Pages

திங்கள், டிசம்பர் 06, 2010

சிபிஜ(மாவோயிஸ்ட்) ஆளும்வர்க்க சேவகர்களே.

                                                                      அ.பாக்கியம்



          சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று பெயர் வைத்துக்கொண்டு, இடதுசாரி அதிதீவிரவாதத்தையும், அராஜகத்தையும் அரங்கேற்றி  வருகின்றனர். சத்தீஷ்கர் ஜார்கண்ட், ஒரிசா, மேற்குவங்கம், மகாராஷ்டிரத்தின் சில பகுதிகளில் நடத்திய கொடூரகொலைகள் மூலமாக தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டுள்ளனர். அரசியல் எதிரிகளை கொலைசெய்வது, அடிமட்ட வனஅலுவலர்கள், நில மற்றும் காவல் அலுவலர்களை கொலைசெய்வது, கடத்துவது, கொள்ளையடிப்பது மற்றும் அரசியல் கட்சிகளிடையே கூலிப்படையாக செயல்படுவது, இவர்களது முக்கிய நடவடிக்கையாக மாறிஉள்ளது. இவர்களாலும், இவர்களது நடவடிக்கைகளாலும் உழைக்கும் மக்களின் ஒற்றுமையோ, முன்னேற்றமோ சாத்தியமில்லை. ஆளும் வர்க்க அடக்குமுறைகளிலிருந்து அப்பாவி மக்களை காப்பது, புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்துவது என்பதெல்லாம் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருக்கிறது. இவர்களது தெளிவற்ற திட்டமும், தேவையற்ற வன்முறையும் ஆளும் வர்க்கத்திற்கும், ஏகாதிபத்தியத்திற்கும் வலுசேர்ப்பதாகவே உள்ளது. மேலும் இவர்கள் வெகுமக்களை அணிதிரட்டியுள்ள இடதுசாரி இயக்கத்தின் மீது நடத்தும் தாக்குதல் இவர்களது ஆளும் வர்க்க எஜமான விசுவாசத்தை வெளிப்படுத்துக்கிறது. இவர்களை தோற்கடிப்பது வெறும் நிர்வாக நடவடிக்கைகள் மூலம் சாத்தியமில்லை. அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி வெகுமக்களிடமிருந்து தனிமைப்படுத்தவேண்டும். அதே நேரத்தில் இவர்களது கோட்பாடு, திட்டம், நடைமுறைத்தந்திரத்தில்உள்ளஇடதுகுறுங்குழுவாதத்தையும்,அராஜகவாதத்தையும் தோலுரித்துக்காட்ட வேண்டிய தேவை உள்ளது.

புதிதல்ல..பழைய கள், பழைய மொந்தை

                இடது குறுங்குழுவாதம் இந்திய கம்யூனிச இயக்கத்திற்கு புதிதல்ல. 1948-51ம் ஆண்டுகளில் உருவான ஒரு போக்கு, இந்திய சுதந்திரம் உண்மையான சுதந்திரம் அல்ல. இந்திய ஆளும் வர்க்கம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள். எனவே புரட்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற கோட்பாடு முன்வைக்கப்பட்டது. அது தோல்வியடைந்த ஒன்று. அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியால் கைவிடப்பட்டது. மீண்டும் 1967-68 ல் நக்சலிசம் என்ற பெயரால் இடது குறுங்குழுவாதம் தலைதூக்கியது. 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) அமைக்கப்பட்டு அதன் 7வது மாநாட்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டது. அப்போது தத்துவார்த்த விஷயத்தில் மாறுபட்ட கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. இக்காலத்தில் இம்மாநாடு முடிந்த கையோடு முக்கியத்தலைவர்கள் கைது செய்து சிறையிலடைக்கப்பட்டனர்.   விவாதம் முழுமையடையாத சூழல். இதே காலத்தில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வலது திரிபுவாதத்திற்கு எதிராக சரியான நிலை எடுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி, இடது குறுங்குழுவாதம் என்ற தவறான பாதை நோக்கி சென்றது, இந்திய அரசு  ஏகாதிபத்தியத்தின் ஏஜென்ட் என்று தீமானித்தது. இதே நிலைபாட்டை இந்தியாவில் இருந்த இடது குறுங்குழுவாத சிந்தனையாளர்கஙள், நக்சலைட்டுகள் எடுத்துக்கொண்டு 1970ல் சிபிஐ(எம்.எல்.) என்ற கட்சியை துவக்கினர்.

                1969-71ம் ஆண்டுகளில் ஆயும் தாங்கிய போராட்டத்தை துவக்கினர். ஆயுதப்போராட்டத்தின் முக்கிய வடிவம் தனிநபர்பளை அழித்தொழித்தல். இதனால் சில நிலபிரபுக்களும், அதிகாரிகளும் கொலை செய்யப்பட்டனர். தளம் அமைத்து ஒவ்வொரு பகுதியாக விடுதலை செய்யப்படவேண்டும் என்றனர். ஒரு தீப்பொறி காட்டுத்தீயாக பரவும் என்றனர். ஆனால் அது நடக்கவில்லை. அது அணைந்து விட்டது. மாறாக புரட்சிகரமான வெகுஜன இயக்கம் வளர்வதற்கு இந்த தனிநபர் அழித்தொழித்தல்  தடையாக அமைந்தது. இவர்களால் விவசாயிகளை அணிதிரட்ட முடியாதது மட்டுமல்ல, அரசின் அடக்குமுறைகளையும் எதிர்கொள்ள முடியாமல் அவர்களால் எழுச்சி என்று அழைக்கப்படுகிற நக்சல்பாரி, கோபிபல்லபூர், ஸ்ரீகாகுளம் போன்றவைகள் தோல்வியில் முடிந்தன. இத்தோல்வியிலிருந்து தங்களது செயல் தளத்தை நகர்புறத்திற்கு மாற்றினர். குறிப்பாக கல்கத்தா மற்றும் புறநகர் பகுதிக்கு வந்தனர். அங்கும் தொழிலாளர்களை வென்றெடுக்க முடியவில்லை. எனவே,  வர்க்க எதிரிகளை ஒழித்துகட்டுவது என்ற பெயரால் போக்குவரத்து போலீஸ்காரரையும், சிறு அலுவலர்களையும், பல்கலைக்கழக துணை வேந்தைரையும் கொலை செய்தனர். மேற்கு வங்கத்தில் 1971-ல் காங்கிரஸ் கட்சியின் அரைப்பாசிச ஆட்சி நடந்தபோது அவர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை வேட்டையாடினர். 1972ல் ஆந்திராவில் வாரங்கல் மாவட்டத்தில் காங்கிரஸ் குண்டர்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் ஊழியர்களை படுகொலை செய்தனர். ஆனால் அவர்களது நகர்புற எழுச்சியும் பிசுபிசுத்துபோனது. ஒன்றுபட்ட கட்சியை அவர்களால் உருவாக்க முடியவில்லை. சிறிய கருத்து வேறுபாடுகளைகூட தீர்க்கமுடியவில்லை. எனவே 1971ல்  சிபிஐ(எம்.எல்.) இரண்டாக உடைந்தது. அடுத்தடுத்து பல குழுக்களாக சிதைந்து செயலிழந்தது. ஆதிவாசி மக்களில் ஒரு சிறு பகுதி தவிர இதர விவசாயிகளைகூட திரட்ட முடியவில்லை. ஆந்திரா, சட்டீஸ்கர், ஜார்கண்ட், பீகார், பகுதியில் ஆதிவாசி மக்களிடம் இருக்கிற செல்வாக்கை வைத்து இப்போது சிபிஐ(மாவோயிஸ்ட்) என்று வெளிவந்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளில் எதையும் இவர்கள் படிப்பினையாக எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. உலக மாற்றங்களை கிரகித்து கொண்டதாகவும் தெரியவில்லை. குழப்பத்தினூடே பயணம் தொடர்கிறது.

 சுருக்கப்பட்ட ஏகாதிபத்தியம்-மறைக்கப்பட்ட சோசலிசம்

                       எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தத்துவம், திட்டம், தந்திரோ உபாயம்,நடைமுறைதந்திரம் மிகவும் அடிப்படையானவை. குறிப்பிட்ட நாட்டில் செயல்படும் கட்சிக்கு அத்திட்டத்தில் புரட்சியின் தந்திரோபாயங்கள் கோடிட்டு காட்டப்படவேண்டும். இந்த தந்திரோபாயமும் அந்நாட்டின் பொருளாதாரம், அரசியல் மேல்கட்டுமானம், மற்றும் சமூகம் பற்றிய ஸ்தூலமான ஆய்வின் அடிப்படையில் அமைந்திருக்கவேண்டும். சரியான தந்திரோபாயத்தை உருவாக்க அன்றைய காலகட்டத்தில் சர்வதேச ரீதியிலான வர்க்க சேர்மானம் பற்றிய ஸ்தூலமான ஆய்வுகள் அடிப்படையானது. இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.
மாவோயிஸ்டுகளின் தங்களது திட்டத்தில் மார்க்சிய-லெனினிய மாவோயிச சிந்தனைகள்தான் தத்துவ வழிகாட்டி என்பதை குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஏகாதிபத்திய செயல்பாட்டை மிகவும் சுருக்கி முக்கியத்துவமற்ற முறையில் கொடுத்துள்ளனர். வளர்ந்த முதலாளித்துவத்தின் கீழ் உற்பத்திசக்திகளின் பிரம்மாண்டமான வளர்ச்சி, இதன்மூலம் ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் அவ்வப்போது ஏற்பாடும் பொருளாதார நெருக்கடியை சரிகட்டுகிறது. இத்துடன் கூடவே   தொழிலாளர் மற்றும் இதர பகுதி மக்களின் நலன்களை வெட்டிச்சுருக்குவது, வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி, வேலைபறிப்பு, நிதிமூலதனத்தால் நாடுகளின் இறையாண்மை பறிக்கப்படுவது போன்ற எண்ணற்ற ஏகாதிபத்திய தாக்குதல் பற்றி மாவோயிஸ்டுகள் திட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவில்  எதுவும் இடம்பெறவில்லை. ஏகாதிபத்தியங்களின் இருமாபெரும்  உலக யுத்தங்கள் பற்றியும் அது தேசவிடுதலைப் போராட்டத்தை  அடக்கியது பற்றிய நிலைமைகளைகூட குறிப்பிடப்படாமல் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் திட்டம் முழுமை பெறுமா?
                 
                   உலகில் சோவியத் யூனியன் இருந்தது உண்மை. அது தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. மூன்றாம் உலக நாடுகள் சில துறைகளில் சுயமாக முன்னேற ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து நிற்க உதவி புரிந்தது. சோசலிச முகாம் மற்றும் சோவியத் வீழ்ச்சிக்கு பிறகு உலக வர்கக சக்திகளின் பலாபலன்களில் மாற்றம் ஏற்பட்டது. ஏகாதிபத்தியத்தின் பலம் அதிகரித்தது. வளரும் நாடுகளை இது கடுமையாக பாதித்துள்ளது. ஆனால் இந்தியவில் உள்ள மாவோயிஸ்ட்கள் பழைய நக்சலைட்டுகளின்  பார்வையை தற்போதும் தொடர்கின்றனர். சோவியத் யூனியன் சமூக ஏகாதிபத்தியம் என்றும் அமரிக்க ஏகாதிபத்தியத்தைவிட ஆபத்தானது என்றும் அறிவித்துள்ளனர். 1956-லேயே சோவியத் யூனியனில் முதலாளித்துவம் மீட்டெடுக்கப்பட்டுவிட்டது என்றும் 1976க்கு பிறகு சீனாவும் முதலாளித்துவ நாடாக மாறிவிட்டது என்றும் அறிவித்தனர். தற்போது அவர்கள் பார்வையில் உலகில் சோசலிச முகாம் இல்லை. ஒரு சோசலிச நாடுகூட இல்லை என்பதுதான். கியூபாவைக்கூட குறிப்பிடத் தயாராக இல்லை. 20ம் நுற்றாண்டின் சோசலிச கூட்டமைப் பையும் அதன் அனுபவத்தையும்  பாசீலிக்கக்கூட தயாராக இல்லை.   சீனாவில்புரட்சிக்கு முந்தைய காலத்தில் கடைபிடித்த வர்க்க ஆய்வு, ஆயுதப்போராட்டம், தந்திரோபாயம், நடைமுறை தந்திரத்தை ஆகியவற்றை அப்படியே இயந்திரகதியாக கடைபிடிப்பதுதான் இவர்களின் உலக அனுபவ சித்தாந்தம், இந்த குறுகிய பார்வை  உழைப்பாளி மக்களை சீர்குலைக்கவும், ஆளும் வர்க்கத்திற்கு சேவை செய்யவுமே உதவும்.    

ஊனப்பார்வையா? உருக்குலைந்த சிந்தனையா?

                        உலகப்புரட்சியின் உந்து சந்தி தேசவிடுதலைப்போராட்டம் என்று கூறுகின்றனர். சோவியத் யூனியன் தேசவிடுதலைப் பேராட்ட இயக்கங்களுக்கு அளித்த ஆதரவை ஒருபொருட்டாகவே மதிப்பீடு செய்ய மறுத்தவர்கள், தற்போது தேசவிடுதலைப்போராட்டமே உலக புரட்சியின் பிரதான இருப்பு என்று பறைசாற்றுகின்றனர். இதுதான் ஏகாதிபத்திய எதிர்ப்பின் மையம் என்கிறார்கள். ஆனால் லத்தீன் அமெரிக்க கண்டத்தின் பெரும் பகுதி ஏகாதிபத்திய எதிர்ப்பு போரில் இருந்து கொண்டருக்கிறது. இதைப்பற்றி இவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக தற்கால  உலகில் தெற்கு ஆசியாதான் தேசவிடுதலைபோரின் கூர்முனையாக உள்ளது. குறிப்பாக பாகிஸ்தானில் ஸ்வாட் பள்ளத்தாக்கு, வடமேற்கு  மாகாணம், பகுதிகளிலும் போர்குணமிக்க எழுச்சிகள் வெடித்து கிளம்புகின்றது என்கின்றனர்.இஸ்லாமிய எழுச்சி அமெரிக்க எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு தன்மைகொண்டது. எனவே அது வளரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம் என்று அறிவிக்கின்றனர். என்ன சிந்தனை இது? மார்க்சிச, லெனினிச, மாவோயிச தத்துவத்தை வழிகாட்டி என்று பறைசாற்றிய மூளையிலிருந்து இப்படி உருக்குலைந்த பார்வையா?

