Pages

வெள்ளி, மார்ச் 24, 2017

கலவர உற்பத்தியாளர்- Riot Manufacturer

         
         அனைத்து மக்களுக்காகவும் எனது அரசு பணியாற்றும் என்று உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்திய நாத் 21.3.2017 அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றி உள்ளார். கேட்க இனிமையாகத்தான் இருக்கிறது. அவரின் கடந்தகால செயல்கள் அப்படி இல்லை. இவர் உபி முதல்வராக தேர்வுசெய்யப்பட்டவுடன் பலர் அதிர்ச்சி அடைந்தனர். சங் பரிவாரங்களின் வரலாறு தெரிந்தவர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கமாட்டார்கள். 

  மோடிக்கும் யோகிக்கும் வேறு வேறு கட்டமைப்பை கொடுக்க முயற்சிக்கிறார்கள். மோடி இதுவரை அனைவருக்குமான வளர்ச்சி என்ற முகமூடியை அணிந்த யோகி ஆதித்தியநாத் ஆக இருந்தார். இப்போது அந்த முகமூடியை கழட்டி விட்டார். எனவேதான் யோகி ஆதித்தியநாத்தை உ.பி. முதல்வராக தேர்வு செய்துள்ளனர். குஜராத்தில் மோடி ஆட்சியிலிருந்தபோது அரங்கேற்றப்பட்ட 2002-ம் ஆண்டு கலவரத்தால் உத்வேகப்பட்டுதான் இந்து யுவ வாஹினி என்ற அமைப்பை இன்றைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்தியநாத் ஆரம்பித்தார். 
          
    த்திரபிரதேச தேர்தலில் கூட மோடியும், யோகியும் போட்டிக் கொண்டுதான்  வகுப்புவாத பேச்சுக்களை முன்வைத்தனர். இஸ்லாமியர்களுக்கு கல்லறை உண்டு இந்துக்களுக்கு சுடுகாடு இல்லை என்றும் மொஹரத்திற்கு மின்சாரம் கிடைக்கிறது, தீபாவளிக்கு மின்சாரம் கிடைக்கவில்லை என்று ஒரு பிரதமரே தரம்தாழ்ந்த வகுப்புவாத பேச்சில் ஈடுபட்டார் என்றால் யோகியிடமிருந்து மோடி எப்படி வேறுபடுத்துவது என்று விளங்கவில்லை

     துறவிகள் கடவுளை உள்வாங்கி மக்களிடம் எடுத்து செல்பவராக இருப்பார்கள். துறவிகள் முற்றும் துறந்தவர்கள், கடவுளின் மார்க்கத்தை போதிப்பவர்கள் என்பதால் மக்கள் துறவிகளை நேசிப்பார்கள். ஆதித்தியநாத் அப்படிப்பட்ட துறவி அல்ல. இவர் துறவி வேடம் அணிந்த வன்முறையாளர் மட்டுமல்ல வன்முறை உற்பத்தியாளர் என்று சொல்வதுதான் பொறுத்தமாக அமையும். மதத்தின்  பெயரில் தனது வன்முறையை நியாயப்படுத்துபவர். ஆயுதம் தாங்கிய வன்முறையாளர். மாற்று கொள்கைளை கொண்ட மக்கள் மீது வெறுப்பை விதைக்கக்கூடியவர். பல குற்றச்செயல்களுக்காக கைதுசெய்யப்பட்டவர். 

     1998-ம் ஆண்டு கொரக்பூர் தொகுதியிலிருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுத்த முதல் வருடத்திலேயே மகாராஜ்கன்ஜ் மாவட்டத்தில் பஞ்ருக்கியா கிராமத்தில் முஸ்லிம்கள் கல்லறையை ஆயுதாங்கிய கும்பலுடன் கைப்பற்றும் முயற்சியில் இறங்கினார். காவல்துறை தலையீட்டால் அந்த கும்பல்களுடன் தப்பி ஓடினார். 

