Pages

செவ்வாய், நவம்பர் 20, 2018

மார்க்ஸ்-எங்கல்ஸ் தேர்வுநூல் அறிமுகம் தொகுதி – 3



   தோழர்களே, நண்பர்களே, 
    வணக்கம்.

இந்த மூன்றாவது தொகுதி நூல் அறிமுக கூட்டத்திற்கு 80 பேர்களுக்குமேல் வருகைதந்துள்ளது நிறைவாக உள்ளது. பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள இந்த தொகுதி 175 பக்கங்களைகொண்டது. இத்தொகுயில் ஜெர்மனியில் புரட்சியும்-எதிர்ப்புரட்சியும், 

   கொலோனில் நடந்த சதிவழக்கு, இந்தியாவில் பிரிட்டிஷ்ஆட்சி என்ற மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. இந்தக் கட்டுரைகள் 1851-52ம் அண்டுகள் நியூயார்க் டெய்லி டிரிப்யூனல் என்ற அமெரிக்க பத்திரிக்கையில் மார்க்ஸ் பெயரில் வெளிவந்தது. 

      நாமெல்லாம் கருதுவதுபோல் மார்க்ஸ் இதை எழுதவில்லை. மாறாக எங்கல்ஸ் மார்க்ஸ் பெயரில் எழுதினார். அந்த பத்திரிக்கையில் மார்க்ஸ் நிருபராக இருந்து பணியாற்றினார். இக்காலத்தில் மார்க்ஸ் பொருளாதார ஆய்வில் ஈடுபட்டிருந்ததால் அவரால் எழுத முடியவில்லை. 1913ம் ஆண்டு மார்க்ஸ் எங்கல்ஸ் கடிதப் போக்குவரத்தை வெளியிட்ட போதுதான் இந்த தகவல் வெளி உலகிற்கு தெரியவந்தது.

 ஜெர்மனியில் புரட்சியும் எதிர்ப்புரட்சியும் என்ற தலைப்பில் 19 துணைத் கட்டுரைகள்  எழுதிஉள்ளார். 1848-49ம் ஆண்டுகளில் ஜெர்மனியில் நடைபெற்ற புரட்சிகளின் விளைவுகளை ஆய்வுசெய்து 1852-52 ஆண்டுகளில் இவை எழுதப்பட்டுள்ளன. வரலாற்றியல் பொருள்முதல்வாத நிலைகளிலிருந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

தோழர்களே, நீங்கள் அனைவரும் இந்த புத்தகத்தை வாசித்திருக்க மாட்டீர்கள்.  கணிசமான தோழர்கள் படித்திருப்பீர்கள். சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு நடந் தநிகழ்வுகளை அன்றைய வரலாற்று பின்னனியுடன், இன்றைய தேவையுடன் இணைத்து வாசிக்க வேண்டும். எங்கல்ஸ் எழுத்து நடை நையாண்டியுடன், பல வரலாற்று நிகழ்வுகளை இணைப்பதாகவும், சமகால ஒப்பீடுகளுடன் எழுதியுள்ளார். 

        மார்க்ஸ்-எங்கல்ஸ் எழுத்துக்களுக்கு மிகப்பெரும் வரவேற்பு அக்காலத்தில் உழைப்பாளி மக்களிடமும், இதர பகுதியினரிடமும் இருந்தது. எனவே, அவர்களின் எழுத்துக்களை தொடர்ந்து வெளியிட பிரபலபத்திரிக்கைகள் முன்வந்தன. எங்கல்ஸ் இந்த கட்டுரைகளில் நிகழ்வுகளையும், அதன் விளைவுகளையும் வர்க்க அடிப்படையிலேயே ஆய்வு செய்கின்றார்.

இங்கிலாந்திலும் பிரான்சிலும பெரிய நகரங்களில் குறிப்பாக தலைநகரங்களில் குவிந்திருந்த வலிமைமிக்க, செல்வம் படைத்தமுதலாளி வர்க்கம் நிலப்பிரபுத்துவத்தை முற்றிலும் அழித்திருந்தது. ஜெர்மனியில் உயர்குல நிலப்பிரபுத்துவம் தனியுரிமை, நிலவுடைமைகளை நீடித்து வைத்திருந்தார்கள். அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தினர். ஜென்மானிய முதலாளி வர்க்கம் அந்த அளவு செல்வம் படைத்தவர்களாகவோ, செறிவுடையவர்களாகவோ இருக்கவில்லை.