                தாலிபான், அல்கொய்தா, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் இதர தீவிரவாதக் குழுக்களின் போராட்ட இலக்கு என்ன? இஸ்லாமிய அரசை நிறுவுவது, அதுவும் மத அடிப்படையிலான ஷரியத் சட்டம், ஜனநாயக அரசியலுக்குத்தடை, பெண்களின் சுதந்திரமான நடமாட்டத்தற்கு தடை, பிற்போக்குத்தனமான நிலபிரபுத்துவ நடைமுறைகள், பழக்க வழக்கங்களை கடைபிடிக்க துடிக்கும் அமைப்புகளின் போராட்டத்தை  தேசவிடுதலை என்றும், ஏகாதிபத்திய எதிர்ப்பு என்றும் வர்ணிக்கின்றனர், தாலிபானும், அல்கொய்தாவும் அமெரிக்க சிஐஏவால் உருவாக்கப்பட்டு ஆப்கானில் சோவியத்யூனியனுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது இவர்கள் அறியாததா? இவர்களைத்தான் முற்போக்கு முத்திரை குத்தி தங்களது கூட்டாளிகள் என்று பறைசாற்றுகின்றனர்.
இந்த உருக்குலைந்த பார்வை எங்கிருந்து உருவாகிறது? உலக முரண்பாட்டை பற்றிய பலவீனமான மதிப்பீட்டிலிருந்து உருவாகிறது.உலகில் முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம் என்பதும், இன்றைய சகாப்தத்தின் பிரதான முரண்பாடு ஏகாதிபத்தியத்திற்கும்-சோசலிசத்திற்கும் இடையிலான முரண்பாடு என்பது மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைபாடு. இதுதான் நிருபிக்கப்பட்ட உண்மையும் கூட. மாவோயிஸ்டுகள் பிரதான முரண்பாடாக ஏகாதிபத்தியத் திற்கும்-அடக்கப்பட்டநாடுகள்/மக்கள் ஆகியவற்றிற்கு இடையேயான முரண்பாடுதான் பிரதானமுரண்பாடு என்று தீர்மானிக்கிறது. 1970-80ம் ஆண்டுகளில் நக்சலைட்டுகள் சீன கட்சியிடமிருந்து அவதானித்த மூன்றுலக கோட்பாடுகளிலிருந்து அவர்களது மூளை முற்றிலும் இன்னும் விடுபடவில்லை. அமெரிக்கா-ரஷ்யா என இரு வல்லரசுகள் முதல் உலகம், இதர ஏகாதிபத்திய நாடுகள் இரண்டாம் உலகம், ஜப்பான்  தவிர மற்ற ஆசிய, ஆப்பிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகள் மூன்றாம் உலகம் என்ற நிலையை தொடருகின்றனர். மூன்றாம் உலகம் மற்ற இரு உலகத்தையும் சுற்றி வளைத்து வெற்றிகொள்ள வேண்டுமாம்? காலம் மாறிவிட்டது, வர்க்க உறவுகள் மாற்றம், சீனக்கட்சியே வலியிறுத்தாத கருத்து, இவர்களை சிறைபிடித்து சிக்கவைத்துள்ளது.

தரகு முதலாளியா ? தனித்துவமான முதலாளித்துவமா?

                  இந்திய சமூகத்தை பற்றி மதிப்பீடு செய்கிறபோது, நவீன காலனித்துவத்தால் மறைமுகமாக ஆளப்படுகிற சுரண்டப்படுகிற, கட்டுப்படுத்தப்படுகிற அரைக்காலனித்துவ, அரைநிலப்பிரவுத்துவ சமூக அமைப்பு என்று கூறுகின்றனர். இது 1939-ல் சீன சமூகம் பற்றிய மதிப்பீட்டை அப்படியே யந்திரகதியாக நகல் எடுப்பதாகும். அன்று சீனா பல ஏகாதிபத்தியத்தால் கூறுபோடப்பட்டிருந்தது. யுத்த பிரபுக்கள் பலர் ஆட்சி புரிந்தனர். மைய்ய அரசு என்பது இல்லை. தேசிய முதலாளிகளைவிட தரகு முதலாளிகள் பலர் ஏகாதிபத்தியத்துடன் உறவு வைத்து செல்வாக்கு செலுத்தினர். அப்படிப்பட்ட நிலை இன்று இந்தியாவில் உள்ளதா? மைய அரசு இல்லாமல் பல ஏகாதிபத்திய சக்திகள் அனைத்தையும் தீமானிக்கிறதா? இல்லவேஇல்லை. ஆனாலும் இந்திய அரசியல்,பொருளாதாரம், கலாச்சாரம் ஆளும் வர்க்கம் அனைத்தையும் சுதந்திர இந்தியா என்ற அறிவிப்பு பலகைக்கு பின்னால் இருந்து ஏகாதிபத்தியம் கட்டுப்படுத்துகிறது என்று கண்ணைமூடிக்கொண்டு கூறுகின்றனர். இந்தியாவிற்கு என்று எந்த தனித்துவமும் இல்லை என்பதுதான் இவர்கள் கூற்று.
                  
                  இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய பெரும் முதலாளித்துவ, பெரும் நிலபிரபுத்துவ தலைமையிலான கூட்டு சர்வாதிகார அரசு என்றும்,  இந்த பெரும் முதலாளிகளும், பெரும் நிலபுரபுக்களும் உண்மையில் தரகு முதலாளிகளே என்று வரையறுக்கின்றனர். தரகு முதலாளி என்பது ஒரு பின்தங்கிய காலனித்துவ நாட்டில் அந்நிய ஏகாதிபத்தியத்திற்கு வர்த்தக ரீதியில் கச்சாப் பொருட்களை ஏற்றுமதி செய்து, அவர்களது உற்பத்தி பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் ஆவர், இவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடாதவர்கள் ஆவர். இந்திய முதலாளிகள் இந்த வகையைச் சேர்ந்தவர்களா? அடிப்படை தொழிலான உருக்கு, இயந்திரம், தானியங்கி, துணி, தகவல்  தொடர்பு, எண்ணெய், எரிவாயு, பெட்ரோல் என எண்ணற்ற தொழில்களில் இந்திய முதலாளிகள் ஏகபோகமாக உள்ளனர். இந்திய முதலாளிகள் தங்களது சொத்துக்களை பல மடங்கு உயர்த்தி உள்ளனர். இருபத்தி இரண்டு ஏகபோக நிறுவனங்களின் சொத்து மதிப்பு  1957ல் 312.63 கோடியாக இருந்தது. இது 1997ல் 500 மடங்கு அதிகமாகி 1,58,004.72 கோடியாக உயர்ந்துள்ளது. பத்து தனியார் கார்பொரேட் நிறுவனங்களின் சொத்து 2003-2004-ல் 3,54,000 கோடியிலிருந்து 2008-ல் 10,34,000 கோடியாக நான்கு ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இவர்களா தரகு முதலாளிகள்? மாவோயிஸ்டுகளின் தரமற்ற மதிப்பீட்டால்தான் இந்த தவறான முடிவுக்கு வருகின்றனர். இந்திய பெருமுதலாளிகளுக்கு தொழில் அடிப்படை மட்டுமல்ல வர்த்தகம் மற்றும் சேவைத்துறையிலும் பெரும் பங்கு உள்ளது. இவர்களின் நலன்களை  பாதுகாக்க பல நேரங்களில் ஏகாதிபத்தியத்துடன் முரண்படுகின்றனர். பல நேரங்களில் ஒத்துப்போகின்றனர். தங்களது சந்தை, சந்தையை பாதுகாக்கும் விஷயத்திலும் உலகச்சந்தையில் பங்கு பெறுவதிலும் மோதல் ஏற்படுகிறது. ஏகாதிபத்திய முதலாளிகளுடன் ஒப்பிடும்போதும், தொழில் நுட்பம் தொடர்பான விஷயம், மூலதன திரட்சி ஆகியபற்றில் ஒத்துப்போகும் தேவை உள்ளது. எனவே இந்திய முலாளித்துவம் இரட்டைத்தன்மை குணமுடையது என்று மார்க்சிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தி உள்ளது. இவர்களை தரகு முதலாளிகள் என்றோ, கமிஷன் ஏஜன்ட் என்றோ மதிப்பிடுவது எதார்த்த நிலைக்கு பொருந்தாது.

புரட்சியின் கட்டம் + நேச சக்திகள் + தலைமை = குழப்பம்   
                  
                     இந்திய புரட்சியின் கட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி கீழ்கண்டவாறுவரையறுக்கிறது.இந்தியாவில் முதலாளித்துவம் அதற்கு முந்தைய சமூகத்தின் மீது திணிக்கப்பட்டது. இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷாரோ அல்லது சுதந்திரத்திற்கு பிறகு அதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவமோ அதற்கு முந்தைய சமூக அமைப்பை அழித்தொழிக்கவில்லை. எனவே இந்த கடமை தொழிலாளி வர்க்கத்திடமும் அதன் கட்சியின் மீது விழுந்தது. எனவே அனைத்து முற்போக்கு சந்திகளையும் ஒன்றிணைத்து ஜனநாயக புரட்சியை முழுமைபடுத்தி அடுத்த கட்டமாக சோஷலிசத்திற்கு மாறிச்செல்ல வேண்டும்.

              ஆனால் மாவோயிஸ்டுகளை பொறுத்தவரை இந்தியா இன்றும் ஏகாதிபத்திய சக்திகள் கீழ் உள்ள அறை காலனித்துவ நாடாகும். எனவே தற்போதைய புரட்சியின் கட்டம் தேசிய விடுதலை அல்லது ஏகதாதிபத்தியத்திற்கு எதிராகவும், அதனுடைய உள்நாட்டு கூட்டாளி நிலபிரபுத்துவத்திற்கு எதிராகவும் பொதுவான ஐக்கிய முன்னணியை கட்டவேண்டும் என்பதுதான். இந்த கூட்டணியின் ஒரு பகுதியாக முதலாளிகள் இருப்பார்கள் என்கின்றனர்.  அதாவது தேசவிடுதலையும், ஜனநாயக புரடசியையும் கலந்து குழப்பிக் கொள்கின்றர். புரட்சியின் கட்டங்களை தெளிவாக வரையறுக்காத எந்த புரட்சியும் பெரும் ஆபத்தையும், கேடுகளையும் விளைவிக்கும்.

                புரட்சியின் நேச அணியில் பாட்டாளி வர்க்கம் மைய்யமானது என்றாலும், பணக்கார விவசாயிகள், குட்டி முதலாளிகள், பெருமுதலாளிகள் அல்லாத முதலாளிகள் பற்றிய மதிப்பீடுகள் தெளிவாக திட்டவட்டமாகவும் இல்லை. கிராமப்புற  பணக்கார விவசாயிகள்  பெரும்பகுதி புரட்சிக்கு ஆதரவாகவும், மற்றொரு பகுதி நடுநிலையாகவும், சிறு பகுதி எதிரிகளுடனும் அணி சேருவர் என்று மதிப்பீடு செய்கின்றர். எதை அடிப்படையாக வைத்து இந்த மதிப்பீடு வருகிறது ? நிலபிரபுக்கள், பணக்கார விவசாயிகள், ஒப்பந்தக்காரர்கள், பெரும் வணிகர்கள்தான் கிராமப்புறபணக்காரர்களின் அச்சாக உள்ளனர். இவர்களிடம் ஊசலாட்ட தன்மை இருக்கும், ஆனால் புரட்கிரமான சூழல் ஏற்படும் தறுவாயில்தான் இவர்கள் யார் பக்கம் இருப்பார்கள் என்று தீர்மானிக்க முடியும். மாவோயிஸ்டுகள்  இப்போதே ஜோசியம் பார்ப்பதுபோல் அறிவிப்பது அபத்தமானது. இதேபோன்று குட்டி முதலாளிகள் பாட்டாளி வர்க்கத்தின் நம்பிக்கையான கூட்டாளி என்று மொட்டையாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. குட்டி முதலாளித்துவத்தின் ஒரு பகுதியினர், முதலாளித்துவ பாதையாலும், நவ தாராளமய கொள்கையாலும மேன்மையும் , பலனும் அடைந்துள்ளது.  இதனால் இவர்கள்  படகை புரட்சிகர இயக்கத்தின் பக்கம் செலுத்துவதைவிட ஆளும் வர்க்கம் பக்கமாக செலுத்தவே அதிக வாய்ப்புள்ளது.

                   ஜனநாயக புரட்சிக்கு பாட்டாளிவர்க்கத்தலைமை பற்றி மாவோயிஸ்டுகள் தங்களது திட்டத்தின் பேசுகின்றனர். ஆனால் தொழிலாளா வர்க்கம் மத்தியில் வேலை செய்வது, அணிதிரட்டுவது சிறிதளவு கூட இல்லை. தொழிலாளி வர்க்கத்தை அணிதிரட்டாமல் எப்படி தொழிலாளிவர்க்கம் தனது தலைமைபாத்திரத்தை நிறைவேற்றமுடியும்? மக்கள் யுத்தத்தின் அடிப்படை உந்து சக்தி விவசாயிகள். கிராமப்புறங்களை விடுவித்த பிறகுதான் நகர் புற விடுதலை என்ற பழைய சித்தாந்த திட்டத்திலிருந்து மீளவில்லை. ஜனநாயக புரட்சியின் தலைமை பாத்திரம் பற்றி வார்த்தைகளில் உள்ளது, நடைமுறையில் பழைய செயல்முறைகளே.

மக்கள் யுத்தமா ? அபத்தமா ?

