Pages

திங்கள், நவம்பர் 10, 2025

நானே மகத்தானவன் புத்தகத்தைப் பற்றி போக்குவரத்து தொழிலாளியின் கடிதம்.





(தோழர்.பி.சுந்தர்ராஜன் மூலம் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்று தொலைபேசியில் பேசினார். உங்களது தொலைபேசி இந்த புத்தகத்தில் இல்லை எனவே நீங்கள் இதற்கு முன்பு வெளியிட்ட வேலை நாள் என்ற புத்தகத்தை படித்ததனால் அதிலிருந்து எடுத்து உங்களிடம் பேசுகிறேன் என்றார். எனக்கு ஸ்மார்ட் போன் கிடையாது எனவே நான் காகிதத்தில் எழுதியதை அப்படியே உங்களுக்கு அனுப்புகிறேன் என்று அனுப்பி வைத்தார். அவரின் எழுத்துக்களில் எந்த மாற்றமும் செய்யாமல் இங்கே கொடுக்கிறேன். வாசிப்பின் அவசியம் செயலுக்கான ஊக்க மருந்து என்பதை இவரின் மதிப்புரை வெளிப்படுத்துகிறது.)

நானே மகத்தானவன் புத்தகத்தின் ஆசிரியர் தோழர் அ.பாக்கியம் அவர்களுக்கு வணக்கம்

உங்கள் புத்தகத்தை படித்தேன் என்னுடைய கருத்துக்களை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன். நானே மகத்தானவன் புத்தகத்தை படித்து பல விஷயங்களை தெரிந்து கொண்டதை என் பாக்கியமாக கருதுகிறேன்.

நானே மகத்தானவன் அட்டைப்படத்தில் முகமது அலி எதிரிகளை வீழ்த்துகிறார். நடைமுறை வாழ்க்கையில் வெள்ளையர்களால் கருப்பர் களுக்கு உண்டாகும் கொடுமையை வீழ்த்துகிறார் என்ற பதிவு அருமை. அட்டை படத்தில் இருக்கும் அமெரிக்க சுதந்திரசிலை இரண்டு கண்களையும் மூடி கொள்வது போல் இருப்பது சிந்திக்க வைக்கிறது.

வெள்ளையர் பெண்ணை கருப்பரான எம்மெட் காதலிக்கிறார் என்று வெள்ளையர்கள் எம்மெட் முகத்தை கொடுமையாக சிதைத்து சாகடிக்கிறார்கள். அந்த முகத்தை உலகமே பார்க்க வேண்டும் என்று எம்மெட்டின் தாய் கிறிஸ்தவ மரபையும் மீறி எம்மெட்டின் உடலை சவப்பெட்டிக்குள்ளே வைக்காமல் சவப்பெட்டியின் மேலே தனது மகனின் உடலை வைத்துக் கொண்டு ஊர்வலமாக செல்வது அந்தத் தாயின் மன வேதனையையும் எம்மட்டின் முகத்தை சிதைத்த கொடூரத்தையும் புத்தகத்தை படித்த எனக்கு ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியது

பேருந்திலே வெள்ளையர்களுக்கும் கருப்பொருளுக்கும் உட்காரு வதிலேயே பிரச்சனை இருந்திருக்கிறது. தமிழ்நாட்டில் போக்கு வரத்து தொழிலாளர்களுக்கும் தமிழக அரசுக்கு மேல் பிரச்சனை இருக்கிறது.

அமெரிக்காவிலே வெள்ளையர்களுக்கும் கருப்பர்களுக்கும் பிரச்சனைகளால் பல கொலைகள் நடக்கிறது. தமிழ்நாட்டிலேயே மேல் ஜாதி, கீழ் ஜாதி என கௌரவ கொலைகளையும், ஆணவக் கொலையும் நடக்கிறது.

