Pages

ஞாயிறு, ஆகஸ்ட் 23, 2015

நோய்நாடி…..


     இந்தியாவில் வந்த நோயை தீர்க்க மருத்துவமனை சென்று/ இருந்த வாழ்வை மட்டுமல்ல எதிர்கால தலைமுறையையும் நடுவீதியில் நிறுத்தும் நிலைதான் ஏற்பட்டு வருகிறது.  தனியார் மருத்துவ மனைகள் பொது மருத்துவமனைகளைவிட பலமடங்கு பணம் பறிக்கின்றனர்.
 
  1. புற்று நோய்க்கு பொதுமருத்துவனையைவிட முன்று மடங்கு தனியா                    மருத்துவனையில் செலவாகிறது. 
  2. இதய அறுவை சிகிச்சைக்கு இதே அளவு செலவாகிறது.
  3. கிராமபுறத்தில் பாலியல் மற்றும் சிறுநீரக பிரச்சனைக்கு பலமடங்கு                       செலவாகிறது
.4. சாலைவிபத்துக்களில் பாதிக்கப்பட்டவர்கள் அதிக அளவு தனியாரிடம்                  பணம் செலவு செய்ய வேண்டியுள்ளது.

       ஒரு குடும்பம் தங்களத வருமானத்திலும், சேமிப்பிலும் பெரும்பகுதியை மருத்துவத்திற்காக செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.கிராமபுறத்தில் 67.8 சதம் வருமானம் அல்லது சேமிப்பிலிருந்தும், 24.9 சதம் கடன் வாங்கியும் 0.8 சதம் சொத்துக்ளை விற்பனை செய்தும் 5.4சதம் நண்பர்கள் , உறவினர்கள் உதவி பெற்றும், 0.7 சதம் இதரவழிகளிருலும் செலவு செய்கின்றனர்.நகர்புறத்தில் இது முறையே 74.9 வருமானத்திலும், 18.2, கடன் வாங்கியும் 0.4, சொத்துக்ளை விற்றும் 5.0 மற்றவர்களின் உதவியுடன் , 1.3 இதர வழிகளிலும் செலவு செய்கின்றனர்.

     5 இந்தியர்களில் 4 பேர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டம் இல்லை.இந்திய கிராமபுறங்களில் 85.9 சதமான மக்களுக்கு மருத்துவ காப்பீட்டுத்திட்டங்கள் இல்லை. அரசு உதவியுடனான மருத்துவ காப்பீட்டில் 13.1 சதமும், வேலை அளிப்பவர் உதவியுடனான மருத்துவ காப்பீட்டில் 0.6 சதமும், உள்ளனர்.

       காப்பீட்டுக்கம்பெனிகள் மூலமாக 0.3 சதம் மட்டுமே மருத்துவ காப்பீடு செய்யப்பட்டுள்ளது.  இதுவே நகர்புறத்தில் காப்பீடு திட்டம் இல்லாதவர்கள் 82 சதமும் அரசு உதவியுடன் 12 சதமும், வேலை அளிப்பவரின் உதவியுடன் 2.4 சதமும், கம்பெனிகள் மூலமாக 3.5 சதமும் மட்டுமே காப்பீடு செய்துள்ளனர்.


       அரசின் திட்டங்கள் அறிவிப்பு ஏட்டுடன் நிற்கவே செய்கிறது. தனியார் கம்பெனிகளும் அரசும் லாபம் தரும் துறையில் மட்டுமே முதலீடு செய்வதும் மற்றவை அறிவிப்பு செய்வதுமாகவே உள்ளது.