                     இன்றைய புரட்சியை வெற்றிகரமாக மாற்றுவதற்கு மாவோயிஸ்டுகள் நம்பும் ஒரே தந்திரம்நீண்ட கால மக்கள் யுத்தம் என்பதாகும்.நம்மை போன்ற நாட்டில் புரட்சியின் தொடக்கம் ஆயுத போராட்டம் மூலமாகவே  நடக்கும் மற்ற அனைத்து போராட்டங்களும் இதற்கு உறுதுணையாகவே அமைய வேண்டும்.
              தொழிலாளர்கள்,   நகர்புற ஏழைகளை அணிதிரட்டாமல் கிராமப்புறத்தில் கூட விவசாயிகளை அணிதிரட்டாமல் ஆயுத போராட்டம் எப்படி சாத்தியமாகும்? வெற்றி பெறும்? அவர்களின் 40 ஆண்டுகால அனுபவத்தில் விவசாயிகளை அவர்களது அடிப்படையான கோரிக்கைகளுக்காக கூட திரட்டமுடியாதவர்கள் ஆயுதப்போராட்டத்திற்கு வருவார்களா?
இதே காலத்தில் ஆளும் வர்க்க அரசு கட்டமைப்பின் அசுர வளர்ச்சியை துளிகூட கணக்கில் எடுக்கவில்லை. ஏங்கல்ஸ் 1848-ல் அரசு இருந்த நிலைமையில் தடையரண்போராட்டங்கள் பலமாக இருந்தது. இது 1895-ல் நிலைமைகள் மாற்றம் ஏற்பட்டு அரசு பலத்தை கூட்டியுள்ளதை கணக்கில் எடுக்கவேண்டும் என்று ஜம்பது ஆண்டுகால அனுபவத்தை துல்லியமாக மதிப்பிடுகிறார். ஆனால் இந்திய மாவோயிஸ்டுகள் இந்திய அரசின் தகவல் வளர்ச்சி. போக்குவரத்து, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம், பலமான ராணுவம் என அரசின் அசுர வளர்ச்சிபற்றி சிறிதும் கணக்கில் எடுக்காத கனவுலக திட்டமாக ஆயுத போராட்டம் என்று அறிவிக்கின்றனர். எனவேதான் இவர்களது மக்கள் யுத்தம் என்ற பெயரால் நடத்துகிற தனநபர் அழித்தொழித்தல் திட்டம், அரசியல் எதிரிகளையும் அடிமட்ட அரசு ஊழியர்களையும் நோக்கி பயன்படுத்தப்படுகிறது. அவர்களை மட்டுமே படுகொலை செய்கின்றனர். விவசாய புரட்சிகளின் எதிரிகளாக இருக்கக்கூடிய நிலபிரபுக்களையோ அல்லது பெருமுதலாளிகளையோ இவர்கள் அழித்தொழித்ததாக வரலாறு இல்லை. காரணம் இவர்களுடன் நெருக்கமான உறவு உள்ளது. மாவோயிஸ்டு தலைவர் ஒருவர் 2009-ல் தனது பேட்டியில்  நாங்கள் தொழில் நிறுவனங்களிடமும், பெருமுதலாளிகளிடமும் பணம்வசூலிக்கின்றோம், இதில் ஒன்றும் தவறில்லை. அரசியல் கட்சிகள் நன்கொடை வாங்கவில்லையா? என்று கேட்கின்றார். வர்க்க எதிரிகளிடமே சரணாகதி அடைந்துவிட்டு யாருக்கு எதிராக ஆயுதப்போராட்டம் நடத்துகின்றனர்? இவர்களது ஆயுதக்குழு சில தாக்குதல்களை நடத்திவிட்டு காடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும், அதன்பிறகு அரசுபடைகள் அங்குள்ள ஆதிவாசிமக்களை வேட்டையாடும்போது அவர்களை பாதுகாக்க முடியாத கையறு நிலையாக இருப்பார்கள். இதுதான் சட்டிஸ்கர், ஜார்கன்டில் நடந்து வருகின்றது. ஒரிசாவில் விஎச்பி தலைவரை 2008-ல் படுகொலை செய்துவிட்டு காடுகளில் ஒளிந்துகொண்டனர். இதன்பிறகு பல ஆயிரம் கிறிஸ்துவ மக்கள் வேட்டையாடப்பட்டனர், வீடுகளையும், வழிபடும் இடங்களை இழந்தனர். இதுதான் இவர்களது ஆயுதப்போராட்டத்தின் அன்பளிப்பு ?

பூனை கண்ணை மூடிக்கொண்டால்..

                       தேர்தல் மற்றும் ஜனநாயக நடவடிக்கை பற்றி யெல்லாம் மாய உலகத்தில்தான் மாவோயிஸ்ட்கள் சஞ்சரிக்கின்றனர். தேர்தல் வரும்போது புறக்கணிப்பை அறிவிப்பார்கள். தேர்தலில் பதிவாகாத வாக்குகளை தங்களது வெற்றி என்று அற்பமான முறையில் பறைசாற்றி கொண்டாடுவார்கள்.2009-ல் சட்டீஸ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், மராட்டியத்தில் சுமார் 50 சதமான வாக்குகள்தான் பதிவானது என்பதை சுட்டிக்காட்டி, வாக்களிக்காதவர்கள் மாவோயிச அழைப்பிற்கு செவிசாய்த்தனர் என்றனர். ஒரு பத்திரிக்கையாளர் கேட்டதுபோல் பம்பாயில் 57 சதமான மக்கள் வாக்களிக்கவில்லை, இவர்கள் எல்லாம் மாவோயிச ஆதரவாளர்களா? என்றார். கண்ணை மூடிக்கொண்ட பூனைக்கும், மாவோயிஸ்டுகளின் தேர்தல் புறக்கணிப்பு மதிப்பீடும் ஒன்றுதான்.

                                 பாராளுமன்றமும் இதர ஜனநாயக அமைப்புகளும் புரட்சிகர முன்னேற்த்திற்கு தடையானது என்றும், அவற்றை பயன்படுத்தக்கூடாது என்றும் மாவோயிஸ்டுகள் வாதாடுகின்றனர். ஆனால் மார்க்சிஸ்ட் கட்சி அனைவருக்கம் வாக்குரிமை மற்றும் பாராளுமன்றத்தையும்  சட்டமன்றத்தையும் உழைப்பாளி மக்களின் ஜனநாயக போராட்டத்திற்கு ஒரு கருவியாகவும், அவர்களது நலன்களை பாதுகாக்கவும் பயன்படுத்திட வேண்டும் என்றும் மதிப்பிட்டு செயல்படுகிறது. முதலாளித்துவ வர்க்க ஆட்சியில் பாராளுமன்ற முறையில் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அது பயன்படுகிறது. இன்றைக்கும் பாராளுமன்றத்திற்கு சுரண்டும் வர்க்கத்திட மிருந்துதான் ஆபத்து வருகிறது என்பதை மாவோயிஸ்டுகள்  உணர மறுக்கின்றனர். சோவியத் யூனியனில் ஜனநாயகத்தை ஆழப்படுத்தாமல் சோசலிச தன்மைகள் மீறப்பட்டதால் அதிகாரவர்க்கப்போக்கும், அரசு கட்சி வேறுபாடின்றி செயல்பட்டதும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டனர் என்பதைகூட இந்த மாவோயிஸ்டுகள் பாடமாக கற்க தயாராக இல்லை. ஏன் பக்கத்து நாட்டு நேபாளத்தில் உள்ள மாவோயிஸ்ட்கள் குறிப்பிட்ட அரசியல் சட்டத்தின் கீழ் பல கட்சி ஆட்சிமுறையை பயன்படுத்துவது என்று முடிவுக்கு வந்து செயல்படுகின்ளனர்.அதைகூட பாடமாக இவர்கள் எடுத்துக்கொள்ள தயாராக இல்லை.

                     வடகிழக்கு மாகாணத்திலும், காஷ்மீரிலும் பிரிவினை வாத இயக்கத்தை இவர்கள் தேசிய இனவிடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கின்றனர். அவர்கள் பிரிந்துபோவதை எதிர்க்கதேவையில்லை என்று கூறுகின்றனர். தேசிய சுயநிர்ணய உரிமையை மொத்த சூழ்நிலையுடன் பொருத்தாமல் இயந்திரகதியாக பேசுகின்றன. 1840-ல் காரல் மார்க்ஸ் போலந்து மற்றும் ஹங்கேரி தேசிய இயக்கத்தை ஆதரித்தார். காரணம் ருஷ்ய மற்றும் ஆஸ்திரிய பேரரசின் அடக்கு முறைகளை எதிர்த்து நின்றதுடன் அவர்களது அரசியல் ஜனநாயகம் ஐரோப்பிய தொழிலாளிவர்க்கத்திற்கு அடிப்படை தேவையாக இருந்தது. அதே நேரத்தில் ரஷ்ய ஜார் மன்னருக்கு ஆதரவாக எழுந்த செக் மற்றும் தெற்கு ஸ்லாவ் இயக்கத்தை எதிர்த்தார். காரணம் இது தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமானதாக இருந்தது. எனவே ஒட்டுமொத்த ஜனநாயக இயக்கத்துடன் ஒப்பிட்டுத்தான் தேசிய சுயநிர்ணய உரிமை கணக்கில் எடுக்கப்படவேண்டும். காஷ்மீர் தனியாக செல்வது, அல்லது பாகிஸ்தானுடன் செல்வது என்பது அமெரிக்க ஏகாதிபத்யம் காலுன்ற அதிலும் குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஆப்கான் நாடுகளில் தலையிட தளமாக அமையும் என்பதை இன்றைய சர்வதேச அறிவுள்ள எவரும் கணிக்கமுடியும். ஆனா மாவோயிஸ்டுகள் இதை பார்க்க மறுக்கின்றனர். ஆயுதம் தாங்கிய அனைவரும் போராளிகள், விடுதலையாளர்கள் என்று மட்டமாக மதிப்பிடுவது விஞ்ஞான பார்வையல்ல.
                        மாவோயிஸ்டுகள் தாக்குதளின் இலக்கு மார்க்சிஸ்ட் கட்சிதான் என்பது சமீபத்திய விபரங்கள்கூட நிரூபணம் செய்கிறது. சட்டீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட் ,மாநிலத்தைவிட மேற்குவங்கத்தில் 57 சதம் ஆதிவாசி மக்களுக்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. 1,76,668 ஆதிவாசிகளுக்கு 1,97,350.39 ஏக்கர் நிலம்பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.இதே பகுதியில் 2009 பாராளுமன்றத் தேர்தலில் 3 லட்சம் வாக்குகளில் வெற்றிபெற முடிந்தது. மார்க்சிஸ்டுகள் மக்கள் தளத்தை இழந்துவிட்டால் அவர்களை தாக்க வேண்டிய தேவை மாவோயிஸ்டுகளுக்கு இருக்காது. அங்கு மார்க்சிஸ்டுகள் மக்கள் செல்வாக்குடன் இருப்பதாலேயே அதன் ஊழியர்களை, தலைவர்களை கொலை செய்துவிட்டு காட்டுக்குள் ஓடி ஒளிந்து கொள்கின்றனர்.

ஆளும் வர்க்க சேவகம்:

வலது திருத்தல் வாதமும் இடது அதிதீவிரவாதமும் எப்போதும் ஆளும் வர்க்கத்திற்கு சாதகமாகவே இருந்து வந்துள்ளது என்பது உலக வரலாற்று உண்மையாகும். இந்தியாவில் கடந்த 40 ஆண்டுகளாக நக்சலைட்டுகளும், தற்போதைய மாவோயிஸ்டுகளும் இதையே செய்கின்றனர். 1970-ம் ஆண்டுகளில் மேற்குவங்கத்தில் காங்கிரசுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியை தாக்கினர்.  1972ல் ஆந்திராவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களை படுகொலை செய்தனர். தற்போது திரிணாமுல் காங்கிரசுடன் இணைந்தும், இதர பிற்போக்கு மதவாத சக்திகளுடன் இணைந்தும் மார்க்சிஸ்ட் கட்சியை தாக்குகின்றனர்.  2009-ல் மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஸ்வரராவ் அடுத்த மேற்கு வங்க முதல்வராக மம்தாபானர்ஜியை பார்க்க விரும்புகிறோம் என்று தங்களது புரட்சிகரமான கொள்கையை பேட்டியாக கொடுத்தார். இதனால்தான சில முதலாளித்துவ பத்திரிகைகள் பாராளுமன்ற இடதுசாரிகளுக்கு மாற்று என்றும், அதிகாரபூர்வ இடதுக்கு மாற்று என்றும் இந்த மாவோயிஸ்டுகளுக்கு மாலை சூடுகின்றனர்.சில அறிவுஜீவிகளும் இதற்காக சில சாகசசெயலில் ஈடுபடுகின்றனர்.சில பத்திரிக்கைகள் எழுதியுள்ளது போல் இந்த மாவோயிசம் கனவின் மரணம் அல்ல, மாறாக ஆளும்வர்க்க கனவின் செயலக்கம்மிக்க வீரர்கள்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் மக்கள் செல்வாக்கு படைத்த இடதுசாரி இயக்கத்தை ஒழிக்க நேரடியாக ஈடுபடுகிறது. இந்திய பெருமுதலாளிகளும் இதே வேலையினை செய்கின்றனர். இவர்களுடன் கைகோர்த்து மாவோயிஸ்டுகள் வலம் வருகின்றனர். கடந்த 40 ஆண்டுகள் இந்தியாவில் எந்தப்பகுதியிலும் மக்களிடையே முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் ஆளும் வர்க்க சேவகர்களாக செயல்படும் மாவோயிஸ்டுகளை தத்துவார்த்த அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி உழைக்கும் மக்களின் நலன்களை முன்னெடுத்து செல்வதே இன்றைய தேவையாகும்.                             

(ஆகஸட் மாத மார்க்சிஸ்ட் மாதஇதழ் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது)                                                                                      

ஞாயிறு, நவம்பர் 28, 2010

நவ.28.பிறந்ததினம் எங்கல்ஸ்:வரலாற்றைப் புரட்டிப்போட்டவன்.


                                                                  அ.பாக்கியம்
          
    என்னால் போராட்டத்தில் ஈடுபடமுடியாத அந்த வினாடி                             என்னை மரணம் தழுவிக்கொள்ளட்டும் 
             
           என்று உலக உழைப்பாளி மக்களின் தத்துவத்தை உருவாக்கிய அந்த மாபெரும் ஆசான் பிஃடரிக் எங்கல்ஸ் இப்படித்தான்  மரணத்திற்கு அழைப்பு விடுத்தார்.அவரைப் பொறுத்தவரை வாழ்வது என்பது வேலை செய்வது, வேலை செய்வது என்பது போராடுவது.சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல் என்ற வள்ளுவனின் குறளை நிஜமாக்கியவர் ஏங்கல்ஸ். ஐரோப்பாவில் நிலபிரபுத்துவத்தை முதலாளித்துவம் நிர்மூலமாக்கி கொண்டிருந்த காலத்தில் ஜெர்மானியில் உப்பெர்தல் என்ற சிற்றூரில் 1820 நவ.28-ல் பிறந்தார் எங்கல்ஸ். தந்தையின் கடுமையான கட்டுப்பாட்டில் குடும்பம் அஞ்சி நடுங்கியது.தந்தை தீவிரமதப்பற்றாளர். எங்கே கட்டுப்பாடுகள் அதிகமோ அங்கே சுதந்திர வேட்கையும் தீவிரமாக இருக்கும். இறுக்கமான குடும்ப சூழலில்தான் எங்கல்ஸ் தனது இளமைக்காலத்தை கடத்தினார். ஆனாலும் அறிவுத்தாகம், சுரந்திரச்சிந்தனை, விடாமுயற்சி ஆகியவை இளமையிலேயே அவரிடம் நிறைந்து காணப்பட்டது. 15-வது வயதில் எங்கல்சின் நடவடிக்கையில் அவரது தந்தை சந்தேகம் கொண்டார். ஒரு நாள் மகனின் பெட்டியை சோதனையிட்டு, வேதனைப்பட்டு தனது மனைவியிடம் தெரிவித்தார் என்ன தண்டனை கொடுத்தாலும் அவன் கீழ்படிய மறுக்கிறான். அவனது பெட்டியில் பதிமூன்றாம் நுற்றாண்டு பிரபுகுல வம்சத்தைச் சேர்ந்த வீரர்களை பற்றிய நவீனத்தை கண்டேன. கடவுள் அவனை காப்பாற்றட்டும் . என்றார்.
அக்காலத்தில் மதநூல்களைத்தவிர வேறு எதையும் படிப்பது தவறு மட்டுமல்ல மாபெரும் குற்றமாக கருதப்பட்டது. நாடகம், நடனம், கதைகள் படிப்பது கூட எங்கல்ஸ் வாழ்ந்த உப்பெர்தலில்(நதிதீரப் பள்ளத்தாக்கு) மதவிரோத செயலாக கருதப்பட்டது.இவரது சிற்றூரில் சமுக நடவடிக்கைகளை மதவேடதாரிகளே நிச்சயித்தனர்.சகிப்புத் தன்மையற்ற பைட்டிசம் என்ற கிறிஸ்துவமதப்பிரிவு இங்கு இருந்தது. இருந்தபோதிலும் ஆலை முதலாளிகள் குழந்தைகளையும், தொழிலாளர்களையும் சுரண்டிய கொடுமையை நேரில் கண்டார். கேள்விகள் எழுந்தன? விடைகள் கிடைக்காததால் கேள்விகள் தொடர்ந்தன . எனவேதான் தனது இளமைக்கால கடிதத்தில் ஊரின் பெருமைகளை மட்டும் பேசித்திரியாமல் உப்பெர்தல் என்பதை முக்கெர்தல்(பாசாங்கு பள்ளத்தாக்கு) என்று வர்ணித்தார் 

