Pages

சனி, பிப்ரவரி 12, 2011

உணவுநெருக்கடி: வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல் -4



முன்பேர ஊக வாணிபம்:

     விலை ஏற்றத்திற்கு இதுவரை கூறிய காரணங்களுக்கு சமமான அளவில், அதைவிட கூடுதலாகவே  முன்பேர ஊக வாணிப முறை (குரவரசந கூசயனபே) பங்கு செலுத்தியுள்ளது. இந்தியா உட்பட வளரும் நாடுகள் நிதிக் கட்டுப்பாட்டை அகற்றியதும், புதிய நிதியாளர்களை சரக்கு பரிமாற்றத்தில் அனுமதித்ததும், முன்பேர ஊக வாணிபத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சந்தை என்பது உற்பத்தியாளர்- நுகர்வோர் பேரம் பேசும் இடம் என்ற நிலைமாறி வர்த்தக சூதாடிகளும், நிதிநிறுவனங்களும் குறுகியகாலத்தில்  கொள்ளை லாபத்தை ஈட்டும் இடமாக மாறியது. 

   2007ம் ஆண்டு ரியல் எஸ்டேட் என்ற தொழில் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீட்டு அடமானமுறை திவாலாகியது. இதனால் நிதி முதலீடு செய்பவர்களும் தரகர்களும் (ளுயீநஉரடயவஎந ஹபநவேள) தங்களது நிதி மூலதனத்தை சரக்கு வர்த்தகத்தை நோக்கி அதாவது உணவுதானியங் களை நோக்கி திருப்பிட்டனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்தியாவில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜீன் 30 வரை மட்டும் முன்பேர ஊக வணிகம் 11,15,326.99 கோடி அளவிற்கு நடைபெற்றது. 2009ம் ஆண்டு இதே காலத்தில் 15, 64, 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.  சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4, 48, 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர். 

     2007ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரையை தற்காலிகமாக இந்திய அரசு தடைசெய்தபோது இப்பொருட்களின்விலை 20 சதவீதம் குறைந்தது நினைவிருக்கலாம். இந்த விலையேற்றத்தின் விளைவாக வால்ஸ்ட்ரீட் (றுயடட ளவசநநவ) 130 பில்லியன் டாலரை கூடுதலாக முன்பேர ஊக வாணிபத்தில் முதலீடு செய்துள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மதிப்பீடு செய்துள்ளது .  மற்றொரு அதிர்ச்சிதரும் தகவல், தற்போது உலக கோதுமைச் சந்தையில் இந்த முன்பேர ஊக வணிகர்கள் 50 முதல் 60 சதம் வரை கோதுமைக்கு முன்பணம் செலுத்தியுள்ளனர்.

     உணவு பொருட்களின் வர்த்தகத்தில்,  பட்டியல் நிதி, பட்டியல் வியாபாரிகள் என்ற புதிய வர்த்தக   கும்பல் உருவாகி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் அடித்திடவும், விலையை ஏற்றிடவும் காரணமாக உள்ளது. தேசிய உணவு சேமிப்பு பல நாடுகளில் தனியார்மயமாகி பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு விவசாயிகள் நலன் மற்றும் நுகர்வோர் நலனைவிட முன்பேர ஊகவாணிபமே முன்னுரிமையாக உள்ளது.

சைவமா ? அசைவமா?

  உணவு  நெருக்கடிக்கும், விலை ஏற்றத்திற்கும் இறைச்சி உணவை சாப்பிடுவது கூடுதலாகி உள்ளது ஒரு காரணம் என்று கூறுப்படுகிறது. எனவே, மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பொதுவாக போதிக்கப்படுகிறது. ஆனால் இறைச்சி உணவு தேவை இரட்டிப்பாகியுள்ளது உண்மைதான். இதிலும் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிப்பது அவசியமாகும்.

