Pages

வியாழன், ஆகஸ்ட் 10, 2017

பாஜக; பின்தொடரும் பாலியல் வக்கிரம்

.
      அரியானா  பாஜக மாநில தலைவராக சுபாஷ் பர்லா உள்ளார். இவரது மகன் விகாஷ் அவரது நண்பர்  ஆசிஷ் இருவரும் சண்டிகரில்  இளம்பெண்ணை இந்த மாதம் 5ம் தேதி காரில் பின்தொடர்ந்து பாலியல் வக்கிரம் செய்ய முயற்சித்தனர். காவல்துறை அப்பெண்ணை மீட்டனர். ஆனால் அங்கு வைக்கப்பட்டிருந்து 9 சிசிடிவி கேமராக்களும் வேலை செய்யவில்லை என்று கூறி குற்றவாளிகளை தப்பிக்கவைக்க முயற்சி செய்கின்றனர். 

      பாஜக ஆட்சிபீடம் ஏறிய விடன் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக தனியாக செல்லும் பெண்களை பின்தொடர்ந்து பாலியல் வக்கிரத்தில் ஈடுபடுவது அதிகமாகி உள்ளது.

       2017 ஜுலை மாதம் டெல்லியில் 21 வயதுள்ள விமானப்பணிப்பெண் பின்தொடர்ந்த இளைஞனால் தெருவில் குத்தி கொலை செய்யப்பட்டாள். பலமுறை புகார் செய்தும் காவல் துறை கண்டுகொள்ளவில்லை.

     இதே ஆண்டு மே மாதம் டெல்லியில் 24 வயதுள்ள பெண் பின்தொடர்ந்தவன் வீட்டுவாசலில் வந்து குத்தி கொலை செய்கிறான். 

       2016 செப்டம்பர் மாதம் டெல்லியில் 22 வயதுள்ள பெண் பட்டபகலில் பின்தொடர்ந்தவனால் படுகொலை செய்யப்படுகிறாள்.
        
          2014-ல் பெண்கள் மீதான பின்தொடர்ந்த பாலியல் வன்முறை 4699 இருந்தது. 2015-ல் இது 6266 ஆக அதிகரித்துள்ளது.
           
            2015-ல் டெல்லியில் அதிகபட்சமாக 1124 வன்முறைகள்  அதாவது மொத்த குற்றங்களில் 12.1 சதமாக உளளது. அடுத்ததாக மராட்டியத்தில் 1399, தெலங்கானாவில் 766  ஆந்திரபிரதேசதில் 551 ஆக உள்ளது. 

               பெண்களை பின்தொடர்ந்து பாலியில் வன்முறை நடைபெறுவதில் மிகவும் ஆபத்தான நகரங்களாக டெல்லி, மும்பைய்,பூனே, அவுரங்காபாத், கொல்கத்தா உள்ளது.

              மொத்தமாக 2015-ல் விசாரிக்கப்படவேண்டிய 9083 வழக்குகளில் 146 மட்டுமே முடிக்கப்பட்டுள்ளது அல்லது திரும்பபெறப்பட்டுள்ளது. மற்றபை அப்படியே உள்ளது.

         
மொத்தமாக நடைபெறும் குற்றங்களில் நாடுமுழுவதும் 46.9 சதம் தண்டிக்கப்பட்டால் இதுபோன்ற குற்றங்களில் 26.4 சதம் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்.

