Pages

ஞாயிறு, செப்டம்பர் 30, 2018

என்ன பிரதமரே? இப்படி “பொய்” பேசுறீங்களே?


 

     தற்போது இந்தியாவில் இருக்கும் 100 விமான நிலையங்களில் 35 விமான நிலையங்கள் கடந்த நான்கு ஆண்டுகளில் கட்டப்பட்டது என்று பிரதமர் மோடி அவர்கள் செப் 24 அன்று சிக்கிமில் முதல் விமான நிலையமான பாக்யாங் (Pakyong)  விமான நிலையத்தை திறந்து வைத்து பேசியுள்ளார். அத்துடன் விடவில்லை. 


    “சுதந்திரம் பெற்றநாள் முதல் 2014 வரை 67 ஆண்டுகளில் 65 விமான நிலையங்கள்தான் கட்டப்பட்டது. அதாவது ஆண்டுக்கு ஒன்றுதான் கட்டப்பட்டது, கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் ஆண்டுக்கு 9 வீதம் கட்டியுள்ளோம்” என்று பெருமை பீற்றிக்கொள்கிறார் பிரதமர்(“Since Independence to 2014, over 67 years, there were 65 airports. i.e an average of one airport per year whereas for the past four years, on average, nine airports have been built per year.”) உண்மையாக இருந்தால் பீற்றிக்கொள்வதில்லை தப்பில்லை.
  
        இந்த நான்கு ஆண்டுகளில் 7 விமான நிலையங்கள்தான் கூடுதலாக செயல்படுத்தப்பட்டுள்ளது என்று பாஜக அரசின் தகவல்களே தெரிவிக்கின்றது.  இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் கீழ் 129 விமான நிலையங்கள் உள்ளது என்றும் இவற்றில் 23 சர்வதேச விமான நிலையங்கள், 78 உள்நாட்டு விமான நிலையங்கள், 8 சரக்குகளை கையாளும் விமான நிலையங்கள், 20 இராணுவ விமானநிலையங்கள் ஆகும்  என்று மத்திய விமானதுறை அமைச்சகத்தின் 2017-18 ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 129 விமான நிலையங்களில்  101 விமான நிலையங்கள் இராணுவ விமான நிலையங்கள் உட்பட செயல்படுகின்றது. 28 விமான நிலையங்கள் செயல்படவில்லை என்று பாராளுமன்றத்தில் எழுப்பபட்ட கேள்விக்கு ஜுலை 19,2018 மற்றும் ஆகஸட் 8, 2018 தேதிகளில் விமானதுறை அமைச்சகத்தின் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி விமானதுறை அமைச்சகம் கொடுத்த 2013-2014 ஆண்டறிக்கையில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு 125 விமான நிலையங்கள் இருந்ததாகவும் இவற்றில் 94 இயங்கக்கூடியது 31 செயல்பட வில்லை என்று அறிக்கை தெளிவாக உள்ளது. 

2018- மோடி அரசின் அறிக்கைபடி 101 விமான நிலையங்கள் செயல்படுகின்றது என்றால் 7 விமான நியைங்கள்தானே அதிகமாகி உள்ளது. எப்படி 35 அதிகமாகி இருக்கும். ஒரு நாட்டின் பிரதமரே இப்படி பொய் பேசுவது என்றால் அந்தக்கட்சி எப்படி பொய்பேசும். புளுகுவது என்று வந்துவிட்டால் பூமிக்கும் வானத்துக்கும் உள்ள எல்லைகளை பிரதமரே உடைத்துவிடுகின்றார்.

சிக்கிம் மாநில முதல் விமான நிலையத்தை இவரது ஆட்சியின் சாதனை என்று   பறைசாற்றுகிறார். இது 2008-ம் ஆண்டு அனுமதிவழங்கப்பட்டு 2014-ம் பாஜக ஆட்சிக்கு வரும்முன் 83 சதவிகிதம் பணிகள் நிiவேற்றப்பட்டு விட்டன. இந்த திட்டம் காலதாமதமானதற்கு மோசமான தட்பவெட்ப நிலை, கூர்கா முன்னனி அமைப்பால் அடிக்கடி நடத்தப்பட்ட முழுஅடைப்பு, 2011 நிகழ்ந்த பூகம்பம், உள்ளுர் மக்களின் எதிர்ப்பு காரணமாக காலதாமதம் என்று அன்றைய விமான துறை அமைச்சர் சித்தேஸ்வரா தெரிவித்திருந்தார். தற்போது சிக்கிம் மாநில அரசு இவற்றை சரிசெய்து கொடுத்து விமான நிலைய இயக்கத்தில் முக்கிய பங்குவகித்துள்ளது.


http://factchecker.in/35-airports-built-over-last-4-years-modi-fact-7-made-operational/

வெள்ளி, செப்டம்பர் 21, 2018

சத்குருவின் பூசணிக்காய் புளுகு?


மோடி  ஆட்சியில் குண்டுவெடிப்பு இல்லை:
சத்குரு ஜக்கிவாசுதேவ் 
 “கடந்த நான்கு ஆண்டுகளாக நமது நாட்டில் குண்டுவெடிப்பே இல்லை என்பதை நாம் தெரிந்துகொ வேண்டும் அங்கீகரிக்க வேண்டும் அதற்காக பாராட்ட வேண்டும். நடந்த சில குண்டுவெடிப்புகள் காஷ்மீர் மற்றும் எல்லை புறத்தில் மட்டும் நடந்துளளது” என்று பேசியுள்ளார்.  பேசிய இடம் மும்பை.  இளமையும் “உண்மையும்” என்ற தலைப்பில் பேசும்போது உண்மைக்கு மாறாக அல்ல எதிராக  வாய்மலர்ந்துள்ளார். மோடிக்கு சிறப்பு சான்று வழங்கி உள்ளார்.
இந்த நான்கு ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான குண்டு வெடிப்புகள் நடைபெற்றுள்ளன என்பதை முழுபூசணிக்காயை சோற்றில் வைத்து மறைப்பது போல் பேசியுள்ளார். 2016-ல் மட்டும் 406 குண்டுவெடிப்புகள் நடந்துள்ளதாக அரசு அறிக்கையை 11.4.2017 அன்று பாராளுமன்றத்தில் வைத்துள்ளது. இந்த 406 குண்டுவெடிப்புகளில் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் 69-ல் வெடிமருந்துகளை கொண்டு வெடிக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றுது. இந்த குண்டுவெடிப்பில்  118-க்கும் மேற்பட்டவர்கள் மரணம் 505-க்கும் மேற்பட்டவர்கள் காயம் என்று அரசு அறிக்கையே கூறுகின்றது.
காஷ்மீர், மணிப்பூர்,கடந்தும் மத்திய பிரதேஷ், பிஹார், சத்தீஷ்கர், தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என் குண்டுவெடிப்புகள் நடைபெற்றுக்கொண்டுதான் உளளது. 
2018 ஜனவரி 19-ம் தேதி பிஹாரின் புத்தகயாவில் குண்டுவெடித்ததை ராஜசபாவில் அறிவித்துளளனர்.அங்கு ஏராமான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 2017 மார்ச் 7-ம் தேதி போபால் உஜ்ஜைனி பாசஞ்சர் ரயிலில் ஜப்தி ரயில் நிலையத்தின் அருகில் குண்டுத்து 11 பேர்கள் காயம் அடைந்தனர்.
பிஹாரின் போஜ்பூர் சிவில் கோர்ட்டில் ஜனவரி 23 2015-ல் குண்டுவெடித்து 18 பேர்கள் காயம் அடைந்தனர் இருவர் மரணமடைந்தனர்.
2014- டிசம்பர் 28 பெங்களுருவில் சர்ச்தெருவில் குண்டுவெடித்து ஒருவர் இறந்தார் மூன்றுபேகர்கள் காயம் அடைந்தனர்.
2016-குண்டுவெடிப்பில் ஜம்மு-காஷ்மீரில் 69, சத்தீஷ்ரில் 60 மணிப்பூல் 40 கேரளாவிலி 33 தமிழ்நாட்டில் 32 என ஐஇடி பயன்படுத்தி வெடித்துள்ளனர். இந்தியாவில் 2012-ல் 365, 213-ல் 283. 2014-ல் 190, 2015-ல் 268 2016-ல் 406 குண்டுவெடிப்புகள் நடைபெற்றுள்ளது. 
இத்தைனையும் மறைத்து சத்துகுரு ஜக்கி வாசுதேவ் மோடிக்கு பொய்யான நற்சான்று வழங்கிட காரணம் வளைத்த காடுகளை பாதுகாக்கவா? அல்லது புதிய காடுகளை வளைக்கவா?September 18, 2018 by Factchecker Team indiaspend

Sadhguru: No Bombings In Modi Era. Fact: 400 Plus In 2016 Alone, Official Data Show.


