Pages

ஞாயிறு, டிசம்பர் 21, 2014

அப்படியா…….. .. சொல்றீங்க?


சின்ன விசயத்தை தேவையில்லாமல் பெரிதுபடுத்தி விட்டார்கள்.

டெல்லி பாலியல் சம்பவம் பற்றி அருண் ஜேட்லி

ஒரு நாளைக்கு 92 பெண்கள் அதாவது 16 நிமிடத்திற்கு ஒரு பெண் பாலியல் பலாத்
காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றாள்.
இதுவா சின்ன விஷ்யம்.?

பாலியல் பலாத்காரத்திற்காக 2008-ல் 22,036 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.2013-ல் 42,115 பேர்கள் கைது செய்யப்பட்டன்ர்.
அதாவது 68 சதம் உயர்ந்துள்ளது?
இதுவா சின்ன விஷ்யம்??

சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 2003-ல் 466 லிருந்து 2013-ல் 2074 ஆக உயர்ந்துள்ளது,அதாவது 345 சதம் உயர்ந்துள்ளது
,இதுவா சின்ன விஷ்யம்?

சனி, டிசம்பர் 20, 2014

அப்படியா . . . சொல்றீங்க !


பெண்கள் அரைகுறை ஆடைகள் அணியும் வரை பாலியல் பலாத்காரம் தொடரும்.       மதகுரு மதே மகாதேவி - 2014 அக்டோபர்
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பகுதி 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களா அரையாடைகளுக்கு சொந்தக்காரர்கள்? காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்தான்.பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களில் 1477 பெண்கள் 10 வயதுக்கு குறைந்த குழந்தைகள். 2708 பெண்கள் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்பது கவனித்தக்கது.

பாலியல் பலாத்காரம் அதிகரிக்க முக்கிய காரணம் ஆணும், பெண்ணும் சகஜமாக பழகுவதுதான்.                   மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி - அக். 2012

பாலியல் பலாத்காரங்களில் பெரும்பகுதி தந்தை மற்றும் நெருங்கிய உறவினர்களால்தான் நடந்துள்ளது என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது. 94 சதவீத நிகழ்வுகளில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குற்றவாளி யார் என்று தெரியும். ஆனால் அவர்கள் வெளியே சொல்வதில்லை.. சொல்ல முடிவதில்லை.
33,707 பாலியல் பலாத்காரம் நடைபெற்றுள்ளது. இதில் 31,807 நிகழ்வுகளில் (அதாவது 94 சதவீதம்) குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியும். நெருங்கிய உறவினர் என்பதால் வெளியே சொல்லாமல் மனதிற்குள்ளேயே நொந்துகிடக்கின்றனர். வீடு பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. 2854 பாலியல் பலாத்காரம் வீடுகளில் தந்தை அல்லது நெருங்கிய உறவினர்களால் நடந்துள்ளது.

சுதந்திரம் இரவிலே கிடைத்தது என்பதற்காக பெண்கள் இரவிலே சுற்றுவது சரியாகுமா?          காங்கிரஸ் தலைவர் போல்டா சத்திய நாராயணா - டிசம்பர் 2012.
பெரும்பகுதி பாலியல் பலாத்காரம் பகலிலும், இரவிலும் வீடுகளில்தான் நடைபெற்றுள்ளது. வெளியிடங்களில் அல்ல.

பாலியல் பலாத்காரம் அதிகமாக காரணம், அமெரிக்க கலாச்சாரம் உள்வாங்கப்படுவதால்தான். மேலும் நகர்புறத்தில் நமது மதிப்பீடுகள் குறைவதாலும் பலாத்காரம் நடைபெறுகிறது.
அசோக் சிங்கால் - விஎச்பி தலைவர்

ஒரு கலாச்சாரத்தால் பாலியல் பலாத்காரம் அதிகரிக்கிறது என்றால், அது கலாச்சார அடக்குமுறையாகும். ஆனால், இந்தியாவில் பாலியல் பலாத்காரம் மேலாதிக்க கருவியாக பயன்படுத்தப்படுகிறது. 2073 பாலியல் பலாத்காரங்கள் எஸ்.சி / எஸ்.டி. பெண்கள் மீது நடைபெற்றுள்ளதை இதற்கு உதாணமாக சொல்லலாம்.
பாலியல் பலாத்காரத்திற்கு ஆணாதிக்க - மேலாதிக்க சமூக அமைப்பு,  மோசமான சட்டம் ஒழுங்கு, பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளியாக மாற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை காரணமாக சொல்லலாம். எனவேதான் 2013 -ல் பதிவு செய்யப்பட்ட 33,707 பாலியல் பலாத்கார வழக்குகளில் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டது.