அன்றைய ஜெர்மனி 36 சிற்றரசுகளாக சிதறிக் கிடந்ததையும் நிலப்பிரபுக்களுக்கும், முதலாளிகளுக்கும் இடையேயான போராட்டங்கள் புரட்சிகளையும், அதன் நோக்கங்களையும் விரிவாகவே விளக்குகின்றார். இவர்கள் மக்கள்தொகையில் சிறுபகுதியாக இருந்தனர். பெரும் மக்கள்திரள் விவசாயிகள், கைவினைஞர்கள், உழைப்பாளிகளாக இருந்தனர். இம்மக்களின் அரசியல் போராட்டங்களையும்  அதன் தாக்கங்களையும், போதாமைகளையும் ஆய்வு செய்துள்ளார். 1847ம் ஆண்டுகளில் ஐரோப்பாவில் பெரும்பாலும் பலர், அல்லது பல அமைப்புகள் தங்களை சோஷலிஸ்டுகள் அல்லது கம்யூனிஸ்டுகள் என்று அடையாளப்படுத்திக் கொள்வதில் ஏன் முனைப்புக் காட்டினர் என்பதற்கான சூழல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 
    
இதே காலகட்டத்தில் ஜெர்மனியில் சித்தாந்தவளர்ச்சியும் உறுதிபட்டது. ஹெகல் வெளியிட்ட “சட்டத்தின் தத்துவவியல்” என்ற  நூல் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முடியாட்சிதான் முபமையானது என அறிவித்தனர். இளம் ஹெகலியர்களின், அவரது மறைவுக்கு பிறகு துணிச்சலான அரசியல் கோட்பாடுகளை முன்வைத்து அரசுக்கும் மதத்திகும் எதிராக திரண்டனர். இதே காலத்தில் “இளம் ஜெர்மனி” என்ற இலக்கிய போக்குகளில் இருந்த போலித் தன்மைகளை எங்கல்ஸ் ஆய்வுக்கு உட்படுத்துகின்றார். 

           நிலப்பிரபுக்கள், உருவாகி வந்த முதலாளித்துவம், தொழிலாளி வர்க்கம் என்றுஎபோராட்டங்களிலும், புரட்சிகளிலும், உள்ள குறிக்கோள்களை ஆய்வு செய்து, உழைப்பாளி மக்களுக்கான அரசியில் உத்திகளை உருவாக்கி வழிகாட்டும் வகையில் அமைந்திருக்கிறது. இந்த பகுதியை நீங்கள் படிக்கும் போது வரலாற்று சம்பவங்கள் புதிதாக இருக்கலாம். புரிந்துகொள்வதற்கு கடினமாககூட இருக்கலாம். ஆனால் எங்கல்சின்   எழுத்து நடை தடையில்லாமல் வாசிப்பை வழிநடத்திசெல்கிறது.

நூலின் அடுத்த பிரிவான கொலோனில் சமீபத்தில் நடந்த வழக்கு. பிரஷ்ய அரசாங்கம் கம்யூனிஸ்ட் கழகத்தை சேர்ந்த 11 பேர் மீது தேசத்துரோக குற்றம் சாட்டி வழக்கு தொடுத்து. பொய்யான சாட்சிகள், ஜோடிக்கப்பட்ட ஆவணங்கள் மூலமாக 7 பேர்களுக்கு மூன்று முதல் ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கியது. மிதவாத முதலாளித்துவ வர்க்கமும், குட்டி முதலாளிகளும் அவர்களது சமூக அந்தஸ்தை கொண்டு, அரசின் உதவியுடன் பல அமைப்புகளை நடத்தினர். 

               பாட்டாளி வர்க்கம் அத்தகைய சமூக அந்தஸ்து, பணவசதி இல்லை. ஏனவே பலரகசிய அமைப்புகளை நடத்தினர். அரசு அவற்றின் மீது தாக்குhலை தொடுத்து.அவைகள் கண்டுப்பிடிக்கப்பட்டு சதிவழக்குகள் தொடரப்பட்டன.

இந்த கட்டுரையில், பாட்டாளி வர்க்கத்தின் ஆயுதம் தாங்கிய புரட்சிக்கான மார்க்சிய அடிப்படையை உருவாக்கி கொடுத்தார். அன்றைய கம்யூனிஸ்ட் கழகத்தின் நோக்கம் ஆட்சி மாற்றம்தான், ஆனால் அதற்கான வலிமை அமைப்புக்கு இல்லை என்பதையும், அதை நோக்கிய அணிதிரட்டலை பகிரங்கமாக பறைசாற்றுகின்றனர். “உழைப்பின் மீதான மூலதனத்தின் ஆதிக்கத்தை என்றென்றைக்கும் நசுக்கியேதீரவேண்டும்” என்று அறிவித்தனர். 

    தொழில்துறை முதலாளிகளுக்கு எதிராக குட்டிமுதலாளிகளும், தொழில்துறை தொழிலாளர்களும் அணிதிரள்வதை, கம்யூனிஸ்டுகள் புரிந்து வைத்துள்ளதை விவரிக்கின்றார். முதல் பகுதியைவிட மேலும் கூடதலாக கவனம் செலுத்தி படிக்கவேண்டும். காரண ஆயுதப் புரட்சிக்கான மார்க்சிய அடிப்படை கருத்துத்ககளை முன்வைத்துள்ளார். பிற்காலத்தில் இவை மேம்படுத்தப்பட்டன.