திங்கள், செப்டம்பர் 17, 2018

வளர்ச்சி: ஒரு வடிகட்டிய பொய்;

                               
   அந்நிய நேரடி மூலதனத்தை தாரளமாக அனுமதித்தால் இந்திய பொருளாதாரம்  ஓ..  ஓ.. என வளரும் என்று பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் ழுழங்கியது. அந்நிய நேரடி மூலதனத்தை அள்ளி வருவதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாடு நாடாக சுற்றி வந்தார். போகாத நாடில்லை என்ற அளவிற்கு போய் வந்துவிட்டார்.

     போய் வந்த அளவிற்கு அந்திய நேரடி மூலதனமும் வரவில்iல், மோடியும் அவரது வகையறாக்களும் தம்பட்டம் அடித்துக்கொள்ளும் அளவிற்கு வளர்ச்சிக்கும் உதவிடவில்லை. அதே நேரத்தில் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அந்நிய நேரடி மூலதனம் உள்நாட்டிற்கு வந்து சேரவும் இல்லை. மோடி முதலாளிகளை அழைத்தக் கொண்ட உலகம் சுற்றுவதும், வளர்ச்சி வளர்ச்சி என்று வாய்கிழிய பேசி வருவதும் குறைவில்லாமல் நடந்து வருகின்றது. 

    அந்நிய நேரடி முதலீட்டின் மூலமாக மேக் இன் இந்தியா என்ற உற்பத்தி துறைசார்ந்த  திட்டம் வேகமாக வளரும் என்றனர். இந்த உற்பத்தி துறையில் 2014 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரை அந்நிய நேரடி முதலீடு  30 சதவிகிதத்தை தாண்ட வில்லை. ஆனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் அக்டோபர் 2012 முதல் செப்டம்பர் 2014 வரை 48 சதவிகிதமாக இருந்தது.

    முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2004 முதல் 2009 வரை நடைபெற்றபோது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 0.9 சதவிகிதத்திலிருந்து 2.7 சதவிகிதமாக உயர்ந்தது. அதிலும் குறிப்பாக 2008-ம் ஆண்டு இன்றுவரை எட்டமுடியாத 3.6 சதவிகிதம் உயர்வை எட்டியது. ஐமுகூட்டணி யின் இரண்டாம் கட்ட ஆட்சியில் 2009-2014 வரை  இந்த பங்களிப்பு 2.7 லிருந்து 1.7 சதமாக குறைந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சியில் அமர்ந்த பிறகு 2015-ல் 2.1 சதவிகிதமாக உயர்ந்து  2016-ல்   2 சதவிகிதமாக குறைந்துள்ளது. 


     காப்பீடுதுறை, பாதுகாப்பு, டிடிஎச் சேவை போன்றவற்றில் 2014 அக்டோபர் முதல் 2017 மார்ச் வரை அந்நிய நேரடி முதலீடு வரவு 19 சதவிகிதமாக இருந்தது. இது இதற்கு முந்தைய இரண்டு ஆண்டுகள் வரவாகி இருந்த 21 சதவிகிதத்தைவிட குறைவாகும் என இன்ஸ்டியூட் பார் ஸ்டடிஸ் இன் இன்டடஸ்டிரியல் டெவெலேப்மென்ட் (Institute for Studies In Industrial Development) (ISID), என்ற நிறுவனம் ஆய்வு செய்து அறிக்கை வைத்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தினாலும் அதற்கான பலன் கிடைக்கவில்லை என்று இந்த நிறுவனம் தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.

  2013-14-ல் அந்நிய நேரடி முதலீடு 36 பில்லியன் டாலராக இருந்தது. இவை 2016-17-ல் 61 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது தொகை என்ற அடிப்படையில் இதுவரை இல்லாத உயர்வாகும். ஆனால் பொருளாதார வளர்ச்சி தொகையை அடிப்படையாக மட்டும் கொண்டது இல்லை. 2014-ல் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அந்நிய நேரடி முதலீட்டுக்கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. 

