தோமஸ் பிக்கெட்டி எழுதிய
சமத்துவ சமுதாயம் நோக்கி என்ற புத்தக அறிமுக கூட்டத்தில், புத்தகத்தின் மொழிபெயர்ப் பாளர் அக்களூர்இரவி அவர்களை கௌரவித்த பொழுது .....
தோழர்
இரவி 25க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்
திருக்கிறார். ஆரவாரம் அற்ற அவரது மொழிபெயர்ப்பு பணிகள் அதிர்வுகளை ஏற்படுத்தி
வருகிறது.
தாமஸ்
பிக்கெட்டின்யின் இந்த புத்தகம் புதிய முறையில் எழுதப்பட்டுள்ளது. அரசியல்
களத்தில் களமாடுபவர்களும் தொழிற்சங்கத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர்களும்
படிக்க வேண்டிய மிக மிக முக்கியமான புத்தகமாக நான் கருதுகிறேன்.
இன்றைய
உலகமய சூழலில் தொழிற்சங்கம் பொருளாதார வாதத்திற்குள் சிக்கித் தவிக்கிறது.
முதலாளித்துவக் கட்சிகள் தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றி வரக்கூடிய செயல்கள், பல தொழிற்சங்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
புத்தகத்தை
அறிமுகப்படுத்திய கோமதி சங்கர் அவர்கள் மிக முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
தோழர்
பீட்டர் துரைராஜ் அவர்களின் முன்முயற்சியால் 35க்கு
மேற்பட்ட புத்தகங்கள் விற்பனையாகியுள்ளது.
தாமஸ்
பிக்கெட்டின்யின் இந்தப் புத்தகம் சொல்லக்கூடிய தீர்வுகளில் மாற்றுக் கருத்துக்கள்
இருந்தாலும் முன் வைக்கக்கூடிய ஏராளமான தரவுகள் மிக முக்கியமான நடைமுறை சார்ந்த
முடிவுகள் ஆகும் . தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறேன் முடித்த பிறகு முழுமையான
மதிப்புரை எழுதுவேன்.
எதிர்
வெளியீடு
விலை 450/=

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக