Pages

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

பாஜக அரசின் மின்சார புளுகு?

 
     
    வளர்ச்சி வல்லரசு புதிய இந்தியா என்று மோடி வருடந்தோறும் செங்கோட்டையில் ஏறி நின்று வாய்கிழிய பேசுவதுடன் மட்டுமல்லாமல் பொய்மூட்டடைகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார். ஆனால் உண்மைநிலை வேறு என்பதை நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். சமீபத்திய இந்தியா ஸ்பென்ட்(ஆக.29,2018 )ஆய்வுகள் உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

       இந்தியாவில் மொத்தம் 6,40,932 கிராமங்கள் உள்ளன. இதில் 43,324 கிராமங்களில் மக்கள் வாழவில்லை. 5,97,608 கிராமங்களில் மக்கள் வாழ்கின்றனர். இவற்றில் 2,92,000 கிராமங்களில் வாழக்கூடிய 2 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இதில் உபி-யில் மட்டும் 1 கோடியே 20லட்சம், அஸ்ஸாமில் 19 லட்சம்,ஒடிசாவில் 18 லட்சம் குடும்பங்களும் அடங்கும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 18,374 கிராமங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளன. இவற்றில் 1425 கிராமங்களில் மட்டுமே அதாவது 8 சதவிகித கிராமங்களில் மட்டுமே  அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

        பாஜக அரசு ஆட்சிபீடம் ஏறியவுடன் 2014 நவம்பர் மாதம் கிராமபுறங்களை மின்மயமாக்குதற்கு தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா என்ற திட்டத்தை துவக்கி 43033 கோடி நிதிஒதுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் கடந்த மூன்று ஆணடுகளில் (2015-18) 30 சதவிகித நிதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

          சுதந்திர இந்தியாவில் 4 கோடி குடும்பங்குளுக்கு மின்இணைப்பு இல்லை என்று முழங்கிய பிரதமர் இலக்கில் சரிபாதியை கூட எட்டமுடியவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் (2005-2012 ) 1,04,496 கிராமங்கள் மின்மயமாக்கப்ட்டது. இக்காலத்தில் 2 கோடியே 10 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது.இதில் 1 கோடியே 90 லட்சம் இணைப்புகள் இலவச இணைப்பாகும். 

ஆனால் பிரதமர் செங்ககோட்டையில் ஏறிநின்று கண்ணாடி கூண்டு இல்லாமல் இலக்கை எட்டமுடியாவிட்டாலும் அனைத்து கிராங்களுக்கும் வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கிவிட்டதாக அண்டபுளுகை அவிழ்த்துவிடுகிறார்.  


2 கருத்துகள்:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...