்னார்கள். சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மதிப்பீடுகள் அனைத்தும் முழுமையான துல்லியத்துடன் உறுதிப்படுத்தப்பட்டன.

கோர்ப்பச்சேவின் முக்கியமான குற்றம் சோவியத் ஒன்றியத்தை சீர்குலைத்த குற்றமாகும். எல்லாவற்றுக்கும் மேலான அவர் ஒரு சக்தி வாய்ந்த சக்தியை பெற்றிருந்தார். இந்த உலகில் இருந்த அனைவருக்கும் அது தெரியும்.

சோவியத் ஒன்றியம் உலகின் உற்பத்தியில் 20% உற்பத்தியை செய்தது. கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு விமானங்களை உற்பத்தி செய்தது. மின்னணுவியலில் முன்னணியில் இருந்தது. அப்போது நாங்கள் பல துறைகளிலும் பல திசைகளிலும் தலைவர்களாக இருந்தோம்.

உதாரணமாக விமானம், ராக்கெட், விண்வெளிதொழில்நுட்பம், மின்னணுவியல், லேசர் தொழில்நுட்பம், வான்பாதுகாப்பு போன்ற பல துறைகளில் வலுவாக இருந்தோம் துரதிஷ்டவசமாக கோர்ப்பச்சேவின் வருகை இவை அனைத்துக்கும் முடிவு கட்டிவிட்டது இவை அனைத்தும் காட்டிக் கொடுக்கப்பட்டன.

சோவியத் ஒன்றியம் அனைத்து பாதுகாப்பு மண்டலங்களையும் கொண்டிருந்தது ஜெர்மனியில் சோவியத்  துருப்புக்களின்  குழுவில் நான் பணியாற்றிய போது ஜெர்மனியர்கள் எங்களை மதித்து சாலையில் எங்களை வரவேற்றினர் காரணம் அந்த ஆண்டுகளில் நாங்கள் ஒரு பெரிய சக்தியாக இருந்தும் என்பதுதான்.

சி பி எஸ் யு என்பது ஒரு கட்சி மட்டுமல்ல அவசர கால சூழ்நிலைகளில் நெருக்கடிகளை கையாளக்கூடிய அரசியல் நிர்வாக அமைப்பு என்பதை கோர்ப்பச்சேவு கொஞ்சம் கூட புரிந்து கொள்ளவில்லை. லெனினிசம்-ஸ்டாலினிசத்தின் நவீன மயமாக்கல், சிதைந்து கிடந்த பேரரசை ஒன்றுபட்ட சோவியத் அமைப்பாக கொண்டு வந்து சேர்த்தது.

சோவியத் மக்கள் சி.பி.எஸ்.யூ வின் தலைமையின் கீழ் கிட்டத்தட்ட ஒன்பதாயிரம் சிறந்த தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள். பாசிசத்தை தோற்கடித்தார்கள். விண்வெளியில் ஊடுருவி சாதனை படைத்தார்கள். அணு ஏவுகணையை சமநிலையை உருவாக்கினார்கள். இந்த வெற்றிகள் நம்பிக்கை யான கண்ணியமான எதிர்காலத்தை எங்களுக்கு வழங்கியது.

ஆனால் கட்சியை சீர்திருத்துவதற்கு பதிலாக கோர்ப்பச்சே அதை வெறுமனே அழிக்க முடிவு செய்தார் அவர் உச்ச அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து சுமார் 100 முன்னணி தலைவர்களை மற்றும் அமைச்சர்களை சிபிஎஸ்யுவின் மத்திய குழுவில் இருந்து வெளியேற்றினார். கோர்ப்பச்சேவ் அவரைச் சுற்றி அப்பட்டமான துரோகிகளை கொண்ட குறிப்பாக யாகோவ்லெவ்ஸ், ஷெவர்ட்நாட்ஸஸ், யெல்ட்சின்ஸ் மற்றும் பகாடின்ஸ் போன்றவர்களை வைத்துக் கொண்டார்.

