Pages

ஞாயிறு, நவம்பர் 28, 2010

நவ.28.பிறந்ததினம் எங்கல்ஸ்:வரலாற்றைப் புரட்டிப்போட்டவன்.


                                                                  அ.பாக்கியம்
          
    என்னால் போராட்டத்தில் ஈடுபடமுடியாத அந்த வினாடி                             என்னை மரணம் தழுவிக்கொள்ளட்டும் 
             
           என்று உலக உழைப்பாளி மக்களின் தத்துவத்தை உருவாக்கிய அந்த மாபெரும் ஆசான் பிஃடரிக் எங்கல்ஸ் இப்படித்தான்  மரணத்திற்கு அழைப்பு விடுத்தார்.அவரைப் பொறுத்தவரை வாழ்வது என்பது வேலை செய்வது, வேலை செய்வது என்பது போராடுவது.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவனின் குறளை நிஜமாக்கியவர் ஏங்கல்ஸ். ஐரோப்பாவில் நிலபிரபுத்துவத்தை முதலாளித்துவம் நிர்மூலமாக்கி கொண்டிருந்த காலத்தில் ஜெர்மானியில் உப்பெர்தல் என்ற சிற்றூரில் 1820 நவ.28-ல் பிறந்தார் எங்கல்ஸ். தந்தையின் கடுமையான கட்டுப்பாட்டில் குடும்பம் அஞ்சி நடுங்கியது.தந்தை தீவிரமதப்பற்றாளர். எங்கே கட்டுப்பாடுகள் அதிகமோ அங்கே சுதந்திர வேட்கையும் தீவிரமாக இருக்கும். இறுக்கமான குடும்ப சூழலில்தான் எங்கல்ஸ் தனது இளமைக்காலத்தை கடத்தினார். ஆனாலும் அறிவுத்தாகம், சுரந்திரச்சிந்தனை, விடாமுயற்சி ஆகியவை இளமையிலேயே அவரிடம் நிறைந்து காணப்பட்டது. 15-வது வயதில் எங்கல்சின் நடவடிக்கையில் அவரது தந்தை சந்தேகம் கொண்டார். ஒரு நாள் மகனின் பெட்டியை சோதனையிட்டு, வேதனைப்பட்டு தனது மனைவியிடம் தெரிவித்தார் என்ன தண்டனை கொடுத்தாலும் அவன் கீழ்படிய மறுக்கிறான். அவனது பெட்டியில் பதிமூன்றாம் நுற்றாண்டு பிரபுகுல வம்சத்தைச் சேர்ந்த வீரர்களை பற்றிய நவீனத்தை கண்டேன. கடவுள் அவனை காப்பாற்றட்டும் . என்றார்.
அக்காலத்தில் மதநூல்களைத்தவிர வேறு எதையும் படிப்பது தவறு மட்டுமல்ல மாபெரும் குற்றமாக கருதப்பட்டது. நாடகம், நடனம், கதைகள் படிப்பது கூட எங்கல்ஸ் வாழ்ந்த உப்பெர்தலில்(நதிதீரப் பள்ளத்தாக்கு) மதவிரோத செயலாக கருதப்பட்டது.இவரது சிற்றூரில் சமுக நடவடிக்கைகளை மதவேடதாரிகளே நிச்சயித்தனர்.சகிப்புத் தன்மையற்ற பைட்டிசம் என்ற கிறிஸ்துவமதப்பிரிவு இங்கு இருந்தது. இருந்தபோதிலும் ஆலை முதலாளிகள் குழந்தைகளையும், தொழிலாளர்களையும் சுரண்டிய கொடுமையை நேரில் கண்டார். கேள்விகள் எழுந்தன? விடைகள் கிடைக்காததால் கேள்விகள் தொடர்ந்தன . எனவேதான் தனது இளமைக்கால கடிதத்தில் ஊரின் பெருமைகளை மட்டும் பேசித்திரியாமல் உப்பெர்தல் என்பதை முக்கெர்தல்(பாசாங்கு பள்ளத்தாக்கு) என்று வர்ணித்தார் 

               எங்கல்சின் நடவடிக்கை மீது அச்சம் கொண்ட தந்தை அவரை  இறுதிபடிப்பை முடிக்கவிடாமலேயே 1837ம் ஆண்டு வர்த்தகத்திற்கு அழைத்துச்சென்றார். ஓராண்டுகளுக்கு பிறகு பிரேமன் என்ற நகரில் ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு எங்கல்ஸ் வர்த்தக வேலையோடு தனது சொந்த ஊரில் பங்கேற்க முடியாத நாடகம், நடனம், இசை அரங்குகளுக்கும், நீச்சல், கத்திச்சண்டை, குதிரை சவாரி போன்ற விளையாட்டிலும் ஈடுபட்டு வந்தார். பிரேமன் நகரிலும் உழைப்பாளிமக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்தார். ஒரு மன்னன் தனது நாட்டில் சிறந்ததாக எதை வைத்திருக்க முடியுமோ அதன் உருவகமே இந்த சாமானியன்தான்  என எழுதினார். 

                தனது மகனின் ஆன்மீக வளர்ச்சி பற்றி கவலை கொண்ட தந்தை அவரை பிரேமனில் உள்ள பாதிரியார் வீட்டில் குடியேற்றினார். பாதிரியின் வீட்டில் வாழ்ந்த எங்கல்ஸ் தனது முன்னோர்களின் மத மூடநம்பிக்கைகள் மீது வெறுப்பு கொண்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு அனுப்பப்பட்ட அவர், அதன் போலித்தனத்தை புரிந்து கொண்டு மத மூடநம்பிக்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டார். பைபிளில் தீர்க்க முடியாத முரண்பாடுகள் மண்டிக்கிடக்கின்றன. மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒத்துப்போகச்செய்ய முடியாது என்றார் எங்கல்ஸ். இதனால் அவர் அளவற்ற சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.

இளம் ஜெர்மனி

                இதே காலத்தில் இளம் ஜெர்மனி என்ற அமைப்புகளுடன் எங்கல்சுக்கு  தொடர்பு ஏற்பட்டது. இவ்வமைப்பு இலக்கியத்தை சமூக வாழ்வுக்கும்,  அரசியலுக்கு ஈடுபடுத்த முயன்றதால்  எங்கல்ஸ் இவ்வமைப்பை நோக்கி ஈர்க்கப்பட்டார். ஆயினும் இவ்வமைப்புகளின் கொள்கை முதிர்ச்சி  பெறாமலும், அரசியலில் தெளிவற்றும் இருந்தது. உலக துன்பங்களுக்காக இக்குழுவினர் அழுது புலம்பினர். இவர்களின்ஜெர்மன்தந்தி என்ற பத்திரிக்கையில் எங்கல்ஸ்                       
                                                 கவிதைகளும்,கட்டுரைகளும்எழுதினார்.இக்கட்டுரைகளில்ஆட்சியாளர்கள், மற்றும் சுரண்டல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிதெறிந்தார். ஆஸ்வல்டு என்ற புனைப்பெயரில் வெளிவந்த இக்கட்டுரைகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.இக்கட்டுரையாளரை அறிய மக்கள் பல யூகங்களை மேற்கொண்டனர். பத்திரிக்கையின் ஆசிரியர்தான் இந்த ஆஸ்வல்டு என நினைத்தைனர். ஞிபலர் பிரபலமான இலக்கியவாதிகளின் பெயர்களை  நினைத்தனர். ஆனால் மக்கள் யூகித்த பிரபலமான இலக்கியவாதிகளையும், இளம் ஜெர்மனி  என்ற அமைப்பின் பலவீனத்தையும் கடுமையாக விமர்சித்து அதே பத்திரிக்கையில் ஆஸ்வல்டு என்ற அதே பெயரில் எங்கல்ஸ் எழுதியபோது மக்களின் யூகங்கள் தவிடு பொடியாகின. உப்பெர்தலின் எறும்பு புற்றை கலைத்தவர் இந்த இளம் எங்கல்ஸ் என்பதை மக்கள் அறிய முடியவில்லை.

 இராணுவ வீரனிலிருந்து இளம் ஹெகல்வாதியா

                  1841ம் ஆண்டு அவரின் தந்தை பெர்லினுக்கு ராணுவ சேவைக்கு எங்கல்சை அனுப்பினார். பெர்லினில் எங்கல்ஸ் பீரங்கிப் படையில் சேர்ந்ததுடன் அப்படையில் சிற்றதிகாரியாகவும் உயர்ந்தார். அவருக்கு விருப்பம் இல்லாத பணி என்றாலும் அவருக்க பல அனுபவத்தை இந்த இராணுவசேவை கற்றுக்கொடுத்தது. ஓய்வு நேரத்தை ஒழுங்காக பயன்படுத்தும் பழக்கம் எங்கல்சுக்கு இருந்ததால் இராணுவ சேவைக் காலத்தில் நேரம் கிடைக்கும்போது பெர்லின் பல்கலைக்கழகத்திற்க சென்று வந்தார். அங்கேதான் அவருக்கு இளம் ஹெகல்யவாதிகளுடன் தொடர்பு கிடைத்தது. இங்கே அவர் மார்க்சை சந்திக்க முடியாவிட்டலும் அவரைப்பற்றி அதிகமாகவே கேள்விப்பட்டார். பெர்லினில்தான் எங்கல்ஸ் இளம் ஜெர்மானியர்களுடன் அதுவரை இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டு இளம் ஹெகலியராகவும், பிறகு இடதுசாரி  ஹெகலியர் பிரிவிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். 1842ம் ஆண்டுகளில் இடதுசாரி ஹெகலியவாதிகளுடன்  தீவிர தத்துவப்போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காலத்தில்ஷெல்லிஸ்டும் திருவழிபாடும்என்ற பிரசுரம் எங்கல்சால் எழுதப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் வெளிவந்தது. இந்த பிரசுரத்தின் மேதாவிலாசத்தைக்  கண்டு ஜெர்மன் ஆண்டு மலரின் ஆசிரியர்  ரூகே, இதை எழுதியவர் சிறந்த அறிவாளியாக,டாக்டராக இருக்கவேண்டும் என கருதி அவர் தனது கட்டுரையில்  இதை எழுதியவரை டாக்டர் என்றே குறிப்பிடுகின்றார். எங்கல்ஸ்  அதைக்கண்டு கூசிப்போனார். உடனே அந்த ரூகேவிற்கு கடிதத்தின் மூலம்  நான் ஒரு டாக்டர் அல்ல. அப்படி ஒருபோதும் ஆகவும் முடியாது. நான் வெறும் வியாபாரி. பிரெஷ்ய மன்னரின் பீரங்கிப் படையாளன்.எனவே இந்த பட்டத்திலிருந்து தயவு செய்து என்னை விடுவித்துவிடுக என்று எழுதினார். அந்த அளவு டாக்டர் பட்டத்தின் மீது உயரிய மரியாதையும் தன்னைப்பற்றிய தன்னடக்கத்தையும் கொண்டிருந்தார் எங்கல்ஸ்.

வர்த்தகத் தளத்திலிருந்து வர்க்கக் களத்திற்கு....

                   1842ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் இராணுவசேவைய் முடித்து சொந்த ஊர் திரும்பினார். உடனே அவரது தந்தை அவரை நாடு கடத்தினார்(?) இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எர்மன்-எங்கல்ஸ் வர்த்தக நிறுவனத்திற்கு வியாபாரத்தில் அனுபவம் பெறவேண்டும் என்று அனுப்பிவைத்தார். அவருக்கோ வர்த்தகத்தில் விருப்பமில்லை என்பது மட்டுமல்ல தொழில் மீது தீராதகோபமும் கொண்டிருந்தார். ஆனாலும் வாய்ப்பை பயன்படுத்தி தனது அறிவுத்தாகத்தை தீர்த்தக்கொண்டார். இங்கு ஏராளமான  ஆய்வுகளில்  ஈடுபட்டார். தொழில்புரட்சி இங்கிலாந்தை முதலாளித்துவ நாடாக மாற்றி இருந்த. அங்கு ஏற்பட்டு வரும் புரட்சிகரமான சூழ்நிலைகளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். மான்செஸ்டர், லீட்ஸ் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் அல்லலுக்கு உள்ளாகி அடைந்து கிடந்தனர். அத்தெருக்களில் எங்கல்ஸ் அலைந்து திரிந்து தெழிலாளர்களை பற்றி அறிந்துகொண்டார்.இக்காலத்தில்தான்  இங்கி லாநதில் மக்கள் உரிமைகளுக்காக போராடக்கூடிய சாசன இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. இந்த இயக்கத்துடன் எங்கல்ஸ் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டார். சாசன இயக்கத்தின் பலத்தையும், பலவீனத்தையும் மதிப்பீடு செய்து அதிலிருந்தவர்களை பலவீனத்திலிருந்து வென்றெடுக்க முயன்றார். இதேபோல் கற்கனாவாத பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளின் தொடர்பும் கிடைத்தது. அவர்களின் ஒழுக்கம் நிறைந்த புத்துலகம் என்ற பத்திரிக்கையில் கட்டுரைகளும் எழுதினார். 1844ம் ஆண்டு மார்க்சும்,ரூகேயும் இணைந்து வெளியிட்ட ஜெர்மன்-பிரெஞ்சு   ஆண்டு மலரில் எங்கல்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனக்குறிப்பு என்ற கட்டுரை வெளியாகிது. இதைபற்றி மார்க்ஸ்மேதமை நிறைந்த முதற்குறிப்பு என்று கூறினார்.