புதன், ஆகஸ்ட் 05, 2015

குடி கொடுத்து, குடி கெடுக்கும் அரசு

ஏ.பாக்கியம்
                    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை யில் டாஸ்மாக் கடை (மதுபானக் கடை) செயல்படுகிறது. இதன் அருகில் 50 அடி தூரத்தில் தேவாலயமும், 25 அடி தூரத்தில் இரண்டு இந்து கோயில்களும் மற்றும் பள்ளி, பஸ் நிறுத்தம் என எல்லாம் உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் குடித்துவிட்டு வருவோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சம் நஞ்சமல்ல... பள்ளி முடிந்து பெண் குழந்தைகள் வீடு திரும்ப முடிவதில்லை. பெண்கள் கோயிலுக்கு செல்லமுடிவதில்லை. பஸ் நிறுத்தத்தில் யாரும் நிற்கவே முடிவதில்லை. பொறுத் துப் பொறுத்துப் பார்த்த ஊர் மக்கள் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                        3 ஆண்டுகளாக இந்த போராட் டம் தொடர்ந்தது. இதற்கிடையில் ஊர் மக்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்தநீதிபதி கடந்த 20.2.2014-ல் உண்ணா மலைக்கடையில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட்டார். மாவட்ட நிர்வாகம் நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை.நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி (அதிமுகவை தவிர்த்து) கூட்டுக்குழுவினர் போராடி வந்தனர்.

                              காந்தியவாதி சசிபெருமாள் தலைமையிலான மது போதைக்கு எதிரான பொதுமக்கள் இயக்கம் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றது. இறுதி கட்ட போராட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 31)உண்ணாமலைக்கடையில் தீக்குளிப்பு போராட்டம் நடத்துவது என அறிவிக்கப் பட்டது. இந்த போராட்ட அறிவிப்புக்கு ஒரு பின்னணி உண்டு. இதுவரை கேளாக்காதினராக, பேசா மடந்தையாக இருக்கும்அரசு நிர்வாகம், தீக்குளிப்பு போராட் டம் என்று அறிவித்தாலாவது கேட்பார்கள்; பேசுவார்கள் என்று மக்கள்எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர் களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. உண் ணாமலைக் கடை மதுக்கடையை மூடவேண்டும் என்று அறிவித்தபடி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப் போது, காந்தியவாதி சசிபெருமாள், மண் ணெண்ணெய் கேன், தீப்பந்தத்துடன் அந்தப் பகுதியில் உள்ள சுமார் 200 அடி செல்போன் டவரில் ஏறினார்.

                                            அவருடன் உண்ணாமலைக்கடை பேரூராட்சி தலை வர் ஜெயசீலனும் ஏறினார். அவர் டவரின் பாதியிலேயே நின்று கொண்டார். டவரின் உச்சிக்கு சென்ற சசிபெருமாள், உண்ணாமலைக்கடை டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று உயிர் வலிக்க கோஷமிட்டார்.மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லூர் வட்டார செயலாளர் ஜான், வட்டாரக்குழு உறுப்பினரும், போராட்டக்குழு உறுப்பினரு மான செல்வராஜ் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, தேமுதிக உள் ளிட்ட கட்சிகளின் நிர் வாகிகள் செல்போன் கோபுரம் அருகில் திரண்டனர். தக்கலை சரக ஏஎஸ்பி விக் ராந்த் பாட்டீல், பத்ம நாபபுரம் கோட்டாட்சியர் ராஜசேகர், மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் முத்து உள்ளிட்டோர் செல்போன் டவர் அருகே வந்தனர்.உச்சி வெயில் மண்டையை பிளந்தது.செல்போன் டவரின் உச்சியில் இருந்த சசிபெருமாளை வெயில் மேலும் உருக் குலைத்தது. ஆனாலும், டாஸ்மாக் கடையை மூடக்கோரி சசிபெருமாள் தொடர்ந்து கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தார்.

