Pages

செவ்வாய், நவம்பர் 14, 2017

குஜராத்: சுவாசிக்க முடியாத சிசுக்கள்.




       குஜராத் கௌரவம் என்ற பெயரில் மோடியும் அமித்ஷாவும் குஜராத்தில் பெரும்விழாக்களை நடத்தினர். ஜப்பான் பிரதமருடன் வீதி வலம் நடத்தினார். புல்லட் ரயில் விடப்போகிறோம் என்று படோடமான பிரச்சாரங்களை செய்தார். இதையெல்லாம் குஜராத்தின் பெருமை என்று பீத்திக் கொண்டு திரிகிறார்கள். மறுபுறத்தில் குஜராத் மக்களின் வாழ்க்கை பிய்ந்துபோய்க் கிடக்கிறது. 
            
                த்திரப்பிரதேசத்தை தொடர்ந்து சமீபத்தில் (அக்டோபர் 27) குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள அன்சாரவில் அரசு மருத்துவமனையில் புல்லட் இரயிலை விட துரிதமாக 18 குழந்தைகள் மூன்றே நாட்களில் இறந்துவிட்டன. சத்துக் குறைவாலும், எடை குறைவாலும் பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டன. மருத்துவமனை அதிகாரி முதலில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்தார். பிறகு விஷயம் படத்துடன் வெளி வந்தவுடன் மறுக்காமல் ஒத்துக்கொண்டார்.

          குஜராத் தொழில் வளர்ச்சியில் 2-வது இடத்திலும், தனிநபர் வருமானத்தில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 5-வது இடத்திலும் இருக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை இறப்பில் மொத்தம் உள்ள 29 மாநிலங்களில் 17வது இடத்தில் உள்ளது. எடை குறைவாக பிறக்கும் குழந்தைகள் விகிதத்தில் 25வது இடத்தில் உள்ளது. குஜராத்தைவிட பல சிறிய பின்தங்கிய மாநிலங்கள் கூட பொது சுகாதாரத்தில் இதைவிட முன்னேறி உள்ளன. குஜராத்தில் 1000 குழந்தைகள் பிறந்தால் 33 குழந்தைகள் சிசு நிலையிலேயே இறந்துவிடுகிறது. இது கேரளாவில் 12, தமிழ்நாட்டில் 19, மகாராஷ்டிராவில் 21, பஞ்சாபில் 23 என்ற அளவில் உள்ளது. குஜராத் பெருமை கொண்டாடும் மோடி வகையறாக்கள் சுகாதார வளர்ச்சியில் இந்த மாநிலங்களை விட பின்தங்கி உள்ளன.


                தேசிய அளவில் 35 சதவிகிதம் எடை குறைவுள்ள குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால் குஜராத்தில் தேசிய சராசரியை விட அதிகமாக அதாவது 39 சதவிகிதம் எடை குறைவான குழந்தைகள் இருக்கிறது. இவை கேரளாவில் 16 சதம், பஞ்சாபில் 21 சதம், தமிழ்நாட்டில் 23 சதம், மகாராஷ்டிராவில் 36 சதமாக உள்ளது. குஜராத்தைவிட பின்தங்கி இருக்கக்கூடிய மாநிலங்கள் பாஜக ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்தியபிரதேசம், பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் மட்டுமே. சிறிய மாநிலமான மிசோராமில் 11.9 சதமும், மணிப்பூரில் 13.8 சதம் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கின்றன.

        குஜராத்தின் தனிநபர் வருமானம் 1,22,502 ஆகும். ஜம்மு-காஷ்மீரின் தனிநபர் வருமானம் 60,171 ஆகும். குஜராத்தைவிட சரிபாதி தனிநபர் வருமானம் குறைவாக உள்ள ஜம்மு-காஷ்மீரில் பிறந்த குழந்தைகள் (IMR) இறப்பது 1000த்திற்கு 26 மட்டுமே. தற்போது இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் (IMR) 41 ஆகும். நமக்கு அண்டை நாடான பங்காதேசில் 31, நேபாளில் 29 என்ற அளவில் நம்மைவிட முன்னேறி இருக்கிறது. 

           குஜராத்தில் தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம் என பொருளாதார வளர்ச்சி அடைந்திருந்தாலும் அவை ஏழை மக்களுக்கு சேரவில்லை. அதானிகளும், அம்பானிகளும், அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா போன்றவர்களுக்குத்தான் கோடிகள் குவிந்துகிடக்கிறது. மருத்துவமனைகளிளோ குழந்தைகளின் மரணக் குவியல்கள் மட்டுமே நடந்து கொண்டிருக்கிறது. குஜராத்தின் வளர்ச்சி கார்ப்பரேட்டுகளுக்கானது என்பது நிதர்சனமான உண்மையாகிறது.

          மீபத்தில் இந்தியாவில் பொது மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பு அதிகமாகி இருக்கிறது. உத்தரப்பிரதேசம், அசாம், இராஜஸ்தான் என அடுத்தடுத்த சம்பவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. இதிலிருந்து பொது சுகாதாரத்தை மத்திய அரசு வேகமாக புறக்கணித்து வருகிறது என்பது அம்பலமாகிறது. 

               இந்த ஆண்டு ஜார்கண்ட், ஜாம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 30 நாட்களில் 52 குழந்தைகள் இறந்தன. உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் பாபா ராகவா தாஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இரண்டு வாரத்தில் 70 குழந்தைகள் ஆக்சிஜன் இல்லாமல் மரணமடைந்தனர். இந்தியாவின் வளர்ச்சி பற்றியும், வல்லரசு பற்றியும், துல்லிய தாக்குதல் பற்றியும் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் கூட இதுபற்றி வாய்திறக்க அச்சப்படுகின்றன.
                                                          ------------------------------------------

ஞாயிறு, நவம்பர் 12, 2017

மோ(ச)டி அரசு?