கோர்ப்பச்சேவின் மற்றொரு குற்றம் சோவியத் அதிகாரத்தை காட்டிக் கொடுத்தது. எனது தந்தை ஒரு கட்சி உறுப்பினர் அல்ல. அவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார். சோவியத் அரசுக்காக போராடினார். செபஸ்டோபோவில் அருகே யுத்தத்தின் போது அவர் தனது கால்களை இழந்தார். நான், கட்சி மற்றும் கொம்சோமால் பணிகளுக்கு வந்தபோது என் தந்தை என்னிடம் இவ்வாறு கூறினார் *நினைவில் வைத்துக்கொள் மகனே, இந்த வாழ்க்கையில் சோவியத்சக்தியைவிட சிறந்தது எதுவுமில்லை. ஆம்,சிரமங்கள், பிரச்சனைகள் இருக்கும். ஆனால் சோவியத் அரசாங்கம் எப்போதும் சாதாரண மனிதனைப் பற்றி நினைத்தது. பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு முதல் 21 சலுகைகளை வழங்கியது ஒவ்வொரு சோவியத் குடிமகனுக்கும் கல்வி, மருத்துவம் ஆகியவற்றை இலவசமாக கிடைக்கச் செய்தது. சோவியத் ஒன்றியத்தின் தாய் எங்களை வெற்றியின் உச்சத்திற்கு உயர்த்தினாள். இந்த சோவியத் சக்தியை மக்கள் சக்தியை கோர்ப்பச்சே மிகவும் இழிந்த முறையில் காட்டிக் கொடுத்தார்.

சோவியத் ஒன்றியத்தின் அரசியல் அமைப்பின்படி சோவியத் குடிமக்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை உள்ளது என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். சோவியத் ஒன்றியத்தின் குடிமக்களில் கிட்டத்தட்ட 77 சதவீதம் ஒன்றுபட்ட சோசலிச தந்தை நாட்டில் வாழ விருப்பம் தெரிவித்தனர்.

ஆனால் கோர்ப்பச்சேவ், எல்ஸ்டின் தலைமையிலான குழுக்கள் சோவியத் மக்களின் இந்த வரலாற்று சாதனையை காட்டிக் கொடுத்தனர். இது எந்த விதமான வரையறைகளும் இல்லாத குற்றமாகும்.

கோர்ப்பச்சேவின் மற்றொரு குற்றம் என்னவென்றால்

சோவியத் மக்கள் கடந்த 100 ஆண்டுகளில் வென்ற அனைத்தையும் இழக்க வைத்தார். அனைவரும் ஒரு கண்ணியமான வேலைக்கான உத்தரவாதம், நல்ல சுகாதார பாதுகாப்பு, இலவச கல்வி, ஒழுக்கமான ஓய்வூதியம், உட்பட பல சமூக உத்தரவாதங்களை மக்களை இழக்கச் செய்தார். குடிமக்களின் சேமிப்பு மதிப்பு குறைக்கப்பட்டது. மூதாட்டிகளின் ஒரு மழை நாளுக்காக வைத்திருந்த பணம் கூட காலி காகிதமாக மாறியது.

கோர்ப்பச்சேவின் மற்றொரு குற்றத்தை நான் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். அவர் தனது நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் அனைவருக்கும் துரோகம் செய்தார். உதாரணமாக கிழக்கு ஜெர்மனியின்  முன்னாள் தலைவர் ஹரிக் ஒனெக்கர்  ரஷ்யாவில் இருந்து வெளியேற்றும் அளவுக்கு கோர்ப்பச்சேவால் காட்டிக் கொடுக்கப்பட்டார். ஜெர்மனியில் ஹரிக் ஒனேக்கர்  ஹிட்லரின் கீழ் எந்த சிறையில் இருந்தாரோ  அதே சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார்.