ஏ.பாக்கியம்

புதன், டிசம்பர் 17, 2014


இடிபாடுகளில் புதைந்து
 செய்திகளில் மிதந்து

ஏ. பாக்கியம்

   இடிபாடுகளில் புதைந்து செய்திகளில் மிதந்து செத்துப்போகும் அவலம் தொடர்கிறது. சென்னை ஆலந்தூர் தொகுதி மௌலிவாக்கம் பஞ்சாயத்தில் 11 மாடிக்கட்டிடம் இடிந்து விழந்தது இதுவரை 18 பேர் இறந்துள்ளனர். எத்தனை பேர் உள்ளே புதைந்துள்ளனர் என்று யாருக்கும் தெரியாது. உத்தேச கணக்குள் உலாவி வருகின்றது. சிரமங்களுக்கிடையில் மீட்புப் பணிகள் சிரத்தையுடன் நடைபெறுகின்றன.

   காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதை என்பதாக வழக்கம் போல் இடியின் மீதும் மழையின் மீதும் பழி போடும் படலம் துவங்கிவிட்டது. இரு தளங்கள் மண்ணுக்குள்ளே புதைந்துவிட்டன. மற்ற தளங்கள் காகித அட்டை போல் சரிந்து விழுந்துள்ளன. 11 மாடிக் கட்டிடம் விதி மீறி கட்டப்பட்டுள்ளதா இல்லையா என்பதை அறிந்திட கோட்டையில் இருப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம், உள்ளூர் பொறியாளருக்கும், அதற்குமேல் உள்ள மண்டல பொறியாளர்களுக்கும் தெரியாதா? மண் பரிசோதனை செய்யாமல் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏரியின் நீர் வழியில் கட்டப்பட்டுள்ளதாகவும், களிமண் பகுதி எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
   
   இது போன்ற மரணங்கள் நடக்கின்ற போது அரசுச் சட்டங்கள் பற்றியும், விதிமுறைகள் பற்றியும் சத்தமாகப் பேசுவதும் அறிக்கைவிடுவதும் இப்போதும் நடக்கிறது. இறந்தவர்களின் சடங்குகள் முடிவதற்குள் செய்திகள் மறைகின்றன. செய்திகள் மறைந்தவுடன் அரசு நடவடிக்கைகள் மங்கிவிடுகின்றன.
    
     கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் எரிந்து சாம்பலானபோதும், தாம்பரத்தில் பள்ளிவாகனத்தின் ஓட்டை விழுந்து ஒரு குழந்தை மரணித்தபோதும், சுங்குவார் சத்திரத்தில் ஒரு பிரமுகரின் கட்டிடம் இடிந்து விழுந்து பலர் உயிரிழந்த போதும் இதே போன்று பேச்சுகளும், அறிக்கைகளும்,  அதிரடி நடிவடிக்கைகளும் சில நாட்கள் ஆரவாரமாக இருந்தது; பிறகு அமிழ்ந்து போய்விட்டது. பல சம்பவங்களை தனி நபர் தவறுகளாகவும், தற்செயல் விபத்துகளாகவும், இறுதியில் தலைவிதியாகவும் சித்தரித்து மறக்கடித்து விடுகிறார்கள்.

    சென்னையிலும், சென்னையை சுற்றிலும் வானுயுரக் கட்டிடங்கள் எண்ணிலடங்காதவையாக எழுந்து கொண்டே இருக்கின்றன. வீடுகள் எண்ணிக்கை, இட வசதி, பாதுகாப்பு, விதி முறைகள் கடைபிடித்தல் ஆகியவற்றை கடந்து குறைந்த முதலீட்டில் அதிக லாபம் என்பதே பிரதான நோக்கமாக மாறிவிட்டது. எனவே அதற்காக அனைத்து விதிகளையும் மீறுவது வாடிக்கையாகிவிட்டது.