           

                  மோசடித்தனங்களை, தில்லு முல்லைகளை தடுக்க வேண்டிய அரசே அப்படடமான மோசடித்த னதில் ஈடுபட்டால் நாடு எப்படி வாழும். இப்படிப்பட்ட காரியங்களை மோடி அரசால் மட்டுமே செய்ய முடியும். இந்திய கிராமபுற ஏழைகளில் ஒரு பெரும்பகுதி உயிரோடு இருக்கிறார்கள் என்றால் இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சியால்  கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு  உறுதிதிட்டம் தான் என்பதை அறுதியிட்டு கூறமுடியும்.

                 இத்திட்டத்தை எப்படியாவது ஒழித்துவிட வேண்டும் என்று மோடி அரசு முயற்சிக்கின்றது.  தற்போது 19 மாநிலங்களில் இத்திடடத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக கூலிகொடுக்க வில்லை. பட்ஜெட்டில் நிதிஒதுக்கீடு செய்தும் அந்த நிதியை அனுப்பவில்லை. எவ்வளவு தொழிலாளர்களுக்கு தெரியுமா? 9 கோடியே 20 லட்சம் தொழிலாளர்களுக்கு கூலிகொடுக்கவில்லை. 

                     அரியானா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் கூலிகொடுக்கவில்லை. தமிழகம் உட்பட 13 மாநிலங்களில்  செப்டம்பர் மாதம் வரையும், திரிபுரா உட்பட 6 மாநிலங்களில் அக்டோபர் முதல் கூலி கொடுக்கவில்லை. மொத்தம் 3066 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. 2016-17 ம் நிதியாண்டில் 51 சதம் கூலிதொகையை காலதாமதமாக வழங்கியது மத்திய அரசு.
               வேலை செய்த தொழிலாளிக்கு 15 நாட்களுக்குள் கூலி வழங்க வேண்டும் என்று சட்டம் உள்ளது. அதற்குமேல் காலதாமதமானால் உரிய இழப்பீட்டுடன் கூலிகொடுக்க வேண்டும். உரியகாலத்தில் கொடுக்காமல்  இழுத்தடிப்பது ஒரு மோசடித்தனம். மறுபுறத்தில் காலதாமதமானதற்கு  கொடுக்கவேண்டிய தொகையை குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளையடிப்பது மற்றொரு மோசடித்தனம்.  

              2016-17 ம் ஆண்டு காலதாமதத்திற்கு கொடுக்கவேண்டிய தொகை 1208 கோடியாகும். முத்திய அரசு மோசடித்தனம் செய்து 519 கோடி அதாவது 43 சதம் மட்டுமே கொடுக்க ஒப்புக்கொண்டது. இந்த நிதியாண்டில் மட்டும் 34,7 கோடி காலதாமத இழப்பீட்டுத்தொகை கொடுக்க வேண்டும். கொடுத்தது 3.6 கோடி மட்டுமே.  ஜார்கண்ட், பிஹார், சத்தீஷ்கர், கர்நாடகா, உபி, ராஜஸ்தான் , மபி, ஒடிசா, மேற்குவங்கம், கேரளா ஆகிய 10 மாநிலங்களில் இந்த நிதியாண்டில் சட்டப்படி 36 கோடி 82 லட்சம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு 15 கோடி 61 லட்சம் என்று மோசடிக்கணக்கை போட்டு கொடுத்துள்ளது. 

                        15 நாட்கள் பணிமுடித்து பட்டியல் அனுப்பிவைத்தாலும் மத்திய அரசு நிதிகொடுப்பதற்கு 63 நாட்கள் காலதாமதம் செய்கிறது. பனிமுடித்து 15 நாட்கள் கடந்து காலதாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் 0.05 சதவிகிதம் இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட வேண்டும். இதைக்கூட கொடுக்காமல் மோசடி செய்து வயிற்றில் அடிக்கும் அரக்கனாக மத்திய அரசு செயல்படுகிறது.

வெள்ளி, நவம்பர் 10, 2017

மத்திய மோடி அரசுக்கு சமர்ப்பணம்;

            

               
                        இதோ தனது சிசுவை கையில் வைத்திருப்பவர் கிரண்சர்மா என்பவர். மும்பையின் கோவந்தி பகுதியில் சென்ற ஆண்டு நவம்பர் 8-ம் தேதி மோடி பணமதிப்பு நீக்கத்தை அறிவித்தபோது அனைவரையும்போல் அவரும் தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்தார். அடுத்தடுத்தநாள் மக்கள் பணமாற்ற வரிசையில் நின்றனர். கிரண்சர்மாவிற்கு ஒருசில நாட்களில் குழுந்தை பிறந்து  மூச்சுத்திணறல் ஏற்பட்டபோது அருகாமை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். அங்கு 500, 1000 நோட்டுக்களை வாங்கமறுத்து சிகிச்சை எடுக்க மறுத்ததால் குழந்தை இறந்தது. இவரின் கணவர் சிறுக சிறுக பணம் சேர்த்தார். முதல் வாரிசை மோடியின் கொள்கையால் இழந்தார். இங்கே காட்டப்படும் அந்த சிசுவின் படம்  ஓராண்டை நினைவாக தங்களது துயரத்தை வெளிப்படுத்துகின்றனர்.  

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...