ஆளுமைகளின் சங்கமம்

                       களப்பணி. அறிவு. நட்பு என பன்முகத்தன்மைகொண்ட இருபெரும் ஆளுமைகளின் சந்திப்பு 1844-ல் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் நிகழ்ந்தது. எங்கல்ஸ் மான்செஸ்டரிலிருந்து ஜெர்மனியில் உள்ள தனது ஊருக்கு செல்லுகிறபோது, பாரீசிற்கு சென்று காரல் மார்க்சை சந்திக்கிறார். அவரோடு தங்கி இருந்த அந்த 10 நாட்கள்  நட்பின் இலக்கியம் பல உருவாக இலக்கணமாக அமைந்தது. எங்கல்ஸ் படிப்படியாக பல நாடுகளில் பயணித்து அறிவிஜீவிகளுடன் விவாதித்து, ஆய்வுகளை மேற்கொண்டு விஞ்ஞான  சோஷலிச சத் தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். காரல்மார்க்ஸ் ஆய்வுகளை நடத்தி மறுமுனையிலிருந்து இத்தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். உழைப்பாளி வர்க்க சிந்தனை அவர்களை ஒன்றிணைத்தது. 

                       1842ல் நவம்பரில் கோலோனில் சிறிது நேரம் சந்திப்பு நடந்தது. ஆனால் அவை அவசர சந்திப்புதான்.ஆனாலும் மாக்சை சந்தித்து வீடு திரும்பியவுடன் வீட்டின் கட்டுப்பாடுகள் அவரது சுதந்திர சிந்தனைக்கு, புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் பெரும்தடையாக இருப்பதை உணர்ந்து 1845ம் ஆண்டு எங்கல்ஸ் வீட்டை விட்டு வெளியேறி புரூசெல்ஸ் சென்றடைந்தார். அதே நேரத்தில் பிரஷ்ய அரசு கோரிக்கையை ஏற்று பிரெஞ்சு அரசு காரல்மார்க்சை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவரும் புரூசெல்ஸ் சென்றார்.இந்த சந்திப்பின்போது மார்க்ஸ் வரலாற்று பொருள்முதல் வாதம்  பற்றி முடித்துவைத்திருந்தார். இதை மேலும் விரிவுபடுத்தி ஆய்வுநடத்தி படிப்பதற்காக போதுமான அளவு நுலக வசதி புருசெல்சில் இல்லாததால்  ஆறுவாரப்பயணத்தில் இங்கிலாந்து சென்றனர். மான்செஸ்டர் நூலகத்தில் பெரும்பகுதி நாட்களை செலவிட்டு கடைசியாக லண்டன் போய்ச்சேர்ந்தனர். இங்கேதான் எங்கல்ஸ் தனது புரட்சி நடவடிக்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எத்துவைத்தார். ஒரு பாட்டாளிவர்க்க புரட்சி கட்சியை முன்னெடுத்துச்செல்ல அவசியம் என்பதை உணர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். 

நீதியாளர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் லீக் நோக்கி

                  லண்டனில் மார்க்சும்-எங்கல்சும் இணைந்து அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் இறங்கினர். எங்கல்ஸ் தனக்கு இருந்த பழையதொடர்புகளை பயன்படுத்தி இடதுசாரி சாசனவாதிகளுக்கும், நேர்மையாளர் சங்கத்திற்கம் இணைப்பை ஏற்படுத்தும் வேலைகளை செய்தார். இருவரும் புருசெல்ஸ் நகரத்திற்கு சென்று  ஜெர்மன் தொழிலாளர்களை திரட்டி அமைப்பினை ஏற்படுத்தினர். இவ்வமைப்பின்  சார்பில் எங்கல்ஸ் 1846 பாரீஸ் சென்றார். அங்கு பல கற்பனாவாத சோஷலிஸ்டுகளுடன் விவாதம் நடத்தியும், தத்துவப்போராட்டத்தை  நிகழ்த்தியும் பல அமைப்புகளை ஒன்றி ணைக்கும் வேலையில் ஈடுபட்டார். இச்சூழலில் 1847-ல் லண்டனில் செயல்பட்டு வந்த நேர்மையாளரின் சங்கத்தலைவர் யோசிப்மோல் புரூசெல்ஸ் சென்று மாச்சையும், பிரான்ஸ் சென்று எங்கல்சையும் சந்தித்து தனது அமைப்பில் உறுப்பினராக சேரவேண்டும் எனவும் சங்கத்திற்கான புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கிடவும் வேண்டினார். இதன்பிறகு 1847 ஜீன் 2 முதல் 9 வரை சங்கத்தின் காங்கிரஸ் லண்டனில் கூடியது. மார்க்ஸ் பணம் இல்லாததால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கல்ஸ் பாரீஸ்நகர பிரதிநிதியாக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் நீதியாளர் சங்கம் கம்யூனிஸ்ட் லீக் என பெயர் மாறியது. எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்  என்றாகியது. இதன்பின் மார்க்சும், எங்கல்சும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவாக்குவதில் ஓராண்டு ஈடுபட்டு 1848 பிப்ரவரியில் உழைப்பாளி மக்களின் பேராயுதமான கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஆட்டம்காணச்செய்ததுடன், தொழிலளாளி வர்க்கத்திற்கு புதுயுகத்தை திறந்தது. மேலும  கற்பனாவாத சோஷலிசத் திற்கு எதிரான உக்கிரமான யுத்தம் முடிவுக்கும் வந்தது. களமும்-கருவியும் மாறுகிறது

                     1848-49பிரான்சில் வர்க்கப்போராட்டமும் ஐரோப்பாவில் தொழிலாளர் எழுச்சியும் தீவிரமாக நடைபெற்து.எங்கல்ஸ் இப்போராட்டத்தில் நேரடியாக களத்தில் இறங்கினார். நூலகத்திலிருந்து  யுத்தகளத்திற்கு சென்றார். பிரான்சில் புரட்சியை துண்டியதற்காக அரசு  எங்கல்சை வெளியேற்றியது. அவர் புருசெல்ஸ் நகருக்கு சென்று அங்கு மார்க்ஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இயக்கம் நடத்திவிட்டு மீண்டும் பாரீஸ் வந்தார். பிரான்சில் 400-க்கும் மேற்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களை அணிதிரட்டி ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைகளை  தயாரித்து அவர்களது ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்து ஜெர்மனி புரட்சிக்கு, தொழிலாளர்களை அணிதிரட்ட அனுப்பி தானும் ஜெர்மனி சென்றார். ஜெர்மனியில் தொழிலாளர் புரட்சியை தீவிரப்படுத்த ஒரு பத்திரிக்கை அவசியம் என உணர்ந்து 1848 ஜீன்-1 ல் புதிய ரைன் பத்திரிக்கை மாச்கை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. எங்கல்ஸ் அரசியல் கட்டுரைகளை இலக்கிய நயத்துடன் இப்பத்திரிக்கையில் எழுதினார்.

                       ரைன் மாநிலத்தில் புரட்சி தீவிரமாவதைக் கண்டு ராணுவம் குவிக்கப்பட்டது. பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. எங்கல்ஸ் தலைமறைவாக வேண்டும் என கட்சி உத்தரவிட்டது. எங்கல்ஸ் ரகசியமாக புருசெல்ஸ் செல்லும் போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து பாரிசிற்கு சென்ற போது  பாரீஸ் புரட்சி தோல்வி கண்டு பிரான்ஸ் இறந்து கிடந்த காட்சியைக் கண்டு என மனம் நொந்து பணம் இல்லாத நிலையிலும் கால்நடைப் பயணமாக ஸ்விட்சர்லாந்து சென்றார். அங்கிருந்தபடியே ஹங்கேரி புரட்சி பற்றியும், ஸ்விட்சர்லாந்து பற்றியும்  ரைன் பத்திரிகைக்கு கட்டுரை  எழுதினார். 1849 ஜனவரி ஜெர்மனி திரும்பியவுடன் ஒரே மாதத்தில் மாச்கும், எங்கல்சும்  கைது செய்யப்பட்டு வழக்ககு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் மார்க்சும், எங்கல்சும் வாதாடி விடுதலை பெற்றனர். இந்த வழக்கில் இவர்களின் வாதத்திறமை காணக்கண்கோடி வேண்டும் என சமகாலத்தவர்கள் வர்ணிக்கின்றனர்.

                    விடுதலையான பிறகு சோர்ந்து விடவில்லை. ஐரோப்பாவின் எழுச்சிக்கு திட்டம் தீட்டினர். ஹிதேகாலத்தில்  ரைன்  மாநிலத்தின் ஒரு பகுதியில் நடைபெற்ற புரட்சிக்கு எங்கல்ஸ் நேரடியாக சென்று புரட்சிப்படைகளை ஒருங்கிணைத்தார். மீண்டும் தென்மேற்கு ஜெர்மனி  சென்று புரட்சியை விரிவுபடுத்தும் பணியை செய்தார்.  அதன் பிறகுஇருவரும் பிரான்சை நோக்கி சென்றனர். அங்கு மீண்டும் இருவரும் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார்கள். இதன்பின் மார்க்ஸ் பிரான்ஸ் சென்றார். எங்கல்ஸ் அங்கு நடந்த தொழிலாளர்களின்  ஆயுதம் தாங்கிய புரட்சியில் கலந்து கொண்டார். எங்கல்ஸ் புரட்சிக்படையில் கலந்துகொண்டது புரட்சி வீரனாக மட்டுமல்ல. இராணுவத்தில் பணிபுரிந்தபோது அது பற்றிய அறிவும், யுக்திகளையும் தெரிந்து வைத்திருந்தார் என்பதும் முக்கிய காரணம். எனவே அவர் தடையரண் உருவாக்குவது, பின்புலத்தை தயாரிப்பது உட்பட ஒரு புரட்சிப்படையை வழிநடத்தும் தலைவனாக இருந்து வழிநடத்தினார்.

 நட்பின் இலக்கணம்
                  
                1848-49 புரட்சிக்கு பிறகு ஐரோப்பா அடங்கி இருந்தது. பொருளாதார ரீதியில் எங்கல்ஸ் மார்க்ஸ் இருவரும் சிரமப்பட்டனர். எனவே, தன்னைவிட வறுமையில் வாடும் மார்க்ஸ் குடும்பத்தை பாதுகாக்க அவரது பொருளாதார ஆய்வுப்பணி தடங்களின்றி தொடர எங்கல்ஸ் மீண்டும் 1850-நவம்பவரில் மான்செஸ்டரில் வர்த்தக நிறுவனத்திற்கு சென்றார். முதலில் பிரதிநிதியாக, பிறகு பொறுப்புள்ள பிரதிநிதியாக, பிறகு 1864ல் தந்தை இறந்த பிறகு பங்குதாரராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகாலம் இதில் ஈடுபட்டார். நாய்த்தனமான வர்த்தகம என எரிச்சலோடு நண்பர்களுக்கு எழுதினார். இக்காலத்தில் இவரது மனைவி அயர்லாந்து தேசத்தை சேர்ந்து மேரிபேர்ன்ஸ் தான் உறுதுணையாக இருந்தார். இவரும் 1863-ஜனவரியில் இதயநோயால் இறந்தபோது எங்கல்ஸ் துடித்துப்போனார். அவளுடன் கூடவே எனது இளமையில் கடைசித்துளியையும் புதைத்து முடித்துவிட்டதாக உணர்கிறேன் என்று மார்க்சுக்கு எழுதினார். எனினும் மார்க்ஸ் குடும்பத்தை காப்பாற்றவும்   மூலதனம் நூலை முடிக்கவும் அவர் வர்த்தகத்தில் தொடர்ந்தார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெல்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், ஏழ்மையின் பாரத்தால் நசுக்கப்பட்டு மாண்டே போயிருப்பார்என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறினார்.

ராணுவ நிபுணன்

                   மான்செஸ்டரில் வேலை செய்த இக்காலத்தில் ஏராளமான ராணுவ நூல்களை கற்று கட்டுரைகளை எழுதினார். இவ்விஷயங்களை  பின்னாளில் புரட்சிக்கான தேவை எனற உணர்வோடு கற்றார். 18-ம் நூற்றாண்டின் இராணுவக்கலையின் வளர்ச்சி பற்றியும், ஐரோப்பிய இராணுவ தன்மை, பிரான்ஸ-ஆஸ்திரிய போர் பற்றி 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இக்காலத்தில் எழுதினார். இவரின் இராணுவ அறிவைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகையில் இன்னும் சில காலத்திற்கு இந்தப்போர் (பிரெஞ்சு-பிரஷ்ய)நீடிக்குமானால் லண்டனில் உள்ள ராணுவ வல்லுநர்களில் தலைசிறந்தவனாக நீயே கருதப்படுவாய் என்று எழுதினார். இக்காலத்தில்தான்  எங்கல்ஸின் நண்பர்கள் அவருக்கு ஜெனரல்என பட்டப்பெயர் சூட்டினார்கள்.

பன்மொழிப்புலவர்

                  எங்கல்ஸ் ஏற்கனவே ஐரோப்பாவின் அடிப்படை மொழிகளை கற்றிருந்தார். கிரேக்கம், லத்தீன் அறிந்திருந்தார். 1856ல் ருஷ்ய மொழியை கற்றார். கிரிமிய யுத்தம் காரணமாக கிழக்கிந்திய பிரச்சனைகளை அறிய பாரசீக மொழியை கற்றார். இதோடு பண்டைய ஜெர்மானிய மொழியையும் கற்றார். 1864ல் டென்மார்க் பகுதியில் நடைபெற்ற போரால் ஸ்காண்ட்நேவிய மொழி பயின்றார். அறுபதாவது வயதில் முதல் அகிலத்தில் அயர்லாந்து பிரச்சனை எழுந்தபோது அது பற்றி அறிய ஐரீஷ் மொழி மற்றும் டச்சு மொழிகளும்  தனது வாழ்வின் அந்திமக்காலத்தில் ருமேனியாவிலும், பல்கேரியாவிலும் சோஷலிச அமைப்புகளுக்கு வழிகாட்டி ருமேனிய, பல்கேரிய மொழியை பயின்றார். எங்கல்ஸிற்கு 20 மொழிகள் தெரியும். 12 மொழிகளில் பேச, எழுத புலமை பெற்றிருந்தார். எட்டு மொழிகளில் படிக்க கற்றிருந்தார். வெறும் மொழிகளைமட்டும் பயிலாமல் அந்த நாட்டு வரலாறு.  இலக்கிய வரலாற்றோடு பயின்றார். எங்கல்சின் இந்த புலமை ஒப்புநோக்கு மொழியியலுக்கு உதவியது. எங்கல்சின் சிறந்த படைப்பான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற கண்டுபிடிப்பிற்கும், மொழிகளை பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்திற்கும், பின்னாளில் அவர் முதல் அகிலத்தில் பணியாற்றவும் இப்புலமை உதவியது. இத்துடன் எங்கல்ஸ் இலக்கியம், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டி ருந்தார்.

முதல் அகிலத்தில்

                  1870 செப்டம்பரில் வர்த்தகத்தை விட்டுவிட்டுஅளவிடமுடியாத மகிழ்வுடன் மார்க்ஸ் இல்லத்திற்கு அருகே குடியேறினார். அங்கிருந்து அகிலத்தின் வேலைகளை செய்தார். பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க்,ஆகிய நாடுகளுக்கு கட்சியை கட்ட உதவினார். இருவரும் பாரீஸ் கம்யூன் எழுச்சிக்கு கடினமான உழைத்தனர்.எழுச்சிக்கும், கம்யூனை நடத்தவும் சாத்தியமான அளவு வழி காட்டினார்கள்.
                           
                     காரல்மார்ஸ் பொருளாதாரத்துறையில் ஆய்வை மேற்கொண்ருந்த போது, இயற்கை விஞ்ஞானத்தில் எங்கல்ஸ் ஆய்வுகளை மேற்கொண்டார். இச்சூழலில் எங்கல்ஸ் மனைவி மேரிபேர்ன்ஸ் மறைவிற்கு பிறகு அவரது தங்கை  லீசிபேர்ன்ஸ்-ஐ திருமணம் செய்திருந்தார். அவர்  1878ல் மறைந்தது மேலும் தனிமைக்குள்ளாக் கியது. இவர் அயர்லாந்து  பிரச்சனை ஆய்வுக்கு அதிகம் உதவியவர் என்று எங்கல்ஸ் எழுதுகிறார். இதை அடுத்து                           1883 மார்ச் 14-ல் மார்க்சின் மடிறவு எங்கல்சுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திற்கு. இருந்தாலும் தனது லட்சியத்தை அடைய அயராது உழைத்தார்.
1883 மார்க்ஸ் மறைவிற்கு பிறகு எங்கல்ஸ் 12  ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு புறம் மார்க்ஸ் விட்டுச்சென்ற ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். மறுபுறம் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க அமைப்புகளுக்கு உதவிட நேரத்தை செலவிட்டார்.
                      
                 காரல் மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பகுதியை வெளியிட்டார். இரண்டாவது மூன்றாவது தொகுதி கையெழுத்து பிரதியாகவே இருந்தது. இதை சரிபார்த்து அதற்கு தேவையானவற்றை சேர்த்து வெளியிட வெகுகாலம் எடுத்தது. இதற்காக இரவும் பகலும் உழைத்தார். இதோடு மூலதனத்தில் முதல் பகுதியின் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்தார். இக்காலத்தில் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற சிறப்பு வாய்ந்த நூலை எழுதி முடித்தார்.

                               வயது முதிர்ந்த காலத்திலும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பயணித்து இயக்க வேலைகளைச் செய்தார். பல நாடுகளில் இவருக்கு தொழிலாளர் அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்தபோது இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மார்க்சையே சாரும் என்று அவருக்கே அர்பணித்து அவரின் பங்கை நிலைநாட்டுவார். மார்க்ஸ் விதைத்த விதைகளில் விளையும் புகழையும், கீர்த்தியையும் நான் அறுவடை செய்ய நேர்ந்திருக்கிறது என்று பல இடத்தில் கூறுவார். இரண்டாவது அகிலம் நிறுவப்பட்ட பிறகு எங்கல்சின் கட்சி அரசியல் பணிகள் அதிகமாயின. எங்கல்ஸ் உயிரோடு இருந்தவரை நிரந்தர அமைப்பை அகிலத்தின் காங்கிரஸ் ஏற்காததால் சித்தாந்த வேலையோடு பல நாடுகளுக்கு சென்று தனித்தனியான வழிகாட்டுதல் செய்ய 
வேண்டிய பொறுப்பு வந்தது.

                         இதனால் அவர் இயற்கையின் இயக்க இயல் என்ற நூலை  முடிக்கவில்லை. இதோடு அவர் இன்னும் பல நூல்களை எழுத திட்டமிட்டிருந்தார். ஜெர்மன்   சமூகத்தில் வன்முறையின் பாத்திரம்,  மார்க்ஸ் வரலாறு, முதல் அகிலம், மூலதனம் 4ம் தொகுதி என பலவற்றை எழுதுவதற்கு எத்தனித்திருந்தார்.

                    ஆனால், இதோ, 1895ம் ஆண்டு ஆகஸ்ட் 5 இரவு 11 மணிக்கு போராட முடியாத அந்த நிமிடத்தில் மரணம் அவரை தழுவிக் கொண்டது, உழைப்பு நின்று போனது. ஆனால் அவரின் சிந்தனைகள் பல புரட்சிகளை வெற்றிபெறச்செய்து வருகிறது. பிரடெரிக் எங்கல்ஸ் தனது 75 ஆண்டுகால வாழ்வில் கவிஞனாக, தத்துவஞானியாக, ஸ்தாபகராக, புரட்சிவீரனாக, இராணுவநிபுணணாக,பன்மொழிப்புரவ னாக,பலபரிமானங்களை பெற்றுள்ளார். உழைப்பாளி மக்களின் விடுதலைக்கு வித்திட்டவனாக இன்றும் நம்மிடம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று நவம்பர் 28 அவரின் பிறந்த நாள். மரணம் தழுவிக்கொள்ளும் வரை உழைப்போம், போராடுவோம்..                                                                        ***

வியாழன், நவம்பர் 25, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-4

                                                                                                                          அ.பாக்கியம்
        
 உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதிவழக்கு    

    வழக்கு, சதிவழக்கு அதைத்தகர்த்தெரிவதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் என்ற நீதிமன்ற வளாகத்தை கடந்து சமூக அவலங்களையும் மோதல்களையும் இந்த சிறிய புத்தகம் விவாதிக்கின்றது. மார்க்சும் எங்கல்சும் நூலகங்களிலும், ஆய்வுக்கூடங்களில் இருந்துகொண்டு மட்டும் பணியாற்றவில் லை களத்தில் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை பகிரங்க இயக்கமாகவும், வெகுமக்கள் இயக்கமாகவும் மாற்றியது.கம்யூனிஸ்ட் லீக்கில் உருவான இடதுஅதிதீவிர போக்கை வெற்றிகொண்டது வழக்குகளை பிரச்சாரமேடையாக மாற்றியது, சதிவழக்குகளை அம்பலப்படுத்தியது என்ற ஐந்து தளத்தில் இப்புத்தகத்தை உள்வாங்கிக்கொள்ளலாம்.
       ஒன்று, காரல்ம்ர்க்சும், ஏங்கல்சும் பாரிசில் தங்கி அங்கு ஐர்மானியிலிருந்த வந்து சிதறுண்டுகிடந்த தொழிலாளர்களை திரட்டிட முயற்சிஎடுத்தனர். அப்போது நீதியாளர் கழகம் என்ற அமைப்பு இருவரையும் தங்களது அமைப்பில் இணைய அழைத்தது.இதை ஏற்ற அவர்கள் இரகசிய அமைப்பை பகிரங்க அமைப்பாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைந்து, அவ்வமைப்பை கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றி பகிரங்க அமைப்பாக்கினர். அதேநேரத்தில் ஐர்மனியில் வேட்டையாடப்பட்ட புரட்சிகர தொழிலாளர்கள் பாரிசிற்கு தப்பிவந்து வேலையின்றி நடைபாதை யிலும்,பூங்காக்களிலும்,தெருக்களிலும் முடங்கிக் கிடந்தனர். இவர்களை பாதுகாக்க மார்க்ஸும், எங்கல்சும் அகதிகள் குழு அமைத்து உதவிசெய்தனர்.
     

 இரண்டு, பாரிசின் பலபகுதிகளில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும்கூட தொழிலாளர் குழுக்கள் ரகசியமாக மட்டுமே செயல்படுவது, சதிவேலைகள் மட்டுமே செயல்தளமாக இருந்ததை மாற்றி பகிரங்கமாக திட்டத்தின் அடிப்டையில் செயல்படும் இயக்கங்களாக உருவாக வழிவகுத்தனர். மூன்று, கம்யூனிஸ்ட் லீக் பகிரங்கமாக செயல்பட்டபோதே அவ்வமைப்பில் உடனடியாக கம்யூனிச புரட்சி நடத்த வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு புறம்பான அதிதீவிர போக்கை களைஎடுத்து லீக்கை காப்பாற்றினர்.
     நான்காவதாக, கைதுகள் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், எங்கல்ஸ், பதிப்பாசிரியர் கோர்ப் ஆகியோர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்க்ஸ் மூன்றுபேர்களுக்காகவும் வாதாடினார்.ஒவ்வொரு அதிகாரியும் தீங்கான நடவடிக்கை எடுப்பதை நீங்கள் அனுமதிக் கிறீர்கள்.அத்தீங்கை கண்டிப்ப வர்களை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.  தன் அண்டையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக முன்வரவேண்டியது பத்திரிக்கை களின் கடமையாகும். ஜெர்மானியில் மார்ச் மாதம் நடைபெற்ற புரட்சி மேல்மட்ட சீர்திருத்தம் செய்துவிட்டு அடிமட்டத்தை அப்படியே வைத்துள்ளது......தற்போது பத்திரிக்கைகளின் முதல் கடமை நடப்பு அரசியல் அமைப்பின் அனைத்து அடித்தளங்களையும் தகர்த்தெரிய வேண்டும் என்பதாகும். என்று நீதிபதிகளுக்கு முன்னால் அக்கட்டுரையின் நியாயத்தையையும்  பத்திரிக்கையின் சமூக கடமைகளையும் எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் வாழ்த்துக்களிடையே விடுதலை செய்யப்பட்டனர்.
மறுநாள் புரட்சிக்குத்தூண்டல் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், ஷாப்பர், ஸ்னெய்டர் ஆகிய மூவர்மீதான வழக்கிலும் மார்க்ஸே வாதாடினார். புரட்சி என்பதை சட்டவடிவத்திற்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்கமுடியாது என்றதுடன் சமூகம் என்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற தங்களின் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகளை பார்த்து மார்க்ஸ் கூறினார். அத்துடன் சட்டம் அது குறிப்பிட்டகாலத்தில் நிலவும் பொருள்உற்பத்தி முறையிலிருந்து தோன்றுகின்றது. ஆகவே புரட்சி என்பது பழைய சட்டமேல்கட்டுமானத்தை அழிக்கும் ஜீவாதார கடமையை கொண்டுள்ளது என்று வாதங்களை முன்வைத்தார்.மன்னன் எதிர்ப்புரட்சி செய்தால்  ஒருபுரட்சியின் மூலம் மக்கள் அதற்கு பதில்தரும் உரிமையை பெற்றுள்ளனர் என்றார். வழக்கிலிருந்து விடுதலைப்பெற்றனர். சட்டம் பற்றிய நீதிபதிகளின் கருத்துமுதல்வாத கருத்துக்களை  தகர்த்து பொருள்முதல்வாதக் கருத்துக்களை நிலைநாட்டினார். அன்று நீதிமன்றத்தை மார்க்ஸ் மிகப்பெரும பிரச்சார மேடையாக மாற்றினார். வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப்பாதையை பயன்படுத்தினர்.
ஐந்தாவதாக, மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பேச்சுக்களும், எழுத்துக்களும்  கம்யூனிஸ்ட் லீக்கின் பணிகளும் பிரெஷ்யாவில் புரட்சியை கொண்டு வந்துவிடும் என்று பிரெஷ்ய அரசு அஞ்சியது. எனவே லீக் உறுப்பினர்கள் பத்துபேர்கள் மீது புரட்சிநடத்தமுயற்சித்ததாக சதிவழக்கை புனைந்து கைதுசெய்தது. மார்க்ஸ், எங்கல்ஸ்  இருவரையும் இவ்வழக்கில் இணைக்க முயற்சி செய்தது. இவர்கள் இருவரும் லண்டனிலிருந்துகொண்டு பிரெஷ்யாவின் கோலோனில் நடைபெற்ற சதிவழக்கை முறியடிக்க பணியாற்றினர்.
இந்த வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி அவற்றை பலநகல்கள் (பலபேர்களை வைத்து எழுதவேண்டிய பணி) எடுத்து ரகசியமாக கோலோன் நகருக்கு அனுப்பிவைக்க வேணடிய பெரும்பணியை செய்தார்.இதற்காக தனது வீட்டையே அலுவலமாக்கினார்.
இந்த சதிவழக்கை பயன்படுத்தி டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பிரபலமான பத்திரிக்கைகள் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசியது.கொளுத்துப்போன பிச்சைக்காரர்கள் கூட்டம் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று எழுதியது.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வேலையையும்  மார்க்ஸ்,எங்கல்ஸ் இருவரும் செய்தனர்.
பிரதானமாக மார்க்ஸ் தனது குடும்ப வருமானத்திற்காக எழதவேண்டிவைகளை நிறுத்திவிட்டு வழக்கிற்கான பணியில் இறங்கினார். கடந்த பலவாரங்களாக குடும்பத்தின் சாப்பாட்டிற்காக பாடுபடவேண்டியதற்கு பதிலாக அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து கட்சியை பாதுகாக்கவேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது என்று தனது நணபருக்கு எழுதினார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. செருப்பில்லாததாலும், மேலேஉடுத்திக் கொள்ள உடை இல்லாததாலும வெளியேபோகமுடியாமல் வீட்டிலேயே முடங்கிகிடக்கிறேன் என்று தனது நண்பனுக்கு எதினார். வழக்கு நடைபெற்றபோது அவரது கால்சட்டையும், காலணியும், கோட்டும் அடகு கடைக்கு சென்றிருந்தது.வெள்ளைத்தாள் வாங்குவதற்கே நிதிபற்றாக் குறையாக இருந்தது.

மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தின் வறுமைக்கிடையிலான உழைப்பாலும், அவர்களின் வழிவந்தவர்கள் தியாகத்திலும், அவர்கள் சிந்திய உதிரத்திலும், இழந்த வாழ்க்கையின் மேலேதான் நமது உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உணர்வு புத்தகத்தை படிக்கும்போது ஏற்படுகிறது.  மேற்கண்ட ஆறு புத்தகங்களும் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நம்கண்முன் நிறுத்துகின்றது, சுமார் முன்னூறு ஆண்டு வரலாற்றின் ஆணிவேரை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது. மாவோ சொன்னாரே உலகவரலாற்றை உருவாக்கும் உந்துசக்தி மக்கள்தான். மக்கள் மட்டுமேதான் என்றாரே அந்தவார்த்தைகளை இப்புத்தகத்த் படிப்பதன் மூலம் உணரமுடியும்.எனவே வரலாற்றின் வேர்பிடித்து வருங்காலத்தை செப்பனிடுவோம் வரலாற்றிணை புரிந்துகொள்வது சிக்கலான பணி என்றாலும் கடந்தகாலத்தை கொண்டு தற்கால சமுதாயத்தின் நிலையை மாற்றும் எண்ணமுடையோர் அப்பணியை முக்கியமானதாகக் கருதிச் செய்யவேண்டியுள்ளது.                                            

புதன், நவம்பர் 24, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-3

                                                     அ.பாக்கியம்                                                                                                                                                           
அயர்லாந்து-பாலஸ்தீனம்
பூர்வீகம்முதல்புத்தகம்எழுதப்படும்காலம்வரைமுக்கியநிகழ்வுகள்,பார்வைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அயர்லாந்து இங்கிலாந்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீனம் இங்கிலாந்தினால் ஏமாற்றப்பட்டது.
                   

                    நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,              
                    நான் கடவுளால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,                                  
                    நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன், 

    என்ற கவிதை பாலஸ்தீனம் பற்றி இன்றைய காட்சிகளுக்கும் சாட்சியாக விளங்குகின்றது. அயர்லாந்து என்ற நாட்டை இங்கிலாந்து தன்நாட்டுடன் இணைத்துக் கொண்டது.இன்றும் ஒருபகுதியை இணைத்தே வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாட்டை  உருவாக்கியது. இவை எதிரும் புதிருமாக தோன்றலாம் ஏகாதிபத்தியத்தின் கொள்கை இதுதான். இயற்கையை, உழப்பை, ரத்தத்தை, சரீரத்தை சுரண்டுவது என தனது நலனுக்கு எது உகந்தோ அதுதான் சட்டம்.அதுதான் நீதி. அயர்லாந்து இங்கிலாந்தின் முதல் காலனி நாடு என்று எங்கல்ஸ் கூறினார்.இங்கிலாந்தின் நிரபிரபுத்துவம்அயர்லாந்தை பொருளாதார ரீதியாக சுரண்டியது. தொழில்வளர்ச்சிக்கும், முதலாளித்துவ மூலதன திரட்சிக்கும்  அது உதவியதால் முதலாளித்துவம் பயன்படுத்தியது. அயர்லாந்து பற்றி காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் கருத்துக்கள் மிகமுக்கியமானது ஆகும். எந்த ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கமும் தன் நாட்டின் ஆளும் வர்க்கம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க கூடாது என்று கூறினர். அயர்லாந்தை அடிமைப்படுத்துவதன் மூலமாக இங்கிலாந்தின் பிற்போக்காளர்கள்  பலமடைந்ததுடன் அதைப்பேணி காத்தும் வருகின்றனர்  என்று கூறினார். ஏங்கல்சின் மனைவி மேரிபர்ன்ஸ் அயர்லாந்துக் காரர்.இவர் இப்பிரச்சனையில் மிகுந்த ஆவர்வம் செலுத்தியதாலும்,இவர் இறந்த பிறகு ஏங்கல்ஸ் திருமணம் செய்துகொண்ட இவரது தங்கை லிஸ்ஸியும் இப்பிரச்சனையில் ஆர்வம் செலுத்தியதால்  ஏங்கல்ஸுக்கு இப்பிரச்சனையை புரிந்துகொள்வது எளிதாக  இருந்தது.
                    ஜரிஷ் என்ற தேசிய இனத்தை அடிமையாக்கி சமூகஒடுக்கு முறைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்து. அதே நேரத்தில் உருவாகிவந்த அரபுதேசிய ஒற்றுமையை நசுக்கிடயூதஇனத்தை மூர்க்கத்தனமாக பயன்படுத்தியது.
      நாகரீகம் தெரியாத அயர்லாந்து மக்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தருகிறோம் என்று கூறினர்.இதையே இந்தியாவிற்கும் கூறியதை நாம் மறக்க முடியாது. இதையேதான் பாலஸ்தீனத் திற்கும் கூறினர்.ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் நாகரீகம்.
    ஏகாதிபத்தியவாதிக  பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகன்கள்.பாலஸ்தீனத்தில்  யூதத்தையும் இஸ்லாத்தையும் மோதவிட்டனர். லெபனானில் கிறிஸ்த்துவத்தையும் இஸ்லாத்தையும், இந்தியாவில் இந்து முஸ்லீமையும் மோத விட்டனர். அயர்லாந்திலோ கிறிஸ்துவமதப்பிரிவுகளி உள்ளகத்தோலிக்கர்களையும் பிராட்டஸ்டன்ட்களையும் மோத விட்டனர்.
                   அயர்லாந்தில் பட்டினியாலும், படுகொலைகளாலும் இருபதுசதம் மக்களை வேட்டையாடினர் .பாலஸ்தீனத்திலோ முதல் பத்தாண்டுகளில் (1921-31)மட்டும் ஜம்பதாயிரம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். இன்றுவரை இது பலலட்சங்களை தாண்டி மக்கள் தொகை  சரிபாதியாக குறைந்து விட்டது.
    இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டங்களும் பன்முகத்தன்மை கொணடதாக இருக்கிறது. இன்றுவரை இந்த போராட்டங்கள் உயிர்த்துடிப்போடும், உத்வேகம் குன்றாமலும் நடைபெற்று வருகின்றது.
      இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டமும் நான்கு முக்கிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றது.வெகுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், ஆயுதம் தாங்கிய எழுச்சியாகவும், உண்ணாவிரதம் இருந்து உயிர்நீக்கும் போராட்டமாகவும், சிலநேரங்களில் தனிநபர் பயங்கரவாத மாகவும் நடைபெற்று வருகின்றது.
   இப்போராட்டங்கள் பலநாடுகளின் விடுதலைப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது. தாகூர், பாரதியார், அரவிந்தகோஷ், சரோஜினிநாயுடு ஆகியோர் இப்போராட்டங் களை தங்களது கவிதைகளில் வடித்தனர். வியட்நாம் புரட்சித்தலைவர் ஹோ-சி-மின் அயர்லாந்து போராட்டத்தால் ஆகர்ஷ்சிக்கப்பட்டவர்களில் ஒருவர். காந்தி, நேரு இருவரும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை வலுவாக ஆதரித்தனர்.குறிப்பாக காந்தி அம்மக்களின் போராட்ட முறைகள் தனது கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும் அதை ஏன் ஆதரிக்கிறார்  என்ற விளக்கம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது மிக முக்கயமான பகுதியாகும்.
      பாலஸ்தீன மக்களின் போராட்டத்தினூடே இந்திய அரசின் கொள்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 1947-ல் அமைக்கப்பபட்ட சிறப்புக்குழுவால் பாலஸ் தீனம் இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 1949-ல் இஸ்ரேல் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது.
   ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கோரமுகம் எடுத்துள்ளது. இஸ்ரேல் இன்றும் மூர்க்கத்தனமாக தனது தாக்குதலை நடத்துகின்றது.இந்தியா இன்று போராடும் மக்களை கைவிட்டு இஸ்ரேல் நாட்ட் தனது அச்சு நாடாக்கி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுவிட்டது.
   ஆனால் பாலஸ்தீன மக்களோ குண்டுமழைகளுக்கும்.  வெடிச்சத்தங்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்நடுவிலிருந்தும், வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் எழுந்து வருகின்றனர். அயர்லாந்து மக்கள் இங்கிலாந்து வசமுள்ள பகுதியை  விடுவிக்க போராடி வருகின்றனர்.
     இவை இரணடும் புத்தகம் அல்ல. நிகழ்காலத்தின் போராட்ட களம். இக்களத்தில்  இறங்க வேண்டும், சினமும், சீற்றமும்  கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான மார்க்கம் புரிபடும.

செவ்வாய், நவம்பர் 23, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-2

                                                           அ.பாக்கியம்


                  
பிரெஞ்சுப் புரட்சி-ரஷ்யப் புரட்சி -சாசன இயக்கம்.

மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத் தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கி வைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத் தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.
             முதலாவதாக படைப்பு சராசரி வாசகர்களை ஈர்க்க வேண்டும். அதே நேரம் தீவிரவாசகர்கள் அனுபவிக்கவும் அதில் இடங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று உம்பட்டோ எக்கோ வின் கூற்றுக்கு ஏற்ப புத்தகங்களின் பல பகுதிகள் அமைந்துள்ளது. தீவிரவாசகர்களுக்கு முழுமையாக தீனிபோடவில்லை என்றாலும் அவர்களுக்கான இடங்களும் உள்ளது.காரணம் புத்தகம் சராசரி வாசகனை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டதால்  இவ்வாறு அமைந்துள்ளது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புதியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று புத்தகங்களிலும் காலவரிசைப்படி நிகழ்வுகளை முன்வைத்திருப்பதும், கடினவார்த்தைகளை தவிர்த்திருப்பதும் எளிய வாசிப்புக்கும் புரிதலுக்கும் உதவுகிறது. உதாரணமாக அன்றைய பிரெஞ்சுநாட்டு சமுகத்தை புரிந்துகொள்ள, மதகுருக்கள் முதல் எஸ்டேட், நிலபிரபுக்கள் இரண்டாவது எஸ்டேட், மக்கள் மூன்றாவது எஸ்டேட் என்று புள்ளிவிவரங்களுடன் விபரித்திருப்பதை குறிப்பிடலாம்.  ரஷ்ய புரட்சி புத்தகத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்கண்ட விஷயத்தை முன்வைக்கலாம். சார்மன்னன் காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறிக்கும் வகையில்  உங்கள் அறையில் எத்தனை பேர் என்ற கேள்வியுடனான தலைப்புகள். இதில் 12 பேர்கள் என்று பதில் வரும். எப்படிப்பட்ட அறை? 12 பேர்களும் ஒரே நேரத்தில் படுக்கமுடியாமல் முறைவைத்து படுப்பது, கரியும், அழுக்கும் நிறைந்த சுவர்கள், வியர்வை நாற்றம் வீசும் அறை! என்ற வர்ணனை. புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் புரட்சிக்கு பிறகு உங்கள் அறையில் எத்தனை பேர் என்றால், நான், எனது மனைவி, குழந்தைகள் என்ற பதிலுடன் புத்தகம் முடிவது சராசரி வாசகனுக்காக. இதே போன்று சாகனஇயக்கம் புத்தகத்தில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் கோரச்சுரண்டலை விளக்கிட தொண்ணூறு ஆண்டுகளில் ஒன்பது தலைமுறைகளை விழுங்கப்பட்டு விட்டன என்ற பீல்டனின் வார்த்தைகள் எளிமையானது மட்டுமல்ல வலிமையானதும் கூட.
                 அதே நேரத்தில் ரஷ்ய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய நரோதியம் தோன்றுவதற்காக பொருளாதார சமூகக்ரணிகளை ஆழமாகவும், சுருக்கமாகவும் (பக்.14) பதிய வைத்துள்ளதும், ரஷ்யபாராளுமன்ற (டூமா) தேர்தலில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்காமைக்கு காரணமான தந்திரங்க ளையும் விளக்கியுள்ளார்.(பக்.71) ரஷ்ய புரட்சியின்முக்கியமான தந்திரோஉபாயங்களை தவறாமல் ரத்தினச்சுருக்கமா விளக்கியுள்ளார். உதாரணமாக ரஷ்யாவில் அன்றிருந்த புரட்சிகரமான சக்திகளில் பலபிரிவுகள்,பல போக்குகள் இருந்ததால் ஆயத தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தது. எடுத்த முடிவுகள் வெளிவந்த முறைகள் புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்த லெனின் ஒரு நிமிடம் தாமதிக்காமல்,இன்றே இப்போதே, இந்த நிமிடமே தாக்குலை தொடங்குங்கள் என்ற அறைகூவல், எந்தஅளவு வெற்றிக்கு வித்திட்டது என்பதை புத்தகம் தெளிவாக தேவையான வகையில் விளக்கியுள்ள முறைகள், தீவிர வாசகர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதேபோன்று பிரஞ்சுப்புரட்சியில் முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பறிய பிறகு நடந்த தேசிய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை,தேசியபடை, ஜாக்கோபின்கள் கழகம் அதில் உருவான பிரிவுகள் அனைத்தும் ஆழமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. அன்னியநாடுகள் படையெடுத்த போது தேசிய படைகள் புரட்சிபாடல்களை பாடி அணிதிரட்டியது, போதியபாதுகாப்பு உடைகளின்றியே தொழிலாளர்கள் யுத்தத்தில் பங்கேற்றது மட்டுமல்ல பாரீஸ் தொழிலாளர்கள் மாதம் 650 துப்பாக்கிகளை உற்பத்திசெய்த நிலையைமாற்றி மாதம் 16000 துப்பாக்கிகளையும்,20000 கிலோ வெடிமருந்துகளையும் தயாரித்துகொடுத்து வெற்றிவாகைசூடினர். தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும் முதலாளிவர்க்கம் எப்படி தனது வெற்றிக்கு பயன்படுத்தி விட்டு. அவர்களை கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தது என்ற பதிவு முக்கியமானது. இதேவகையில், சாசன இயக்கத்திற்கு முன்பாக நடைபெற்ற அனை வருக்கும் வாக்குரிமை என்ற இயக்கம் தீவிரதன்மை வாய்ந்த தொழிலாளர்களின் தலைமைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிலிருந்த முதலாளிகள் பலபிரித்தாளும் காரியங்களை கையாண்டனர்.1832-க்குபிறகு தொழிலாளி வர்க்கம் தலைமையில் சாசன இயக்கம் அரசியல் இயக்கமாக வீறுகொண்டு எழுந்தபோது  அவற்றை  அடக்கியமுறையும் தொழிற்சங்கத்தை தடைசெய்து தணடித்தது,அதற்குத் தலைமை தாங்கியவர்களை விலைபேசிய தன்மைகளும், மூலதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. சாசன இயக்கத்தில் தலைதூக்கிய தார்மீககட்சியினர், பலப்பிரயோக கட்சியினர், ஜனநாயகப் பிரிவினரின் போக்குகள் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மார்க்சும், எங்கல்சும் சாசன இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி இடதுசாரி பிரிவினருடன் இணைந்து செயல்பட்டனர்.முதலாளித்துவ வர்க்கம் காலனி நாடுகளில் அடித்த கொள்ளையால், தகுதிவாய்ந்த ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உயரச் செய்தது. ஒரு பகுதி தொழிலாளர்களை வசதியானவர்களாக மாற்றியது. இதனாலும், ஒரு உறுதிமிக்க பாட்டாளி வர்க்க ஆட்சி இல்லாததாலும் சாசன இயக்கம் பின்னடைவை சந்தித்தது என்று மார்க்ஸ் கூறினார். இன்றும்கூட ஆளும் வர்க்கம் இதுபோன்ற தந்திரங்களை கையாள்வதை நாம் உணர வேண்டும்.சாசனஇயக்கம் தனிமைப்பட்டபோது சாசன கோரிக்கைகளுக்ககாக நடத்தும் அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட பொருளாதார போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் என இருவரும் கருத்து தெரிவித்தனர். இங்கிலாந்து நாடானது சாசனஇயக்கம் என்ற முதலாவது பரந்துபட்ட உண்மையான வெகுஜன மற்றும் திட்டவட்டமான அரசியலைக் கொண்ட பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தை உலகிற்கு அளித்துள்ளது என்று லெனின் மதிப்பீடு செய்தார். சாசனஇயக்கம் என்ற புத்தகத்தில் மேற்கண்ட அம்சங்கள் தீவிரவாசகர்களுக்கும் பயனுள்ளதாகும்.

               இரண்டாவதாக, இந்த மூன்றுபுத்தகங்களிலும் நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மனதை நெருடும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.  மன்னர்களையும் மகாராஜாக்களையும் துதிபாடி மக்களாட் சியின் மகத்துவர்களாக சிததரிக்க முயலும் இந்தக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் கோரமுகங்களை நினைகூர்வது நமது கடமை.பிரஞ்சுப்புரட்சி  புத்தகத்தில்,  நீதிபதிகளுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 400 வகையான சட்டங்கள, சட்டத்திற்கு மேலே ஆளும் வர்க்கம் இருந்தது. அனைத்து சட்டங்களும்  மூன்றாவது எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட 92 சதமான மக்கள் மீதான அடக்குமுறைக்கே பயன்பட்டது. சிறிய குற்றங்கள் அல்ல தவறுகளுக்குகூட சக்கரத்தை ஏற்றி எலும்பை முறிப்பது, கையை நறுக்குவது, காதுகளை அறுப்பது, என கொடிய தண்டனைகள் சாதாரணமாக நிறைவேற்றப் பட்டது. தவளைகள் கத்துவதால் நிலபிரபுக்களின் தூக்கம் கெடுகிறது.விவசாயி கள் இரவெல்லாம் தவளைகளை விரட்டிட வேண்டும். மீறி தவளைசத்தம் கேட்டால் விவசாயிகள் காது அறுக்கப்படும். கடும் தண்டனைக்கு உள்ளா வார்கள். பட்டினியில் மடிந்து கொண்டிருந்த மக்கள் ஊர்வலமாக சென்று உணவுகேட்டபோதுஇதோஇங்கே இருக்கிற புல்லைத் திண்ணுங்கள் என்று கூறிய நிலபிரபுத்துவ அதிகாரிகள். இந்தியாவில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், எலி திண்ணாலும் திண்ணட்டும, அழுகி வீணாகினாலும் ஆகட்டும் ஏழைகளுக்கு உணவளிப்பது என் வேலை அல்ல என்று மன்மோகன் சிங் அடம்பிடித்தது  லூயி மனனனை நமக்கு நினைவூட்டுகிறது,
               இங்கிலாந்தில் கிராமங்களில் கோட்டை போன்ற இடங்களை உருவாக்கி விவசாயிகளை அதற்குள் வசிக்கவும் கட்டாயப்படுத் தினர் .வேலைசெய்யும் இடத்தை  (றடிசம டிரளந) உருவாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து கல்உடைத்தல், எலும்புகளை பொடியாக்குதல், போன்ற கடின வேலைகளை கொடுத்தனர். கால்வயிறு உணவளிததனர். பட்டினி தாளாமல் அவர்கள் எலும்புளில் இருந்த மஜ்ஜைகளை நக்கித்தின்றனர். பட்டினியால் மடிந்தனர்.                                                                                                                 

ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் அடிமைகள் மற்றும் சார்மன்னனின் அடக்குமுறைகள் தொழிற்கூடத் திலும் கல்லூரிகளிலும் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது. தூக்குமேடைகள், நாடுகடத்தல் என்பது சாதாரணமாக நிறை வேற்றப்பட்டுள்ளது. அயர்லாந்து  விடுதலைப்போராட்ட புத்தகத்தில்  நிலபிரபுத்துவ கொடுமைகளை சகிக்கமுடியாத வகையில் உள்ளது.அவர்கள் காட்டை அழித்து உருவாக்கிய விளைநிலங்களை சிதைத்தனர்.காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றி அம்மக்களை விரட்டினர். கம்பளி தொழிலுக்காக 96 லட்சம் ஆடுகளுக்காக 11 லட்சம் அயர்லாந்து மக்களை விரட்டியடித்த கொடுமைகளை மார்க்ஸ்  அம்பலப்படுத்தியுள்ளார். கொடூர சுரண்டலால் பஞ்சம். பஞ்சத்தால் 20 சதம் மக்கள் மரணம்.

              மூன்றாவதாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் மேல்கட்டுமானமாக இருந்த மதம் பொருளாதார சுரண்டலின் கருவியாக செயல்பட்டது என மார்க்ஸ் கூறியுள்ளார்.இதற்குரிய பலதகவல்களை இப்புத்தகங்களில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பிரஞ்சுபுரட்சி புத்தகத்தில் மதக்குருக்கள் முதலாவது எஸ்டேட் என்ற முதல் நிலையில் இருந்தன்ர்.இவர்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். சர்ச்சின் வருமானம் முழுவதும் ஆர்ச்பிஷப்களுக்கும், பிஷப்களுக்குமே சென்றது.இத்துடன் இவர்களின் அனைத்து சொத்துக்களுக்கும் லூயிமன்னன் வரிவிலக்கு அளித்திருந்தான்.ஒரு ஆர்ச்பிஷப்பின் வருமானம் மூன்று லட்சம் டாலர். இருநூறுபேர்கள் உண்ணும் உணவுக்கூடம்.நூற்றி எண்பது குதிரைகள் என தனிராஜியமே நடத்தினர். சர்ச்கள் தனியாக விவசாயிகளிடம் வரிவசூல் நடத்தினர், சுங்கச்சாவடிகள் அமைத்து வணிகர்களிடம் வரிவசூலித்த னர்.தனி நீதிமன்றங்கள் தர்பார்கள் நடத்தினர் என்றால் மதத்தின் பங்கை  பொருளாதார சுரண்டலில் அறியமுடியும். இங்கிலாந்தில் மடாலயங்கள் ஒவ்வொரு பாதிரியாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.இது பேரிஷ்(யிசளை) என்று அழைக்கப்பட்டது. இற்றின்கீழ் நிலங்கள் இதர சொத்துக்களும் இருந்தன. இவைதவிர வேலைசெய்யும் இடம் (றடிசமாடிரளந) என்ற குழந்தைகளை யும் பெண்களையும் கசக்கிபிழியும் இடமும் இவர்களுக்கு கீழ் செயல்பட்டது.இந்த பேரிஷ் என்ற பகுதியில் கிடைக்கும் வருமானத்தை மூன்றில் ஒருபகுதி ஏழைமக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்  என்ற விதிமுறைகள்கூட அப்பட்டமாக மீறப்பட்டன.
                         நான்காவதாக, அறிவுஜீவிகள் மற்றும்  கலை இலக்கிய படைப்புகள் பங்கு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிரெஞ்சு புரட்சியில் ரூசோ, மாண்டஸ்க்கியு, வால்டர், தீதரோ சிந்தனைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. வால்டர் மற்றும் தீதரோ இருவருக்ககுமான  வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ள முறைகள் அதாவது  சொல்லவந்த பொருளோடு இணைந்தே செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. வால்டேர் மதபீடங்களை கடுமையாக சாடினார். ஆனால் மதத்தின் இருத்தலை நியாயப்படுத்தினார்.தீதரோ மதபீடங்களையும், மதத்தையும் சாடியதுடன் பொருள்முதல்வாத சிந்தனைகளுக்குமுக்கியத்துவம் கொடுத்தார்.எனவேதான் இவரின் கலைக்களஞ்சியத்தை மன்னன்  தீயிட்டுக் கொளுத்தினான். இந்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஷ்யப்புரட்சி புத்தகத்திலும் அறிவிஜீவிகளின் பங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாசனஇயக்கத்தில்  இவர்களின் பங்கை ஓரளவு குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
                     
 இம்மூன்று புத்தகங்களிலும் கையாளப்பட்ட விஷயங்கள் மாறுபட்டகாலம், இடம், வர்க்க நலன்கள் என்று இருந்தாலும், சாதாரண மற்றும் தீவிரவாசகர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மூன்றிலும் படம்பிடித்துகாட்டப் பட்டுள்ளது ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் மக்களை சுரண்டியதில் மதத்தின் பங்கு போதுமாக அளவு இடம்பெற வில்லை .கூடுத லாக ,வந்திருக்கலாம். நரோதினிய தோற்றச்சூழலை சரியாகவே சுட்டியிருக் கும் நிலையில் அதன் தாக்கம் ரஷ்யசமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் என கருதுகிறேன்.