1989 டிசம்பர் மாதம் மால்டாவில் கோர்ப்பச்சேவ் அமெரிக்க ஜனாதிபதி சீனியர் புஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் ஆகியோரை சந்தித்து பேசினார். இயற்கை கூட இந்த சந்திப்புக்கு எதிராக கிளர்ந்து எழுந்தது. கடலில் ஒரு காட்டுப் புயல் எழுந்தது. அமெரிக்க கப்பல்கள் ஒரு பக்கமாக தூக்கி எறியப்பட்டது. எங்கள் சோவியத் ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட பெரிய லைனர் மார்சிம் கார்த்தி என்ற கப்பல் சீராக நின்றது. அங்கு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அவர்கள் பேச்சுவார்த்தையில் மேசையில் அமர்ந்தபோது எந்த காரணமும் இல்லாமல் கோர்ப்பச்சேவு புஷ்ஷிடம் கூறினார் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வெளியேற வார்சல ஒப்பந்தத்தை கலைக்க முடிவு செய்தோம் என்று கோர்ப்பசேவ் அறிவித்தார். அமெரிக்க பிரதிநிதிகள் இந்த செய்தியை கேட்டவுடன் அவர்களுக்கு வேர்த்து விட்டதாக வெளியுறவு துறை அமைச்சர் பிரேக்கர் நினைவு கூர்ந்தார். நேட்டோ கலைக்க வேண்டும் என்று கோர்ப்பச்சேவ் கோருவார் என்று எதிர்பார்த்த நிலையில் மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். இல்லை இப்போது நமக்கு தூய சிந்தனை இருக்கிறது. எனவே நாங்கள் வார்சா ஒப்பந்தத்தை கலைக்கிறோம். நீங்கள் விரும்பியதை செய்யுங்கள் என்று கூறிவிட்டார்.

இவ்வாறு முழு பாதுகாப்பு அமைப்பும் காட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு கட்டமைப்பிற்காக எங்கள் தாய் நாட்டின் 27 மில்லியன் மகன்கள் மற்றும் மகள்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். பெரும் தேசபக்த போரின்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு சோவியத் குடும்பமும் உயிரிழப்புகளை சந்தித்தது.

எனவே தான் கோர்ப்பச்சேவ் மற்றும் அவரது குழு என்ன செய்கிறார்கள் என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். நாங்கள்  ஆர் எஸ் எஃப் எஸ் ஆர் என்ற கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கினோம். நாங்கள் பலவீனமாக இருந்தோம். அவர்கள் எங்களுக்கு ஒரு கணக்கை கூட துவக்க விடவில்லை. ஆனால் கிரம்லின் மற்றும் ஸ்டாரையா சதுக்கத்திலிருந்து இந்த ஆட்சியாளர்களை வெளியேற்றுவதற்காக அனைத்து ஆரோக்கியமான தேசபக்தி சக்திகளையும் ஒன்றிணைக்க எங்களுக்கு ஒரு வருடம் மட்டும் போதாது என்பதை புரிந்து கொண்டோம்.

நான் பொலிட்பீரோ உட்பட கட்சி அமைப்புகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டு 10 ஆண்டுகளாக கிரிமினல் வழக்குகளை அவர்கள் ஜோடித்தனர். எழுத்தாளர் யூரி பொண்டரேவ், இயக்குனர் ஸ்டானிஸ்லாவ் கோவோருகின், பாடகர் ஐயோசிஃப் கோப்சன், நடிகர் மிகைல் நோஷ்கின், பத்திரிகையாளர்கள் அலெக்சாண்டர் புரோகானோவ் மற்றும் வாலண்டைன் சிக்கின் ஆகியோர் எனக்கு ஆதரவாக குரல் எழுப்பினர். உண்மையான தேச பக்தர்கள் இது ஒரு நியாயம் அற்ற படுகொலை என்பதை நன்கு அறிந்திருந்து. கிளர்ச்சி செய்தனர். கோர்பசேவ் குழுவிலிருந்து   வெளியேறுவதற்கு நிறைய மகிமை இருக்கிறது. வெளியேற்றுவது அவர்களின் தொழில்.