       பாதுகாப்பு துறையின் தளவாட உற்பத்தியில், இரயில்வேயின் அடிப்படை கட்டமைப்பில் முதன் முறையாக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தது. எனினும் 2008-ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அந்நிய நேரடி முதலீட்டின் பங்கு 3.6 சதம் இருந்தத்தை எட்டமுடியவில்லை தற்போது இது 2 சதவிகிதமாகவே உள்ளது.

            அதிகமாக விளம்பரப்படுத்திய மேக் இன் இந்தியா வெற்றிபெறவில்லை.  இந்தியாவில் 1188 கம்பெனிகளை ஆய்வு செய்ததில்  51.7 பில்லியன் டாலர்களை இந்த கம்பெனிகள் அந்நிய நேரடி முதலீடாக பெற்றுள்ளன. இவற்றில் 26 சதம் மட்டுமே உற்பத்தி துறைக்கு சென்றுள்ளது. மற்ற 74 சதவிகிதம் உற்பத்தி சாராத துறைக்கு சென்றுள்ளது,  உற்பத்தி துறைக்கு சென்ற அந்நிய நேரடி முதலீட்டில் 30 சதவிகிதம் வரை போக்குவரத்து கருவிகள் தயார்செய்வதற்கான துறைக்கு சென்று விட்டது.

  உண்மையான அந்நிய நேரடி முதலீடு என்பது, குறிப்பிட்ட அளவு மூலதனத்தை அளித்தல், தொழில்நுட்பம்,நிர்வாகம், மற்றும் தொழில் திறன்கள் ஆகிவற்றை இடம் பெற்றிருக்கச்செய்ய வேண்டும். ஆனால் பல நிறுவனங்கள் இவ்வாறு செய்வதில்லை.


        இந்த அந்நிய நேரடி முதலீட்டில் முறையற்ற அல்லது போலி கணக்குகளும் அடங்கும். மத்திய ரிசர்வ் வங்கி சட்டங்களை ஓரளவு இறுக்கியபோது  இந்த உண்மைகள் வெளிவந்தன. 

            2017 ஆகஸ்ட் மாதம் அந்நிய நேரடி முதலீடு வரவு 37.3 பில்லியன் டாலர் என்று இருந்தது. போலிகள் அல்லது நோக்கத்தோடு கணக்கிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் 2018 ஜுன் மாதம் 30.3 பில்லியன் டாலராக  அதாவது 19 சதவிகிதம் குறைந்தது.  2016- 17 ஆண்டுக்கான வரவில் சுமார் 137 நிறுவனங்களில் சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள அந்நிய நேரடி முதலீட்டை ஆய்வு செய்த போது சுமார் 10 முதல் 12 சதவிகிதம் வரை கணக்கு அதிகப்படுத்திக் காட்டப்பட்டுள்ளது. 

             ஜின்டால் ஸ்டீல் தொழிற்சாலையில் 2016-17-ன் கணக்குபடி 719 மில்லியன் டாலர் போலியான வரவு என மதிப்பிடப்பட்டுள்ளது. இது மொத்த உலோகத் தொழிற்சாலைகளில் வரவான அந்நிய நேரடி முதலீட்டில் சரிபாதியாகும்.

             சர்வதேச பொருளாதார இணைப்பில் அந்நிய நேரடி மூலதனம் தவிர்க்க முடியாததாகிவிட்டது. வளர்ந்த நாடுகள் முதலீட்டை செலுத்தி கூடுதலாக திருப்பி எடுக்க முயற்சி செய்தனர்.வளரும் நாடுகள் அதிக அளவில் முதலீட்iட் ஈர்ப்பது வளர்ச்சியின் அடையாளமாக பார்த்தனர். குறிப்பாக ஆசிய நாடுகளில் இதற்கான போட்டை தீவிரமாக நடைபெற்றது. ஏனவே உள்நாட்டு உரிமைகளை இழந்து இந்த முதலீட்டை பெறவும் இந்தியா போனற நாடுகள் முயன்றன. 

  இந்த முதலீடு அளித்தல் மற்றும் திருப்பி எடுத்தலில் சீனா குறிப்பிடத்தக்க பலன் பெற்றுள்ளது. இக்காலத்தில் சீனா 2014-16ம் ஆண்டுகளில் 227 பில்லியன் டாலர் அந்நிய நேரடி மூலதனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்தியாவைவிட 4.5 மடங்கு அதிகமாகும். 