         ப்பி ஓடிய போது அந்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள சாலையில் ஆர்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். நான்கு பேர்களுக்கு குண்டு காயம் ஏற்பட்டது. சத்தியபிரகாஷ்யாதவ் என்ற தலைமைக்காவலர் கடுமையான காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் குண்டுகள் அகற்றப்பட்டாலும் அடுத்த சில நாட்களில் அவர் இறந்துவிட்டார். கொலை, கலவரம், வழிபாட்டுத்தளத்தை மாசுபடுத்தியது, கொலைக்கருவிகளுடன் சுற்றியது, அத்துமீறி கல்லறைக்குள் நுழைந்தது, இருமதப்பிரிவுகளுக்கிடையே பகை உணர்ச்சிகளை தூண்டியது என ஆதித்தியநாத் மற்றும் அடையாளம் தெரிந்த 24 பேர்கள் மீது அப்போது பதியப்பட்ட வழக்கு இன்றும் நிலைவையில் இருக்கையில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


          தித்தியநாத்தின் இந்த வன்முறையும், வழக்கும் இவர் ஒரு வன்முறை உற்பத்தியாளராக உருவாவார் என்பதற்கான அடையாளம் அன்றே தெரிந்தது. 2002ம்  ஆண்டு சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து யுவ வாஹினி என்ற அமைப்பை உருவாக்கினார். இதை அடுத்து கொரக்பூர் மற்றும் கிழக்கு உத்தரபிரதேசத்தை தொடர்ந்து வகுப்பு கலவரம் நடக்கும் கலவரபூமியாக மாற்றினார்.

          சினிமாவில் வரும் ஆறுகொலை ஆறுமுகம்போல் அல்ல இந்த யோகி. இந்த வட்டாரத்தில் ஆறு பெரும் கலவரங்களுக்கு முக்கிய காரணமாக இருந்து இரத்த ஆறுகளை ஓட வைத்த நிஜ வன்முறையாளர். குஷ்ன்நகர் மாவட்டத்தில் மோகன் முந்ரா கிராமத்தில், கொரக்பூர் மாவட்டம் நதூவா கிராமத்தில், கொரக்பூர் நகர் துர்க்மான்பூரில், மகாராஜ்கன்ஜ் மாவட்டம் நர்கட்டாஹா மற்றும் பெஹடி கிராமத்தில், கபீர்நகர் மாவட்டம் டங்கட்டா என்ற இடத்தில் நடத்திய கலவரங்கள் அனைத்தும் மக்களை துண்டாடியது. பகை உணர்ச்சியை விதைத்து குரோத வாழ்க்கையை அன்றாட நிகழ்வாக மாற்றினார். 

    மேற்கண்ட இடங்களில் மதரிதியிலான மோதல்கள் எதுவும் நடைபெறாமல்தான் இருந்தது. இங்கு சில குற்றச்சம்பவங்கள் நடைபெற்றபோது அதில் தலையிட்டு மதக்கலவரமாக மாற்றும் பணிகளை இந்து யுவ வாஹினி சூழ்ச்சி திறனுடன் துவேசப்பிரச்சாரத்துடன் செய்து முடித்தது. எனவே 2002 முதல் 2007 வரை இந்த கொரக்பூர் வட்டாரத்தில் 22க்கும் மேற்பட்ட வகுப்பு கலவரங்களை நடத்தியுள்ளார். இவற்றிற்காக இப்போதைய முதல்வர் ஆதித்தியநாத் கைதுசெய்யப்பட்டு லாக்கப்பில் பலமுறை அடைக்கப்பட்டுள்ளார்.
 
      2007 சடடமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற கலவரத்தில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்ள் கொளுத்தப்பட்டன. இந்த கலவரத்தை நடத்தியற்காக இப்போதைய முதல்வர் ஆதித்தியநாத் மற்றும் இந்து யுவ வாஹினி அமைப்பினர் 12 பேர்களுக்குமேல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பலநாட்கள் ஊரடங்கு அமுலில் இருந்தது. வகுப்புக்கலவரத்தை நடத்துவதில் கைதேர்ந்தவர்தான் இப்போதைய மாநில முதல்வர்.

விஷம் கலந்த வெறிப் பேச்சுகள்

       வெறியும் நச்சுத்தன்மையும் கலந்த பேச்சுக்கள்தான் யோகி ஆதித்திய நாத்தின் வரலாறாக இருந்துள்ளது. “வாய்ப்புக் கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் கவுரி, கணேஷ், நந்தி சிலைகளை நிறுவிடுவோம்’’ (2015 பிப்.) என்று சிறுபான்மை மக்களின் வழிபாட்டுதலங்களுக்கு எதிராக பேசினார்.
“காசிக்கு மதம் கடந்து யார்வேண்டுமானாலும் வரலாம். ஆனால் மெக்கா மெதினாவிற்கு முஸ்லீம்கள் மட்டும்தான் செல்ல முடியும். இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகம் முழுமைக்கும் இது இந்துத்துவா நூற்றாண்டு” என்று கூச்சலிட்டார். பொதுப்புத்தியை கடந்து வெறுப்புணர்ச்சிகளை மட்டும் வார்த்தைகளாக வாந்தி எடுத்தார்.  

