Pages

வியாழன், ஜனவரி 19, 2012

மோடியின் குஜராத்தும் !! சோ.ரா.வின் மகுடியும் !!!


ஏ. பாக்கியம்

              துக்ளக் வாசகர் வட்டத்தை ஆண்டு தோறும் அதன் ஆசிரியர் சோ நடத்துவார் . வாசகர் வட்டமாக இருந்தாலும் அவரின் அரசியல் பிரச்சாரக் கூட்டமாகவே இது இருக்கும். இந்த ஆண்டும் அப்படித்தான் இருந்தது.இந்த ஆண்டு என்ன  வித்தியாசம் என்றால் பா.ஜ.க வின் நேரடி பிரச்சார மேடையாக காட்சி அளித்தது மட்டுமல்ல சோவின் பேச்சுக்களும் அப்படியே அமைந்திருந்தது. அத்வானி, நரேந்திரமோடி மற்றும் இல.கணேசன் ஆகியோர் பிரசன்னமாகி இருந்தனர். இந்தக் கூட்டத்தில் மோடியையும் குஜராத்தின் முன்னேற்றத்தையும் வானளாவ புகழ்ந்து தள்ளியது மட்டுமல்ல தமிழகமும் அதன்வழி செல்ல வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஆலோசனை வழங்கினார். 

                மோடியின் ஆட்சியில் அப்படி என்னதான் முன்னேறி உள்ளது குஜராத்? தோழர்.எ°.விஜயள் எனக்கு அனுப்பி வைத்த .மின்னஞ்சல் ஒன்றை இங்கே வெளியிட்டால் குஜராத் முன்னேற்த்தின் லட்சணம் தெரிந்துவிடும்.

              “மக்கள் நல்வாழ்வு( Health.) சம்பந்தமாக சில தகவல்களை திரட்டிக் கொண்டிருந்த பொழுது .National Family Survey தகவல்களையும் இன்னும் சில தகவல்களையும் சேகரிக்கும் பொழுது குஜராத் மாநிலம் சில புள்ளிவிபரங்களில் தேசிய சராசரிக்கும் கீழே இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து தேடியதன் பலன் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அட்டவணைகள் கிடைக்கப் பெற்றன. பாதி விஷயங்கள் கிடைத்தபிறகு என்னைப் போல் யாரோ ஒருவன் இதை முழுமையாகச் செய்து விக்கிபீடியா இனையதளத்தில் சேர்த்திருக்கிறான். என்னுடையதைவிட அவனுடையது தொழில்முறை அணுகுமுறை உள்ளது. எனவே அவனுடைய தகவல்களையே அப்படியே தருகிறேன். ஒவ்வொரு பட்டியலுக்கும் ஆதாரத்தையும் அந்த இணையதள பக்கங்களில் கொடுக்கப்பட்டிருக்கிறது.


          .இந்தியமாநிலத்தில் குஜராத் .எத்தனையாவது இடம் என்பதை கீழே உள்ள பட்டியல். பார்த்தல் தெரியும் . மனித வளர்ச்சி அட்டவணை -20 வருமானம் - 6 மொத்த உள்நாட்டுஉற்பத்தி(ஜிடிபி) -  4 ஜிடிபி-யில் தனிநபர வருமான்ம் 9-
ஜிடிபி வளர்ச்சி விகிதம் .(2005 2006)- 2 பாலின விகிதம- 22 கல்வி.-14
மின் உபயோகம் - 10 இனவிருத்தி விகிதம்.  13 தடுப்பூசி .na
செய்திகளை அறிவோர் (ஆண்கள்)- 12     செய்திகளை அறிவோர் .(பெண்கள்  )- 15 குடும்ப அளவு - 12 உடல் அடர்த்தி அட்டவணை.(ஆண்கள். )  11உடல் அடர்த்திஅட்டவணைபெண்கள்-12 தொலைக்காட்சி வைத்திருப்போர-11 மொத்தசாலைகளின் நீளம் 10 சாலைகளின் அடர்த்தி -21மின்நிலைய நிர்மானம் -2 மருத்துவமனை பிரசவம்-சராசரி வாழ்நாள் -10

. மேலே உள்ள தகவல்களை வைத்து பார்க்கும் பொழுது. அளவிடப்பட்ட விஷயங்களில் ஒன்றில் கூட குஜராத் மாநிலம் முதல் இடத்தில் இல்லை. மனிதவள மேம்பாட்டு தரவரிசையில் குஜராத் 20வது இடத்தில் இருக்கிறது. நாட்டில் சேரும் மூலதனத்தில் முப்பது சதவீதத்திற்குமேல் குஜராத் மாநிலத்தில் முதலீடு செய்யப்பட்டு முதலீட்டை கவருவதில் இரண்டாம் இடத்தில் உள்ள மாநிலத்தின் மொத்த உற்பத்தி நான்காவது இடத்தில் இருப்பது வியப்பாக இருக்கிறது. மொத்த உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருக்கும் ஒருமாநிலம் முதலாளிகளுக்கு வரிச்சலுகை கொடுத்து அரசு வருமானத்தில் ஆறாவது இடத்திற்கு தன்னைத் தாழ்த்திக் கொண்டிருக்கிறது.


