Pages

ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

என்ன பிரதமரே? இப்படி “பொய்” பேசுறீங்களே?


 

     தற்போது இந்தியாவில் இருக்கும் 100 விமான நிலையங்களில் 35 விமான நிலையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று பிரதமர் மோடி அவர்கள் செப் 24 அன்று சிக்கிமில் முதல் விமான நிலையமான பாக்யாங் (Pakyong)  விமான நிலையத்தை திறந்து வைத்து பேசியுள்ளார். அத்துடன் விடவில்லை. 


    “சுதந்திரம் பெற்றநாள் முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் 65 விமான நிலையங்கள்தான் கட்டப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ஒன்றுதான் கட்டப்பட்டது, கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் ஆண்டுக்கு 9 வீதம் கட்டியுள்ளோம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார் பிரதமர்(“Since Independence to 2014, over 67 years, there were 65 airports. i.e an average of one airport per year whereas for the past four years, on average, nine airports have been built per year.”) உண்மையாக இருந்தால் பீற்றிக்கொள்வதில்லை தப்பில்லை.
  
        இந்த நான்கு ஆண்டுகளில் 7 விமான நிலையங்கள்தான் கூடுதலாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜக அரசின் தகவல்களே தெரிவிக்கின்றது.  இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் 129 விமான நிலையங்கள் உள்ளது என்றும் இவற்றில் 23 சர்வதேச விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 8 சரக்குகளை கையாளும் விமான நிலையங்கள், 20 இராணுவ விமானநிலையங்கள் ஆகும்  என்று மத்திய விமானதுறை அமைச்சகத்தின் 2017-18 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 129 விமான நிலையங்களில்  101 விமான நிலையங்கள் இராணுவ விமான நிலையங்கள் உட்பட செயல்படுகின்றது. 28 விமான நிலையங்கள் செயல்படவில்லை என்று பாராளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விக்கு ஜுலை 19,2018 மற்றும் ஆகஸட் 8, 2018 தேதிகளில் விமானதுறை அமைச்சகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி விமானதுறை அமைச்சகம் கொடுத்த 2013-2014 ஆண்டறிக்கையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 125 விமான நிலையங்கள் இருந்ததாகவும் இவற்றில் 94 இயங்கக்கூடியது 31 செயல்பட வில்லை என்று அறிக்கை தெளிவாக உள்ளது. 

2018- மோடி அரசின் அறிக்கைபடி 101 விமான நிலையங்கள் செயல்படுகின்றது என்றால் 7 விமான நியைங்கள்தானே அதிகமாகி உள்ளது. எப்படி 35 அதிகமாகி இருக்கும். ஒரு நாட்டின் பிரதமரே இப்படி பொய் பேசுவது என்றால் அந்தக்கட்சி எப்படி பொய்பேசும். புளுகுவது என்று வந்துவிட்டால் பூமிக்கும் வானத்துக்கும் உள்ள எல்லைகளை பிரதமரே உடைத்துவிடுகின்றார்.

சிக்கிம் மாநில முதல் விமான நிலையத்தை இவரது ஆட்சியின் சாதனை என்று   பறைசாற்றுகிறார். இது 2008-ம் ஆண்டு அனுமதிவழங்கப்பட்டு 2014-ம் பாஜக ஆட்சிக்கு வரும்முன் 83 சதவிகிதம் பணிகள் நிiவேற்றப்பட்டு விட்டன. இந்த திட்டம் காலதாமதமானதற்கு மோசமான தட்பவெட்ப நிலை, கூர்கா முன்னனி அமைப்பால் அடிக்கடி நடத்தப்பட்ட முழுஅடைப்பு, 2011 நிகழ்ந்த பூகம்பம், உள்ளுர் மக்களின் எதிர்ப்பு காரணமாக காலதாமதம் என்று அன்றைய விமான துறை அமைச்சர் சித்தேஸ்வரா தெரிவித்திருந்தார். தற்போது சிக்கிம் மாநில அரசு இவற்றை சரிசெய்து கொடுத்து விமான நிலைய இயக்கத்தில் முக்கிய பங்குவகித்துள்ளது.


http://factchecker.in/35-airports-built-over-last-4-years-modi-fact-7-made-operational/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...