Pages

திங்கள், அக்டோபர் 10, 2016

வறுமைகோட்டின் அரசியல்

         
  புள்ளி விபரங்களில் கோக்கு மாக்கு செய்து வாக்கு வாங்குவதில் இன்றைய ஆட்சியார்கள் வல்லவராயன்கள். கடந்த 20 ஆண்டுகளில் வறுமை கோடு மாறி இருக்கிறது. எண்கள் மாறி இருக்கிறது. ஆனால் மக்களின் கண்களில் வெறுமையும் வயிற்றில் பசியும் மாறவில்லை. இதோ இந்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமுலாக்கத் துறையிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள தகவல் அடிப்படையிலான முடிவுகள்.

       1992-93- ல் இந்திய கிராமபுறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருந்தவர்கள் 50.1 சதவிதம். அப்போது ஒரு நபருக்கு மாதம் ரூ 271.4 வருமானம்தான் அளவுகோளாக நிச்சயிக்கப்ட்டிருந்தது. இவை 2004-05-ல் மாத வருமானம் நபர் ஒன்றுக்கு 446.6 ரூபாய் அளவுகோளாக மாற்றப்பட்டது. இதன் பிறகும் வறுமையில் வாடியவர்கள் 48.1 சதவிகிதமாகும். இவை 2011-12-ல் வருமானம் ரூ 816 ஆக உயர்த்தப்பட்டு வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 25.8 சதமாக குறைக்கப்பட்டது.

   இதே போன்றுதான் நகர்புறத்தை பற்றிய அளவீடுகளும் செய்யப்பட்டன. 1993-94 –ல் நகர்புறத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்த மக்கள் 31.8 சதமாக இருந்தது. அப்போது மாதம் ஒருவருக்கு வருமானம் ரூபாய் 311.52 என தீர்மானிக்கப்பட்டிருந்தது. 2004-05—ல் இந்த அளவுகோல் ரூபாய் 578.8 ஆகவும் 2011-12-ல் ரூபாய் 1000 ஆகவும் உயர்த்தப்பட்டது. இதனால் வறுமைக்கோடு  25.7 சதத்திலிருந்து 13.7 சதமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.
 
       ஆனாலும் இதே துறையின் விபரங்கள் வறுமை வளர்கிறது என்ற உண்மைகளையும் மறைக்க முடியவில்லை. வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்கள் இப்போது தங்களது முழு வருமானத்iயும் உணவிற்ககாக மட்டுமே செலவு செய்ய வேணடிய நிலை ஏற்பட்டுள்ளது. 1993-94-ல் 271.4 ரூபாய் வருமானம் கிடைத்தபோது உணவிற்காக 177.80 ரூபாய் செலவுசெய்தார். ஆனால் 2011-12-ல் 816 ரூபாய் கிடைக்கிறபோது 756.49 ரூபாய் உணவிற்காக செலவழிக்க வேண்டிய நிலைமை உருவாகி உள்ளது.

      நகர்புறத்தில் 1993-94-ல் ஒருவருக்கு மாதவருமானம் 311.52 இருந்த போது உணவிற்காக் 250.30 ரூபாய் செலவு செய்தார். 2011-12-ல் ரூபாய் 1000 மாதம் வருமா என்று நிச்சயித்தபோது உணவிற்காக மட்டும் 1120 ரூபாய் செலவு செய்ய வேண்டியுள்ளது.  இந்த லட்சணத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழே இருப்பவர்கள்  நபர் ஒருவர் கிராமபுறத்தில் உணவிற்காக 2011-12-ல் 92.70 ரூபாய்  செலவு செய்தால் போதும்  நகர்புறத்தில் 112.09 ரூபாய் செலவுசெய்தால் போதும் மறுசக்தியை பெற்றுவிடலாம் என்று மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறையின் சார்பில் மாதாந்திர தனிநபர் செலவினம் ஆய்வின்படி அறிக்கை வைத்து முடிவெடுத்துள்ளனர்.
 
      இந்த அளவீட்டை வைத்துக்கொண்டுதான் ரேஷ்ன் கடையை மூடுகிறார்கள், சிலிண்டரை பறிக்கிறார்கள், வரியை உயத்துகிறார்கள். வறுமைக்கோடு குறைகிறது என்று கூப்பாடு போடுகின்றனர்.
ஏ.பாக்கியம்

    தகவல்: புள்ளியியல் மற்றும் திட்டஅமுலாக்கத்துறை அமைச்சகம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...