முகமது அலி குத்துச்சண்டையிலே பதக்கம் வெல்கிறார். சந்தோஷப்படுகிறார். ஆனால் அவர் கருப்பர் என்பதால் ஓட்டலில் சாப்பிட அனுமதிக்கவில்லை. அவருக்கு உணவும் பரிமாறுவதில்லை. ஆகையால் அவர் வேதனைப்பட்டு கருடப்பர்களுக்கு நடக்கும் கொடுமைக்கு எதிராக அந்தப் பதக்கத்தையும் அதன் மூலம் பெற்ற சந்தோஷத்தையும் நீரோடையில் வீசி எறிவது அவரின் ஆழ்ந்த மன வேதனையை காட்டுகிறது. அந்த வேதனை வெளிப்படுத்துவதற்கு வார்த்தைகளே இல்லை.

வியட்னாமுக்கு சென்று போர் செய்யும் வேண்டுமென்று அமெரிக்கா கட்டளை இருக்கும்போது, நான் வியட்நாமுக்கு செல்ல மாட்டேன் வியட்நாமுக்கு எதிராக போர் செய்ய மாட்டேன் என்று அமெரிக்காவின் கட்டளையை பாடையில் ஏற்றுவது, முகமது அலியின் தைரியத்தை பாராட்டுவதற்கு வார்த்தைகள் இல்லை.

அவர் குத்துச்சண்டையில் வெற்றி பெற்று வரும் பணத்தை தர்மம் செய்கிறார். அனாதை இல்லத்திற்கு கொடுக்கிறார். பசியால் வாடுபவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுக்கிறார். உடை இல்லாதவர்களுக்கு உடை எடுத்துக் கொடுக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் போது புத்தகத்தை எழுதிய ஆசிரியர் முகமது அலி மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தியை புத்தகத்தில் பதிவு செய்யக்கூடாது என்ற ஏக்கம் கொண்டு புத்தகத்தை படிக்கும் போது பதட்டம் தோன்றுகிறது. அவரைப் போல் நாமும் நம்மால் முடிந்தவரை தர்மம் செய்ய வேண்டும் என்று எண்ணம் நானே மகத்தானவன் என்ற புத்தகம் என் சிந்தனைக்கு வேலை கொடுத்தது. என்னை செயல்படவும் வைத்தது

கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களைவிட கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லாதவர்கள் அதிகமாக மக்களைப் பற்றி யோசிக்கிறார்கள். மக்களுக்காக போராடுகிறார்கள். மக்களுக்கு உதவி செய்கிறார்கள். மக்கள் சிந்தனையாலேயே வாழ்கிறார்கள் என்ற செய்தி முகமது அலி நடைமுறை வாழ்க்கை எனக்கு புரிய வைத்தது

அவர் மதர் தெரேசாவை சந்தித்து, நெல்சன் மண்டேலாவை சந்தித்தது, மக்களுக்கு பண உதவி செய்வது போன்ற செயல்கள் முகம்மது அலி கருப்பாக இருந்தாலும் அவருடைய தூய்மையான வெள்ளை மனதை காட்டுகிறது

மகத்தானவர்களின் மகத்தானவன் என்ற வார்த்தை நூலுக்கு நூறு சதம் பொருத்தமே

திருக்குறள் எழுதினார் திருவள்ளுவர் நின்றார்.

விடுதலை தழும்புகள் எழுதினார் அகத்தியலிங்கம் நின்றார்.

நீங்கள் நானே மகத்தானவன் புத்தகத்தை எழுதினீர்கள். ஆசிரியர்கள் வரிசையில் நின்று விட்டீர்கள்

நானே மகத்தானவன் புத்தகத்தை படிப்பவர்களை ஓரளவுக்காவது இந்த புத்தகம் மகத்தானவர்களாக மாற்றும்

இப்படிக்கு

Aதோழமையுடன்

 

எம்.செல்வராஜ்

 

சிபிஐஎம் காக்காவாக்கம் கிராமம்

 தண்டலம் அஞ்சல்

 பெரியபாளையம் வழி

 திருவள்ளூர் மாவட்டம்

பின்கோடு 61108

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நானே மகத்தானவன் புத்தகத்தைப் பற்றி போக்குவரத்து தொழிலாளியின் கடிதம்.

( தோழர்.பி.சுந்தர்ராஜன் மூலம் இந்த புத்தகத்தை வாங்கினேன். படித்து முடித்தவுடன் எனக்கு ஏற்பட்ட உணர்வை உங்களுக்கு கடிதமாக எழுதுகிறேன் என்று ...