புதன், ஆகஸ்ட் 02, 2017

அதிகார பித்தலாட்டங்கள்


         திகார பித்தலாட்டங்கள் அம்பலமாகி  வருகிறது. பாஜக தலைவர் அமித்ஷாவின் சொத்து மதிப்பு 300 சதவீதம் உயர்ந்துள்ளது என்பதை விட இந்த செய்திகளை பத்திரிக்கைகளில் வெளிவர விடாமல் தடுப்பதுதான் மிகப்பெரும் ஆபத்தாகும். டைம்ஸ் ஆஃப் இந்தியா என்ற பத்திரிக்கையில் வெளிவந்த செய்தியை ஒரு மணி நேரத்திற் குள்ளாகவே நீக்கிவிட்டனர். நீக்கப்பட்டதற்கான விளக்கம் இதுவரை அளிக்கப்படவில்லை. அதற்கான பொறுப்பையும் இதுவரை ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இதுமட்டுமல்ல இதனுடைய துணை பத்திரிக்கையான நவபாரத் டைம்ஸ், எகானமிக் டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் வெளி வந்ததையும் உடனடியாக நீக்கிவிட்டனர். இதேபோன்ற ஒரு செய்தி ஜூலை 29 அன்று டி.என்.ஏ என்ற இணையதள பத்திரிக்கையில் வெளிவந்ததும் உடனடியாக நீக்கப்பட்டது. பிஜேபி தலைவர்களை பற்றி, அவர்களது ஊழலை பற்றி 99 சதவீதம் செய்திகள் வெளிவராமல் மிரட்டி தடுத்துவிடுகின்றனர். வெளிவரக்கூடிய ஒரு சதவீதத்தையும் உடனடியாக அச்சுறுத்தி நீக்கிவிடுகின்றனர். அமித்ஷா சொத்து சம்பாதித்ததை விட அச்செய்திகள் வெளிவராமல் தடுக்கிற அதிகாரமே இன்று கோலோச்சுகிறது. 
              
             ஆனால் நமது நாட்டு பிரதமர் இதைப்பற்றி எல்லாம் அலட்டிக்கொள்ளாமல்  இந்த  ஆண்டு மே 3ம் தேதி சர்வதேச பத்திரிக்கை சுதந்திர தினத்தில் பத்திரிக்கை சுதந்திரத்தை தயக்கமின்றி பாதுகாப்போம், அது ஜனநாயகத்தின் உயிர் என்றெல்லாம் பேசியுள்ளார். ஒரு சதம் ஊழலை வெளியிட்டால் கூட மிரட்டுவது, உடனடிய்hக நீக்குவது, ஒளிபரப்பை தடைசெய்வது என்று வேட்டையாடுகின்றனர். இந்தியா, உலக அளவில்  பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படும் நாடுகளில் பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முயற்சிக்கிறது.

பித்தலாட்டம் 1
             பாஜக தலைவர் அமித்ஷா தற்போது குஜராத்திலிருந்து இராஜ்ய சபாவிற்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு தாக்கலில் அவரின் சொத்து வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதை அறிய முடிந்தது. 2007 மற்றும் 2012 ஆகிய காலத்தில் அவர்  சட்டமன்ற உறுப்பினராக இருந்தபொழுது 6 கோடி சொத்து அதிகரித்து இருப்பதாக கணக்கு காட்டியுள்ளார். 2012லிருந்து 2017க்குள் அவரது சொத்து 34 கோடியாக உயர்ந்துள்ளது. அசையும் சொத்து 1.91 கோடியிலிருந்து 19.01 கோடியாக உயர்ந்துள்ளது. அசையா சொத்து 6.63 கோடியிலிருந்து 15.30 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் 2.60 கோடியிலிருந்து 47.69 லட்சமாக குறைந்துள்ளது. 13.54 கோடியிலிருந்து 34.40 கோடியாக சொத்தை உயர்த்தியுள்ளார். இதில் பரம்பரை சொத்து 10.38 கோடி என்று தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு தேர்தலின் போது அவர் மொத்த சொத்தாக காண்பித்திருப்பது 11.15 கோடி மட்டுமே. இந்த 5 ஆண்டுகளில் 3 மடங்கு எப்படி அதிகமானது என்று தெரியவில்லை. எங்கு சம்பாதித்தார். எப்படி சம்பாதித்தார் என்ற விவரம் அநேகமாக மோடிக்கு மட்டும் தெரியலாம்.


பித்தலாட்டம் 2
இதேபோன்று ஜவுளி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் ஸ்மிரிதிராணியின் பட்டப்படிப்பு பித்தலாட்டமும் அம்பலமாகியுள்ளது. 2004 சாந்தினிசௌக் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறபொழுது டெல்லி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் 1996 ஆம் ஆண்டு பி.ஏ பட்டம் முடித்ததாக எழுதி கொடுத்துள்ளார். 2014 ல் ராகுல்காந்தியை எதிர்த்து அமேதி தொகுதியில் போட்டுயிடுகிறபொழுது தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் டெல்லி பல்கலை கழகத்தில் அஞ்சல் வழி கல்வியில் 1994 ஆம் ஆண்டு பி.காம் முடித்ததாக எழுதி கொடுத்துள்ளார். தற்போது குஜராத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் பட்டபடிப்பை முடிக்கவில்லை என்று எழுதி கொடுத்துள்ளார். இதுதான் இந்தியாவின் கல்வி அமைச்சராக, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்து பணியாற்றிய, தற்போது ஜவுளி மற்றும் தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சருடைய லட்சணம். 