அரசு அதிகாரிகள்பேசினார்கள்... பேசினார்கள்... பேசிக் கொண்டே இருந்தார்கள்.ஏழை, பாழைகள் சம்பாதித்த பணத்தை எல்லாம் குடித்துவிட்டு வந்து குடும்பத்தை சீரழிப்பதோடு, குடல் கெட்டு ரத்த வாந்தி எடுத்து சாவதை தடுப் பதற்காக வாழ்நாளெல்லாம் போராடிய மதுவிலக்கு போராளி சசிபெருமாள் ரத்த வாந்தி எடுத்து செல்போன் டவர் உச்சியிலேயே உயிர்விட்டார். மது விலக்குப் போராட்டத்தில் முதல் களப்பலியானார். அரசு நிர்வாகம், அதிகாரிகளின் அலட்சி யம் ஒரு காந்தியவாதியின் உயிரை காவு வாங்கிவிட்டது. சசிபெருமாளின் மரணத்துக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சசிபெருமாள் உடல் வைக்கப்பட்டிருந்த ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் முருகேசன் மற்றும் அந்தோணி, என்.எஸ்.கண்ணன், திமுக மாவட்ட செயலாளர் சுரேஷ் ராஜன், காங்கிரஸ் கட்சியின் பிரின்ஸ் எம்எல்ஏ, பாஜ மாவட்ட தலை வர் கணேசன் உள்ளிட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். நியாயம் கேட்டு போராடிய அவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.

                                தமிழகத்தில் 6,800 டாஸ்மாக் மது பான கடைகள் உள்ளன. இவற்றில் அனு மதிக்கப்பட்ட பார்கள் மட்டும் 4,250. இவை தவிர ஆளுங்கட்சிக்காரர்கள் அனுமதியின்றி நிறைய பார்களை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. டாஸ்மாக் கடைகள் மூலம் மாதம் 46 லட்சம் பெட்டிமதுபானங்கள் விற்பனை செய்யப்படு கின்றன. மதுக்கடைகள் மூலம் தமிழக அரசுக்கு ஒரு நாளைக்கு ரூ.65 கோடி, மாதம் ரூ.1,950 கோடி, ஆண்டுக்கு ரூ.23,400 கோடியும் வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு இலக்காக ரூ.25 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 6,800 மதுபானக் கடைகளில் ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள், கோயில்கள், சர்ச், மசூதி, பள்ளி, கல்லூரி களுக்கு அருகில் இயங்கி வருகின்றன. வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள் உள்ள பகுதிகளில் 100 மீட்டருக்கு அருகில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள்இருக்கக் கூடாது என்பது விதி. இந்த விதியை அரசு காற்றில் பறக்க விட வில்லை.. காலில் போட்டு மிதித்துக் கொண்டிருக்கிறது.

                                      பூரண மதுவிலக்கை அமல்படுத்த காலம் எடுக்கும் என்றால், வழிபாட்டு தலங்கள், பள்ளி, கல்லூரிகள் அருகில் உள்ள கடைகளையாவது முதலில் அகற்றுங்கள் என்று ஜனநாயக சக்திகள் போராட்டம் நடத்தி வருகின்றன. குறிப் பாக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) தமிழகம் முழுவதும் பரவலாக போராட்டம் நடத்தி வருகின்றன. அப்படி போராடியவர்கள் மீது காவல்துறை பொய் வழக்கு போட்ட சம்பவங்களும் ஏராளம்.தமிழகத்தில் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களால் கடந்த 2013-ல் மட்டும் 2 ஆயிரத்து 764 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதில் 718 பேர் இறந்து போயிருக்கிறார்கள். 2014ல் ஏற்பட்ட சாலை விபத்துக்களில் 15,190 பேர்இறந்து போய் உள்ளனர். இதில் 2.6 சத வீதம் விபத்துக்கள் மதுபோதையால் ஏற் பட்டுள்ளன. இவைகள் கொலைகள் இல்லையா? குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டவர்கள்.. கணவன் குடிப்பழக்கத்தால் தற்கொலை செய்து கொண்ட குடும்பங்கள் எண்ணிக்கை ஏரா ளம்.. ஏராளம்.. இவையெல்லாம் குடியால் ஏற்பட்ட கொலைகள் அல்லவா?

