Pages

வெள்ளி, நவம்பர் 27, 2020

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு - ஓர் அலசல்-3

 

     இந்தியாவில் நகர்மய அவதாரங்கள்                                                          அ.பாக்கியம்


                     முதல் பதிப்பு ஜனவரி 2018

              வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          1980ம் ஆண்டுகள் வரை திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டன. திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படை நோக்கமே சமச்சீரான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதாகும். பின்தங்கிய பிரதேசங்களுக்கு தனி கவனம் செலுத்தி வளர்ச்சியை ஏற்படுத்துவதுமக்களிடையேயான ஏற்றத்தாழ்வுகளை குறைப்பது என்பதுதான் திட்டமிட்ட பொருளாதார கொள்கையின் அடிப்படையாக இருந்தது. இவை முழுமையாக அமலாக்கப்பட்டதா என்பதில் மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால்சந்தை இந்த திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு உட்பட்டதாக இருந்தது. நாடு முழுவதும் சமச்சீரான வளர்ச்சியை இலக்காக கொண்டிருந்தது. ஏற்றத்தாழ்வான வளர்ச்சி பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கருத்தோட்டம் மேலோங்கி இருந்ததால் ஓரளவு அடித்தட்டு மக்களின் வாழ்க்கையும் கவனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.

          1990ம் ஆண்டுகளில் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன்சிங் நிதியமைச்சராக இருந்தார். உலக வங்கியின் கட்டளைக்கு ஏற்றபடி தீவிர சீர்திருத்தங்களை அமலாக்கினார். 1990ம் ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு வளர்ச்சி விகிதம் சதவீதமாக இருந்தது. இக்காலத்தில் தீவிர நகர்மயமாக்கல் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தியது. 10வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002- 2007) மொத்த  உள்நாட்டு உற்பத்தி 8.5 சதவீதமாக உயர்ந்தது. இதே போன்று 11வது ஐந்தாடு திட்டத்தில் (2007 2012) மொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதமாக உயர்ந்தது. இக்காலத்தில் தேசிய உள்நாட்டு உற்பத்தியில் பெருநகரங்களின் பங்கு 62 சதவீதமாக இருந்தது. நகரத்தின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற முழக்கத்தை முன்வைத்தார்கள். நகர்மயம்தான் மத்திய அரசின் திட்டத்தில் முக்கிய இலக்காக மாறியது. 2005 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம்தேதி  ஜவஹர்லால் நேரு தேசிய  நகர்புற புனரமைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. 2012-ம் ஆண்டிற்குள்  இந்த திட்டத்தை நிறைவேற்றிட கால அவகாசம் நிர்ணயிக்கப்பட்டது. இத்திட்டத்தின்முன்னுரையில் நகரங்கள்தான் பொருளாதார வளர்ச்சியின் விசை (நபேநேள டிக நஉடிடிஅஉ பசடிறவா) என்று குறிப்பிடப்பட்டது. இந்த நகர்மய திட்டத்தை வேகப்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை 10 சதவீதமாக அடைந்திட வேண்டுமென்று இலக்கை நிர்ணயித்தார்கள். இந்த நகர்மய திட்டத்திற்கு ஏற்ற வகையில் 12வது ஐந்தாண்டு திட்டத்தை (2012-2017) உருவாக் கினார்கள். இத்திட்டத்தில் நகர்மய விரிவாக்கம் மற்றும் அதன் தேவைகளை சவாலாக எதிர்கொண்டு நிறைவேற்ற வேண்டும் என்று வரையறை செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...