ஆனால் துரோகத்தனமான 90ஆம் ஆண்டுகளிலிருந்து நாம் நேர்மையாக நம்மைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.  இல்லையெனில் நாசிசம் மற்றும் பாசிசத்தின் மீது  வெற்றி கிடைக்காது. இது எங்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடு.

மக்கள் நீண்ட காலமாக கோர்ப்பச்சேவிசம்  குறித்த மதிப்பீட்டை கடுமையான தண்டனையின் மூலம் வெளிப்படுத்தினர். அதாவது 1996 இல் கோர்ப்பச்சேவ் மற்றும் அவரது குழுவினர் ஒரு தேர்தல் குழுவை உருவாக்கி அந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்க முடிவு செய்தனர். ஆனால் கோர்ப்பச்சேவின் தாயகமான ஸ்டோவ்ரோபோவில் கூட அவருக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று மக்கள் கூறினார்கள். ஏனென்றால் அவர் எல்லாவற்றையும் விற்று ஏமாற்றி விட்டார். திருடர்களின் தனியார் மயமாக்கலை தொடங்கி வைத்தார். இதன் விளைவாக 1996 ஜனாதிபதி தேர்தலில் 0.5% வாக்காளர் மட்டுமே கோர்ப்பச்சேவிற்கு வாக்களித்தனர். இவரின் அனைத்து கிரிமினல் துரோக கொள்கைக்கும் மக்கள் அளித்த தீர்ப்பு இது

நாங்கள் பின்னர் ஒரு பகிரங்கமான தடயவியல்  விசாரணையை நடத்தினோம். எல்ஸ்டினின் குற்ற நடவடிக்கை குறித்து உட்பட இந்த விசாரணை நடைபெற்றது 20க்கும் மேற்பட்ட தொகுதிகள் டூமாவில் உள்ளது. அனைத்து குற்றங்களும் நிரூபிக்கப்பட்டது. கிழக்கு ஐரோப்பாவில் இருந்த ராணுவத்துக்கு இழைக்கப்பட்ட குற்றங்கள் உட்பட இதில் உள்ளது.

ஜெர்மனியில் மட்டுமே எங்கள் துருப்புக்கள்  கிட்டத்தட்ட 5 லட்சம் பேர்கள் இருந்தனர். அது வலிமையான ராணுவமாக இருந்தது. ஜெர்மனியில் இருந்து நாங்கள் எங்கள் படைகளை திரும்ப பெறுவதால் ஒப்பந்தத்தில் குறைந்தபட்சம் ஒரு ஷரத்தை சேர்க்க வேண்டும் என்று  எதிர்பார்த்தோம். அதாவது ஜெர்மனி இனிவரும் நூற்றாண்டுகளில் எந்த நேட்டோவிலும்  சேராது என்ற சரத்து இருக்க வேண்டும் என்று விரும்பினோம். இந்த கொள்கை கிழக்கு ஐரோப்பாவிற்கும் பொருந்தும். காரணம் அந்த நேரத்தில் போலந்து, செக்கஸ்லவாக்கியா, மற்றும் அங்கேரியில் எங்கள் ராணுவம் இருந்தது. இந்த சரத்து சேர்க்காததின்  விளைவு இன்று நாஜிக்கல் அங்கு அணிவகுத்து சோவியத் நினைவுச் சின்னங்களை இடித்து தள்ளுகிறார்கள். ஒவ்வொருவரும் ரஷ்ய மக்களை கேலி செய்கிறார்கள்.

இன்றைய  நமது பிரச்சனைகள் அனைத்தும் அங்கிருந்து வளர்ந்து விரிவடைகிறது. திருடியவர்கள், தங்கள் சட்டைபைகளில் அடைத்துக் கொண்டவர்கள், இந்த குற்றம், அவமானம் தேசத்தின் அழிவு என்று தங்களை தாங்களே வளப்படுத்திக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது கோர்பச்சேவின் மரணத்தைப் பற்றி பேசுகிறார்கள் அல்லது திணறுகிறார்கள். அவர்கள் அமைதியாக இருந்தால் நல்லது.