               எங்கல்சின் நடவடிக்கை மீது அச்சம் கொண்ட தந்தை அவரை  இறுதிபடிப்பை முடிக்கவிடாமலேயே 1837ம் ஆண்டு வர்த்தகத்திற்கு அழைத்துச்சென்றார். ஓராண்டுகளுக்கு பிறகு பிரேமன் என்ற நகரில் ஒரு பெரிய வர்த்தக நிறுவனத்திற்கு அனுப்பிவைத்தார். அங்கு எங்கல்ஸ் வர்த்தக வேலையோடு தனது சொந்த ஊரில் பங்கேற்க முடியாத நாடகம், நடனம், இசை அரங்குகளுக்கும், நீச்சல், கத்திச்சண்டை, குதிரை சவாரி போன்ற விளையாட்டிலும் ஈடுபட்டு வந்தார். பிரேமன் நகரிலும் உழைப்பாளிமக்களின் வாழ்வை கூர்ந்து கவனித்தார். ஒரு மன்னன் தனது நாட்டில் சிறந்ததாக எதை வைத்திருக்க முடியுமோ அதன் உருவகமே இந்த சாமானியன்தான்  என எழுதினார். 

                தனது மகனின் ஆன்மீக வளர்ச்சி பற்றி கவலை கொண்ட தந்தை அவரை பிரேமனில் உள்ள பாதிரியார் வீட்டில் குடியேற்றினார். பாதிரியின் வீட்டில் வாழ்ந்த எங்கல்ஸ் தனது முன்னோர்களின் மத மூடநம்பிக்கைகள் மீது வெறுப்பு கொண்டார். ஆன்மீக வளர்ச்சிக்கு அனுப்பப்பட்ட அவர், அதன் போலித்தனத்தை புரிந்து கொண்டு மத மூடநம்பிக்கையிலிருந்து முற்றிலும் விடுபட்டார். பைபிளில் தீர்க்க முடியாத முரண்பாடுகள் மண்டிக்கிடக்கின்றன. மதத்தையும் விஞ்ஞானத்தையும் ஒத்துப்போகச்செய்ய முடியாது என்றார் எங்கல்ஸ். இதனால் அவர் அளவற்ற சிரமங்களை சந்திக்க நேர்ந்தது.

இளம் ஜெர்மனி

                இதே காலத்தில் இளம் ஜெர்மனி என்ற அமைப்புகளுடன் எங்கல்சுக்கு  தொடர்பு ஏற்பட்டது. இவ்வமைப்பு இலக்கியத்தை சமூக வாழ்வுக்கும்,  அரசியலுக்கு ஈடுபடுத்த முயன்றதால்  எங்கல்ஸ் இவ்வமைப்பை நோக்கி ஈர்க்கப்பட்டார். ஆயினும் இவ்வமைப்புகளின் கொள்கை முதிர்ச்சி  பெறாமலும், அரசியலில் தெளிவற்றும் இருந்தது. உலக துன்பங்களுக்காக இக்குழுவினர் அழுது புலம்பினர். இவர்களின்ஜெர்மன்தந்தி என்ற பத்திரிக்கையில் எங்கல்ஸ்                       
                                                 கவிதைகளும்,கட்டுரைகளும்எழுதினார்.இக்கட்டுரைகளில்ஆட்சியாளர்கள், மற்றும் சுரண்டல் பேர்வழிகளின் முகத்திரையை கிழிதெறிந்தார். ஆஸ்வல்டு என்ற புனைப்பெயரில் வெளிவந்த இக்கட்டுரைகள் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.இக்கட்டுரையாளரை அறிய மக்கள் பல யூகங்களை மேற்கொண்டனர். பத்திரிக்கையின் ஆசிரியர்தான் இந்த ஆஸ்வல்டு என நினைத்தைனர். ஞிபலர் பிரபலமான இலக்கியவாதிகளின் பெயர்களை  நினைத்தனர். ஆனால் மக்கள் யூகித்த பிரபலமான இலக்கியவாதிகளையும், இளம் ஜெர்மனி  என்ற அமைப்பின் பலவீனத்தையும் கடுமையாக விமர்சித்து அதே பத்திரிக்கையில் ஆஸ்வல்டு என்ற அதே பெயரில் எங்கல்ஸ் எழுதியபோது மக்களின் யூகங்கள் தவிடு பொடியாகின. உப்பெர்தலின் எறும்பு புற்றை கலைத்தவர் இந்த இளம் எங்கல்ஸ் என்பதை மக்கள் அறிய முடியவில்லை.

 இராணுவ வீரனிலிருந்து இளம் ஹெகல்வாதியா

                  1841ம் ஆண்டு அவரின் தந்தை பெர்லினுக்கு ராணுவ சேவைக்கு எங்கல்சை அனுப்பினார். பெர்லினில் எங்கல்ஸ் பீரங்கிப் படையில் சேர்ந்ததுடன் அப்படையில் சிற்றதிகாரியாகவும் உயர்ந்தார். அவருக்கு விருப்பம் இல்லாத பணி என்றாலும் அவருக்க பல அனுபவத்தை இந்த இராணுவசேவை கற்றுக்கொடுத்தது. ஓய்வு நேரத்தை ஒழுங்காக பயன்படுத்தும் பழக்கம் எங்கல்சுக்கு இருந்ததால் இராணுவ சேவைக் காலத்தில் நேரம் கிடைக்கும்போது பெர்லின் பல்கலைக்கழகத்திற்க சென்று வந்தார். அங்கேதான் அவருக்கு இளம் ஹெகல்யவாதிகளுடன் தொடர்பு கிடைத்தது. இங்கே அவர் மார்க்சை சந்திக்க முடியாவிட்டலும் அவரைப்பற்றி அதிகமாகவே கேள்விப்பட்டார். பெர்லினில்தான் எங்கல்ஸ் இளம் ஜெர்மானியர்களுடன் அதுவரை இருந்த தொடர்பை துண்டித்துக்கொண்டு இளம் ஹெகலியராகவும், பிறகு இடதுசாரி  ஹெகலியர் பிரிவிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். 1842ம் ஆண்டுகளில் இடதுசாரி ஹெகலியவாதிகளுடன்  தீவிர தத்துவப்போராட்டத்தில் ஈடுபட்டார். இக்காலத்தில்ஷெல்லிஸ்டும் திருவழிபாடும்என்ற பிரசுரம் எங்கல்சால் எழுதப்பட்டு பெயர் குறிப்பிடப்படாமல் வெளிவந்தது. இந்த பிரசுரத்தின் மேதாவிலாசத்தைக்  கண்டு ஜெர்மன் ஆண்டு மலரின் ஆசிரியர்  ரூகே, இதை எழுதியவர் சிறந்த அறிவாளியாக,டாக்டராக இருக்கவேண்டும் என கருதி அவர் தனது கட்டுரையில்  இதை எழுதியவரை டாக்டர் என்றே குறிப்பிடுகின்றார். எங்கல்ஸ்  அதைக்கண்டு கூசிப்போனார். உடனே அந்த ரூகேவிற்கு கடிதத்தின் மூலம்  நான் ஒரு டாக்டர் அல்ல. அப்படி ஒருபோதும் ஆகவும் முடியாது. நான் வெறும் வியாபாரி. பிரெஷ்ய மன்னரின் பீரங்கிப் படையாளன்.எனவே இந்த பட்டத்திலிருந்து தயவு செய்து என்னை விடுவித்துவிடுக என்று எழுதினார். அந்த அளவு டாக்டர் பட்டத்தின் மீது உயரிய மரியாதையும் தன்னைப்பற்றிய தன்னடக்கத்தையும் கொண்டிருந்தார் எங்கல்ஸ்.

வர்த்தகத் தளத்திலிருந்து வர்க்கக் களத்திற்கு....

                   1842ம் ஆண்டு அக்டோபர் 8ம் நாள் இராணுவசேவைய் முடித்து சொந்த ஊர் திரும்பினார். உடனே அவரது தந்தை அவரை நாடு கடத்தினார்(?) இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள எர்மன்-எங்கல்ஸ் வர்த்தக நிறுவனத்திற்கு வியாபாரத்தில் அனுபவம் பெறவேண்டும் என்று அனுப்பிவைத்தார். அவருக்கோ வர்த்தகத்தில் விருப்பமில்லை என்பது மட்டுமல்ல தொழில் மீது தீராதகோபமும் கொண்டிருந்தார். ஆனாலும் வாய்ப்பை பயன்படுத்தி தனது அறிவுத்தாகத்தை தீர்த்தக்கொண்டார். இங்கு ஏராளமான  ஆய்வுகளில்  ஈடுபட்டார். தொழில்புரட்சி இங்கிலாந்தை முதலாளித்துவ நாடாக மாற்றி இருந்த. அங்கு ஏற்பட்டு வரும் புரட்சிகரமான சூழ்நிலைகளைப் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். மான்செஸ்டர், லீட்ஸ் ஆகிய நகரங்களில் தொழிலாளர்கள் அல்லலுக்கு உள்ளாகி அடைந்து கிடந்தனர். அத்தெருக்களில் எங்கல்ஸ் அலைந்து திரிந்து தெழிலாளர்களை பற்றி அறிந்துகொண்டார்.இக்காலத்தில்தான்  இங்கி லாநதில் மக்கள் உரிமைகளுக்காக போராடக்கூடிய சாசன இயக்கம் வீறுகொண்டு எழுந்தது. இந்த இயக்கத்துடன் எங்கல்ஸ் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு செயல்பட்டார். சாசன இயக்கத்தின் பலத்தையும், பலவீனத்தையும் மதிப்பீடு செய்து அதிலிருந்தவர்களை பலவீனத்திலிருந்து வென்றெடுக்க முயன்றார். இதேபோல் கற்கனாவாத பிரிட்டிஷ் சோஷலிஸ்டுகளின் தொடர்பும் கிடைத்தது. அவர்களின் ஒழுக்கம் நிறைந்த புத்துலகம் என்ற பத்திரிக்கையில் கட்டுரைகளும் எழுதினார். 1844ம் ஆண்டு மார்க்சும்,ரூகேயும் இணைந்து வெளியிட்ட ஜெர்மன்-பிரெஞ்சு   ஆண்டு மலரில் எங்கல்சின் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனக்குறிப்பு என்ற கட்டுரை வெளியாகிது. இதைபற்றி மார்க்ஸ்மேதமை நிறைந்த முதற்குறிப்பு என்று கூறினார்.

ஆளுமைகளின் சங்கமம்

                       களப்பணி. அறிவு. நட்பு என பன்முகத்தன்மைகொண்ட இருபெரும் ஆளுமைகளின் சந்திப்பு 1844-ல் ஆகஸ்ட் மாதம் பாரிஸ் நகரில் நிகழ்ந்தது. எங்கல்ஸ் மான்செஸ்டரிலிருந்து ஜெர்மனியில் உள்ள தனது ஊருக்கு செல்லுகிறபோது, பாரீசிற்கு சென்று காரல் மார்க்சை சந்திக்கிறார். அவரோடு தங்கி இருந்த அந்த 10 நாட்கள்  நட்பின் இலக்கியம் பல உருவாக இலக்கணமாக அமைந்தது. எங்கல்ஸ் படிப்படியாக பல நாடுகளில் பயணித்து அறிவிஜீவிகளுடன் விவாதித்து, ஆய்வுகளை மேற்கொண்டு விஞ்ஞான  சோஷலிச சத் தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். காரல்மார்க்ஸ் ஆய்வுகளை நடத்தி மறுமுனையிலிருந்து இத்தத்துவத்தை நோக்கி முன்னேறுகிறார். உழைப்பாளி வர்க்க சிந்தனை அவர்களை ஒன்றிணைத்தது. 

                       1842ல் நவம்பரில் கோலோனில் சிறிது நேரம் சந்திப்பு நடந்தது. ஆனால் அவை அவசர சந்திப்புதான்.ஆனாலும் மாக்சை சந்தித்து வீடு திரும்பியவுடன் வீட்டின் கட்டுப்பாடுகள் அவரது சுதந்திர சிந்தனைக்கு, புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் பெரும்தடையாக இருப்பதை உணர்ந்து 1845ம் ஆண்டு எங்கல்ஸ் வீட்டை விட்டு வெளியேறி புரூசெல்ஸ் சென்றடைந்தார். அதே நேரத்தில் பிரஷ்ய அரசு கோரிக்கையை ஏற்று பிரெஞ்சு அரசு காரல்மார்க்சை நாட்டைவிட்டு வெளியேற்றியது. அவரும் புரூசெல்ஸ் சென்றார்.இந்த சந்திப்பின்போது மார்க்ஸ் வரலாற்று பொருள்முதல் வாதம்  பற்றி முடித்துவைத்திருந்தார். இதை மேலும் விரிவுபடுத்தி ஆய்வுநடத்தி படிப்பதற்காக போதுமான அளவு நுலக வசதி புருசெல்சில் இல்லாததால்  ஆறுவாரப்பயணத்தில் இங்கிலாந்து சென்றனர். மான்செஸ்டர் நூலகத்தில் பெரும்பகுதி நாட்களை செலவிட்டு கடைசியாக லண்டன் போய்ச்சேர்ந்தனர். இங்கேதான் எங்கல்ஸ் தனது புரட்சி நடவடிக்கையின் அடுத்த கட்டத்தில் காலடி எத்துவைத்தார். ஒரு பாட்டாளிவர்க்க புரட்சி கட்சியை முன்னெடுத்துச்செல்ல அவசியம் என்பதை உணர்ந்து அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கினார். 

