Pages

புதன், ஜூலை 08, 2015

எரிகொலையும் மோடி அரசின் பத்திரிக்கை நெறியும்.

                                              ஆப்பிள் தொழில் நுட்பத்தின் அதிபதியாக இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் எப்படி  ஊடகத்துடன் ஊடாடினார் என்பதை  எரிக் செர்மன் என்பவர் பட்டியலிட்டுள்ளார். “ஊடகத்துடன் ஊடாடுவதற்கு ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் ஏழு விதிகள்“ என்ற பட்டியல் மிக முக்கியமானது. இவற்றை இந்தியாவில பதவி ஏற்றவுடன் மோடி அடிபிசகாமல் கடைபிடித்து வருகிறார்.

  அந்தவிதிகள்: 
1.இரகசியமாக இருப்பது. 
2.உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்வது.
3.ஒத்துழைக்காதவர்களை தண்டித்து விடு 
.4.எப்படி கசிய விடுவது என்று கற்றுக்கொள்.
5.தவறான செய்தியை விதைப்பது
.6.உனது பிரச்சாரத்தை கச்சிதமாக வெளிப்படுத்து.
7.எழுதுவதை பயனுள்ளதாக எழுது.

       மேற்கண்ட அம்சங்களில் மோடி பல விஷ்யங்களை கடைபிடித்து வருகிறார். பிரச்சாரத்தை கச்சிதமாக செய்து கொண்டே இருப்பது. பேசவேண்டியதில்  பேசாமல் அழுத்தமாக இருப்பது.கசியவிடுவதையும் திசைதிருப்பும் தகவல்களையும் வெளிடுவது. ஒத்துழைக்காதவர்களை தண்டிப்பது தடையில்லாமல் தொடர்கிறது. எனவேதான் பதவிஏற்றவுடன் சகமந்திரிகளுக்கும் கடுமையான விதிகளை விதித்தார்.

மோடி ஆட்சிக்கு வந்தவுடன் தகவல் துறை திருகாணியை இறுக்கியுள்ளார்.

பதவி ஏற்ற சில நாட்களிலேயே மந்திரிகளையும் மூத்த அதிகாரிகளையும் பத்திரிக்கையாளரிடமிருந்து விலகியே இருக்க உத்திரவிட்டார்.

அவரின் டிவிட்டர், மற்றும் வானொலி பிரச்சாரமான மான்-கி-பாத் மூலம் அனைத்தையும் அவர் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டார்.

மத்திய அமைச்சகத்தின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கீழ் செயல்படும் துறை  அரசுக்கும் ஊடகங்களுக்கும் மிகப்பெரும் இணைப்பாக இருந்தது. கடந்த காலத்தில் இந்த துறை சில வகையான சுதந்திரத்துடன் செயல்பட்டது. தற்போது மோடி ஆட்சியில் இது அரசின் முழுமையான ஊதுகுழலாக மாறிவிட்டது என பல பிரபல பத்திரிக்ககையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சஞ்சய் குமார் என்ற பத்திரிக்கையாளர் இதற்கு முன்னாள் இது வரை இருந்த எந்த பிரதமரும் இந்த அளவு பத்திரிக்கையாளர்களுடன் இடைவெளி ஏற்படுத்தியது இல்லை.

இதற்கு முந்தைய அரசு வெளிநாடுகளுக்கு போகும் 30 பத்திரிக்கையாளர்களை அழைத்துச்செல்வர்.ஆனால் கடந்த ஆண்டு மோடி அமெரிக்கா சென்ற போது 9 பேர்களை அழைத்துச்சென்றார்.

மோடியின் மனைவி பற்றி செய்திவெளியிட்டதற்காக மாநில தொலைக்காட்சி துணை இயக்குநர் அகமதாபாத்திலிருந்து அந்தமான் தீவுக்கு மாற்றப்பட்டார்.
    
      மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில்  பத்திரிக்கையாளர் சந்தீப் கோத்தாரி கொடுரமான முறையியல்  எரித்துக்கொலை செய்யப்ட்டார்.சில நாட்களுக்கு முன்பு  உத்திர பிரதேசத்தில் சாஜஹான்பூரில் பத்திரிக்கையாளர் ஜகேந்திரா சிங் எரித்துபடுகொலை செய்யப்பட்டாh.ஓருவாரத்தில் அடுத்தடுத்து இருவர் எரித்து கொலை செய்யப்பட்டது கொடூரமான வடிவமாகும். 

        கும்பல் வன்முறையில் இதுபோன்ற பல சம்பவங்கள் நடைபெறுள்ளன. இந்த பத்திரிக்கையாளர் படுகொலை அப்படி நடந்தது அல்ல. சட்டவிரோத சுரங்கத்தொழில் நடத்தி வந்த வர்களை எதிர்த்து வழக்குதொடர்ந்தற்கும்  அவற்றை திரும்ப பெற மறுத்ததால்   சந்தீப் சிங் படுகொலை நடந்துள்ளது. உத்திரப்பிரதேசத்தில் மந்திரி மற்றும் போலீஸ் அதிகாரியின் சுரங்க கொள்ளை மற்றும் மணல்கொள்ளை நடத்தியதை அம்பலப்படுத்தியற்காக கஜேந்திரா சிங் படுகொலை நடந்துள்ளது.இந்தியாவில் 1992ம் ஆண்டிலிருந்து 35 பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

          பத்திரிக்கையளர் படுகொலையில் மிகவும் மோசமாக உள்ள  10 நாடுகளில்   இந்தியா 2வது இடத்தில் உள்ளது.முதல் இடத்தில் உள்ளநாட்டு கலவரம் நடககும் சிரியா உள்ளது. பத்திரிக்கை ஜனநாயக அமைப்பின் பிரிக்கமுடியாத பகுதியாகும்.மோடி அரசின் சகிப்புத்தன்மையற்ற அணுகுமுறை மேலும் சிக்கலாக்கியுள்ளது.


பாக்கியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...