பித்தலாட்டம் 3 
இவர் மீது தற்போது பாராளுமன்ற உறுப்பினருக்கான நிதியை தவறாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மத்திய குஜராத்தில் மக்ரோல் என்ற கிராமத்தை தத்தெடுப்பதாக அறிவித்தார். இங்கு நிதி ஒதுக்கிடு செய்ததில் ஒரு நிறுவனத்திற்கு 1.23 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளார். இதுவரை அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் முழு பணமும் கொடுக்கப்பட்டுவிட்டது. ஒரு நிறுவனத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து 50 லட்சத்திற்கு மேல் ஒப்பந்த ஒதுக்கிடு செய்ய கூடாது என்ற விதி உள்ளது. இது 2014 - 15 மற்றும் 2016 - 17 நடைபெற்றுள்ளது. நிதி தவறாக கையாளப்பட்டுள்ளது என சிஏஜி மற்றும் மாவட்ட ஆட்சியரும் அறிக்கை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பித்தலாட்டம் 4
தற்போது துணை ஜனாதிபதி பதவிக்கு பாஜகவினுடைய மூத்த தலைவர் வெங்கையா நாயுடு நிறுத்தப்பட்டுள்ளார். இவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. தெலுங்கானா அரசாங்கம் காவல்துறைக்கு வாகனம் வாங்குவதற்காக 271 கோடியை ஒப்பந்தம் கோராமல் அர்ஷடோயோட்டா (ழயசளாய வடிலடிவய) என்ற நிறுவனத்திற்கும் ஹிமான்சுமோட்டார்ஸ் (ழiஅயளோர ஆடிவடிசள) என்ற நிறுவனத்திற்கும் ஒதுக்கியுள்ளது. இதில் முதல் கம்பெனி வெங்கையா நாயுடுவின் மகளுக்கு சொந்தமானது. இரண்டாவது கம்பெனி தெலுங்கானா முதலமைச்சர் சந்திர சேகர் ராவின் மகனுக்கு சொந்தமானது.

பித்தலாட்டம் 5
2017 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தெலுங்கானா அரசாங்கம் இரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது வெங்கையா நாயுடுவின் மகள் செயல்படுத்தி வரக்கூடிய சுவர்ண பாரத் டிரஸ்ட்டிற்கு விதிவிலக்கு கொடுத்து 2 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

பித்தலாட்டம் 6
வெங்கய்யா நாயுடு பாஜக தலைவராக இருந்தபோது , குஷாபாபு தாக்ரே அறக்கட்டளைக்கு தலைவராக இருந்தார். அப்போது இந்த அறக்கட்டளைக்கு 2004-செப்டம்பர் 25-ல் மத்தியபிரதேச அரசிடமிருந்து  பலநூறுகோடி மதிப்புள்ள 20 ஏக்கர்  நிலத்தை  25 லட்சம் பணத்தை செலுத்தி வருட வாடகை ஒரு ருபாய் செலுத்தி பெற்றுக்கொண்டார். இந்த இடம் வணிகமயத்திற்கு பயன்படுத்தப்பட்டது. 2011 ஏப்ரல் 6-ம்தேதி உச்ச நீதி மன்றம் இந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது.

பித்தலாட்டம் 7
வெங்கய்யா நாயுடு நெல்லூரில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது 2002ம் ஆண்டு ஏழை, தனிப்பெண்கள், நிலமற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 4.95 ஏக்கரை அபகரித்துக்கொண்டார்.  ஸ்தல மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தால் அந்த இடத்தை மீண்டும் ஒப்படைத்தார்.
மேற்கண்ட மும்மூர்த்திகள் தான் பாஜகவின் முக்கிய வேட்பாளர்கள்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...