        ரசு ஊழியர்கள் அனைவரும் யோகாவில் கட்டாயம் பங்குபெற வேண்டும் என 2015 ஜுன் மாதம் அரசு உத்தரவிட்டபோது “யோகாவை துவங்கிய லார்ட் ஷ்ங்கர் பெரும் யோகி. மகாதேவ் (கடவுள் சங்கரின் மற்றொரு பெயர்) இந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கிறார். யாரெல்லாம் யோகாவும் லார்ட் ஷ்ங்கரையும்  வேண்டாம் என்று கூறுகிறார்களோ அவர்கள் இந்துஸ்தானை விட்டு வெளியேற வேண்டும்”. “சூரிய நமஸ்காரத்தை யார் எதிர்க்கிறார்களோ அவர்கள் தாங்களாகவே கடலில் மூழ்கி இறந்துவிடவேண்டும்.” என பகீரங்க மிரட்டல் விடுத்தார்.

          2015 ஆக்ஸ்ட் மாதம் லவ் ஜிஹாத் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்து பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். உங்கள் பெண்களை இஸ்லாம் இளைஞர்கள் மயக்கி முஸ்லீமாக மாற்றி வருகின்றனர். இதனால் இந்துக்களின் மக்கள் தொகை குறைந்து முஸ்லீம்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்று உண்மைக்கு மாறாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டார்.

              2015 நவம்பர் மாதம்“ நடிகர் ஷ்hருகானையும் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதி ஹபீஸ் ஷ்யீத்தையும் ஒப்பிட்டு பேசினார். இந்திய சூழல் பிடிக்கவில்லை என்றால் பாகிஸ்தானுக்கு ஓடிவிடவேண்டும் என்று எச்சரித்தார்.”

     தாத்ரியில் மாட்டுகறி வைத்திருந்தாக  முகமது அக்லக் கொல்லப்பட்டார். “2017 ஜனவரி மாதத்தில் அக்குடும்பத்தின் மீது பசுவதை தடுப்புச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். படுகொலைக்கு பிறகும் இறந்த குடும்பத்தின்மீதே வழக்கு போட வேண்டும் ”என்றார்.


அன்று சட்டத்தை மதிக்காதவர். இன்றும் . . . .

       ந்தியாவின் அரசியல் சட்டத்தை மதிக்காத, சட்டம் ஒழுங்கை அடிக்கடி தனது வன்முறையால் மீறுகிறவர்தான் இப்போதைய முதல்வர். “ஒரு இந்து கொல்லப்பட்டால் நாங்கள் காவல் நிலையம் செல்ல மாட்டோம். மாறாக 10 முஸ்லீம்களை கொல்லுவோம். அவர்கள் ஒரு இந்து பெண்ணை எடுத்தால் நாங்கள் 100 முஸ்லீம் பெண்களை எடுப்போம்.”

     “உத்திரபிரதேசத்தையும், இந்தியாவையும் இந்துராஷ்டிரமாக மாற்றும் வரை நான் ஒயமாட்டேன். 10 முதல் 20 சதம் சிறுபான்மையினர் இருக்கும் இடத்தில் வகுப்புக்கலவரங்களும், 20 முதல் 35 சதம் சிறுபான்மையினர் இருக்கும் இடத்தில் மோசமான வகுப்புக்கலவரங்ளும் நடைபெறுகிறது. 35 சதத்திற்குமேல் சிறுபான்மையினர் இருக்கும் இடத்தில் மற்ற சமூகத்தினர் வாழமுடிவதில்லை” என்று கலவர உற்பத்தியாளர் கலவரங்களுக்கு சிறுபான்மை மக்கள்தான் காரணம் என்று பழியை சுமத்தினார்.