     1997 ம் ஆண்டு மாநில அரசு விதிமீறல்கள் பற்றி ஆய்வு செய்திட ஒரு குழுவை அமைத்தது. அக்குழு சென்னை பெருநகர வளர்ச்சிக்குத் திட்டம் அறிக்கை அளித்தது சிஎம்டிஏ பகுதியில் மொத்த  கட்டிடத்தில் 50 சதவீதம் வரையில் மேம்பாட்டுக் கட்டுப்பாடு விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இக்கட்டிடங்களுக்கு அபராதம் விதித்து அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்தனர்.

     தற்போது மாநகராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் ஒரு லட்சம் வரை கட்டடங்கள் விதி மீறி கட்டப்பட்டுள்ளதாக பதிவு செய்துள்ளனர். மிகவும் குறைவான கட்டிடங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன. இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி 15 மன்றத்தில் 360 கட்டிடங்களுக்கு இடிப்பு ஆணை வழங்கியுள்ளது. ஆனால் எந்தக் கட்டிடமும் இடிக்கப்பட்ட தகவல் எதுவும் இல்லை.

    இந்தியாவில் கட்டிட இடிபாடுகள் அதிகம் நிகழ்வது உத்தர பிரதேசம், அதற்கடுத்து தமிழகம் என்று அரசின் ஆய்வுகள் தெரிவிக்கிறது. 2012 ல் சென்னையில் 20 கட்டிடங்கள் இடிந்துள்ளன. ஆனால் தமிழக அரசு சார்பில் ஒன்று மட்டுமே தேசிய குற்றத்துறை ஆணையத்தால் அதிகாரப்பபூர்வமாகப் பதியப்ட்டுள்ளது.

   சென்னை உயர்நீதிமன்றம் விதிமுறைகள் மீறிய கட்டிடங்களுக்கு மேற்பார்வைக் குழுவை நியமித்தது. இக்குழு சிஎம்டிஏ அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. விதிமுறையை நிறுத்து என்று வழங்கப்படும் ஆணை வேலை செய்ய மறுக்கிறது என்று வேதனைப்பட்டுள்ளது.

   சென்னை மாநகராட்சி முயற்சிகள் கொக்கு தலையில் வெண்ணெய் வைத்துப் பிடிப்பதாக உள்ளது. அமைதி பெற்ற அளவையாளரின் எண்ணிக்கை உயர்ந்து, ஹைதராபாத் மாநகராட்சி நகலை பெற்று அதை பரிசிலிப்போம் என்று தெரிவிப்பது, விதிமுறைகள் படி கட்டுவோருக்கு ஊக்கத்தை வழங்குவது என்று முயற்சிகள் பலனளிக்காது. விதிகளை மதித்து, கட்டுவது வதிவிலக்காகவும், விதியை மீறி கட்டுவது விதியாகவும் மாறிவிட்டது. எனவே, மாநகராட்சி மற்றும் சிஎம்டிஏ விற்கு விதிமீறிய கட்டிடங்களை நடவடிக்கைகுட்பட்டபடி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது. தடுக்க கைகள் எது என்பதுதான் கேள்வி.

    பல அதிகாரிகள் நாங்கள் என்ன செய்வது? ஆளும் அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் செல்வாக்குச் செலுத்துகின்றனர்.  உயரதிகாரிகளும், ஆளும் அரசியல் சக்திகளும் கமிஷன் அடிப்பதற்காகவே திட்டங்களும் என்று வருகிற போது விதிமீறல்ககள் விதியாகி விடுகின்றன என்கிறார்கள்.
உலகத்தரத்தில் சென்னையை, உலகத்திதரத்தில் சாலை, உலகத்தரத்தில் நடைபாதை, உலகத்தரத்தில்... என பேசுவதும், சென்னை சிங்கப்பூராவதும் ஏமாற்று வேலைகளே. மக்களின் உயர் மீது அக்கறை கொண்ட விதிகளைஅமலாக்கிட அரசு உறுதிபூண்டால் மட்டுமே மாற்றம் நடக்கும். அந்த மாற்றம் நிகழுமா? மௌலிவாக்கத்தில் அனுமதி கொடுத்த துறையை, அதன் அதிகாரிகளை, ஆளும் அரசியல் சக்திகளைக் காப்பாற்ற அறிக்கை தயாரிக்காமல், இறந்த குடும்பங்களின் மரண ஓலங்களை மனதில் கொண்டு நடவடிக்கை தொடருமா?
(கட்டுரையாளர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தென்சென்னை மாவட்டச் செயலாளர்)

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...