                மொத்த உற்பத்தில் நான்காவது இருக்கும் மாநிலத்தின் தனிநபர் பங்களிப்பில் 9 வது இடத்தில் இருந்து மாநிலத்தின் ஏற்றத் தாழ்வை பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 2009-10ம் ஆண்டில் மொத்த உற்பத்தி வளர்ச்சி வீதத்தில் இரண்டாவது இடத்தை பிடித்த அந்த மாநிலம் தனிநபர் பங்களிப்பின் வளர்ச்சியில் 9 இடத்திற்கு இறங்கி இந்த மாநிலம் அனைத்து மக்களின் பங்களிப்பால் வளருகிறது என்பதை குறுக்கிக் கொள்கிறது. மின் நிலையங்களை நிர்மானிப்பதில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் மின்சாரம் கிடைக்கும் ஏற்பாட்டை கணக்கிட்டால் இந்தியாவில் இது பத்தாவது இடத்தில் இருக்கிறது.

                 ஆண்பெண் விகிதாச்சாரத்தில் மிக மோசமான நிலைதான். 22ம் இடத்தில் இருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் ஊடகங்கள் பற்றிய ஞானத்திலும் எடைகுறைந்தவர்கள் எண்ணிக்கை விஷயத்திலும் பெண்கள் ஆண்களைவிட இந்த மாநிலத்தில் பின்தங்கியிருக்கிறார்கள். பெணகள் குழந்தைகளை குறைவாக பெற்றுக் கொள்ளும் விஷயத்திலும் இந்த மாநிலத்திற்கு 13வது இடம்தான். ஊடகங்கள் பற்றிய ஞானத்திலும் இந்த மாநிலத்தில் 12 லிருந்து 15வது இடம்தான். மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நடவடிக்கையிலும் இந்த மாநிலத்திற்கு 12 வது இடம்தான். 

               இது குடும்ப அளவை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஊட்டச் சத்தின்றி எடைகுறைவாக வாழும் மனிதர்கள் குறைவாக வாழும் மாநிலங்களை பட்டியலிட்டால் அதிலும் இந்த மாநிலத்திற்கு 11வது இடம்தான். வரைமுறைபடுத்தப்பட்ட இடங்களில் மகப்பேறு நடைபெறும் விஷயத்தில் இந்த மாநிலமானது எட்டாவது இடத்தில் இருக்கிறது. தனிநபரின் சராசரி ஆயுட்காலத்தை மாநிலவாயிலாக ஆய்வு செய்தால் இந்த மாநிலத்திற்கு 10 வது இடம் தான் வருகிறது

கல்வி விஷயத்தில் இந்த மாநிலத்திற்கு 14வது இடம்.தொலைக்காட்சி வைத்திருப்பவர்கள் இந்த மாநிலத்தில் 53 சதமானபேர். இதைவிட அதிகமாக 10 மாநிலங்களில் வாழ்பவர்கள் வைத்திருக்கிறார்கள். பரப்பளவில் 7வது பெரிய மாநிலமாக இருந்தாலும் அமைக்கப்பட்ட சாலைகளின் நீளத்தில் இந்த மாநிலம் பத்தாவது இடத்தில் இருக்கிறது. இதுவாவது பரவாயில்லை ஒரு சதுர கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்ட சாலைகளில் அளவை கணக்கிட்டால் இந்த மாநிலத்திற்கு 21வது இடம்தான் வருகிறது. 

                     இவ்வளைவு உண்மைகளை மறைத்து விட்டு எதற்காக குஜராத் முதல் மாநிலம் என்று தம்பட்டம் அடிக்கப்படுகிறது? அரசுகளும் இதர திட்டமிடும் அமைப்புகளும் இந்த புள்ளிவிபரங்களை வியாபார நோக்கத்திற்காகவும் திட்டமிடல் நோக்கத்திற்காகவும் திரட்டுகின்றனர். இவ்வளவு புள்ளிவிபரங்களையும் மீறி மோடி ஆட்சியில் குஜராத் முதலிடத்தில் உள்ளது என்றால் என்னைப் பொருத்தவரை அது மூட நம்பிக்கைதான்‘

                     பொருளாதாரம் என்ற வகையில்  மட்டுமல்ல சிறுபான்மை மக்களை படுகொலை செய்தததில் மோடி அரசின்  சாதனையையும் உலகம் அறிந்தது. .அதன் கோரத்தன்மையை கண்டு இந்தியாவே உறைந்து போனது. போலி என்கவுன்டர்களின் புதல்வனாக திகழும் மோடியைத்தான் இந்தியாவின் பிரதமராக வரும் தகுதிபடைத்தவர் என்று வர்ணிக்கின்றார் சோ இராமசாமி.அவர் வந்துவிட்டால் நாடே மின்னல் வேகத்தில் முன்னேறும் என்று ஆருடம் கூறுகின்றார்.

            பா.ஜ.காவில் ஏன் கோஷ்டி சண்டை என்றால் அங்கு அனைவரும் விபரம் தெரிந்தவர்கள், புத்திசாலிகள், திறமையானவர்கள்  என்பதால் இந்த சண்டை ஏற்படுகின்றது என்கிறார். ஆம் பங்காரு லட்சுமணனுக்கு குறைந்தவர் அல்ல எடியூரப்பா, இவர்களுக்கு சளைத்தவர் அல்ல ரெட்டி சகோதரர்கள்.

          ஜெயலலிதா மோடி மாதிரி வரவேண்டும் என்று அறிவுரை வழங்குவதுடன் அவரை ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றுவதால்தான் தமிழகம் முன்னேறவில்லை என்று கண்டுபிடிப்புகளை வெளியிடுகின்றார். மக்களுக்கு எதிராக ஆட்சிநடத்தினால் அது யாராக இருந்தாலும் விரட்டப்படுவார்கள் என்பது தமிழக வரலாறு.

                                        ===============
.

2 கருத்துகள்:

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...