Pages

திங்கள், மே 30, 2016

மோடியின் 2 ஆண்டு வந்ததும் வராததும்.


கக்கூஸ் வந்தது..  ….. தண்ணிவல்லை….. ..

        சுவாஜ் பாரத் திட்டத்தின் கீழ் இதுவரை கட்டப்பட்டுள்ள 97,73,437 கழிப்பிடத்தில் கிராமபுறத்தில் 56 சதவீதத்தில் தண்ணீர் வசதி இல்லை.நகர்புறத்தில் 12 சதவீதம் தண்ணீர் இல்லை.

கம்பி வந்தது…..  .. கரண்ட்வல்லை..

    100 சதம் கிராமத்திற்கு மின்வசதி என்பதில் 1,02,071 கிராமங்களுக்கு மின்இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மின்சாரம் வராது. இணைப்பு  கொடுக்கப்பட்டுதள்ளதில் மாலை நேரத்தில் தொடர்ந்து 4மணி நேரம் மட்மே மின்சாரம் வருவது பீஹாரில்  28 சதம், உத்திரப்பிரதேசத்தில் 23 சதம்,ஒடிசாவில் 72 சதம், ஜார்கண்டில் 19 சதம் மட்டுமே.

கணக்கு வந்தது.. .. காரியம் ஆகலை..

        ஜன்தன்வங்கி கணக்கு திட்டத்தில் இதுவரை தொடங்ப்பட்டதில் 21.9 கோடிகளில் கணிசமானது ஏற்கவே கணக்கு வைத்திருப்பவர்கள். எனினும் இதில் 26.4 சதம் பணம்  இல்லை. 

•    எம்.பி.உண்டு.. .. எடுக்கவில்லை.. ..

    2,200 கிராமங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களால் தத்து எடுக்கப்பட்டு மாதிரி கிராமங்களாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் 543 பாராளுமன்ற உறுப்பினர்களில் இதுவரை 490 உறுப்பினர்கள் கிராமத்தை அடையாளம் காணவில்லை. இராஜசபா 252 உறுப்பினர்களில் 239 பேர்கள் கிராமத்தை அடையாளம் காணவில்லை.

அறிவிப்பு உண்டு.. .. அனுமதிஇல்லை

     தொழில் தொடங்குவதில் விரைவாக அனுமதிகிடைப்பதில் இந்தியா இன்றும் 183  நாடுகளில் 130- வது இடத்தில் உள்ளது.

1 கருத்து:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...