உலகிலும், ஐரோப்பாவிலும், ரஷ்ய கூட்டமைப்பிலும் தற்போதைய பலவீனமான பாதுகாப்பு  ஏற்படுவதற்கு கோர்ப்பச்சேவின் நடவடிக்கைகள்தான்  காரணமாகும். நமது எல்லையை சுற்றிப் பாருங்கள், இந்த துரோகத்தின் விளைவுகளை நீங்கள் காண்பீர்கள். கிழக்கு ஐரோப்பா இப்போது உக்ரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது. பால்டிக் நாடுகளில் பாசிஸ்டுகள் மற்றும் நாஜிக்கல் எல்லாவற்றிலும் அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் அங்கு தொழிற்சாலைகளை கட்டியவர்களை வாயை அடைத்து புதிய துறைமுகங்களை திறக்கிறார்கள்.

உக்கிரைனில் 82 சதவீத மக்கள் ரஷ்ய மொழியை தங்கள் சொந்த மொழியாக கருதுகின்றனர். ஆனால் இன்று அவர்களால் தாய்மொழி பேச முடியவில்லை. இப்போது உக்ரைன் மற்றும் டான் பாஸில் உள்ள  பாசிசத்தை அழிக்க எங்கள் சிறந்த மகன்களின் வாழ்க்கையை மீண்டும் இழக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்

தற்போது கோர்ப்பச்சேவையும் இரண்டாம் நிக்கோலஸ் சார் மன்னனையும் இணைத்து பேச வேண்டியுள்ளது. நிக்கோலஸ் லண்டன். பாரிஸ். நியூயார்க் வங்கியாளர்களின் பணத்திற்காக தேவையற்ற முறையில் முதல் உலகப்போரில் இறங்கினார். அவர் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை நடத்த முடியாதவராக இருந்தார். அவரது தந்தை அவரைப் பற்றி  நிக்கோலஸ் ராஜ்யத்திற்கு தயாராக இல்லை. கடவுள் அவருக்கு மனதையும், விருப்பத்தையும் கொடுக்கவில்லை. என்று கூறினார் இது ஒரு புறநிலை மதிப்பீடாக இருந்தது

கோர்பசேவ் ஒரு பெரிய ராணுவத்துடன், சக்தி வாய்ந்த, உற்பத்தி சிறந்த, அறிவியல் சிறந்த, சமூக அமைப்பு ஆகியவற்றுடன் அதிகாரத்தில் இருந்தார். தாட்சர் அவரைப் பார்த்து புன்னகைத்ததற்காகவும், புஷ் தோள்பட்டைகளில் கைகளை போட்டதற்காகவும் இதை எல்லாம் வீழ்த்தினார். ஒரு தலைவருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் மிகவும் அவமானகரமான நடத்தை இது.

டான்டே அல்கியேரினி தெய்வீக நகைச்சுவையை படிக்க பரிந்துரைக்கிறேன். பல வட்டங்களில் மரணங்களைப் பற்றிய ஓவியங்களை வரைந்தார். ஒன்பதாவது வட்டத்தில் தங்கள் தாயகம். குழந்தைகள். நாடு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு துரோகம் செய்த அயோக்கியர்களுக் கானது என்பதை வரைந்தார்.

நம் ஆயிரம் வருட வரலாற்றில் கோர்பசேவைவிட பெரிய துரோகியை அவளுக்கு தெரியாது என்று நான் நம்புகிறேன். ஒருவேளை சர்வ வல்லவர்கள் அதைக் கேட்டு இருக்கலாம். சர்வவல்லமையும் இயற்கையும் பூமியை துரோகிகளிடமிருந்தும் காப்பாற்றுவதற்கு இப்படித்தான் சுத்தப்படுத்துகிறது என்று நான் நினைக்கிறேன் மேலும் உலகிலும் ரஷ்யாவிலும் நட்பும் நீதியும் வெற்றி பெறுவதை உறுதிப்படுத்த எல்லாவற்றையும் செய்வோம்

தமிழில் அ.பாக்கியம்

 

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...