நீதியாளர் சங்கத்திலிருந்து கம்யூனிஸ்ட் லீக் நோக்கி

                  லண்டனில் மார்க்சும்-எங்கல்சும் இணைந்து அமைப்புகளை உருவாக்கும் பணிகளில் இறங்கினர். எங்கல்ஸ் தனக்கு இருந்த பழையதொடர்புகளை பயன்படுத்தி இடதுசாரி சாசனவாதிகளுக்கும், நேர்மையாளர் சங்கத்திற்கம் இணைப்பை ஏற்படுத்தும் வேலைகளை செய்தார். இருவரும் புருசெல்ஸ் நகரத்திற்கு சென்று  ஜெர்மன் தொழிலாளர்களை திரட்டி அமைப்பினை ஏற்படுத்தினர். இவ்வமைப்பின்  சார்பில் எங்கல்ஸ் 1846 பாரீஸ் சென்றார். அங்கு பல கற்பனாவாத சோஷலிஸ்டுகளுடன் விவாதம் நடத்தியும், தத்துவப்போராட்டத்தை  நிகழ்த்தியும் பல அமைப்புகளை ஒன்றி ணைக்கும் வேலையில் ஈடுபட்டார். இச்சூழலில் 1847-ல் லண்டனில் செயல்பட்டு வந்த நேர்மையாளரின் சங்கத்தலைவர் யோசிப்மோல் புரூசெல்ஸ் சென்று மாச்சையும், பிரான்ஸ் சென்று எங்கல்சையும் சந்தித்து தனது அமைப்பில் உறுப்பினராக சேரவேண்டும் எனவும் சங்கத்திற்கான புதிய வேலைத்திட்டத்தை உருவாக்கிடவும் வேண்டினார். இதன்பிறகு 1847 ஜீன் 2 முதல் 9 வரை சங்கத்தின் காங்கிரஸ் லண்டனில் கூடியது. மார்க்ஸ் பணம் இல்லாததால் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. எங்கல்ஸ் பாரீஸ்நகர பிரதிநிதியாக கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் நீதியாளர் சங்கம் கம்யூனிஸ்ட் லீக் என பெயர் மாறியது. எல்லா மனிதர்களும் சகோதரர்களே என்பது உலகத்தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்  என்றாகியது. இதன்பின் மார்க்சும், எங்கல்சும் ஒன்று சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை உருவாக்குவதில் ஓராண்டு ஈடுபட்டு 1848 பிப்ரவரியில் உழைப்பாளி மக்களின் பேராயுதமான கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர். அறிக்கை ஐரோப்பிய முதலாளித்துவத்தை ஆட்டம்காணச்செய்ததுடன், தொழிலளாளி வர்க்கத்திற்கு புதுயுகத்தை திறந்தது. மேலும  கற்பனாவாத சோஷலிசத் திற்கு எதிரான உக்கிரமான யுத்தம் முடிவுக்கும் வந்தது. களமும்-கருவியும் மாறுகிறது

                     1848-49பிரான்சில் வர்க்கப்போராட்டமும் ஐரோப்பாவில் தொழிலாளர் எழுச்சியும் தீவிரமாக நடைபெற்து.எங்கல்ஸ் இப்போராட்டத்தில் நேரடியாக களத்தில் இறங்கினார். நூலகத்திலிருந்து  யுத்தகளத்திற்கு சென்றார். பிரான்சில் புரட்சியை துண்டியதற்காக அரசு  எங்கல்சை வெளியேற்றியது. அவர் புருசெல்ஸ் நகருக்கு சென்று அங்கு மார்க்ஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து இயக்கம் நடத்திவிட்டு மீண்டும் பாரீஸ் வந்தார். பிரான்சில் 400-க்கும் மேற்பட்ட ஜெர்மானிய தொழிலாளர்களை அணிதிரட்டி ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கைகளை  தயாரித்து அவர்களது ஒவ்வொருவரின் கையிலும் கொடுத்து ஜெர்மனி புரட்சிக்கு, தொழிலாளர்களை அணிதிரட்ட அனுப்பி தானும் ஜெர்மனி சென்றார். ஜெர்மனியில் தொழிலாளர் புரட்சியை தீவிரப்படுத்த ஒரு பத்திரிக்கை அவசியம் என உணர்ந்து 1848 ஜீன்-1 ல் புதிய ரைன் பத்திரிக்கை மாச்கை ஆசிரியராக கொண்டு வெளிவந்தது. எங்கல்ஸ் அரசியல் கட்டுரைகளை இலக்கிய நயத்துடன் இப்பத்திரிக்கையில் எழுதினார்.

                       ரைன் மாநிலத்தில் புரட்சி தீவிரமாவதைக் கண்டு ராணுவம் குவிக்கப்பட்டது. பத்திரிக்கை தடை செய்யப்பட்டது. எங்கல்ஸ் தலைமறைவாக வேண்டும் என கட்சி உத்தரவிட்டது. எங்கல்ஸ் ரகசியமாக புருசெல்ஸ் செல்லும் போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அங்கிருந்து பாரிசிற்கு சென்ற போது  பாரீஸ் புரட்சி தோல்வி கண்டு பிரான்ஸ் இறந்து கிடந்த காட்சியைக் கண்டு என மனம் நொந்து பணம் இல்லாத நிலையிலும் கால்நடைப் பயணமாக ஸ்விட்சர்லாந்து சென்றார். அங்கிருந்தபடியே ஹங்கேரி புரட்சி பற்றியும், ஸ்விட்சர்லாந்து பற்றியும்  ரைன் பத்திரிகைக்கு கட்டுரை  எழுதினார். 1849 ஜனவரி ஜெர்மனி திரும்பியவுடன் ஒரே மாதத்தில் மாச்கும், எங்கல்சும்  கைது செய்யப்பட்டு வழக்ககு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கில் மார்க்சும், எங்கல்சும் வாதாடி விடுதலை பெற்றனர். இந்த வழக்கில் இவர்களின் வாதத்திறமை காணக்கண்கோடி வேண்டும் என சமகாலத்தவர்கள் வர்ணிக்கின்றனர்.

                    விடுதலையான பிறகு சோர்ந்து விடவில்லை. ஐரோப்பாவின் எழுச்சிக்கு திட்டம் தீட்டினர். ஹிதேகாலத்தில்  ரைன்  மாநிலத்தின் ஒரு பகுதியில் நடைபெற்ற புரட்சிக்கு எங்கல்ஸ் நேரடியாக சென்று புரட்சிப்படைகளை ஒருங்கிணைத்தார். மீண்டும் தென்மேற்கு ஜெர்மனி  சென்று புரட்சியை விரிவுபடுத்தும் பணியை செய்தார்.  அதன் பிறகுஇருவரும் பிரான்சை நோக்கி சென்றனர். அங்கு மீண்டும் இருவரும் கைது செய்யப்பட்டு விடுதலை ஆனார்கள். இதன்பின் மார்க்ஸ் பிரான்ஸ் சென்றார். எங்கல்ஸ் அங்கு நடந்த தொழிலாளர்களின்  ஆயுதம் தாங்கிய புரட்சியில் கலந்து கொண்டார். எங்கல்ஸ் புரட்சிக்படையில் கலந்துகொண்டது புரட்சி வீரனாக மட்டுமல்ல. இராணுவத்தில் பணிபுரிந்தபோது அது பற்றிய அறிவும், யுக்திகளையும் தெரிந்து வைத்திருந்தார் என்பதும் முக்கிய காரணம். எனவே அவர் தடையரண் உருவாக்குவது, பின்புலத்தை தயாரிப்பது உட்பட ஒரு புரட்சிப்படையை வழிநடத்தும் தலைவனாக இருந்து வழிநடத்தினார்.

 நட்பின் இலக்கணம்
                  
                1848-49 புரட்சிக்கு பிறகு ஐரோப்பா அடங்கி இருந்தது. பொருளாதார ரீதியில் எங்கல்ஸ் மார்க்ஸ் இருவரும் சிரமப்பட்டனர். எனவே, தன்னைவிட வறுமையில் வாடும் மார்க்ஸ் குடும்பத்தை பாதுகாக்க அவரது பொருளாதார ஆய்வுப்பணி தடங்களின்றி தொடர எங்கல்ஸ் மீண்டும் 1850-நவம்பவரில் மான்செஸ்டரில் வர்த்தக நிறுவனத்திற்கு சென்றார். முதலில் பிரதிநிதியாக, பிறகு பொறுப்புள்ள பிரதிநிதியாக, பிறகு 1864ல் தந்தை இறந்த பிறகு பங்குதாரராக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 20 ஆண்டுகாலம் இதில் ஈடுபட்டார். நாய்த்தனமான வர்த்தகம என எரிச்சலோடு நண்பர்களுக்கு எழுதினார். இக்காலத்தில் இவரது மனைவி அயர்லாந்து தேசத்தை சேர்ந்து மேரிபேர்ன்ஸ் தான் உறுதுணையாக இருந்தார். இவரும் 1863-ஜனவரியில் இதயநோயால் இறந்தபோது எங்கல்ஸ் துடித்துப்போனார். அவளுடன் கூடவே எனது இளமையில் கடைசித்துளியையும் புதைத்து முடித்துவிட்டதாக உணர்கிறேன் என்று மார்க்சுக்கு எழுதினார். எனினும் மார்க்ஸ் குடும்பத்தை காப்பாற்றவும்   மூலதனம் நூலை முடிக்கவும் அவர் வர்த்தகத்தில் தொடர்ந்தார். நேரடியாக பொருளாதார உதவி செய்வதோடு மட்டுமல்ல, நியுயார்க் டெல்லி டிரிபூனல் பத்திரிகைக்கு மார்க்ஸ் பெயரால் கட்டுரைகளை எழுதி அதன்முலம் மார்க்சுக்கு பணம் கிடைக்கச் செய்தார்.தன்னலம் கருதாத எங்கல்சின் இடையறாத நிதி உதவி மட்டும் இல்லையேல் மார்க்ஸ் மூலதனத்தை முடித்திருககமாட்டார், ஏழ்மையின் பாரத்தால் நசுக்கப்பட்டு மாண்டே போயிருப்பார்என்று லெனின் எங்கல்ஸின் உதவி பற்றி கூறினார்.

ராணுவ நிபுணன்

                   மான்செஸ்டரில் வேலை செய்த இக்காலத்தில் ஏராளமான ராணுவ நூல்களை கற்று கட்டுரைகளை எழுதினார். இவ்விஷயங்களை  பின்னாளில் புரட்சிக்கான தேவை எனற உணர்வோடு கற்றார். 18-ம் நூற்றாண்டின் இராணுவக்கலையின் வளர்ச்சி பற்றியும், ஐரோப்பிய இராணுவ தன்மை, பிரான்ஸ-ஆஸ்திரிய போர் பற்றி 80க்கும் மேற்பட்ட கட்டுரைகளை இக்காலத்தில் எழுதினார். இவரின் இராணுவ அறிவைப்பற்றி மார்க்ஸ் குறிப்பிடுகையில் இன்னும் சில காலத்திற்கு இந்தப்போர் (பிரெஞ்சு-பிரஷ்ய)நீடிக்குமானால் லண்டனில் உள்ள ராணுவ வல்லுநர்களில் தலைசிறந்தவனாக நீயே கருதப்படுவாய் என்று எழுதினார். இக்காலத்தில்தான்  எங்கல்ஸின் நண்பர்கள் அவருக்கு ஜெனரல்என பட்டப்பெயர் சூட்டினார்கள்.

பன்மொழிப்புலவர்

                  எங்கல்ஸ் ஏற்கனவே ஐரோப்பாவின் அடிப்படை மொழிகளை கற்றிருந்தார். கிரேக்கம், லத்தீன் அறிந்திருந்தார். 1856ல் ருஷ்ய மொழியை கற்றார். கிரிமிய யுத்தம் காரணமாக கிழக்கிந்திய பிரச்சனைகளை அறிய பாரசீக மொழியை கற்றார். இதோடு பண்டைய ஜெர்மானிய மொழியையும் கற்றார். 1864ல் டென்மார்க் பகுதியில் நடைபெற்ற போரால் ஸ்காண்ட்நேவிய மொழி பயின்றார். அறுபதாவது வயதில் முதல் அகிலத்தில் அயர்லாந்து பிரச்சனை எழுந்தபோது அது பற்றி அறிய ஐரீஷ் மொழி மற்றும் டச்சு மொழிகளும்  தனது வாழ்வின் அந்திமக்காலத்தில் ருமேனியாவிலும், பல்கேரியாவிலும் சோஷலிச அமைப்புகளுக்கு வழிகாட்டி ருமேனிய, பல்கேரிய மொழியை பயின்றார். எங்கல்ஸிற்கு 20 மொழிகள் தெரியும். 12 மொழிகளில் பேச, எழுத புலமை பெற்றிருந்தார். எட்டு மொழிகளில் படிக்க கற்றிருந்தார். வெறும் மொழிகளைமட்டும் பயிலாமல் அந்த நாட்டு வரலாறு.  இலக்கிய வரலாற்றோடு பயின்றார். எங்கல்சின் இந்த புலமை ஒப்புநோக்கு மொழியியலுக்கு உதவியது. எங்கல்சின் சிறந்த படைப்பான குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற கண்டுபிடிப்பிற்கும், மொழிகளை பற்றிய மார்க்சிய கண்ணோட்டத்திற்கும், பின்னாளில் அவர் முதல் அகிலத்தில் பணியாற்றவும் இப்புலமை உதவியது. இத்துடன் எங்கல்ஸ் இலக்கியம், கவிதைகள் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டி ருந்தார்.

முதல் அகிலத்தில்

                  1870 செப்டம்பரில் வர்த்தகத்தை விட்டுவிட்டுஅளவிடமுடியாத மகிழ்வுடன் மார்க்ஸ் இல்லத்திற்கு அருகே குடியேறினார். அங்கிருந்து அகிலத்தின் வேலைகளை செய்தார். பெல்ஜியம், ஸ்பெயின், இத்தாலி, டென்மார்க்,ஆகிய நாடுகளுக்கு கட்சியை கட்ட உதவினார். இருவரும் பாரீஸ் கம்யூன் எழுச்சிக்கு கடினமான உழைத்தனர்.எழுச்சிக்கும், கம்யூனை நடத்தவும் சாத்தியமான அளவு வழி காட்டினார்கள்.
                           