உணவு பாதுகாப்புச் சட்டமும் மத்திய அரசின் உள்குத்தும்.

                                                                                                                           அ.பாக்கியம்                                       


                                                  சுதந்திரம்  யார் வேண்டுமானாலும், எங்கு சென்றும் எவ்வளவு சொத்து ண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற அர்த்தத்துடன் பிரெஞ்சு புரட்சியின் வெற்றி பிரகடனம் செய்தது. இதிலே சுரண்டல் என்ற பெரும்பொருள் புதைந்துள்ளது. உண்மையானசுதந்திரம்ஒரு மனிதன் சுரண்டலிலிருந்து எப்பொழுது விடுதலை அடைகிறானோ அப்பொழுதுதான்சுதந்திரம் உண்மையான அர்த்தத்தை அடைகிறது என்று காரல் மார்க்ஸ் பிரகடனம் செய்தார்.


                                                இந்தியா அரசியல் சுதந்திரம் அடைந்து 62 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால் இன்னும் பட்டினச் சாவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. ஊட்டச்சத்து குறைவிலிருந்து விடுதலை கிடைக்கவில்லை. 62 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இதுவரை சந்திக்காத அளவில் மத்திய அரசின் தவறான (பெருமுதலாளிகளுக்கு ஆதரவான) கொள்கைகளால் கடுமையான உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் சந்தித்து வருகிறது. இதையே சாக்காக வைத்து எல்லோராலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை தனது குறுகிய நலனை நிறைவேற்றக்கூடிய முறையில் ஐ.மு.கூ. அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.தவறான கொள்கை அல்ல தெளிவான கொள்கை ! உலகிலேயே ஊட்டச்சத்து குறைவாக உள்ளவர்கள் நிறைந்த நாடு, பட்டினிச்சாவு அதிகமாக உள்ள நாடு இந்தியா  கிராமப்புறத்தில் 83 சதமும், நகர்புறத்தில் 66 சதமும் இம்மக்கள் உள்ளனர


                                    இந்த பின்னணியில் உணவுக்கான உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும். அனைவருக்கும் உணவளிப்பதுதான் மத்திய, மாநில அரசுகளின் தலையாகிய கடமையாகும். இதை அமுலாக்க அனைவருக்கும் பொதுவிநியோக முறையே சாத்தியமாகும். அனைத்து ஏழை மக்களுக்கும் 35 கிலோ அரிசி / கோதுமை வழங்கிட 1,20,000 கோடி செலவாகும். ஏற்கனவே மத்திய அரசு 50,000 கோடிவரை செலவு செய்கிறது. மேலும் ரூ 70,000 கோடி செலவு செய்தால் உணவு பாதுகாப்பை ஏற்படுத்திட முடியும். இந்த தொகை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ழுனுஞ) 1.5 சதவீதம் மட்டுமே. ஆனால் இதை செய்ய தயங்கும் மத்திய அரச கடந்த வருடம் ரூ 3 லட்சம் கோடிகள் வரை தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளித்துள்ளது. கடந்த 6 மாதத்தில் அம்பானியின் ரிலயன்ஸ் கம்பெனிக்கு மட்டும் ரூ 45,000 கோடி வரிச்சலுகையை மத்திய அரசு அளித்துள்ளது. 2009-10 -ம் ஆண்டுகளில் தொழில் நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக அளிக்க உள்ளது ரூ 4 லட்சம் கோடி. பொதுவினியோகத்திற்காக 2009-10 பட்ஜெட்டில் ஒதுக்கியிருப்பது ரூ 52,489 கோடியாகும். அதாவது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.18 சதவீதம் மட்டுமே. இதிலிருந்து மத்திய அரச தவறான கொள்கையை கடைபிடிக்கிறது என்று கூற முடியாது. பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது என்ற தெளிவான கொள்கையுடன்தான் உள்ளது.

                                                     நீண்டநாள் பேசாத குழந்தை எப்போது பேசும் என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை வாயைத்திறந்தவுடன்சித்தப்பன் எப்போது செத்துப்போவான் என்று கேட்டதாம். அதுபோல் உணவு பாதுகாப்பு சட்டம் வராதா என்று எதிர்பார்த்து போராடியவர்களுக்கு உணவு பாதுகாப்புச் சட்டம் உணவு பறிப்பு சட்டமாக வந்ததை கண்டு அதிர்ந்தனர். அதற்காக சட்டம் வேண்டாம் என்று கூறவில்லை. சடடம் இந்த வடிவிலேயே அமுலானால் பாரதம் பட்டினிக் கூடாரமாக பரிதவிக்கும். உலக நாடுகளில் பல நாடுகள் ஏற்கனவே உணவு பாதுகாப்பு சடடத்தை அமல்படுத்தி உள்ளன. சில நாடுகள் உணவு உரிமையை அடிப்படை உரிமையாவே அரசியல் சட்டத்தில் சேர்த்துள்ளனர். வளரும் நாடுகள் பலவற்றில் உணவு பாதுகாப்பிற்கு கூடுதல் அக்கறை செலுத்த உள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பே பொலிவியா, கயானா, ஈக்வடார், தென் ஆப்பிரிக்கா உணவு  உரிமை என்பதை அடிப்படை உரிமையாக அங்கீகரித்துள்ளனர். பெலாரஸ், மால்டோவா போன்ற நாடுகள் அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக சேர்த்ததுடன் தேவையான ஊட்டச்சத்தும் மற்றும் வாழ்க்கைத் தரத்தை அளிப்பதையும் சட்டத்தில் சேர்த்துள்ளனர். தற்போது மெக்சிகோ, நிகரகுவா, பெரு உட்பட பல நாடுகள் உணவு உரிமையை அடிப்படை உரிமையாக மாற்றி உள்ளன. லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதன்முதலாக ஈக்வடார் உணவு மற்றும் ஊட்டச்சத்து அளிப்பதை அடிப்படை உரிமை யாக மாற்றி உள்ளன. இதைத் தொடர்ந்து தற்போது பிரேசில் நாடும் சட்டம் இயற்றி வருகிறது. இந்தயாவில் இதற்கான போராட்டப் பாதை நெடிது. ஆனால் முழுப்பயனும் இன்னும் அடைந்திடவில்லை. 1948-ம் ஆண்டே உலகில் மனித உரிமை அடிப்படை உரிமை என்பதும், 1976 -ல் குடியுரிமை, அரசியல் உரிமை, பேச்சு -எழுத்துரிமை போன்றவைகள் அடிப்படை உரிமைகளாக உலக நாடுகள் ஏற்றுக் கொண்டன. இதைத் தொடர்ந்து பெண்கள், குழந்தைகள், பூர்வகுடி மக்களின் வாழ்வுரிமை பற்றிய சட்டங்கள் வந்தது. நமது நாட்டில் மேற்கண்ட ஒவ்வொரு உரிமைக்காகவும் வீதியில் போராடவும், நீதிமன்றத்தில் வாதாடவும் வேண்டியிருந்தது. 1996-ல் உலக உணவு சம்மேளனம் (றுடிசடன குடிடின ளுரஅஅவை) கூடி ரோம் பிரகடனத்தை வெளியிட்டது. உணவு பாதுகாப்பு என்பது அனைத்து மக்களுக்கும் எல்லா காலங்களிலும், செயலூக்க முள்ள வாழ்வுக்கும், ஆரோக்கியமான முறையில் இருப்பதற்கும் போதுமான, பாதுகாப் பான, ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைப்பதாகும்.

                                          

                          இந்த அறைகூவலை இந்தியா ஏற்றாலும், அதுபற்றி நமது நாட்டில் எவ்வித முயற்சியும் செய்யவில்லை. 2001-ம் ஆண்டு மத்திய பிரதேசம் மராட்டியம் கடும் வறட்சியில் இருந்த போது, பொதுநல வழக்கின் மூலமாக உயர்நீதிமன்றம் தலையிட்டு சேமிப்பில் வீணாகும் உணவு தானியங்களை பட்டினி கிடன்கும் மக்களுக்கு வினியோகிக்க உத்திரவிட்டது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் வாழும் உரிமை அடிப்படை உரிமை என்பதில் உணவு பாதுகாப்பும் அடங்கும் என்று ஒரு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதன் தீர்ப்பில் நீதிபதி பகவதி  அடிப்படை வாழ்வுரிமை என்பது மனிதன் கண்ணியத்துடன் வாழ்வது மற்றும் போதுமான ஊட்டச்சத்து, உடை, உறையுள், கல்வி, எழுத்து, கருத்துச்சுதந்திரம் இதர மனிதர்களுடன் சகஜ வாழ்க்கையும் உள்ளடக்கியதுதான்  என்று விளக்கமளித்தார். இதே போல் இடதுசாரிகளின் தொடர் போராட்டமும், இன்றைய உணவு நெருக்கடியும், தேசியஉணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உள்ளது.


                     உண்டி சுருக்குதல் பெண்டிற்கு அழகு என்று ஆணாதிக்க இலக்கியங்கள் பேசுகின்றது. ஆனால் மத்திய அரசு தேசத்தில் உள்ளவர்கள் உண்டி சுருக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்புச் சட்டத்தில் தனது கொள்கையாக அறிவித்துள்ளது. இச்சட்டப்படி நகர்புறத்திலும், கிராமப்புறத்திலும் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பவர்களுக்குத்தான் குறிப்பிட்ட அளவு அரிசி / கோதுமை / உணவு தானியங்கள் மானிய விலையில் அளிக்க முடியும் என்று கூறிவிட்டது. இதைக் கேட்டதும் ஏழை மக்களே! நீங்கள் சந்தோஷப்படாதீர்கள். நீங்கள் ஏழையாக இருக்கலாம். பட்டினி கிடக்கலாம்! செத்துக்கூட போகலாம். ஆனால் அதை நாங்கள் ஏற்க முடியாது! யார் ஏழை என்பதை நாங்கள் அறிவிப்போம் என மத்திய அரசு அறிவித்துவிட்டது. தற்போது 2009 -ல் வறுமை கோட்டிற்கு கீழே (க்ஷஞடு) உள்ளவர்கள் 5.91 கோடி குடும்பங்கள் என்று சட்டத்தில் தீர்மானித்துள்ளனர். ஏற்கனவே வறுமை கோட்டிற்கு கீழ் 10.68 கோடி குடும்பங்களுக்கு  ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் 6.52 கோடியை மத்திய அரசே ஏற்றுக் கொண்டுள்ளது. ஏற்றுக்கொண்டதையும் புதிய சடடத்திற்கு ஏற்ற வகையில் சுருக்கி 5.91 கோடிதான் வறுமையில் வாழ்பவர்கள் என்று தீர்மானித்து உள்ளனர். மாநில அரசுகள் மதிப்பீட்டின்படி வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 11.5 கோடி ஆகும். இத்தனை கொடிய வறட்சியும், உணவு நெருக்கடியும் உள்ள நேரத்தில், உணவை ஏழைகளுக்கு கொடுப்பதில் எத்தனை கெடுபிடிகளை அரங்கேற்றுகிறார்கள். மத்திய அரசு நியமித்த முறைசாரா தொழில் பற்றி ஆய்வு நடத்திய கமிஷன் தேசிய மாதிரி ஆய்விலிருந்து (சூளுளு) ஒரு அதிர்ச்சி தரும் உண்மையை வெளியிட்டது. நாட்டில் 77 சதவீதம் மக்கள் ஒரு நாளைக்கு ரூ 20 மட்டுமே செலவு செய்கிறார்கள் என்பதுதான் அந்த உண்மை. உள்ளங்கை நெல்லிக்கணியாய் இருப்பதைகூட மத்திய அரசு ஏற்க தயாராக இல்லை. பெருமுதலாளி வர்க்க பாசம் இதற்கு தடையாக உள்ளது!


