Pages

ஞாயிறு, ஜூன் 18, 2023

காரல் மார்க்ஸும் ஒடிசா ரயில் விபத்தும்.

 

   அ.பாக்கியம்



என்ன இது தலைப்பே சம்பந்தமில்லாமல் இருக்கிறதே. மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார் என்று நினைக்கலாம். முதலாளித்துவத்தின் நெருக்கடிக்கும் காரல் மார்க்ஸுக்கும் கண்டிப்பாக தொடர்பு இருக்கும். இப்படிச் சொன்னால் மோடி அரசு உடனே காரல் மார்க்சை கைது செய்வதற்கு தேடி அலைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

இது மிகக் கோரமான முறையில் ஆட்சியாளர்களின் கொள்கை முடிவுகளால் பல நூற்றுக்கணக்கான உயிர் இழப்பும் உடைமை இழப்பும் ஏற்பட்டு இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது தான். நேற்றைய தினம் நான் எனது பதிவில் கவாச் தொழில்நுட்பம் பற்றி குறிப்பிட்டு இருந்தேன். அதற்கு பின்னூட்டம் எழுதியுள்ள தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர்களில் ஒருவரான பி துளசிநாராயணன் நமக்குத் தெரிந்த பலரும் பதிவு செய்திருப்பதில் உங்கள் பதிவு மட்டும் தான் தொழில்நுட்ப கோளாறு பற்றி முதன் முதலாக குறிப்பிட்டு இருந்தீர்கள் (பத்திரிக்கைகளில் வந்தது தான்) என்று தெரிவித்து கவாச் தொழில்நுட்பம் பற்றி  கீழ்க்கண்ட பின்னூட்டத்தை எழுதியிருந்தார்.

"6 ட்ராக்குகள் இருக்கும் வழித்தடத்தில் 

3 ரயில்கள் ஒரே நேரத்தில் மோதி விபத்து நடந்துள்ளது…

இந்திய ரயில்வேத்துறையின் அங்கமான Research and standards organisation (RDSO) மூன்று தனியார்களுடன் இணைந்து ஓடும் ரயில்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக

National Automatic Train Protection என்ற தானியங்கி தொழில்நுட்பத்தை உருவாக்கியது.

அதற்கு KAVACH என்றும் பெயரிட்டார்கள்

23-03-22 ம் தேதியன்று 

நாடாளுமன்றத்தில், ரயில்வேதுறை மற்றும் Kavach தொழில்நுட்பம்  தொடர்பான கேள்விக்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதில் அளித்திருந்தார்

KAVACH தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.16.88 கோடி ரூபாய் 

உலகின் மிகவும் மலிவான தானியங்கி ரயில் மோதலை தடுக்கும் பாதுகாப்பு அம்சம் என்றும் ரயில்வே துறை தெரிவித்தது.

Kavach தொழில்நுட்பம் தொடர்பான இறுதி திருத்தங்கள் செய்யப்பட்ட தேதி-18-01-22

அதன்படி,

தொழில்நுட்ப ரீதியான சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட தேதி 14-03-22 

1957-ல் ஆண்டில் இருந்து இயங்கி வரும் அமைப்பு தான் Research and standards organisation 

RDSO நிறுவனம்

Train collision avoidance system (TCAS) குறித்து 2012 ல் இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு தொழில்நுட்பத்தை வழங்கி வருகிறது 

ஆனால்,தனியார் பங்களிப்புடன் இணைந்து National Automatic Train Protection (ATP) என்ற தானியங்கி தொழில்நுட்பமாக மேம்படுத்தினார்கள்

ஒடிசாவில் நடந்துள்ள விபத்து “கவாச்” தொழில்நுட்பம் குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது

266 பேர் உயிரிழந்துள்ளனர் 

900 பேர் படுகாயமடைந்துள்ளனர் 

ஆனால் ,

ரயில்வேதுறையின் செய்தித்தொடர்பாளர் 

அமிதாப் சர்மா என்ன கூறியுள்ளார் தெரியுமா ?