                     காரல்மார்ஸ் பொருளாதாரத்துறையில் ஆய்வை மேற்கொண்ருந்த போது, இயற்கை விஞ்ஞானத்தில் எங்கல்ஸ் ஆய்வுகளை மேற்கொண்டார். இச்சூழலில் எங்கல்ஸ் மனைவி மேரிபேர்ன்ஸ் மறைவிற்கு பிறகு அவரது தங்கை  லீசிபேர்ன்ஸ்-ஐ திருமணம் செய்திருந்தார். அவர்  1878ல் மறைந்தது மேலும் தனிமைக்குள்ளாக் கியது. இவர் அயர்லாந்து  பிரச்சனை ஆய்வுக்கு அதிகம் உதவியவர் என்று எங்கல்ஸ் எழுதுகிறார். இதை அடுத்து                           1883 மார்ச் 14-ல் மார்க்சின் மடிறவு எங்கல்சுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்திற்கு. இருந்தாலும் தனது லட்சியத்தை அடைய அயராது உழைத்தார்.
1883 மார்க்ஸ் மறைவிற்கு பிறகு எங்கல்ஸ் 12  ஆண்டுகள் வாழ்ந்தார். ஒரு புறம் மார்க்ஸ் விட்டுச்சென்ற ஆய்வுப்பணிகளை மேற்கொண்டார். மறுபுறம் வளர்ந்து வரும் பாட்டாளி வர்க்க அமைப்புகளுக்கு உதவிட நேரத்தை செலவிட்டார்.
                      
                 காரல் மார்க்ஸ் மூலதனத்தின் முதல் பகுதியை வெளியிட்டார். இரண்டாவது மூன்றாவது தொகுதி கையெழுத்து பிரதியாகவே இருந்தது. இதை சரிபார்த்து அதற்கு தேவையானவற்றை சேர்த்து வெளியிட வெகுகாலம் எடுத்தது. இதற்காக இரவும் பகலும் உழைத்தார். இதோடு மூலதனத்தில் முதல் பகுதியின் மொழிபெயர்ப்பு வேலைகளையும் செய்தார். இக்காலத்தில் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற சிறப்பு வாய்ந்த நூலை எழுதி முடித்தார்.

                               வயது முதிர்ந்த காலத்திலும் அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு பயணித்து இயக்க வேலைகளைச் செய்தார். பல நாடுகளில் இவருக்கு தொழிலாளர் அமைப்புகள் பாராட்டுகள் தெரிவித்தபோது இந்த பாராட்டுக்கள் அனைத்தும் மார்க்சையே சாரும் என்று அவருக்கே அர்பணித்து அவரின் பங்கை நிலைநாட்டுவார். மார்க்ஸ் விதைத்த விதைகளில் விளையும் புகழையும், கீர்த்தியையும் நான் அறுவடை செய்ய நேர்ந்திருக்கிறது என்று பல இடத்தில் கூறுவார். இரண்டாவது அகிலம் நிறுவப்பட்ட பிறகு எங்கல்சின் கட்சி அரசியல் பணிகள் அதிகமாயின. எங்கல்ஸ் உயிரோடு இருந்தவரை நிரந்தர அமைப்பை அகிலத்தின் காங்கிரஸ் ஏற்காததால் சித்தாந்த வேலையோடு பல நாடுகளுக்கு சென்று தனித்தனியான வழிகாட்டுதல் செய்ய 
வேண்டிய பொறுப்பு வந்தது.

                         இதனால் அவர் இயற்கையின் இயக்க இயல் என்ற நூலை  முடிக்கவில்லை. இதோடு அவர் இன்னும் பல நூல்களை எழுத திட்டமிட்டிருந்தார். ஜெர்மன்   சமூகத்தில் வன்முறையின் பாத்திரம்,  மார்க்ஸ் வரலாறு, முதல் அகிலம், மூலதனம் 4ம் தொகுதி என பலவற்றை எழுதுவதற்கு எத்தனித்திருந்தார்.

                    ஆனால், இதோ, 1895ம் ஆண்டு ஆகஸ்ட் 5 இரவு 11 மணிக்கு போராட முடியாத அந்த நிமிடத்தில் மரணம் அவரை தழுவிக் கொண்டது, உழைப்பு நின்று போனது. ஆனால் அவரின் சிந்தனைகள் பல புரட்சிகளை வெற்றிபெறச்செய்து வருகிறது. பிரடெரிக் எங்கல்ஸ் தனது 75 ஆண்டுகால வாழ்வில் கவிஞனாக, தத்துவஞானியாக, ஸ்தாபகராக, புரட்சிவீரனாக, இராணுவநிபுணணாக,பன்மொழிப்புரவ னாக,பலபரிமானங்களை பெற்றுள்ளார். உழைப்பாளி மக்களின் விடுதலைக்கு வித்திட்டவனாக இன்றும் நம்மிடம் வலம் வந்து கொண்டிருக்கிறார். இன்று நவம்பர் 28 அவரின் பிறந்த நாள். மரணம் தழுவிக்கொள்ளும் வரை உழைப்போம், போராடுவோம்..                                                                        ***

வியாழன், நவம்பர் 25, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-4

                                                                                                                          அ.பாக்கியம்
        
 உலகின் முதல் கம்யூனிஸ்ட் சதிவழக்கு    

    வழக்கு, சதிவழக்கு அதைத்தகர்த்தெரிவதற்கான ஆதாரங்கள், சாட்சிகள் என்ற நீதிமன்ற வளாகத்தை கடந்து சமூக அவலங்களையும் மோதல்களையும் இந்த சிறிய புத்தகம் விவாதிக்கின்றது. மார்க்சும் எங்கல்சும் நூலகங்களிலும், ஆய்வுக்கூடங்களில் இருந்துகொண்டு மட்டும் பணியாற்றவில் லை களத்தில் அமைப்புகளை உருவாக்கிசெயல்பட்டது. தொழிலாளர் இயக்கத்தை பகிரங்க இயக்கமாகவும், வெகுமக்கள் இயக்கமாகவும் மாற்றியது.கம்யூனிஸ்ட் லீக்கில் உருவான இடதுஅதிதீவிர போக்கை வெற்றிகொண்டது வழக்குகளை பிரச்சாரமேடையாக மாற்றியது, சதிவழக்குகளை அம்பலப்படுத்தியது என்ற ஐந்து தளத்தில் இப்புத்தகத்தை உள்வாங்கிக்கொள்ளலாம்.
       ஒன்று, காரல்ம்ர்க்சும், ஏங்கல்சும் பாரிசில் தங்கி அங்கு ஐர்மானியிலிருந்த வந்து சிதறுண்டுகிடந்த தொழிலாளர்களை திரட்டிட முயற்சிஎடுத்தனர். அப்போது நீதியாளர் கழகம் என்ற அமைப்பு இருவரையும் தங்களது அமைப்பில் இணைய அழைத்தது.இதை ஏற்ற அவர்கள் இரகசிய அமைப்பை பகிரங்க அமைப்பாக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இணைந்து, அவ்வமைப்பை கம்யூனிஸ்ட் லீக் என்று பெயர் மாற்றி பகிரங்க அமைப்பாக்கினர். அதேநேரத்தில் ஐர்மனியில் வேட்டையாடப்பட்ட புரட்சிகர தொழிலாளர்கள் பாரிசிற்கு தப்பிவந்து வேலையின்றி நடைபாதை யிலும்,பூங்காக்களிலும்,தெருக்களிலும் முடங்கிக் கிடந்தனர். இவர்களை பாதுகாக்க மார்க்ஸும், எங்கல்சும் அகதிகள் குழு அமைத்து உதவிசெய்தனர்.
     

 இரண்டு, பாரிசின் பலபகுதிகளில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும்கூட தொழிலாளர் குழுக்கள் ரகசியமாக மட்டுமே செயல்படுவது, சதிவேலைகள் மட்டுமே செயல்தளமாக இருந்ததை மாற்றி பகிரங்கமாக திட்டத்தின் அடிப்டையில் செயல்படும் இயக்கங்களாக உருவாக வழிவகுத்தனர். மூன்று, கம்யூனிஸ்ட் லீக் பகிரங்கமாக செயல்பட்டபோதே அவ்வமைப்பில் உடனடியாக கம்யூனிச புரட்சி நடத்த வேண்டும் என்ற எதார்த்தத்திற்கு புறம்பான அதிதீவிர போக்கை களைஎடுத்து லீக்கை காப்பாற்றினர்.
     நான்காவதாக, கைதுகள் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், எங்கல்ஸ், பதிப்பாசிரியர் கோர்ப் ஆகியோர்மீது தொடுக்கப்பட்ட வழக்கில் மார்க்ஸ் மூன்றுபேர்களுக்காகவும் வாதாடினார்.ஒவ்வொரு அதிகாரியும் தீங்கான நடவடிக்கை எடுப்பதை நீங்கள் அனுமதிக் கிறீர்கள்.அத்தீங்கை கண்டிப்ப வர்களை நீங்கள் தண்டிக்கிறீர்கள்.  தன் அண்டையிலுள்ள ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக முன்வரவேண்டியது பத்திரிக்கை களின் கடமையாகும். ஜெர்மானியில் மார்ச் மாதம் நடைபெற்ற புரட்சி மேல்மட்ட சீர்திருத்தம் செய்துவிட்டு அடிமட்டத்தை அப்படியே வைத்துள்ளது......தற்போது பத்திரிக்கைகளின் முதல் கடமை நடப்பு அரசியல் அமைப்பின் அனைத்து அடித்தளங்களையும் தகர்த்தெரிய வேண்டும் என்பதாகும். என்று நீதிபதிகளுக்கு முன்னால் அக்கட்டுரையின் நியாயத்தையையும்  பத்திரிக்கையின் சமூக கடமைகளையும் எடுத்துரைத்தார். நீதிமன்றத்தில் கூடியிருந்த தொழிலாளர்கள் வாழ்த்துக்களிடையே விடுதலை செய்யப்பட்டனர்.
மறுநாள் புரட்சிக்குத்தூண்டல் என்ற கட்டுரை எழுதியதற்காக மார்க்ஸ், ஷாப்பர், ஸ்னெய்டர் ஆகிய மூவர்மீதான வழக்கிலும் மார்க்ஸே வாதாடினார். புரட்சி என்பதை சட்டவடிவத்திற்குள் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உங்கள் கருத்தை ஏற்கமுடியாது என்றதுடன் சமூகம் என்பது சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்ற தங்களின் கருத்தை நிராகரிக்க வேண்டியுள்ளது என்று நீதிபதிகளை பார்த்து மார்க்ஸ் கூறினார். அத்துடன் சட்டம் அது குறிப்பிட்டகாலத்தில் நிலவும் பொருள்உற்பத்தி முறையிலிருந்து தோன்றுகின்றது. ஆகவே புரட்சி என்பது பழைய சட்டமேல்கட்டுமானத்தை அழிக்கும் ஜீவாதார கடமையை கொண்டுள்ளது என்று வாதங்களை முன்வைத்தார்.மன்னன் எதிர்ப்புரட்சி செய்தால்  ஒருபுரட்சியின் மூலம் மக்கள் அதற்கு பதில்தரும் உரிமையை பெற்றுள்ளனர் என்றார். வழக்கிலிருந்து விடுதலைப்பெற்றனர். சட்டம் பற்றிய நீதிபதிகளின் கருத்துமுதல்வாத கருத்துக்களை  தகர்த்து பொருள்முதல்வாதக் கருத்துக்களை நிலைநாட்டினார். அன்று நீதிமன்றத்தை மார்க்ஸ் மிகப்பெரும பிரச்சார மேடையாக மாற்றினார். வரலாறு நெடுகிலும் கம்யூனிஸ்ட்டுகள் இந்தப்பாதையை பயன்படுத்தினர்.
ஐந்தாவதாக, மார்க்ஸ், எங்கல்ஸ் மற்றும் பலர் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது பேச்சுக்களும், எழுத்துக்களும்  கம்யூனிஸ்ட் லீக்கின் பணிகளும் பிரெஷ்யாவில் புரட்சியை கொண்டு வந்துவிடும் என்று பிரெஷ்ய அரசு அஞ்சியது. எனவே லீக் உறுப்பினர்கள் பத்துபேர்கள் மீது புரட்சிநடத்தமுயற்சித்ததாக சதிவழக்கை புனைந்து கைதுசெய்தது. மார்க்ஸ், எங்கல்ஸ்  இருவரையும் இவ்வழக்கில் இணைக்க முயற்சி செய்தது. இவர்கள் இருவரும் லண்டனிலிருந்துகொண்டு பிரெஷ்யாவின் கோலோனில் நடைபெற்ற சதிவழக்கை முறியடிக்க பணியாற்றினர்.
இந்த வழக்கிற்கு தேவையான ஆதாரங்களை திரட்டி அவற்றை பலநகல்கள் (பலபேர்களை வைத்து எழுதவேண்டிய பணி) எடுத்து ரகசியமாக கோலோன் நகருக்கு அனுப்பிவைக்க வேணடிய பெரும்பணியை செய்தார்.இதற்காக தனது வீட்டையே அலுவலமாக்கினார்.
இந்த சதிவழக்கை பயன்படுத்தி டைம்ஸ் பத்திரிக்கை உட்பட பிரபலமான பத்திரிக்கைகள் கம்யூனிஸ்டுகள் மீது அவதூறுகளை அள்ளி வீசியது.கொளுத்துப்போன பிச்சைக்காரர்கள் கூட்டம் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் என்று எழுதியது.இந்த பிரச்சாரத்தை முறியடிக்கும் வேலையையும்  மார்க்ஸ்,எங்கல்ஸ் இருவரும் செய்தனர்.
பிரதானமாக மார்க்ஸ் தனது குடும்ப வருமானத்திற்காக எழதவேண்டிவைகளை நிறுத்திவிட்டு வழக்கிற்கான பணியில் இறங்கினார். கடந்த பலவாரங்களாக குடும்பத்தின் சாப்பாட்டிற்காக பாடுபடவேண்டியதற்கு பதிலாக அரசாங்கத்தின் நடவடிக்கையிலிருந்து கட்சியை பாதுகாக்கவேண்டிய வேலையை செய்ய வேண்டி இருந்தது என்று தனது நணபருக்கு எழுதினார். இதனால் குடும்பம் வறுமைக்கு ஆட்பட்டது. செருப்பில்லாததாலும், மேலேஉடுத்திக் கொள்ள உடை இல்லாததாலும வெளியேபோகமுடியாமல் வீட்டிலேயே முடங்கிகிடக்கிறேன் என்று தனது நண்பனுக்கு எதினார். வழக்கு நடைபெற்றபோது அவரது கால்சட்டையும், காலணியும், கோட்டும் அடகு கடைக்கு சென்றிருந்தது.வெள்ளைத்தாள் வாங்குவதற்கே நிதிபற்றாக் குறையாக இருந்தது.

