Pages

சனி, அக்டோபர் 15, 2016

கோ ... இரட்சகர்களே! இதைப் பற்றியும் பேசலாமே...?


               சரா விழாவையொட்டி ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் பசுப்பாதுகாப்பு அமைப்பிற்கும் சமூக விரோதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை அரசு நிலைநாட்ட வேண்டுமென்று வேண்டுகோள் வைத்துள்ளார். பசுப்பாதுகாப்பில் ஈடுபடுவோரை பாராட்டியுள்ளார். நல்ல செயல் என்று பெருமிதம் அடைந்துள்ளார். குஜராத்திலும், அரியானாவிலும், தாத்திரியிலும் நடைபெற்றதை இவர் நல்லதா? அல்லது சமூக விரோத செயலா? என்று குறிப்பிட்டு சொல்லவில்லை. பசுப்பாதுகாப்பு என்ற பெயரால் இதுவரை நடந்த அனைத்தும் மிகப்பெரிய அட்டூழியங்களே! தசரா விழாவில் பசுப்பாதுகாப்பு பற்றியும், காஷ்மீர் பற்றியும் பேசும் இவர் பிஜேபி ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்வு சீரழிந்து இருப்பதை பற்றியும், அவற்றை மாற்றுவது பற்றியும் பேசுவதற்கு எதை தடையாக உள்ளது. 

2015 ஆம் ஆண்டு தேசிய குற்றப் பிரிவு அறிக்கை பிரகாரம் தினசரி 123 தாக்குதல்கள் தலித்துகள் மீது நடைபெறுகிறது. 3 நாட்களுக்கு ஒரு தலித் படுகொலை செய்யப்படுகிறார்.

இந்தியாவில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகிறார்கள். 2015-ல் மட்டும் 34,771 பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகியுள்ளனர் என தேசிய குற்றப்பிரிவு ஆணையம் தெரிவித்துள்ளது.

2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் 4030 வகுப்பு கலவரங்களில் 648 பேர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 11228 பேர்கள் காயமடைந்துள்ளனர். ஆனால் அதன்பிறகு 2015 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு 650 வகுப்பு கலவரங்கள் நடந்து வருகிறது. 

1 கோடி 40 லட்சம் பேர் சுற்றுச்சூழல் பாதிப்பால் காற்று மாசடைவதால் முன்கூட்டியே இறந்து விடுவதாக உலக வங்கி அறிக்கை கூறுகிறது. 

59.5 கோடி மக்களுக்கு இதுவரை கழிப்பிட வசதி இல்லை. மோடியின் கழிப்பிடம் கட்டுவதற்கான அறிவுப்புகள் நடந்த பிறகு சில கோடி கட்டிய பிறகும், இன்னும் சரிபாதி மக்களுக்கு கழிப்பிட வசதி இல்லை என ஐக்கிய நாடுகள் சபையும், உலக வங்கியும் தெரிவித்துள்ளது. 

இந்தியாவிற்கு சொந்தமான கருப்பு பணம்  15.2 இலட்சம் கோடியிலிருந்து 18.1 இலட்சம் கோடி வரை அந்நிய நாட்டில் பதுக்கி வைத்திருப்பதாக 2016 ஆம் ஆண்டின் இத்தாலிய வங்கி மதிப்பீடு செய்துள்ளது. 

அதிக ஊழல் செய்யும் நாடுகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. நகர்ப்புறத்தில் வாழும் ஒவ்வொருவரும் சராசரியாக ஆண்டுக்கு 4400 ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக கூசயளேயீயசநnஉல iவேநசயேவiடியேட என்ற அமைப்பு ஆய்வு நடத்தி தெரிவித்துள்ளது. 

இந்தியாவில் 28.7 கோடி வயதுவந்தோர் கல்வி அற்றவர்களாக உள்ளனர். இது உலக வயதுவந்தோர் கல்வி அற்றவர்களில் 37 சதவீதம் ஆகும்.

19.5 கோடி மக்கள் ஊட்டச்சத்து குறைவால் அதாவது பட்டினியால் வாடுகின்றனர். இது இந்திய மக்கள் தொகையில் 15 சதவிகிதம் என ஐக்கிய நாடுகள் சபையின் 2015 ஆம் ஆண்டு அறிக்கை (ருசூ ழரநேச சுநயீடிசவ) கூறுகிறது.

17.2 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே (12.4 சதவிகிதம்) வாழ்கிறார்கள் என்று 2015 ஆம் ஆண்டு உலக வங்கி மதிப்பீடு தெரிவிக்கிறது. 

- ஏ.பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...