         ஐக்கிய நாடுகள் சபையின் வர்த்தக மற்றும் மேம்பாடு மாநாட்டின் (United Nations Conference on Trade and Development’s (UNCTAD) 2015-விபரப்படி உலக அநநிய நேரடி முதலீட்டில் அமெரிக்கா பெற்ற பங்கு 21 சதவிகிதம் ஆகும். சீனா பெற்றது 17 சதவிகிதமாகும். இதுவே 2007-உலக பொருளாதார நெருக்கடிக்கு முனனால் சீனா ஹாங்காங் பெற்றது 7சதம், அமெரிக்கா பெற்றது 11 சதம் ரஷ்யா 2.8 சதம் பிரேசில் 1.7 சதம் ஆகும். இந்தியா 1.26 சதமாகும். 

                    2007 நெருக்கடி காலத்திற்கு முன்பு சீனா 7 சதத்திலிருந்து 2015-ல் 17 சதத்திற்கு உயர்த்தியுள்ளது. இந்தியா 1.26 சதத்திலிருந்து 2.5 சதம்தான் உயர்த்தியுள்ளது. இதுமட்டுமல்ல  சீனா இதர நாடுகளில் செய்துள்ள அநநிய நேரடி முதலீடு 2007-க்கு முனனால்  4 சதமாக இருந்தது. தற்போது 2015-ல் 13 சதமாக உயர்த்தியுள்ளது. 

                   எனவே பாஜக அரசு அந்நிய நேரடி முதலீட்டால் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது என்று பிரச்சாரம் செய்வது வடிகட்டிய பொய்யாகும். மோடியின்  உலகம் சுற்றும் பணிகள் கார்பொரேட் முதலாளிகளுக்கானது ஆகும். 

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

மோடி ஜியின் மான்-கி-பாத்தும் மெகா வங்கி கடனும்


           விவசாயிகளுக்க பேச்சும் போதனைகளும் பெருவணிக குழுமங்களுக்கு வங்கிகடன் என்பதைதான் பாஜகவின் 4 ஆண்டுகால ஆட்சி வெளிப்படுத்துகிறது. 

           2016-ம் ஆண்டில் மட்டும் 615 பேர்களுக்கு 59,000 கோடி வங்கி கடனை வாரி வழங்கி உள்ளனர். 60 சதம் விவசாயிகளுக்கு பிரதமர் மான்கி பாத் பேசிக் கொண்டிருக்கிறார். இதனால் ஏமாற்ற மடைந்த விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். உத்திர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் பாஜக அரசு விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கடன் ரத்து செய்து விவசாயிகளை வேதனைப்டுத்தியது. 

        அரசு வங்கிகள் 2016-ம் ஆண்டு 615 பேர்களுக்கு 58,561 கோடிகள் கடன் அளித்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் சராசரி 95 கோடி நிதி வழங்கி உள்ளது. 
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சில முன்னுரிமை துறைக்கு குறிப்பிட்ட அளவு கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டி உள்ளது. விவசாயம், குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், ஏற்றுமதி கடன், கல்வி, வீட்டுவசதி, சமுக கட்டமைப்பு, சூரிய மின் ஆற்றல் போன் துறைகளுக்கு கொடுக்க வேண்டும் என்று பணித்துள்ள. இதற்கு முன்னுரிமை துறை கொள்கை (யீசiடிசவைல ளநஉவடிச டநனேiபே (ஞளுடு) என்று பெயர். இந்த கொள்கைப்படி  மொத்த கடன் அளிப்பில் விவசாயத்திற்கு 18 சதம் அளிக்க வேண்டும்.

       விவசாயக்கடன் இதர கடன்களிலிருந்து மாறுபட்டது. அதாவது வட்டி குறைவாவும், விதிமுறைகள் எளிதாகவும் இருக்கும். இது சிறு விவசாயிகளுக்கு கடன் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. அத்துடன் இதற்கு 4 சதம் வட்டி மட்டுமே. 

       அம்பானி, அடானி வகையறாக்கள் ரிலையன்ஸ் பிரஷ் கடைவைப்பதற்கும், கிடங்குகள் கட்டுவதற்கும் தொழில் நடத்தவும் விவசாயிகளின் கடனை கொள்ளையடிக்கின்றனர். விவசாயக்கடன், அடிப்படை கட்டமைப்புகள், இதற்கான ஆதரவு நடவடிக்கைகள் என்ற மூன்று தலைப்புகளில் வழங்கப்படுகிறது. இதைகாரணமாக வைத்து அனைத்து கடன்களையும் பெரும் வணிக நிறுவனங்கள் சுருட்டி விடுகின்றனர்.

