Pages

புதன், டிசம்பர் 27, 2023

தொழிற்சங்க ஊழியர்களுக்கு சிறப்பான கையேடு

 தோழர்.ஏ.கே. பத்மநாபன்

(சிபிஐஎம் மத்திய குழு உறுப்பினர்,
சி ஐ டி யு முன்னாள் அகில இந்திய தலைவர், முன்னாள் அரசியல் தலைமை குழு உறுப்பினர் "வேலை நாள்" புத்தகம் பற்றி)




தோழர் பாக்கியம்
"வேலை நாள்" படித்து முடித்தேன்.

வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.
தொழிற்சங்க ஊழியர்களுக்கு சிறப்பான கையேடு இந்த நூல்...

திருத்தம்
----------------
83 வது பக்கம் கடைசி இரண்டு வரிகளில் எழுத்து பிழை உள்ளதை கவனிக்கவும்.

பக்கம் 119.
சர்வதேச தொழிலாளர் அமைப்பு உருவானது பற்றி எழுதியதில் ஐ.நா.சபை என்று உள்ளது. சரியல்ல.லீக் ஆப் நேஷன்ஸ் என்ற அதன் முன்னோடி அமைப்பு.

ஆலோசனைகள்.
-----------------------------
பக்கம் 122
சிங்காரவேலர். அவரது மே தின கொண்டாட்டம் மட்டுமல்ல,8 மணி நேர வேலை, சங்கம் சேரும் உரிமை,வேலை நிறுத்த உரிமை,விடுப்பு உட்பட்ட ஒரு மானிபெஸ்டோ அவர் வெளியிட்டார் . அது நீண்ட கோரிக்கை பட்டியல். ஓரிரு வாசகங்கள் சேர்க்கலாம்.

பக்கம் 123
கிர்ணி காம்கர் யூனியன் என்பது பஞ்சாலை தொழிலாளர்களுக்கானது என போடலாம்

பக்கம் 124
6 வது வரியில் பொது நுகர்வு என்பது பொதுப் பயன்பாட்டு துறை என போடலாம்.(Public Utility service )

இவை எல்லாம் திருத்தி தான் ஆகவேண்டும் என்பதற்கு அல்ல. பெரும் குறைபாடும் அல்ல.
இவ்வளவு சிரமப் பட்டு செய்த வேளையில் கண்ணில் பட்ட சிறு விசயங்களை சுட்டினேன். அவ்வளவு தான்.
வாழ்த்துக்கள்
மனமார்ந்த பாராட்டுக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...