      ட்சிக்கு வந்தவுடன் ராமர்கோயில் கட்டுவோம் என்று கொக்கரித்தார். “பாபர்மசூதியை இடிக்கும்போது தடுக்கமுடியாதவர்களால் ராமர்கோயிலை கட்டுவதை எப்படி தடுக்கமுடியும்” “அமெரிக்க அதிபர் டொனால் டரம்ப் இஸ்லாமியர்களை தடைசெய்தது போல் இந்தியாவிலும் தடைசெய்ய வேண்டும்” என (பிப் 11 தேர்தல் பிரச்சாரத்தில்) பேசினார்.

       ருஷ்ய அதிபர் விளாதிமிர் புடினையும் யோகி ஆதித்தியநாத் பாராட்ட தவறவில்லை.“ ருஷ்யாவில் வாழ விரும்புகிறவர்கள் ருஷ்ய சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். யார் இந்த சட்டத்தை விரும்பவில்லையோ அவர்கள் விரும்பும் ஷரியத் சட்டம் எங்கு இருக்கிறதோ அங்கு செல்லலாம் என்று 2013-ல் புடின் அறிவித்தது போல் காங்கிரஸ், எஸ்பி, பிஎஸ்பி, ஆர்ஜேடி  போன்ற கட்சிகள் அறிவிக்க துணிச்சல் இருக்கிறதா?” என்று  தேர்தல் பிரச்சாரத்தில் (2017-ஜன30 தேர்தல் பிரச்சாரம்) கேள்வி எழுப்பினார்.

   “27 ஆண்டுகளுக்கு முன்பு காஷ்மீர் பண்டிட்களுக்கு ஏற்பட்ட நிலைமையை மேற்கு உத்திரபிரதேச மக்கள் மறந்துவிடக்கூடாது. அதேபோல் இங்கும் உங்களை முஸ்லீம்கள் வெறியேற்றிவிடுவார்கள். கிழக்கு உத்திரபிரதேசத்தில் நாங்கள் அவர்களை அனுமதிக்கவில்லை” என்று இதே கூட்டத்தில் பேசினார்.
        2017 மார்ச் 13 யோகி ஆதித்தியநாத் முதல்வராக தேர்வுசெய்யப்பட்ட அன்று பெய்ரேலி பகுதியில் “இந்த ஆண்டு டிசம்பர் 30க்குள் அனைத்து முஸ்லீம்களும் கிராமத்தைவிட்டு வெளியேறிவிட வேண்டும். நீங்கள் வெளியேறவில்லையென்றால் அதற்கான விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். அமெரிக்காவில் டிரம்ப் என்னசெய்தாரோ அதே இங்கும் கடைபிடிக்ககப்படும். காரணம் தற்போது உபியில் பிஜேபி அரசாங்கம் உள்ளது. விரைவில் முடிவுசெய்து கொள்ளுங்கள் நீங்கள் இங்கு வாழத்தகுதியற்றவர்கள் என்று”

      ந்த யோகி ஆதித்தியநாத் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது பசுவதை தடுப்புச்சட்டத்தை தேசிய அளவில் கொண்டுவரவேண்டும். இந்தியாவிற்கு பாரத் என பெயர் மாற்ற வேண்டும் என்றும் மதமாற்ற தடைசட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் பொதுசிவில் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று தனிநபர் சட்டம் கொண்டு வந்து அரசியல் சட்டத்தை மீறுகிற செயலையே தொடர்ந்து செய்து வந்தார்.

      த்தகைய காவி உடையும், துறவி தோற்றமும் கொண்டு அவரின் உண்மை வரலாற்றை மறைக்க முடியாது. இத்தகைய முதல்வர் தான் அனைவருக்குமான ஆட்சி என்று கூச்சமின்றி கூப்பாடு போடுகின்றார். மோடியை விரும்பக்கூடிய பலரும் மோடியைவிட இவர் தீவிர இந்துத்துவா வாதி என்று தரம்பிரிக்க பார்க்கிறார்கள். மோடி ஆதித்தியாநாத்திற்கு சளைத்தவர் அல்ல என்பதற்கான பல சம்பவங்கள் உள்ளது..

      அனைத்து மக்களுக்குமான அரசு என்ற வார்த்தைகளுக்கு அப்படியே அர்த்தப்படுத்தி கொள்பவர்களுக்கு காலம் உண்மையை வெளிபடுத்தும்.
  ஏ.பாக்கியம்





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...