        எஸ்பிஐ வங்கி மும்பை சிட்டி கிளை மூன்று பேருக்கு 29.95 கோடி விவசாயக்கடன் வழங்கியுளளது. மேலும் 27 கோடிகளை 9 பேருக்கு வழங்கியுள்ளது.  வங்கிகள் லாபத்iதை கருதிதான் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 100 கோடி கடன் விவசாயின் பெயரில் ஒருவருக்கு கொடுப்பது எளிது. இதையே உண்மையான் விவசாயிகளுக்கு வழங்க வேண்டுமானால் 200 பேர்களுக்கு கொடுக்கவேண்டும். இதனால் அவர்களுக்கு கிடைக்கவேண்டியது கிடைக்காது. 

                பாஜக அரசு 2014-ம் ஆண்டு விவசாய கடன் அளிப்பு 8.5 லட்சம் கோடி என்று இருந்ததை 2018-2019-கு 11 லட்சம் கோடி என்று இலக்கு தீர்மானித்துள்ளது. இவை அனைத்தும் பெரு வணிக குழுமங்களுக்கு மற்றும் தொழில் துறைக்கு  கொடுப்பதற்காகவே உயத்தியுள்ளது. 

           2012-ல் 698 பேர்களுக்கு 55,504 கோடிகளும், 2013-ல் 665 பேர்களுக்கு 56,000 கோடிகளும் கடன் வழங்கி உள்ளன. 2014-ல் 60,156 கோடிகளும், 2015-ல் 52,143 கோடியை 604 பேர்களும்,  கடனை பெற்றுள்ளனர். வங்கிகள் முழவிவரத்தையும் கொடுக்க வில்லை. கொடுத்தால் நிலைமைகள் வேறுவிதமாக மாறும்.

      https://thewire.in/agriculture/modi-govt-gave-agricultural-loans-worth-rs-59000-crore-to-615-accounts-in-one-year

வியாழன், செப்டம்பர் 06, 2018

UPA- நெய் NDA- கை


         
        ஊரான் வீட்டு நெய்யே எம் பொண்டாட்டி கையே என்று கிராமத்து பழமொழி உள்ளது. இந்த விஷயத்தில் இந்திய பிரதமர் கைதேர்ந்தவர். இந்த ஆண்டு(2018) செங்கோட்டையில் கொடி ஏற்றி வைத்து பேசும்போது இப்படித்தான் சொந்தம் கொண்டாடி உள்ளார்.  UPA  அரசாங்கம் இருந்த 2013-ம்  ஆண்டைபோல் பணிகள் நடைபெற்றால் கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க இன்னும் பல பத்தாண்டுகள் ஆகி இருக்கும் என்று பேசினார். 

         ஆனால்  UPA  ஆட்சியில் இருந்த 2005-06 முதல் 2013-14 1,08,280 கிராமங்களுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டது. அதாவது ஆண்டுக்கு 12,000 கிராமங்களுக்கு மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.  ஏழு ஆண்டுகளில் இது நிகழ்த்தப்பட்டுள்து. மீதமுள்ள 18,374 கிராமங்களுக்கு மட்டுமே மின் இணைப்பு கொடுக்க மோடியின் என்டிஏ அரசு 4 ஆண்டுகள் எடுத்துவிட்டது. 

            அதாவது ஆண்டுக்கு 4,600 கிராங்களுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளனர். கோட்டை மீது ஏறி கொடியேற்றுவது மட்டுமல்ல புளுகு மூட்டைகளை கொட்டுவதும் பிரதமர் வேலையாகி விட்டது.

திங்கள், செப்டம்பர் 03, 2018

சுகாதாரம்: மோடி சொல்ல மறுத்த கதை:


        கிராமபுற வளர்ச்சி பற்றி பாரத பிரதமர் வாய்கிழிய  பேசுகின்றார். ஆனால்  சமுதாய சுகாதார மையங்கள் 30 சதம் பற்றாக்குறையும், ஆரம்ப சுகாதார மைய்யம் 22 சதம் பற்றாக்குயையும், சுகாதார துணை மைய்யங்கள் 19 சதம் பற்றாக்குறை உள்ளது. 