ஒடிசாவில் விபத்து நடந்த வழித்தடத்தில் 

KAVACH தொழில்நுட்பம் Not Available என்று கூறியுள்ளார் 

முழுமையாக நடைமுறைப்படுத்த இயலாத தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு நாடகம் போட்டதைத் தவிர வேற எதையும் செய்யவில்லை…

மாறாக இந்திய ரயில்வே துறையை சர்வநாசமாக்கி வைத்திருக்கிறார்கள்" (B. துளசி நாராயணன்).

ஆறு வழிப்பாதை இருந்தும், விபத்தை தவிர்ப்பதற்கான தொழில் நுட்பங்கள் இருந்தும் அவற்றை பிரச்சாரத்திற்கு மட்டும் பயன்படுத்திக் கொண்ட ஒன்றிய அரசு துரிதமான முறையில் ரயில்வே துறையில் அமல்படுத்தாததின் விளைவு இந்த ரயில் விபத்து என்பதை அறிந்து கொள்ளலாம்.

சரி காரல் மார்க்ஸ்க்கு வருவோம்.

எனது பதிவு பார்த்தவுடன் ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த தலைவர் , சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் குரோம்பேட்டை விஸ்வநாதன் இந்து பத்திரிகையின் செய்தி துணுக்கை அனுப்பித்தார். அது இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போர்டு விபத்துக்கள் அதிகமாவதற்கு எஞ்சின் டிரைவர்களின் நீண்ட நேர வேலை பளு காரணமாக இருக்கிறது என்று கவலை தெரிவித்துள்ளதுடன், போதுமான அளவிற்கு என்ஜின் டிரைவர்களை எடுக்காமல் இருப்பது ஆள்பற்ற குறையும் முக்கிய காரணம் என்றும், உடனடியாக நீண்ட நேரம் பணியாற்றுவதை ஆய்வு செய்து எந்த காரணத்தை முன்னிட்டும் 12 மணி நேரத்திற்கு மேல் ரயில் என்ஜின் டிரைவர்கள் பணி செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. 

அப்படி என்றால் தற்போது 12 மணி நேரத்திற்கு மேல் பணி செய்யும் அவலம் இருக்கிறது என்று தானே அர்த்தம்.

காரல் மார்க்ஸ் தனது மூலதன புத்தகத்தில் (முதல் பாகம் முதல் புத்தகம்) மிகை நேர வேலையால் (வேலைப்பளு) ஏற்படும் விபத்து பற்றி எழுதியிருப்பார். இதோ அவரது வார்த்தைகளில் "லண்டனில் ஏற்பட்ட ஒரு விபத்து. ஒரு கார்டு ஒரு என்ஜின் டிரைவர் ஒரு சிக்னல் மேன் 3 பேரும் லண்டன் மரண விசாரணை சான்றாயத்தின் முன் நிற்கின்றனர். ஒரு பெரிய ரயில் விபத்து நூற்றுக்கணக்கான பயணிகளை வேறு உலகத்துக்கு அவசர அவசரமாய் அழைத்துச் சென்று விட்டது. ஊழியர்களின் அசட்டையே இந்த துர்ச் சம்பவத்திற்கு காரணம் என்று சான்றாயத்திடம் முறையிடுகிறார்கள். ......... ...... ரயில்களில் மிகக் கடுமையான நெருக்கதிலினால் உழைப்பு பல நேரங்களில் முறிவின்றி (டீ குடிப்பதற்கு கூட நேரம் இல்லாமல்) 40 அல்லது 50 மணி நேரம் நீடித்தது. அவர்கள் சாதாரண மனிதர்களே. சைக்ளோப்ஸ்கள் அல்ல (நெற்றியில் ஒற்றைக் கண்ணுடன் இருக்கும் அபார சக்தி படைத்த கதாபாத்திரம்) . ஒரு கட்டத்தில் அவர்களது உழைப்பு சக்தி அயர்ந்து விட்டது அசதி ஆட்கொண்டது மூளை சிந்தனை இழந்தது கண்கள் பார்வை இழந்தன.......(இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல்) பெருமதிப்புக்குரிய பிரித்தானிய சான்றயர்கள் (தொழிலாளர்கள் மீது) கொலை குற்றம் சாட்டி நீதிபதிகளின் அடுத்த அமர்வில் அவர்களை விசாரணைக்கு அனுப்புவது என தீர்ப்பளித்தனர். (இந்த தீர்ப்புக்கு ஒரு பிற் சேர்க்கையாக சான்றாய நீதிபதிகள் ரயில்வே முதலாளிகளுக்கு ஒரு வேண்டுகோளை முன் வைக்கிறார்கள். இதை காரல் மார்க்ஸ் எப்படி நையாண்டி செய்கிறார் என்பதை பார்க்கலாம்) அவர்கள் தமது தீர்ப்புக்கு இணைப்பாய் சேர்த்த இதமான பிற்சேர்க்கையில் ரயில்வே களின் முதலாளித்துவ பெருமக்கள் வருங்காலத்தில் போதிய அளவு உழைப்பு சக்தியை வாங்குவதில் இன்னும் தாராளமாகவும் (ஒடிசா விபத்தை குறித்து ரயில்வே போர்டு அதிக ஆள் எடுக்க வேண்டும் என்று கூறியிருப்பதை நினைவில் கொள்க) உழைப்பு சக்தியை வடிப்பதில் (சுரண்டுவதில்) இன்னும் மிதமாகவும் சிக்கனமாகவும் இருப்பார்கள் என்று போலித்தனமாய் நம்பிக்கை தெரிவித்தனர்". என்று காரல் மார்க்ஸ் எழுதுகிறார்.

மேலே உள்ள மேற்கோள்களில் அடைப்புக்குரிய இருப்பது எனது விளக்கம்.

தொழிலாளியின் தவறுகள் தான் விபத்துக்கு காரணம் என்று முதலாளிகளின் நீதிபதிகள் கூறுகிற பொழுது காரல் மார்க்ஸ் வேலை பளு தான் காரணம் என்பதற்கான அரசின் அறிக்கைகளை எடுத்து ஆதாரமாக கொடுக்கிறார். அன்றைய காலகட்டத்தில் தொழிலாளர் மத்தியில் காரல் மார்க்ஸின் ஆய்வுரைகள் வழக்கிற்கு உதவி செய்தது மட்டுமல்ல தொழிலாளர்களை வெளிப்படையை செய்தது. 

சான்றாய நீதிபதிகள் முதலாளிகளிடம் கெஞ்சுவது போலித்தனமானது என்று காரல் மார்க் குறிப்பிட்டது போல் நமது நாட்டின் பிரதமரும் ரயில்வே துறையும் இப்பொழுது அறிவிப்பது அனைத்தும் போலித்தனமானதாக இருக்கக் கூடாது என்று நம்புகிறோம். வரலாற்றில் முதலாளித்துவ சுரண்டலை ஆதரிக்கும் அரசு உழைப்பாளி மக்கள்  மீது காட்டிய கரிசனம் அனைத்தும் போலித்தனமாக இருந்தது என்று தான் வரலாறு நிரூபித்துள்ளது.

மரண ஓலங்களிலிருந்து உயிர் பிழைத்தவர்கள், உறவினர்களை இழந்தவர்கள் ஊர் திரும்புவதற்கு விமானத்தில் பயணிக்க சென்றார் 8000 முதல் 12000 வரை இருந்த விமான கட்டணத்தை 60 ஆயிரம் வரை உயர்த்தி கொள்ளையடிப்பது தான் தனியார் முதலாளிகளின் கரிசனம். இந்த கரிசனம் நிறைந்த முதலாளிகளை தான் மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் மேன்மிதங்கிய கணவான்களாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அ.பாக்கியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...