மூன்றாவது முக்கியபிரிவாக இருப்பது மார்க்ஸ் இந்தியாவை பற்றி எழுதியது. மார்க்ஸ் இந்தியாவை பற்றி 172 பக்கங்கள் எழுதியுள்ளார் என வரலாற்றாளர் யேன் மிர்தால் தெரிவித்துள்ளார். இந்தியாவை பற்றிய மார்க்ஸ் எழுதியகருத்துக்கள் குறிப்பாக, ஆசியஉற்பத்திமுறை, நிலவுடைமை, நீர்ப்பாசனவசதி, சலனமற்ற கிராமங்கள், கிராம வேலைபிரிவினை, பிரிட்டிஷ் ஆட்சியின் இரட்டைபணி (அழித்தல், ஆக்கம்) பற்றிய கருத்துக்கள் மீது விவாதங்கள் விரிவாகநடந்துள்ளன. அவைப்பற்றி இங்கு விவாதிக்க நேரமும், இன்றைக்கான தலைப்பும் இல்லை. ஏனவே நான் இந்தb தாகுதியில் அடங்கியுள்ள 18 பக்கங்களை கொண்ட இரு கட்டுரைகளை மட்டும்  கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.இவை 1853-ம் ஆண்டு எழுதப்பட்டது.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி என்ற கட்டுரையில் இந்தியா, இத்தாலி, அயர்லாந்து இடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகளை ஒப்பிடுகிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி இந்திய மக்களுக்கு பொற்காலம் என்று நம்புகிறவர்களை மார்க்ஸ் மறுக்கிறார். இந்தியா அதுவரை சந்தித்திராத கொடுங்கோன்மையை சந்தித்தது பற்றியும், அடிமைகள் மீது எஜமானறுக்கு இருந்த பரிவுகூட இல்லாமல் இந்திய மக்கள் சுரண்டப்பட்டதை மார்க்ஸ் எடுத்துரைக்கிறார். பிரிட்டிஷார் பொதுமராமத்து துறையை புறக்கணித்ததால் இந்திய விவசாயம் எவ்வாறு அழிந்தது. 

          இந்திய சமுதாயத்தின் அச்சானியாக இருந்த நூற்பாளர், நெசவாளர்களை அழித்த விதத்தையும், இந்திய உழைப்பாளிகள் செய்த அதிவிசேஷமான பருத்தி துணிகளை பெற்று வந்த ஐரோப்பா, அவற்றை நசுக்கி, பருத்தி துணிகளின் அசல் தாயகமான இந்தியாவிற்கே பருத்திதுணிகளை இறக்குமதி செய்த கொடுமைகளை விவரிக்கப்பட்டுளளது.

இந்தியாவில் அதுவரை நடந்த  படையெடுப்புகள் இந்திய சமூகத்தின் அடித்தளத்தை அசைக்கவில்லை. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சி அவற்றை அசைத்து நசுக்கிவிட்டது. முதலில் இந்திய ஐக்கியம் வால் மூலம் உருவாக்கப்பட்டாலும், பிறகு மின்சாரம் தந்தி மூலம் அவை வலுப்பட்டது.

இந்தியா எப்போது விடுதலை என்பது பற்றி மாhக்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார். பிரிட்டனில் தொழில்துறை பாட்டாளி வர்க்கம் ஆட்சியை கைப்பற்றினால் அல்லது ஆங்கிலேயர் ஆட்சியை இந்தியர்கள் முற்றிலும் வளர்ந்து ஒழிக்கும் வரையில் இவ்வாட்சி நீடிக்கும் என்கிறார். இந்தியாவில் இருந்த வழிபாட்டு முறைகள், மூடப்பழக்கங்கள் பற்றியும் மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

, மார்க்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ்ஆட்சி ஒழியவேண்டும் என்பதிலும், அதற்கு எதிரான போராட்டங்கள்  போராட்டங்கள் வலுப்பெறவ nண்டும் என இப்பதிரிக்கையின் மூலம் உலககருத்தை திரட்டினார்.


             தோழர்களே, இந்தநூல் நமக்கு ஒரு அடிப்படையான வரலாற்று அறிவையும், வர்க்க பார்வை ஆய்வையும், ஆயுதப் புரட்சி எப்போது, எப்படி, என்ற மார்க்சிய அடிப்படையையும், இந்தியச முதாயம், பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவுகள், அதன் எதிர்காலம் குறித்த குறிக்கோள்களையும் விளக்குகிறது. வாசியுங்கள். வர்க்கப் பார்வையை விசாலப்படுத்துங்கள்

-அ.பாக்கியம்
தோழர் சிங்காரவேலர் படிப்பு வட்டம்
திருவண்ணாமலை
17.11.2018 பிற்பகல் 3 மணி - வேங்கிக்கால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...