                                   வறுமை கோட்டிற்கு மேலே உள்ளவர்களுக்கு பொதுவினியோக முறை உட்பட அனைத்து மானியங்களும் நீக்கப்படுவதாக சட்டத்தில் தெரிவித்துள்ளனர். அதாவது கிராமப்புறத்தில் ஒருவர் ஒரு நாளைக்கு 11.80 காசும் நகர்புறத்தில் 17.80 காசும் வருமானம் ஈட்டினால் அவர்களுக்கு மேற்கண்ட சலுகை ரத்து செய்யப்படும். ஒரு மனிதன் இந்த தொகையில் வாழ முடியுமா? ஒரு மனிதனுக்கு உணவு மட்டும்தான் தேவையா? உடைக்கும், உறையுளுக்கும் அவர் எங்கே போவான்? மன்மோகன், மாண்டக்சிங், சிதம்பரம் போன்ற வினோத நிபுணர்களின் விபரீத கணக்கல்லவா இது ! வறுமை கோட்டைட சுருக்கி காட்டுவது மட்டுமல்ல, புதிய சட்டத்தின்படி அவர்களுக்கு அரிசியின் அளவை குறைத்து விலையை ஏற்றவும் செய்துள்ளனர். அந்தோதயா அன்ன போஜனா (ஹஹலு) என்பது வறுமை கோட்டிலேயே மிகவும் வறுமையாக இருப்பவர்களுக்கான அதாவது பரம ஏழைகளுக்கான திட்டம். இதில் 35 கிலோ அரிசி ரூ 2 விலைக்கு தரப்படுகிறது. புதிய சட்டத்தின் ஆலோசனை இவர்களுக்கும் 25 கிலோவாக குறைத்து விலையை கிலோவிற்கு ரூ 3 என உயர்த்துகின்றனர். இது உணவு பாதுகாப்பா சுடுகாட்டிற்கு பாதை அமைப்பா ? என்பது புரியவில்லை. இச்சட்டம் விவசாயிகள் பற்றி அக்கறைப்படவும் இல்லை. அதிகம் பேசவும் இல்லை. விவசாய உற்பத்தியை பெருக்கவும், கொள்முதலை விரிவுபடுத்திடவும், விளை பொருட்களான அரிசி, கோதுமை, சர்க்கரை, எண்ணெய்வித்துக்களுக்கு போதுமான விலை கொடுப்பது பற்றி பேசாமல், பொதுவினியோக முறைக்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. பொதுவினியோக முறையை பலப்படுத்துவதால் மட்டுமே உணவுப்பாதுகாப்பு சட்டத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற முடியும். இதற்கு மாறாக, குறிப்பிட்ட மக்களுக்கும் குறைவான ஒதுக்கீடு செய்து5 லட்சம் நியாய விலைக்கடைகள் என்பது ஒப்பேறாத விஷயமாகும். தற்போது உள்ள நியாய விலைக்கடைகளில் பொதுவினியோக முறைகளில் 58 சதவீதம் ஊழல் நடப்பதாக திட்ட கமிஷனை கோடிட்டு அசோக் குலாட்டி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நியாய விலை அரிசிகள் சைக்கிளில், லாரிகளில் அல்ல சரக்கு ரயிலில் கடத்தப்படுவது ஊரறிந்த விஷயம். எனவே, ஊழலற்ற கண்கா ணிப்பு குழுக்கள் மூலமாக பொது வினியோக முறை அமலாக்கிட வேண்டும்.


                மத்திய அரசு தற்போது கொண்டுவர உள்ள உணவு பாதுகாப்பு சட்டத்தைவிட மேலான முறையில் 10 மாநிலங்கள் பொதுவினியோக முறையை அமுல்படுத்தி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து ஆதிவாசிகளுக்கும், பெண்கள் தலைமையேற்றுள்ள குடும்பங்களுக்கும் 35 கிலோ உணவு தானியங்கள் ரூ 1 மற்றும் 2 விலையில் வழங்கி வருகின்றது. அம்மாநிலத்தில் மக்கள் தொகையில் 70 சதம் இதைப்பெறுகின்றனர். கேரளத்தில் 50 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளனர். மத்திய அரசோ 14 லட்சம் குடும்பங்கள் என்று அறிவித்துள்ளது. மாநில அரசு 25 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு பொதுவினியோகமுறை வழங்கி வருகிறது. மாநிலத்தில் அனைத்து எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மீனவர் சமுதாயங்கள் முழுமையாகவும், முறைசார தொழில் புரிவோரையும் வறுமை கோட்டிற்கு கீழே கொண்டு வந்துள்ளது. கேரளாவிற்கு மத்திய அரசு மானியம் 11 சதம் மட்டுமே தருகிறது. அம்மாநில அரசு வறுமையை ஒழிக்க 30 சதம் மானியமாக செலவு செய்கிறது. ஆந்திராவில் ரூ 2 விலையில் 80 சதவீதம் மக்கள் அரிசியை பெறுகின்றனர். தலைக்கு 6 கிலோ என்ற அளவில் இந்த அரிசி வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கிலோ ரூ 1 என்ற அடிப்படையில் 16 முதல் 20 கிலோ வரை வறுமைக் கோடு வேறுபாடின்றி விரும்பியவர்களுக்கு அரிசி வழங்கப்படுகிறது. மாநில அரசுகள் வறுமை ஒழிப்பதற்கு பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. மாநிலஅரசின் இத்திட்டங்களையெல்லாம் தடுத்திடக் கூடிய முறையில்தான் மத்திய அரசின் உணவு பாதுகாப்புச் சட்டம் உள்ளது. மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒதுக்கிட வேண்டிய கோதுமையை 2006-2008 -ல் மட்டும் 73 சதவீதம் வெட்டிச் சுருக்கி உள்ளது. இச்சட்டத்தின் மூலமாக ஏற்கனவே அமுலில் உள்ள பல திட்டங்களை கைவிடும் அபாயம் உள்ளது. மதிய உணவு திட்டம், சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி சேவை போன்ற திட்டங்கள் இதில் சேர்க்கப்படவில்லை. இன்றைய தேவைக்கு தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அவசியமானது. ஆனால் அது இன்றைய வடிவிலிருந்து அடிப்படை மாற்றத்தை செய்து அமலாக்கிட வேண்டும். 1996-ல்  ரோம் பிரகடனம்  உலக உணவு மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி எல்லோருக்கும் எல்லா காலத்திலும் போதுமான அளவு உணவு, செயலூக்கமுள்ள ஆரோக்கிமான வாழ்விற்கு அளித்திட வேண்டும் என்ற பிரகடனத்தின் நோக்கத்தை நிறைவேற்றறு வதாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி. இன்று தேசமே உணவு நெருக்கடிக்கு சென்று கொண்டிருக்கிறது. மன்மோகன்சிங் மயான வாசலில் நின்று வறுமைக்கோட்டை அளக்கிறார்.                             

திங்கள், நவம்பர் 22, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-1

                                                          அ.பாக்கியம்

 (தோழர் என்.ராமகிருஷ்ணன் எழுதிய, மகத்தான பிரெஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சி புதிய தரிசனம், சாசன இயக்கம், உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு, அயர்லாந்து எண்ணூறு ஆண்டுகள் விடுதலைப்போர், நீதிக்காக போராடும் பாலஸ்தீன மக்கள் ஆகிய ஆறு நூல்களை முன்வைத்து 02.10.2010.அன்று நடைபெற்ற தமுஎகச தென்சென்னை மாவட்ட ஆய்வரங்கில் சமர்ப்பித்தது)

கடவுள்களால் கடந்த காலத்தை அழிக்க முடியாது. அத்தகைய வலிமை அவர்களுக்கு கிடையாது என்று ஆப்பிரிக்க அறிஞன் அகதான் கூறினான். வரலாறு அந்த அளவிற்கு சக்தி வாய்ந்தது என்பதை உணர்த்துவதுதான் இந்த கருத்தின் அர்த்தமாகும். வெற்றி பெற்ற மன்னர்கள்.தலைவர்கள் கடந்தகால வரலாற்றை அழித்துவிட்டு தங்களது வசதிக்கேற்ற வரலாற்றை எழுதுவர். இந்தவித அழிப்புக்கு எதிரான தொடர்ந்து வரலாற்றினை பாதுகாக்கும் போராட்டமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வரிசையிலேயே மேற்கண்ட புத்தகங்களையும் ஆசிரியர் படைத்துள்ளார்.
வரலாறு என்றால் மன்னர்கள், தளபதிகள், தலைவர்களின் சாதனைகள் என்ற கருத்துமுதல்வாத சித்தாந்தங்கள் இன்றும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஆளும் வர்க்கமும் இதையே நிலைநாட்ட விரும்புகிறது. ஆசிரியர் மேற்கண்ட புத்தகங்களில் மக்களின் வரலாற்றை, அக்கால பொருள் உற்பத்தி முறையின் பின்னணியோடு விளக்கியுள்ளார். இது நாள் வரையிலான வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டங்களின் வரலாறே என்ற மார்க்சிய பார்வையுடன் கூடிய பதிகவுளை நிலைநிறுத்தியுள்ளார்.
முதலாளித்துவ வர்க்கத்தினர் அனைத்தையும் ஒரு விற்பனைக்கான சரக்காக மாற்றி வருகின்றனர். வரலாற்றை எழுதுவது என்பதையும் அவ்வாறே செய்து விடுகின்றனர் என்று ஏங்கெல்ஸ் எழுதினார். இந்தியாவில் இன்றைய ஆட்சி அதிகாரத்தை பிடிக்கவும், தக்க வைக்கவும் நடைபெறும் அரசியல் வியாபார சந்தையில் வரலாற்று  வணிகம் அமோகமாக விலைபோகின்றது. வரலாற்றின் வடுக்கள் வலிமையானது மட்டுமல்ல எதிர்கால திசையை தீர்மானிக்க கூடியதுமாகும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தை அறிந்த கொள்ளாமல் எதிர்கால பாதையின் இலக்கை எந்த ஒரு இயக்கமும் தீர்மானிக்க முடியாது. வரலாற்றை அணுகும் முறை, ஆய்வு செய்யும் முறை, பயன்படுத்தும் முறை முக்கியமான ஒன்றாகும். அதைவிட வரலாறு யாரால் எழுதப்படுகின்றது? யாருக்காக எழுதப்படு கின்றது என்பது பிரதான கேள்வி? வெற்றி பெற்றவர்களாலும், உயர்குடி மக்களாலும், அரசு சார்ந்த வரலாறுகளும்தான் இன்று அதிகமாக போதிக்கப்படுகின்றது.    வெற்றி கொண்டவர்களே சரித்திரம் எழுதும் சம்பிரதாயத்தை உடைத்தெறிவதற்காக இந்த என் மக்களின் கதை உதவிடும் என்று நம்புகிறேன் என்று அலெக்ஸ்ஹேலி ஏழு தலைமுறைகள் நாவலின் கடைசிவரியில்  முடித்தான்.
இங்கே ராமகிருஷ்ணன் எழுதியுள்ள மேற்கண்ட நூல்கள் அடித்தட்டு மக்களை முன்வைத்தே பேசப்படுகின்றது. வரலாற்றாளன் நிகழ்வுகளை பதிவு செய்வான். கலைஞன் உண்மைகளை தேடுவான் என்ற கூற்றுக்கேற்ப இராமகிருஷ்ணன் வரலாற்றாளனாகவும், கலைஞனாகவும் இப்புத்தகத்தின் வழியே காணப்படுகின்றார்.நிகழ்வுகளையும் பதிவுசெய்கிறார் புள்ளிவிபரங்களையும் பதிசெய்கிறார். அதற்கு பின்னால் உள்ள வர்க்க நலன்களையும் அம்பலப்படுததுகிறார்.
மேற்கண்ட ஆறு தலைப்புகளில் பல புத்தகங்களும், ஆய்வுகளும் வெளிவந்துள்ளது. ஆனால், இந்நூல்கள் புதிய வாசகனும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகவும் தேவையான அளவு விஷயதானங்களையும், வாசிப்பு தன்மை குன்றாமல் கொடுத்துள்ளார்.
வரலாற்று நூலுக்கு காலவரையரை மிகமுக்கியமானது.காரணம் காலமும்,அக்காலத்தில் ஏற்படும் மாற்றமும் நாம் அறியஉள்ள விஷயங்களை துல்லியமாக் நமக்கு வழங்குகின்றன. பிரெஞ்சுபுரட்சி, ரஷ்யபுரட்சி, சாசன இயக்கம், முதல் கம்யூனிஸ்ட் சதி வழக்கு ஆகிய நான்கு நூலுக்கும் அதற்குரிய காலத்தை அதற்குரிய பின்னனியோடு வரையறுத்துள்ளார். மற்ற இருநூல்களான அயர்லாந்து, பாலஸ்தீனம் ஆகிய போராட்டங்கள் அம்மக்களின் இருப்பிடம், உருவாக்கம் ஆகியவைகளே கேள்விக்கு உள்ளாக்கப்படுவதால், அவர்களின் பூர்வீகத்திலிருந்து காலவரையரையை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்ட புத்தகங்களில் வர்க்க நிலைபாட்டை மட்டுமல்ல வர்க்க செயல்பாட்டை அதன் போக்கிலேயே தெளிவாக கொண்டுவந்துள்ளது சிறப்பம்சாகும். காரணம், பிரஞ்சுப்புரட்சி, சாசனஇயக்கம் ஆகியவற்றில் உருவாகிவரும் பாட்டாளி வர்க்கத்தின் இருப்பையும், செயல்பாட் டையும், நிலபிரபுத்துவ, முதலாளித்துவ மோதல்களுக்கிடையில் முழ்கிவிடாமல், புத்தகத்தில் நிலைநாட்டியுள்ளார். குறிப்பாக பிரெஞ்சு புரட்சியில் தலைகீழ் மாற்றங்கள், திருப்பங்கள் தேசிய சட்டமன்றம் துவங்கி நெப்போலியன் ஆட்சிக்குவரும் போது இயங்கிய டைரக்டரி வரை உள்ள செயல்பாடுகள் எந்த வர்க்க நலன் சார்ந்தது என்பதை வெளிக்கொணர்ந்து புரிய வைப்பது அவ்வளவு எளிதானது அல்ல. புத்தகம் அதை எளிமையாகவே செய்துள்ளது.