மார்க்ஸ் மற்றும் அவர் குடும்பத்தின் வறுமைக்கிடையிலான உழைப்பாலும், அவர்களின் வழிவந்தவர்கள் தியாகத்திலும், அவர்கள் சிந்திய உதிரத்திலும், இழந்த வாழ்க்கையின் மேலேதான் நமது உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கப்பெற்றுள்ளது என்ற உணர்வு புத்தகத்தை படிக்கும்போது ஏற்படுகிறது.  மேற்கண்ட ஆறு புத்தகங்களும் உலகின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளை நம்கண்முன் நிறுத்துகின்றது, சுமார் முன்னூறு ஆண்டு வரலாற்றின் ஆணிவேரை நோக்கி நம்மை அழைத்துச்செல்கின்றது. மாவோ சொன்னாரே உலகவரலாற்றை உருவாக்கும் உந்துசக்தி மக்கள்தான். மக்கள் மட்டுமேதான் என்றாரே அந்தவார்த்தைகளை இப்புத்தகத்த் படிப்பதன் மூலம் உணரமுடியும்.எனவே வரலாற்றின் வேர்பிடித்து வருங்காலத்தை செப்பனிடுவோம் வரலாற்றிணை புரிந்துகொள்வது சிக்கலான பணி என்றாலும் கடந்தகாலத்தை கொண்டு தற்கால சமுதாயத்தின் நிலையை மாற்றும் எண்ணமுடையோர் அப்பணியை முக்கியமானதாகக் கருதிச் செய்யவேண்டியுள்ளது.                                            

புதன், நவம்பர் 24, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-3

                                                     அ.பாக்கியம்                                                                                                                                                           
அயர்லாந்து-பாலஸ்தீனம்
பூர்வீகம்முதல்புத்தகம்எழுதப்படும்காலம்வரைமுக்கியநிகழ்வுகள்,பார்வைகள்,கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது. அயர்லாந்து இங்கிலாந்தினால் ஆக்கிரமிக்கப்பட்டது. பாலஸ்தீனம் இங்கிலாந்தினால் ஏமாற்றப்பட்டது.
                   

                    நான் உலகத்தால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,              
                    நான் கடவுளால் ஏமாற்றப்பட்டு வருகிறேன்,                                  
                    நான் வரலாற்றால் ஏமாற்றப்பட்டு வருகிறேன், 

    என்ற கவிதை பாலஸ்தீனம் பற்றி இன்றைய காட்சிகளுக்கும் சாட்சியாக விளங்குகின்றது. அயர்லாந்து என்ற நாட்டை இங்கிலாந்து தன்நாட்டுடன் இணைத்துக் கொண்டது.இன்றும் ஒருபகுதியை இணைத்தே வைத்துள்ளது. ஆனால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற புதிய நாட்டை  உருவாக்கியது. இவை எதிரும் புதிருமாக தோன்றலாம் ஏகாதிபத்தியத்தின் கொள்கை இதுதான். இயற்கையை, உழப்பை, ரத்தத்தை, சரீரத்தை சுரண்டுவது என தனது நலனுக்கு எது உகந்தோ அதுதான் சட்டம்.அதுதான் நீதி. அயர்லாந்து இங்கிலாந்தின் முதல் காலனி நாடு என்று எங்கல்ஸ் கூறினார்.இங்கிலாந்தின் நிரபிரபுத்துவம்அயர்லாந்தை பொருளாதார ரீதியாக சுரண்டியது. தொழில்வளர்ச்சிக்கும், முதலாளித்துவ மூலதன திரட்சிக்கும்  அது உதவியதால் முதலாளித்துவம் பயன்படுத்தியது. அயர்லாந்து பற்றி காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகிய இருவரின் கருத்துக்கள் மிகமுக்கியமானது ஆகும். எந்த ஒருநாட்டின் தொழிலாளி வர்க்கமும் தன் நாட்டின் ஆளும் வர்க்கம் பிற நாடுகளை அடிமைப்படுத்துவதற்கு ஆதரவளிக்க கூடாது என்று கூறினர். அயர்லாந்தை அடிமைப்படுத்துவதன் மூலமாக இங்கிலாந்தின் பிற்போக்காளர்கள்  பலமடைந்ததுடன் அதைப்பேணி காத்தும் வருகின்றனர்  என்று கூறினார். ஏங்கல்சின் மனைவி மேரிபர்ன்ஸ் அயர்லாந்துக் காரர்.இவர் இப்பிரச்சனையில் மிகுந்த ஆவர்வம் செலுத்தியதாலும்,இவர் இறந்த பிறகு ஏங்கல்ஸ் திருமணம் செய்துகொண்ட இவரது தங்கை லிஸ்ஸியும் இப்பிரச்சனையில் ஆர்வம் செலுத்தியதால்  ஏங்கல்ஸுக்கு இப்பிரச்சனையை புரிந்துகொள்வது எளிதாக  இருந்தது.
                    ஜரிஷ் என்ற தேசிய இனத்தை அடிமையாக்கி சமூகஒடுக்கு முறைக்கு உள்ளாக்கியது இங்கிலாந்து. அதே நேரத்தில் உருவாகிவந்த அரபுதேசிய ஒற்றுமையை நசுக்கிடயூதஇனத்தை மூர்க்கத்தனமாக பயன்படுத்தியது.
      நாகரீகம் தெரியாத அயர்லாந்து மக்களுக்கு நாகரீகத்தை கற்றுத்தருகிறோம் என்று கூறினர்.இதையே இந்தியாவிற்கும் கூறியதை நாம் மறக்க முடியாது. இதையேதான் பாலஸ்தீனத் திற்கும் கூறினர்.ஏகாதிபத்திய சூறையாடலுக்கு அவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் நாகரீகம்.
    ஏகாதிபத்தியவாதிக  பிரித்தாளும் சூழ்ச்சியின் பிதாமகன்கள்.பாலஸ்தீனத்தில்  யூதத்தையும் இஸ்லாத்தையும் மோதவிட்டனர். லெபனானில் கிறிஸ்த்துவத்தையும் இஸ்லாத்தையும், இந்தியாவில் இந்து முஸ்லீமையும் மோத விட்டனர். அயர்லாந்திலோ கிறிஸ்துவமதப்பிரிவுகளி உள்ளகத்தோலிக்கர்களையும் பிராட்டஸ்டன்ட்களையும் மோத விட்டனர்.
                   அயர்லாந்தில் பட்டினியாலும், படுகொலைகளாலும் இருபதுசதம் மக்களை வேட்டையாடினர் .பாலஸ்தீனத்திலோ முதல் பத்தாண்டுகளில் (1921-31)மட்டும் ஜம்பதாயிரம் மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று குவித்தனர். இன்றுவரை இது பலலட்சங்களை தாண்டி மக்கள் தொகை  சரிபாதியாக குறைந்து விட்டது.
    இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டங்களும் பன்முகத்தன்மை கொணடதாக இருக்கிறது. இன்றுவரை இந்த போராட்டங்கள் உயிர்த்துடிப்போடும், உத்வேகம் குன்றாமலும் நடைபெற்று வருகின்றது.
      இந்த இருநாட்டின் விடுதலைப்போராட்டமும் நான்கு முக்கிய வடிவங்களில் நடைபெற்று வருகின்றது.வெகுமக்கள் பங்கேற்கும் இயக்கமாகவும், ஆயுதம் தாங்கிய எழுச்சியாகவும், உண்ணாவிரதம் இருந்து உயிர்நீக்கும் போராட்டமாகவும், சிலநேரங்களில் தனிநபர் பயங்கரவாத மாகவும் நடைபெற்று வருகின்றது.
   இப்போராட்டங்கள் பலநாடுகளின் விடுதலைப்போராட்டங்களுக்கு உந்துசக்தியாகவும் இருந்துள்ளது. தாகூர், பாரதியார், அரவிந்தகோஷ், சரோஜினிநாயுடு ஆகியோர் இப்போராட்டங் களை தங்களது கவிதைகளில் வடித்தனர். வியட்நாம் புரட்சித்தலைவர் ஹோ-சி-மின் அயர்லாந்து போராட்டத்தால் ஆகர்ஷ்சிக்கப்பட்டவர்களில் ஒருவர். காந்தி, நேரு இருவரும் பாலஸ்தீன மக்களின் போராட்டத்தை வலுவாக ஆதரித்தனர்.குறிப்பாக காந்தி அம்மக்களின் போராட்ட முறைகள் தனது கொள்கைக்கு மாறானதாக இருந்தாலும் அதை ஏன் ஆதரிக்கிறார்  என்ற விளக்கம் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது மிக முக்கயமான பகுதியாகும்.
      பாலஸ்தீன மக்களின் போராட்டத்தினூடே இந்திய அரசின் கொள்கையில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பதையும் அறியமுடிகிறது. 1947-ல் அமைக்கப்பபட்ட சிறப்புக்குழுவால் பாலஸ் தீனம் இருநாடுகளாக பிரிக்க வேண்டும் என்ற பரிந்துரையை இந்தியா கடுமையாக எதிர்த்தது. 1949-ல் இஸ்ரேல் நாடு ஐக்கிய நாடுகள் சபையில் இணைவதை இந்தியா கடுமையாக ஆட்சேபித்தது.
   ஏகாதிபத்தியம் தனது குணத்தை மாற்றிக்கொள்ளவில்லை. மேலும் கோரமுகம் எடுத்துள்ளது. இஸ்ரேல் இன்றும் மூர்க்கத்தனமாக தனது தாக்குதலை நடத்துகின்றது.இந்தியா இன்று போராடும் மக்களை கைவிட்டு இஸ்ரேல் நாட்ட் தனது அச்சு நாடாக்கி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிட்டுவிட்டது.
   ஆனால் பாலஸ்தீன மக்களோ குண்டுமழைகளுக்கும்.  வெடிச்சத்தங்களுக்கும் துப்பாக்கி ரவைகளுக்கும்நடுவிலிருந்தும், வீடுகளின் இடிபாடுகளுக்கு அடியிலிருந்தும் மீண்டும் மீண்டும் ஆவேசத்துடன் எழுந்து வருகின்றனர். அயர்லாந்து மக்கள் இங்கிலாந்து வசமுள்ள பகுதியை  விடுவிக்க போராடி வருகின்றனர்.
     இவை இரணடும் புத்தகம் அல்ல. நிகழ்காலத்தின் போராட்ட களம். இக்களத்தில்  இறங்க வேண்டும், சினமும், சீற்றமும்  கொள்ள வேண்டும். மாற்றத்திற்கான மார்க்கம் புரிபடும.

செவ்வாய், நவம்பர் 23, 2010

உலகளாவிய உரிமைக்குரல்-2

                                                           அ.பாக்கியம்


                  
பிரெஞ்சுப் புரட்சி-ரஷ்யப் புரட்சி -சாசன இயக்கம்.