                                       சசிபெருமாள் மறைவையொட்டி மது விலக்கை அமல்படுத்தக் கோரி குமரி மாவட்டத்தில் 4ம் தேதி (நாளை) முழு அடைப்பு போராட்டம் நடத்துவது என அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை மாநிலம் தழுவிய பந்த் ஆக நடத்த வேண்டும் என மதிமுக, விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை அழைப்பு விடுத் துள்ளன. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளன.

                                          சசிபெருமாளின் குடும்பம் வசதியான குடும்பம் அல்ல. சராசரியான குடும்பம்தான். காந்தியவாதியான அவர், தனக்கென சொந்த வீடோ, மகனுக்கு அரசுவேலையோ, மகளுக்கு கல்வி உதவித் தொகையோ கேட்டு போராடவில்லை. மக்களின் நலனுக்காக மதுவிலக்கைதான் கேட்டார். அவருக்கு மரணம் பரிசாக கிடைத்தது. மரணமில்லா பெருவாழ்வு அனைவருக்கும் சாத்தியமில்லை. வர்க்கப் போராட்டத்தில் களப்பலியானவர்களுக்கும், மக்களுக்கான போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும்தான் மரணமில்லா பெருவாழ்வு சாத்தியமாகிறது. 
                                     
                                                   காரணம் அவர்கள் புதைக்கப் படுவதில்லை. விதைக்கப்படுகிறார்கள். சசிபெருமாளும் அப்படித்தான். தமிழகத்தில் பெரும் சமூக தீங்காக மாறியுள்ள மதுபானக்கடைகளை படிப்படியாக அகற்ற வேண்டும் என்ற போராட் டத்தில்.. தமிழகத்தை மதுபானமற்ற மாநிலமாக ஆக்க வேண்டும் என்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முன்னணியில் நிற்கிறது. நீங்கள்...கட்டுரையாளர் : மாநிலக்குழு உறுப்பினர் சிபிஐ(எம்)

                                                                இதுதான்டா போலீஸ்

 வேலூர் : வேலூரில் நர்சிங் கல்லூரி எதிரே ஒரு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இங்கு குடித்துவிட்டு வரும் குடிமகன்கள் கொடுக்கும் குடைச்சல் கொஞ்சநஞ்சமல்ல. அரை நிர்வாணமாகத்தான் அலைந்து கொண்டிருப்பார்கள். நர்சிங் கல்லூரியில் படிக்கும் மாணவிகள் இதைக் கண்டித்து பொங்கி எழுந்தார்கள். டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டார்கள். விரைந்து வந்த போலீஸ், டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து திறந்து விட்டு பாதுகாப்புக்கு நின்றது. போராடிய மாணவிகள் மீது தடியடி நடத்தியது. கைது செய்தது.........

..சென்னை : அப்துல் கலாம் நல்லடக்கம் நடந்த நாளில் அரசு பொதுவிடுமுறை (டாஸ்மாக் கடைகளுக்கும் சேர்த்துதான்) அறிவித்திருந்தது. சென்னை ஜெ.ஜெ.நகரில் உள்ள டாஸ்மாக் கடை பார் மட்டும் அன்று திறந்திருந்தது. விற்பனை அமோகமாக நடந்தது. இதைப்பார்த்த ஒரு சமூக ஆர்வலர் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த சமூக ஆர்வலருக்கு ஒரு போன் கால் வந்தது. அதில் பேசிய ஆசாமி, மெட்ராஸ் பாஷையில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் பயன்படுத்தினார். இரவில் வீட்டுக்கு வந்து மொத்த பேரையும் தொலைத்து விடுவேன் என்று மிரட்டினார். அதன் பிறகுதான் சமூக ஆர்வலருக்கு தெரிந்தது, போனில் அவரை மிரட்டியது, விடுமுறை நாளில் டாஸ்மாக் பார் நடத்திய ஆசாமி என்று. அதைவிட மகா கேவலம், அந்த பார் ஆசாமிக்கு சமூக ஆர்வலரின் போன் நம்பரை போலீசார்தான் கொடுத்துள்ளனர் என்பது.

                                                           தீக்கதிர் 4.8.2015

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...