        ஆரம்ப சுகாதார மைய்யத்தில் 46 சதம் பெண் மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குறையும், 60 சதம் ஆண் மருத்துவ உதவியாளர்கள் பற்றாக்குயையும் உள்ளது.  அலோபதி மருத்துவ துறையில் டாக்டர்கள் பற்றாக்குறை 12 சதம் உள்ளது.

     இவ்வளவு சுகாதார நெருக்கடிகள் இந்தியாவின் கிராமபுறத்தில் இருந்தபோதும் தேசிய சுகாதார மிஷ்ன் ஒதுக்கிய நிதியில் கடந்த 5 ஆண்டுகள் 2016 வரை 29 சதவிகிதத்தை செலவழிக்கவில்லை என்று இந்திய தணிக்கை துறை கண்டித்துள்ளது. 

      மேலும் துணை சுகாதார மைய்யங்களில் 73 சதம் கிராமங்களில் இருந்து 3 கி மீட்டர் தள்ளி உள்ளது. இதில் 28 சதம் போக்குவரத்து வசதி இல்லை, 17 சதம் பராமரிப்பற்று உள்ளது என்று தணிக்கைத்துறை  தெரிவித்துள்ளது.

ஞாயிறு, செப்டம்பர் 02, 2018

பாஜக அரசின் மின்சார புளுகு?

 
     
    வளர்ச்சி வல்லரசு புதிய இந்தியா என்று மோடி வருடந்தோறும் செங்கோட்டையில் ஏறி நின்று வாய்கிழிய பேசுவதுடன் மட்டுமல்லாமல் பொய்மூட்டடைகளை அடுக்கிக்கொண்டே செல்கின்றார். ஆனால் உண்மைநிலை வேறு என்பதை நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டுள்ளனர். சமீபத்திய இந்தியா ஸ்பென்ட்(ஆக.29,2018 )ஆய்வுகள் உண்மைகளை வெளிச்சம்போட்டு காட்டுகின்றன.

       இந்தியாவில் மொத்தம் 6,40,932 கிராமங்கள் உள்ளன. இதில் 43,324 கிராமங்களில் மக்கள் வாழவில்லை. 5,97,608 கிராமங்களில் மக்கள் வாழ்கின்றனர். இவற்றில் 2,92,000 கிராமங்களில் வாழக்கூடிய 2 கோடியே 30 லட்சம் வீடுகளுக்கு மின்இணைப்பு இல்லை. இதில் உபி-யில் மட்டும் 1 கோடியே 20லட்சம், அஸ்ஸாமில் 19 லட்சம்,ஒடிசாவில் 18 லட்சம் குடும்பங்களும் அடங்கும்.கடந்த மூன்று ஆண்டுகளில் 18,374 கிராமங்கள் மின் இணைப்பை பெற்றுள்ளன. இவற்றில் 1425 கிராமங்களில் மட்டுமே அதாவது 8 சதவிகித கிராமங்களில் மட்டுமே  அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு அளிக்கப்பட்டுள்ளது.  

        பாஜக அரசு ஆட்சிபீடம் ஏறியவுடன் 2014 நவம்பர் மாதம் கிராமபுறங்களை மின்மயமாக்குதற்கு தீனதயாள் உபாத்தியாயா கிராம ஜோதி யோஜனா என்ற திட்டத்தை துவக்கி 43033 கோடி நிதிஒதுக்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் கடந்த மூன்று ஆணடுகளில் (2015-18) 30 சதவிகித நிதியை மட்டுமே ஒதுக்கியுள்ளது. 

          சுதந்திர இந்தியாவில் 4 கோடி குடும்பங்குளுக்கு மின்இணைப்பு இல்லை என்று முழங்கிய பிரதமர் இலக்கில் சரிபாதியை கூட எட்டமுடியவில்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிகாலத்தில் (2005-2012 ) 1,04,496 கிராமங்கள் மின்மயமாக்கப்ட்டது. இக்காலத்தில் 2 கோடியே 10 லட்சம் வீடுகளுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டது.இதில் 1 கோடியே 90 லட்சம் இணைப்புகள் இலவச இணைப்பாகும். 

ஆனால் பிரதமர் செங்ககோட்டையில் ஏறிநின்று கண்ணாடி கூண்டு இல்லாமல் இலக்கை எட்டமுடியாவிட்டாலும் அனைத்து கிராங்களுக்கும் வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கிவிட்டதாக அண்டபுளுகை அவிழ்த்துவிடுகிறார்.  


சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...