Pages

திங்கள், செப்டம்பர் 17, 2018

வளர்ச்சி: ஒரு வடிகட்டிய பொய்;

                               
   அந்நிய நேரடி மூலதனத்தை தாரளமாக அனுமதித்தால் இந்திய பொருளாதாரம்  ஓ..  ஓ.. என வளரும் என்று பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ழுழங்கியது. அந்நிய நேரடி மூலதனத்தை அள்ளி வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடு நாடாக சுற்றி வந்தார். போகாத நாடில்லை என்ற அளவிற்கு போய் வந்துவிட்டார்.

     போய் வந்த அளவிற்கு அந்திய நேரடி மூலதனமும் வரவில்iல், மோடியும் அவரது வகையறாக்களும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சிக்கும் உதவிடவில்லை. அதே நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அந்நிய நேரடி மூலதனம் உள்நாட்டிற்கு வந்து சேரவும் இல்லை. மோடி முதலாளிகளை அழைத்தக் கொண்ட உலகம் சுற்றுவதும், வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்கிழிய பேசி வருவதும் குறைவில்லாமல் நடந்து வருகின்றது. 

    அந்நிய நேரடி முதலீட்டின் மூலமாக மேக் இன் இந்தியா என்ற உற்பத்தி துறைசார்ந்த  திட்டம் வேகமாக வளரும் என்றனர். இந்த உற்பத்தி துறையில் 2014 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரை அந்நிய நேரடி முதலீடு  30 சதவிகிதத்தை தாண்ட வில்லை. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அக்டோபர் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 48 சதவிகிதமாக இருந்தது.

    முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 முதல் 2009 வரை நடைபெற்றபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 0.9 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக 2008-ம் ஆண்டு இன்றுவரை எட்டமுடியாத 3.6 சதவிகிதம் உயர்வை எட்டியது. ஐமுகூட்டணி யின் இரண்டாம் கட்ட ஆட்சியில் 2009-2014 வரை  இந்த பங்களிப்பு 2.7 லிருந்து 1.7 சதமாக குறைந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு 2015-ல் 2.1 சதவிகிதமாக உயர்ந்து  2016-ல்   2 சதவிகிதமாக குறைந்துள்ளது. 


     காப்பீடுதுறை, பாதுகாப்பு, டிடிஎச் சேவை போன்றவற்றில் 2014 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரை அந்நிய நேரடி முதலீடு வரவு 19 சதவிகிதமாக இருந்தது. இது இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் வரவாகி இருந்த 21 சதவிகிதத்தைவிட குறைவாகும் என இன்ஸ்டியூட் பார் ஸ்டடிஸ் இன் இன்டடஸ்டிரியல் டெவெலேப்மென்ட் (Institute for Studies In Industrial Development) (ISID), என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வைத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தினாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று இந்த நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

  2013-14-ல் அந்நிய நேரடி முதலீடு 36 பில்லியன் டாலராக இருந்தது. இவை 2016-17-ல் 61 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது தொகை என்ற அடிப்படையில் இதுவரை இல்லாத உயர்வாகும். ஆனால் பொருளாதார வளர்ச்சி தொகையை அடிப்படையாக மட்டும் கொண்டது இல்லை. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

       பாதுகாப்பு துறையின் தளவாட உற்பத்தியில், இரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பில் முதன் முறையாக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. எனினும் 2008-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 3.6 சதம் இருந்தத்தை எட்டமுடியவில்லை தற்போது இது 2 சதவிகிதமாகவே உள்ளது.

            அதிகமாக விளம்பரப்படுத்திய மேக் இன் இந்தியா வெற்றிபெறவில்லை.  இந்தியாவில் 1188 கம்பெனிகளை ஆய்வு செய்ததில்  51.7 பில்லியன் டாலர்களை இந்த கம்பெனிகள் அந்நிய நேரடி முதலீடாக பெற்றுள்ளன. இவற்றில் 26 சதம் மட்டுமே உற்பத்தி துறைக்கு சென்றுள்ளது. மற்ற 74 சதவிகிதம் உற்பத்தி சாராத துறைக்கு சென்றுள்ளது,  உற்பத்தி துறைக்கு சென்ற அந்நிய நேரடி முதலீட்டில் 30 சதவிகிதம் வரை போக்குவரத்து கருவிகள் தயார்செய்வதற்கான துறைக்கு சென்று விட்டது.

