Pages

வெள்ளி, நவம்பர் 27, 2020

வளர்ச்சியின் பெயரால் வன்முறை குடியுரிமை பறிப்பு- ஓர் அலசல்-2

 

          சீர்திருத்தமாமாற்றமா?         

அ.பாக்கியம்

முதல் பதிப்பு ஜனவரி 2018

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

          நாம் வாழும் சமூகம் வர்க்க பேதங்கள் நிறைந்த  சமூகமாகும். உழைப்பாளி மக்களிடம் இருக்கிற இந்த வர்க்க வேறுபாடுகளை பயன்படுத்தி கொண்டு பெருமுதலாளி வர்க்கம் சுரண்டல் அமைப்பை தீவிரப்படுத்திக் கொள்கிறது. பொருளாதார சுரண்டலை பாதுகாப்பதற்கு சமூக ஒடுக்குமுறைகளை பயன்படுத்தி கொள்கிறது. முதலாளி என்ற முறையில் அவர் மூலதனத்தின் அவதாரமே. அவரது ஆன்மா மூலதனத்தின் ஆன்மாவே என்று காரல் மார்க்ஸ் தனது மூலதன நூலில் சுரண்டப்படும் ஒரு தொழிலாளியின் நிலையிலிருந்து இந்த கருத்தை முன்வைப்பார். முதலாளித்துவம் நெருக்கடிகளை சந்திக்கிறபோதும்தனது லாப வேட்டை சுருங்குகிற போதும் புதிய புதிய முறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சி செய்யும். தொழில்களை நவீனமயமாக்குவதுகுறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை தேடுவதுசட்டப் பாதுகாப்பற்ற தொழிலாளர் கூட்டம்கட்டுப்பாடற்ற சந்தைநிலம் என அனைத்து வகையிலும் இந்த முயற்சிகள் இருக்கும் என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

          தற்போது மூலதனத்தை சுதந்திரமாக கொண்டு செல்வதற்கும்தொழில் ஆரம்பிப்பதற்கும் குறைந்த கூலிக்கு உழைப்பு சக்தியை பெறுவதற்கும் நிலம்நீர்மின்சாரம்சந்தைபோக்குவரத்து என அனைத்தும் குறிப்பிட்ட எல்லைக்குள் அமைத்துக் கொண்டு குறைவான முதலீடுஅதிகமான லாபம் என்ற கொள்கைக்கு ஏற்ற இடமாக பெருநகரங்களை உருவாக்குகின்றனர். இதற்காக உலக வங்கி உட்பட சர்வதேச நிதி மூலதன அமைப்புகள் கட்டமைப்பு - சீரமைப்பு (ளவசரஉவரசயட யனதரளவஅநவே) என்ற திட்டத்தை உருவாக்கி 98 நாடுகள் மீது திணித்து அமலாக்கின. இதன் அடிப்படை நோக்கமே தேசிய அரசுகளின் பலத்தை குறைத்துநிதி மூலதனத்தின் மீது அதற்குள்ள கட்டுப்பாடுகளை நீக்கிபெரும் நகரங்களை சர்வதேச மூலதனத்துடன் இணைப்பதாகும். சேமநல அரசு (றுநடகயசந ளுவயவந) என்பதை தகர்த்துபெருமுதலாளிகளுக்கு ஆதரவாகவும் அவர்களின் வணிக இழப்புகளை அரசு ஈடுகட்டுவதாகவும்அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு அரசு முழுமையாக உதவி செய்யக்கூடிய வகையிலும் அரசின் தன்மைகளை மாற்றியமைத்தனர்.

          இதன் விளைவு மூலதன ஈர்ப்பை பெறுவதற்கு பெரு நகரங்களிடையே போட்டிகள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் மூலதன குவியல்களின் மையமாக (சுநபஅநள டிக யஉஉரஅரடயவடி) மாறியது. இந்த மாற்றங்கள் பற்றி பொருளாதார அறிஞர் டேவிட் ஹார்வி 1989-லும் 2005லும் தனது ஆய்வின் அடிப்படையில் கீழ்கண்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளார். நவீன தாராளமயம் மூலதன திரட்சிசுதந்திர சந்தை உருவாக்கதிற்கு வழிவகுத்தது. நிதி சந்தையின் கட்டுப்பாடுகளை தளர்த்தியது. வர்த்தக கட்டுப்பாடுகளை நீக்கியது. இதனால் உலகின் பல பகுதிகளில் பொருளதார கட்டமைப்பில் சிறிய மற்றும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்களால் நிதி மூலதன நடமாட்டத்தில் தேசிய அரசுகளின் கட்டுப்பாடு குறைந்தது. நகரங்கள் சர்வதேச மூலதனத்துடன் இணைக்கப்பட்டன. மூலதனத்தை ஈர்க்கும் போட்டிக்கு நகரங்கள் தள்ளப்பட்டன. குறைந்த செலவு அதிக லாபம் என்ற முறையில் மூலதனங்கள் நகரங்களை நோக்கி குவிந்தது என்று விவரித்துள்ளார். இந்த பின்னணியில்தான் நிலம்மின்சாரம்தண்ணீர்வரிச்சலுகைகள் என அனைத்தும் பெருநகரங்களில் மையப்பகுதிகளில் அதன் சுற்றுவட்டாரத்திலும் அரசுகளால் வாரிவழங்கப்பட்டன. நகரங்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடையாளமாக முன்னிறுத்தப்பட்டது. நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கும்நவீன தாராளமயக் கொள்கைக்கும் அவசியமாக இருந்தது. இதற்கு அவர்கள் நகர்மய சீர்திருத்தம் (ரசயெ சநகடிசஅள) என்று பெயரிட்டார்கள். உண்மையில் அது சீர்திருத்தம் அல்ல நகர்மய மாற்றம் (ரசயெ உயபேந). அதுதான் நடைபெறுகிறது. அதாவது தங்களது லாபவேட்டைக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைப்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...