வெள்ளி, நவம்பர் 19, 2010

கடவுள் ஒருபொய் நம்பிக்கை

கடவுள்ஒருபொய் நம்பிக்கைகடவுள்-ஒரு பொய் நம்பிக்கை என்ற புத்தகம் 2006ல் வெளிவந்து, விற்பனையில் சாதனை படைத்து , தொடர்ந்து அறிஞர்கள் பலராலும் விவாதிக்கப்படுகின்ற புத்தகமாக உள்ளது.ஒரு கருத்தை பிழையானது என்று மீண்டும் மீண்டும் மெய்பித்த பிறகும், மீண்டும்  அதன்மீது நம்பிக்கை வைப்பதையே  பொய் நம்பிக்கை (DELUSION) என்று அழைக்கின்றார் ஆசிரியர். 


 ஒரு நபருக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மன பேதலிப்பு, பல மக்களுக்கு பொய் நம்பிக்கை இருந்தால் அது மதம் என்று வாதாடுகின்றார்.இப்புத்தகம், மதவேஷங்களையும் , கடவுள் என்னும் கருதுகோளையும் தோலுரித்து தொங்கவிடுவது. மட்டுமல்ல மதத்திற்குமேல் இயற்கை சக்தி, அதுவும் இல்லை, அதற்கு மேல் ஏதோ ஒரு சக்தி என்று தப்பித்து ஓடுபவர்களை இழுத்துபிடித்து நிற்கவைத்து அந்த மாயக்கருத்தை தவிடுபொடியாக்குகிறது.நாத்திகத்தை முரட்டுத்தனமாகவும், கடுப்பூட்டும் வகையில் பேசாமல், அறிவுப்பூர்வமாகவும், வரலாற்றின் ஆதாரங்களில்ருதும்,உளவியல் ரீதியிலும், டார்வினின் உயிரியியல் கோட்பாடுகளிலிருந்தும் நளினமாகவும், ஏற்கும் வகையிலும் பேசப்படுகிறது.  பரிணாம வளர்ச்சிக்கும், படைப்பியத்திற்கு மட்டுமல்ல முரண்பாடு, உண்மையான முரண்பாடு பகுத்தறிவுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடைப்பட்டது. பகுத்தறிவின் ஒருவடிவம்தான் அறிவியல். மூடநம்பிக்கையின் பொதுவடிவமாக மதம் இருக்கிறது. படைப்பியம் இல்லாமல் மதம் இருக்கமுடியும். ஆனால் மதம் இல்லாமல் படைப்பியம் இருக்கமுடியாது என்கிறார்.


படைப்பியம் பழையதாகிவிட்டது. புதிய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் கடவுளுக்கான இடத்தை சுருக்கிவிட்டது. எனவே படைப்பியத்தை நிலைநிறுத்த கூரறிவு வடிவமைப்பை(ஐவேநடடபைநவே னநளபை) படைப்பியல்வாதிகள் கொண்டுவருகின்றனர். அமெரிக்காவில் கல்வி நிலையங்களில் பரிணாம வளர்ச்சி தத்துவத்துடன், படைப்புக் கோட்பாட்டையும் கற்பிக்க வேண்டும் என்பதற்கான அழுத்தத்தை ஆளுகிறவர்களும், படைப்பியல்வாதிகளும் கொடுத்தவருகிறார்கள், இப்போரின் மையப்பிரச்சனைகளை இப்புத்தகம் அலசுகிறது.


மதச்சார்பற்ற அரசு என அறிவித்துக்கொண்ட அமெரிக்காவில் மதஉணர்வுகள் அதிகமாகவும், மதம்சார்ந்த நாடு என அறிவித்த இங்கிலாந்தில் மதஉணர்வு குறைவாக இருப்பதற்கான காரணத்தை விளக்கி விடை காணப்படுகின்றது.ஏசுநாதர், தன்து தெய்வீக நிலைக்காக உரிமை கொண்டாடியதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. ஆனால் இன்றைய தொலைகாட்சி மதபோதகர்கள் அமெரிக்காவில் மக்களிடம் பணம் வசூலித்து சொத்து சேர்க்க,  அரசிடம் வரிவிலக்குப்பெற்றுள்ளனர். இந்த பிரச்சாரகர்களு க்கு  சோப்புக் கட்டிகளை விற்க எது உதவுகின்றதோ, அதுவே கடவுளுக்கும் உதவுகிறது.


கூரறிவு வடிவமைப்பு கோட்பாட்டாளர்கள் டார்வினிய பரிணாம வளர்ச்சிக்கு சவால் விடுகின்றனர். கண், இறக்கை, வீசல் என்கிற தவளையின் முட்டி என்ற உயிரினங்களை எடுத்துக்காட்டாக கூறுகின்றர். இதேபோன்று கடற்பஞ்சுவின் வடிவமைப்பு பரிணாமத்தால் சாத்தியமா என்று சவால்விடுகின்றனர்? இவை அனைத்தும் வெற்றுச்சவால்கள் என ஆசிரியர் புட்டுப்புட்டு வைக்கின்றார். மதம் பற்றிய உலகின் பிரபலமான தலைவர்கள் தாமஸ்ஜெபசன் முதல் காந்தி, நேருவரை பலரின் கருத்துக்களை கவனத்திற்கு கொண்டுவருகிறார். 


வின்சன்ட் சர்ச்சிலின் மகன் யுத்தகளத்தில் பைபிள் பழைய ஏற்பாட்டை படித்துவிட்டு சொல்லும் கருத்துக்கள் புதியவை.இதுபோன்ற பல புதிய தகவல்கள் உள்ளடங்கியுள்ளது. கிட்டதட்ட எப்பொழுதும் குருட்டு நம்பிக்கை, பிற்போக்குத்தன்மை, வறட்டுக்கொள்கை, மதவெறி, மூடநம்பிக்கை, சுரண்டல் நிலைத்துவிட்ட தன்னலத்தை காத்துக்கொள்ளுதல் ஆகியற்றிற்கு சார்பாகவே மதம் இருப்பதாக தோன்றுகிறது, என்று நேரு மதத்தை பற்றிய கருத்தை கொண்டிருந்தார்.  பல நம்பிக்கைகளையும், மதங்களையும் கொண்ட ஒருநாட்டில் மதரசார்பின்னை என்றும் அடிப்படையில் இல்லாமல் உண்மையதன தேசியத்தை  கட்டி அமைக்கமுடியாது என்று கருதியதை புத்தகத்தில் பதியவைத்துள்ளார் டாகின்ஸ்.


மறுபுறத்தில் ஹிட்லர் போன்றவர்களின்(ஸ்டாலினையும் சேர்த்துள்ளார்) கொடுர நடவடிக்கைகளுக்கு அவர்களின் நாத்திக கொள்கைதான் காரணம் என்று கூறப்படுவதை  வலுவான வரலாற்று ஆதாரங்களுடன் மறுத்துள்ளார்.பொதுமக்களை அமைதியாக வைத்திருக்க மதம் அருமையாக உதவுகிறதுஎன்று நெப்போலியன் கூறினான்.மக்களுக்கு மதநம்பிக்கை தேவைப்படுகிறது.எனவே நாத்திகத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டடோம்  என்று ஹிட்லர் கூறினான். யேசுவை சிலுவையில் அறைந்த யூதர்களை ஒழிப்பேன் என்ற ஹிட்லர். யேசுவை யூதராக பார்க்காத ஹிட்லர் கிறிஸ்துவத்தை நிறுவிய புனித பால் மற்றும் காரல் மார்க்சையும் யூதர்களாக முத்திரை குத்தினான். மதத்தை மதத்தைதான் தனது கொடுரத்தன்மைக்கு பயன்படுத்தினான். ஹிட்லர் நெப்போலியன் மட்டுமல்ல 21ம் நூற்றாண்டு ஜார்ஜ் புஷ் ஈராக்மீது படையெடுக்க வேண்டும் என்று கடவுள் தன்னிடம் கூறியதாக அறித்துதான் படையெடுத்தான்.விஞ்ஞானிகள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா?நாத்திகர்களா?என்ற கேள்விக்கு படைப்பியல்வாதிகள்  அவர்களை மதநம்பிக்கையாளர்களாக முன்னிறுத்துகின்றனர். 


ஆனால் இப்புத்தகத்தில் அமெரிக்க மற்றும் பிரிட்டனின் உயர்மட்ட விஞ்ஞானிகள் உட்பட ஆய்வு செய்து 7 சதம் மட்டுமே மத நம்பிக்கையாளர் என்று நிருபித்துள்ளார்.மற்றொரு அற்புதமான ஆனால் வேடிக்கையான ஆய்வுத்தகவல் பிரார்த்தனை பரிசோதனை பற்றியது. நோயாளிகளுக்காக செய்யும் பிரார்த்தனைகளில் என்ன பயன் என்பது பரிசோதனை மூலம் விளக்கப்படுகிறது, எந்த மதப்பிரிவை(கிறிஸ்துவ பிரிவுகள்) சேர்ந்தவர்கள் அதிகமாக சொர்க்கத்தில் இருக்கிறார்கள் என்று நடக்கிற ஆய்வு முடிவுகள் தொழில்போட்டியை துரிதப்படுத்தியுள்ளதை அம்பலப்படுத்துகின்றார்.ஒழுக்கம் என்பது மதம்சார்ந்து இருப்பதால்தான் இருக்கிறதா? அமைதி என்பது மதம்சார்ந்து மக்கள் இருப்பதால் இருக்கிறதா? என்ற கேள்விக்கு உளவியல் பூர்வமான விளக்கமளிப்பதுடன், வரலாற்ற நிகழ்வுகளையும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 


இங்கேமதமற்ற ஒரு உலகை கற்பனை செய்தால், என்ற கேள்வியுடன் மதத்தின் பெயரால் நடந்த , நடந்துவருகிற போர், குண்டு வெடிப்பு படுகொலைகள் என்ற பட்டியல் படிக்கபடிக்க, மதமற்ற உலகம் தோன்றாதா என்ற ஏக்கம் பிறக்கிறது.இப்புத்தகம் மதமின்றி, கடவுள் நம்பிக்கையின்றி வாழமுடியும் என்கிறது. குழந்தைகளுக்கு மதஉணர்வு இல்லை, அது உருவாக்கப்படுகிறது என்கிறது. டார்வினியத்தை இன்று உலக உதாரணத்துடன் நிலைநிறுத்துகின்றது. 


கூரறிவு வடிவமைப்பை மழுங்கடித்து மண்டியிடச்செய்கிறது.இப்புத்தகத்தை எழுதிய ரிச்சர்ட் டாகின்ஸ் இதற்கு முன் எட்டுக்கும் மேற்பட்ட விஞ்ஞான புத்தகத்தை எழுதி புகழ் பெற்றவர். இந்த நுலிற்கு பிறகு 2009ல் பரிணாம வளர்ச்சியின் ஆதாரங்களை மையப்படுத்தி ஒரு புத்தகத்தை(ழுசநயவநளவ ளாடிற டிக நுயசவா) வெளியிட்டுள்ளார்.சிறந்த இந்த புத்தகத்தை திராவிடர் கழகம் தமிழில் வெளியிட்டிருப்பது வரவேற்கதக்கது. வாசிப்பு துடையின்றி செல்லவும், அதே நேரத்தில் அதன் பொருளை முழுமையாக புரிந்துகொள்ளும் விதத்திலும், தேவையான இடங்களில் விளக்கமளித்தும் இப்புதகத்தை மொழியாக்கம் செய்துள்ள பெரியார் பேருரையாளர் கு.வெ.கி.ஆசான் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்-தகும்.  

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...