  உண்மையான அந்நிய நேரடி முதலீடு என்பது, குறிப்பிட்ட அளவு மூலதனத்தை அளித்தல், தொழில்நுட்பம்,நிர்வாகம், மற்றும் தொழில் திறன்கள் ஆகிவற்றை இடம் பெற்றிருக்கச்செய்ய வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் இவ்வாறு செய்வதில்லை.


        இந்த அந்நிய நேரடி முதலீட்டில் முறையற்ற அல்லது போலி கணக்குகளும் அடங்கும். மத்திய ரிசர்வ் வங்கி சட்டங்களை ஓரளவு இறுக்கியபோது  இந்த உண்மைகள் வெளிவந்தன. 

            2017 ஆகஸ்ட் மாதம் அந்நிய நேரடி முதலீடு வரவு 37.3 பில்லியன் டாலர் என்று இருந்தது. போலிகள் அல்லது நோக்கத்தோடு கணக்கிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் 2018 ஜுன் மாதம் 30.3 பில்லியன் டாலராக  அதாவது 19 சதவிகிதம் குறைந்தது.  2016- 17 ஆண்டுக்கான வரவில் சுமார் 137 நிறுவனங்களில் சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டை ஆய்வு செய்த போது சுமார் 10 முதல் 12 சதவிகிதம் வரை கணக்கு அதிகப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. 

             ஜின்டால் ஸ்டீல் தொழிற்சாலையில் 2016-17-ன் கணக்குபடி 719 மில்லியன் டாலர் போலியான வரவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உலோகத் தொழிற்சாலைகளில் வரவான அந்நிய நேரடி முதலீட்டில் சரிபாதியாகும்.

             சர்வதேச பொருளாதார இணைப்பில் அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. வளர்ந்த நாடுகள் முதலீட்டை செலுத்தி கூடுதலாக திருப்பி எடுக்க முயற்சி செய்தனர்.வளரும் நாடுகள் அதிக அளவில் முதலீட்iட் ஈர்ப்பது வளர்ச்சியின் அடையாளமாக பார்த்தனர். குறிப்பாக ஆசிய நாடுகளில் இதற்கான போட்டை தீவிரமாக நடைபெற்றது. ஏனவே உள்நாட்டு உரிமைகளை இழந்து இந்த முதலீட்டை பெறவும் இந்தியா போனற நாடுகள் முயன்றன. 

  இந்த முதலீடு அளித்தல் மற்றும் திருப்பி எடுத்தலில் சீனா குறிப்பிடத்தக்க பலன் பெற்றுள்ளது. இக்காலத்தில் சீனா 2014-16ம் ஆண்டுகளில் 227 பில்லியன் டாலர் அந்நிய நேரடி மூலதனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்தியாவைவிட 4.5 மடங்கு அதிகமாகும். 

         ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மேம்பாடு மாநாட்டின் (United Nations Conference on Trade and Development’s (UNCTAD) 2015-விபரப்படி உலக அநநிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா பெற்ற பங்கு 21 சதவிகிதம் ஆகும். சீனா பெற்றது 17 சதவிகிதமாகும். இதுவே 2007-உலக பொருளாதார நெருக்கடிக்கு முனனால் சீனா ஹாங்காங் பெற்றது 7சதம், அமெரிக்கா பெற்றது 11 சதம் ரஷ்யா 2.8 சதம் பிரேசில் 1.7 சதம் ஆகும். இந்தியா 1.26 சதமாகும். 

                    2007 நெருக்கடி காலத்திற்கு முன்பு சீனா 7 சதத்திலிருந்து 2015-ல் 17 சதத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்தியா 1.26 சதத்திலிருந்து 2.5 சதம்தான் உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்ல  சீனா இதர நாடுகளில் செய்துள்ள அநநிய நேரடி முதலீடு 2007-க்கு முனனால்  4 சதமாக இருந்தது. தற்போது 2015-ல் 13 சதமாக உயர்த்தியுள்ளது. 

                   எனவே பாஜக அரசு அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரச்சாரம் செய்வது வடிகட்டிய பொய்யாகும். மோடியின்  உலகம் சுற்றும் பணிகள் கார்பொரேட் முதலாளிகளுக்கானது ஆகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...