மேற்கண்ட மூன்று புத்தகங்களும் வெவ்வேறுநாட்டில் வெவ்வேறு காலத் தில் ஒன்றன்பின் ஒன்றாக நடைபெற்றது.பிரஞ்சுப்புரட்சி முதலாளித்துவ சகாப்தத்தை துவக்கிவைத்தது.ரஷ்யப்புரட்சி சோசலிச சகாப்தத்தை துவக்கி வைத்தது.சாசன இயக்கத்தில் முதலாளிகள் நலன்உள்ளடங்கி இருந்தாலும்  தொழிலாளர் உரிமைக்கான முதல் இயக்கமாக இருந்தது என்பதை புத்தகத்தை வாசிக்கும்போது புரிந்து கொள்ளலாம்.எனினும் தனித்தனியாக எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றையும்  நீண்ட கட்டுரையாக மாற்றுவதைவிட புத்தகத் தில் கையாண்டுள்ள சில விஷயங்களை முன்னிறுத்தலாம் என்று கருதுகிறேன்.
             முதலாவதாக படைப்பு சராசரி வாசகர்களை ஈர்க்க வேண்டும். அதே நேரம் தீவிரவாசகர்கள் அனுபவிக்கவும் அதில் இடங்கள் அமைந்திருக்க வேண்டும் என்று உம்பட்டோ எக்கோ வின் கூற்றுக்கு ஏற்ப புத்தகங்களின் பல பகுதிகள் அமைந்துள்ளது. தீவிரவாசகர்களுக்கு முழுமையாக தீனிபோடவில்லை என்றாலும் அவர்களுக்கான இடங்களும் உள்ளது.காரணம் புத்தகம் சராசரி வாசகனை சென்றடைய வேண்டும் என்ற நோக்கம் முன்வைக்கப்பட்டதால்  இவ்வாறு அமைந்துள்ளது. வரலாற்றை அறிந்தவர்களுக்கு மட்டுமல்ல புதியவர்களுக்கும் புரியக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ளது. இந்த மூன்று புத்தகங்களிலும் காலவரிசைப்படி நிகழ்வுகளை முன்வைத்திருப்பதும், கடினவார்த்தைகளை தவிர்த்திருப்பதும் எளிய வாசிப்புக்கும் புரிதலுக்கும் உதவுகிறது. உதாரணமாக அன்றைய பிரெஞ்சுநாட்டு சமுகத்தை புரிந்துகொள்ள, மதகுருக்கள் முதல் எஸ்டேட், நிலபிரபுக்கள் இரண்டாவது எஸ்டேட், மக்கள் மூன்றாவது எஸ்டேட் என்று புள்ளிவிவரங்களுடன் விபரித்திருப்பதை குறிப்பிடலாம்.  ரஷ்ய புரட்சி புத்தகத்தில் எளிமையாக புரிந்துகொள்ளும் வகையில் கீழ்கண்ட விஷயத்தை முன்வைக்கலாம். சார்மன்னன் காலத்தில் தொழிலாளர்கள் நிலையை குறிக்கும் வகையில்  உங்கள் அறையில் எத்தனை பேர் என்ற கேள்வியுடனான தலைப்புகள். இதில் 12 பேர்கள் என்று பதில் வரும். எப்படிப்பட்ட அறை? 12 பேர்களும் ஒரே நேரத்தில் படுக்கமுடியாமல் முறைவைத்து படுப்பது, கரியும், அழுக்கும் நிறைந்த சுவர்கள், வியர்வை நாற்றம் வீசும் அறை! என்ற வர்ணனை. புத்தகத்தின் கடைசி அத்தியாயத்தில் புரட்சிக்கு பிறகு உங்கள் அறையில் எத்தனை பேர் என்றால், நான், எனது மனைவி, குழந்தைகள் என்ற பதிலுடன் புத்தகம் முடிவது சராசரி வாசகனுக்காக. இதே போன்று சாகனஇயக்கம் புத்தகத்தில் இங்கிலாந்தின் தொழிற்புரட்சியின் கோரச்சுரண்டலை விளக்கிட தொண்ணூறு ஆண்டுகளில் ஒன்பது தலைமுறைகளை விழுங்கப்பட்டு விட்டன என்ற பீல்டனின் வார்த்தைகள் எளிமையானது மட்டுமல்ல வலிமையானதும் கூட.
                 அதே நேரத்தில் ரஷ்ய சமூகத்தில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய நரோதியம் தோன்றுவதற்காக பொருளாதார சமூகக்ரணிகளை ஆழமாகவும், சுருக்கமாகவும் (பக்.14) பதிய வைத்துள்ளதும், ரஷ்யபாராளுமன்ற (டூமா) தேர்தலில் போல்ஷ்விக் கட்சி பங்கேற்காமைக்கு காரணமான தந்திரங்க ளையும் விளக்கியுள்ளார்.(பக்.71) ரஷ்ய புரட்சியின்முக்கியமான தந்திரோஉபாயங்களை தவறாமல் ரத்தினச்சுருக்கமா விளக்கியுள்ளார். உதாரணமாக ரஷ்யாவில் அன்றிருந்த புரட்சிகரமான சக்திகளில் பலபிரிவுகள்,பல போக்குகள் இருந்ததால் ஆயத தாக்குதலை திட்டமிட்டு நடத்துவதில் பல சிரமங்கள் இருந்தது. எடுத்த முடிவுகள் வெளிவந்த முறைகள் புரட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் என்பதை உணர்ந்த லெனின் ஒரு நிமிடம் தாமதிக்காமல்,இன்றே இப்போதே, இந்த நிமிடமே தாக்குலை தொடங்குங்கள் என்ற அறைகூவல், எந்தஅளவு வெற்றிக்கு வித்திட்டது என்பதை புத்தகம் தெளிவாக தேவையான வகையில் விளக்கியுள்ள முறைகள், தீவிர வாசகர்களும் அனுபவிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
இதேபோன்று பிரஞ்சுப்புரட்சியில் முதலாளித்துவம் அதிகாரத்தை கைப்பறிய பிறகு நடந்த தேசிய சட்டமன்றம், அரசியல் நிர்ணய சபை,தேசியபடை, ஜாக்கோபின்கள் கழகம் அதில் உருவான பிரிவுகள் அனைத்தும் ஆழமான வகையில் விளக்கப்பட்டுள்ளது. அன்னியநாடுகள் படையெடுத்த போது தேசிய படைகள் புரட்சிபாடல்களை பாடி அணிதிரட்டியது, போதியபாதுகாப்பு உடைகளின்றியே தொழிலாளர்கள் யுத்தத்தில் பங்கேற்றது மட்டுமல்ல பாரீஸ் தொழிலாளர்கள் மாதம் 650 துப்பாக்கிகளை உற்பத்திசெய்த நிலையைமாற்றி மாதம் 16000 துப்பாக்கிகளையும்,20000 கிலோ வெடிமருந்துகளையும் தயாரித்துகொடுத்து வெற்றிவாகைசூடினர். தொழிலாளி வர்க்கத்தையும், விவசாயிகளையும் முதலாளிவர்க்கம் எப்படி தனது வெற்றிக்கு பயன்படுத்தி விட்டு. அவர்களை கழுத்தை அறுத்து ரத்தவெள்ளத்தில் மூழ்கடித்தது என்ற பதிவு முக்கியமானது. இதேவகையில், சாசன இயக்கத்திற்கு முன்பாக நடைபெற்ற அனை வருக்கும் வாக்குரிமை என்ற இயக்கம் தீவிரதன்மை வாய்ந்த தொழிலாளர்களின் தலைமைக்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக அதிலிருந்த முதலாளிகள் பலபிரித்தாளும் காரியங்களை கையாண்டனர்.1832-க்குபிறகு தொழிலாளி வர்க்கம் தலைமையில் சாசன இயக்கம் அரசியல் இயக்கமாக வீறுகொண்டு எழுந்தபோது  அவற்றை  அடக்கியமுறையும் தொழிற்சங்கத்தை தடைசெய்து தணடித்தது,அதற்குத் தலைமை தாங்கியவர்களை விலைபேசிய தன்மைகளும், மூலதனத்தை தோலுரித்துக் காட்டுகிறது. சாசன இயக்கத்தில் தலைதூக்கிய தார்மீககட்சியினர், பலப்பிரயோக கட்சியினர், ஜனநாயகப் பிரிவினரின் போக்குகள் இயக்கத்தின் உள்முரண்பாடுகளை புரிந்துகொள்ள உதவுகிறது. மார்க்சும், எங்கல்சும் சாசன இயக்கத்தில் தொடர்பை ஏற்படுத்தி இடதுசாரி பிரிவினருடன் இணைந்து செயல்பட்டனர்.முதலாளித்துவ வர்க்கம் காலனி நாடுகளில் அடித்த கொள்ளையால், தகுதிவாய்ந்த ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தின் நிலையை உயரச் செய்தது. ஒரு பகுதி தொழிலாளர்களை வசதியானவர்களாக மாற்றியது. இதனாலும், ஒரு உறுதிமிக்க பாட்டாளி வர்க்க ஆட்சி இல்லாததாலும் சாசன இயக்கம் பின்னடைவை சந்தித்தது என்று மார்க்ஸ் கூறினார். இன்றும்கூட ஆளும் வர்க்கம் இதுபோன்ற தந்திரங்களை கையாள்வதை நாம் உணர வேண்டும்.சாசனஇயக்கம் தனிமைப்பட்டபோது சாசன கோரிக்கைகளுக்ககாக நடத்தும் அரசியல் போராட்டத்தை தொழிலாளி வர்க்கத்தின் அன்றாட பொருளாதார போராட்டங்களுடன் ஒன்றிணைப்பது அவசியம் என்று மார்க்ஸ், எங்கல்ஸ் என இருவரும் கருத்து தெரிவித்தனர். இங்கிலாந்து நாடானது சாசனஇயக்கம் என்ற முதலாவது பரந்துபட்ட உண்மையான வெகுஜன மற்றும் திட்டவட்டமான அரசியலைக் கொண்ட பாட்டாளிவர்க்க புரட்சிகர இயக்கத்தை உலகிற்கு அளித்துள்ளது என்று லெனின் மதிப்பீடு செய்தார். சாசனஇயக்கம் என்ற புத்தகத்தில் மேற்கண்ட அம்சங்கள் தீவிரவாசகர்களுக்கும் பயனுள்ளதாகும்.

               இரண்டாவதாக, இந்த மூன்றுபுத்தகங்களிலும் நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மனதை நெருடும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.  மன்னர்களையும் மகாராஜாக்களையும் துதிபாடி மக்களாட் சியின் மகத்துவர்களாக சிததரிக்க முயலும் இந்தக் காலத்தில் நிலபிரபுத்துவத்தின் கோரமுகங்களை நினைகூர்வது நமது கடமை.பிரஞ்சுப்புரட்சி  புத்தகத்தில்,  நீதிபதிகளுக்கு பகிரங்கமாக விலை நிர்ணயிக்கப்பட்டது. 400 வகையான சட்டங்கள, சட்டத்திற்கு மேலே ஆளும் வர்க்கம் இருந்தது. அனைத்து சட்டங்களும்  மூன்றாவது எஸ்டேட் என்று அழைக்கப்பட்ட 92 சதமான மக்கள் மீதான அடக்குமுறைக்கே பயன்பட்டது. சிறிய குற்றங்கள் அல்ல தவறுகளுக்குகூட சக்கரத்தை ஏற்றி எலும்பை முறிப்பது, கையை நறுக்குவது, காதுகளை அறுப்பது, என கொடிய தண்டனைகள் சாதாரணமாக நிறைவேற்றப் பட்டது. தவளைகள் கத்துவதால் நிலபிரபுக்களின் தூக்கம் கெடுகிறது.விவசாயி கள் இரவெல்லாம் தவளைகளை விரட்டிட வேண்டும். மீறி தவளைசத்தம் கேட்டால் விவசாயிகள் காது அறுக்கப்படும். கடும் தண்டனைக்கு உள்ளா வார்கள். பட்டினியில் மடிந்து கொண்டிருந்த மக்கள் ஊர்வலமாக சென்று உணவுகேட்டபோதுஇதோஇங்கே இருக்கிற புல்லைத் திண்ணுங்கள் என்று கூறிய நிலபிரபுத்துவ அதிகாரிகள். இந்தியாவில் கூட உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தாலும், எலி திண்ணாலும் திண்ணட்டும, அழுகி வீணாகினாலும் ஆகட்டும் ஏழைகளுக்கு உணவளிப்பது என் வேலை அல்ல என்று மன்மோகன் சிங் அடம்பிடித்தது  லூயி மனனனை நமக்கு நினைவூட்டுகிறது,
               இங்கிலாந்தில் கிராமங்களில் கோட்டை போன்ற இடங்களை உருவாக்கி விவசாயிகளை அதற்குள் வசிக்கவும் கட்டாயப்படுத் தினர் .வேலைசெய்யும் இடத்தை  (றடிசம டிரளந) உருவாக்கி ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தனித்தனியாக பிரித்து கல்உடைத்தல், எலும்புகளை பொடியாக்குதல், போன்ற கடின வேலைகளை கொடுத்தனர். கால்வயிறு உணவளிததனர். பட்டினி தாளாமல் அவர்கள் எலும்புளில் இருந்த மஜ்ஜைகளை நக்கித்தின்றனர். பட்டினியால் மடிந்தனர்.                                                                                                                 

ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் அடிமைகள் மற்றும் சார்மன்னனின் அடக்குமுறைகள் தொழிற்கூடத் திலும் கல்லூரிகளிலும் எப்படி இருந்தது என்பது விளக்கப்பட்டுள்ளது. தூக்குமேடைகள், நாடுகடத்தல் என்பது சாதாரணமாக நிறை வேற்றப்பட்டுள்ளது. அயர்லாந்து  விடுதலைப்போராட்ட புத்தகத்தில்  நிலபிரபுத்துவ கொடுமைகளை சகிக்கமுடியாத வகையில் உள்ளது.அவர்கள் காட்டை அழித்து உருவாக்கிய விளைநிலங்களை சிதைத்தனர்.காடுகளையும் மேய்ச்சல் நிலங்களையும் கைப்பற்றி அம்மக்களை விரட்டினர். கம்பளி தொழிலுக்காக 96 லட்சம் ஆடுகளுக்காக 11 லட்சம் அயர்லாந்து மக்களை விரட்டியடித்த கொடுமைகளை மார்க்ஸ்  அம்பலப்படுத்தியுள்ளார். கொடூர சுரண்டலால் பஞ்சம். பஞ்சத்தால் 20 சதம் மக்கள் மரணம்.

              மூன்றாவதாக, முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்பில் மேல்கட்டுமானமாக இருந்த மதம் பொருளாதார சுரண்டலின் கருவியாக செயல்பட்டது என மார்க்ஸ் கூறியுள்ளார்.இதற்குரிய பலதகவல்களை இப்புத்தகங்களில் ஆசிரியர் கொடுத்துள்ளார். பிரஞ்சுபுரட்சி புத்தகத்தில் மதக்குருக்கள் முதலாவது எஸ்டேட் என்ற முதல் நிலையில் இருந்தன்ர்.இவர்கள் ஆடம்பர வாழ்வில் திளைத்தனர். சர்ச்சின் வருமானம் முழுவதும் ஆர்ச்பிஷப்களுக்கும், பிஷப்களுக்குமே சென்றது.இத்துடன் இவர்களின் அனைத்து சொத்துக்களுக்கும் லூயிமன்னன் வரிவிலக்கு அளித்திருந்தான்.ஒரு ஆர்ச்பிஷப்பின் வருமானம் மூன்று லட்சம் டாலர். இருநூறுபேர்கள் உண்ணும் உணவுக்கூடம்.நூற்றி எண்பது குதிரைகள் என தனிராஜியமே நடத்தினர். சர்ச்கள் தனியாக விவசாயிகளிடம் வரிவசூல் நடத்தினர், சுங்கச்சாவடிகள் அமைத்து வணிகர்களிடம் வரிவசூலித்த னர்.தனி நீதிமன்றங்கள் தர்பார்கள் நடத்தினர் என்றால் மதத்தின் பங்கை  பொருளாதார சுரண்டலில் அறியமுடியும். இங்கிலாந்தில் மடாலயங்கள் ஒவ்வொரு பாதிரியாரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியாக பிரிக்கப்பட்டிருந்தது.இது பேரிஷ்(யிசளை) என்று அழைக்கப்பட்டது. இற்றின்கீழ் நிலங்கள் இதர சொத்துக்களும் இருந்தன. இவைதவிர வேலைசெய்யும் இடம் (றடிசமாடிரளந) என்ற குழந்தைகளை யும் பெண்களையும் கசக்கிபிழியும் இடமும் இவர்களுக்கு கீழ் செயல்பட்டது.இந்த பேரிஷ் என்ற பகுதியில் கிடைக்கும் வருமானத்தை மூன்றில் ஒருபகுதி ஏழைமக்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்  என்ற விதிமுறைகள்கூட அப்பட்டமாக மீறப்பட்டன.
                         நான்காவதாக, அறிவுஜீவிகள் மற்றும்  கலை இலக்கிய படைப்புகள் பங்கு இப்புத்தகத்தில் குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பிரெஞ்சு புரட்சியில் ரூசோ, மாண்டஸ்க்கியு, வால்டர், தீதரோ சிந்தனைகள் எடுத்தாளப்பட்டுள்ளன. வால்டர் மற்றும் தீதரோ இருவருக்ககுமான  வேறுபாடுகள் குறிப்பிட்டுள்ள முறைகள் அதாவது  சொல்லவந்த பொருளோடு இணைந்தே செல்வது முக்கியத்துவம் பெறுகிறது. வால்டேர் மதபீடங்களை கடுமையாக சாடினார். ஆனால் மதத்தின் இருத்தலை நியாயப்படுத்தினார்.தீதரோ மதபீடங்களையும், மதத்தையும் சாடியதுடன் பொருள்முதல்வாத சிந்தனைகளுக்குமுக்கியத்துவம் கொடுத்தார்.எனவேதான் இவரின் கலைக்களஞ்சியத்தை மன்னன்  தீயிட்டுக் கொளுத்தினான். இந்த அளவிற்கு இல்லை என்றாலும் ரஷ்யப்புரட்சி புத்தகத்திலும் அறிவிஜீவிகளின் பங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. சாசனஇயக்கத்தில்  இவர்களின் பங்கை ஓரளவு குறிப்பிட்டிருந்தால் உதவியாக இருந்திருக்கும்.
                     
 இம்மூன்று புத்தகங்களிலும் கையாளப்பட்ட விஷயங்கள் மாறுபட்டகாலம், இடம், வர்க்க நலன்கள் என்று இருந்தாலும், சாதாரண மற்றும் தீவிரவாசகர்களுக்கு ஏற்ற வகையில் விளக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நிலபிரபுத்துவத்தின் கொடுமைகள் மூன்றிலும் படம்பிடித்துகாட்டப் பட்டுள்ளது ரஷ்யப்புரட்சி புத்தகத்தில் மக்களை சுரண்டியதில் மதத்தின் பங்கு போதுமாக அளவு இடம்பெற வில்லை .கூடுத லாக ,வந்திருக்கலாம். நரோதினிய தோற்றச்சூழலை சரியாகவே சுட்டியிருக் கும் நிலையில் அதன் தாக்கம் ரஷ்யசமூகத்தில் ஏற்படுத்திய விளைவுகள் இன்னும் அழுத்தமாக இருந்திருக்க வேண்டும் என கருதுகிறேன்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...