         முதலில், உணவு தானியங்களுக்கும், இறைச்சி உணவுக்கும் இடையேயான எரிசக்தி (உயடடிசல) சமன்பாடுகளை பொருளாதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் எடுத்துக்கூறியுள்ளார். ஒரு கிலோ கோழிக்கறிக்கு இரண்டு கிலோ உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. கோழிக்கறியிலிருந்து கிடைக்கும் கலோரி 1090-ம் புரதசத்து 250 கிராமும் ஆகும். இதற்காக உணவு தானியங்கள் மூலம் செலவாகும் கலோரி 6900ம் மற்றும் புரதசத்து 200 கிராம் ஆகும். இதே போன்று ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு ஏழு கிலோ உணவு தானியங்கள் மூலமாக 24150 கலோரியும்,  700 கிராம் புரதசத்தும் செலவழிக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் கலோரி 1140-ம் , 226 கிராம் புரதசத்தும்தான். 
     
    ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு மூன்று கிலோ உணவு தானியங்கள் மூலமாக 10350 கலோரியும், 300 கிராம் புரதசத்தும் செலவழித்து , 1180 கலோரியும், 187 கிராம் புரதசத்தும் பெறப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு சராசரி 1046  கிலோ உணவு தானியம் கிடைக்கிறது. ஐரோப்பாவில் 552 கிலோவும், சீனாவில் 291 கிலோவும், இந்தியாவில் 155 கிலோவும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. பரம ஏழைநாடுகளில்  இது 130 கிலோ மட்டுமே.

     அமெரிக்கர் ஒருவர் வருடத்திற்கு ஒரு டன் உணவு  தானியத்தை உண்ண முடியுமா? முடியாது. அங்கு நேரடி நுகர்வைவிடமறைமுக நுகர்வான இறைச்சி உண்பதுதான் அதிகம். அங்கு 5ல் 4 பங்கு மறைமுக நுகர்வாக உள்ளது. இன்றைக்கும் உலகில் அதிகமான அளவு உணவுதானியங்கள் நுகர்வது அமெரிக்காதான். 16 சதவீதம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட வளர்ந்த நாடுகள் உலகின் 40 சதவீத உணவு தானியங்களை(உநசநயடள) எடுத்துக்கொள்கின்றன. பிரேசில் அல்லது அமெரிக்காவில் அரைபவுன்ட் மாட்டிறைச்சி பர்ஜெருக்கு  (க்ஷரசபநச)  ஈடாக உண்பதை, அதற்காக செலவாகும் தானியத்தை இந்தியாவில் தினசரி மூன்றுபேர்களுக்கு போதிய எரிசக்தியும் புரதசத்தும் பெறும் வகையில் உண்ணலாம்.

    எனவே வளர்ந்த நாடுகளின் இறைச்சி உணவிற்காக கூடுதலான தானியங்கள் செலவாகிறது. அங்கும் பெரும் அளவில் இறைச்சி தொழிற்சாலைகளும், அதற்கான கால்நடை பண்ணைகளும் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு உணவு தானியங்களே உணவாக கொடுக்கின்றனர். 

       இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் இறைச்சி சாப்பிடுவதில்லையா என்ற கேள்வி எழலாம், உண்மைதான் இங்கு இறைச்சி உணவு உற்பத்திக்கு உணவுதானியங்களை சார்ந்திருப்பது மிக மிக குறைவாகும்.அதற்கு மாறாக இயற்கை புல்வெளிகளைத்தான் அதிகம் சார்ந்து உள்ளனர். கணிசமான இறைச்சி உணவு வேட்டையாடுதலை சார்ந்து உள்ளது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகள் நவீன இறைச்சி உற்பத்திமுறையை சார்ந்து இல்லை. அதற்கு மாறாக ஆதிவாசிகள் உட்பட காடுகளில் விலங்குகளையும், பறவைகளையும், மீன்பிடித் தொழில் மூலமாகவும் கூடுதலான இறைச்சி உணவை பெறுகின்றனர்.

         எனவே இங்கு இறைச்சிக்கான உணவு தானியங்கள்செலவிடுவது மிகமிக குறைவே (சூநயச ஷ்நசட யயீடிடிசநஉடிடிஅல) என்று பட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.

     இந்த உணவு நெருக்கடியும், விலையேற்றமும், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளையும் பாதிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் இக்காலத்தில் 200 சதம் விலை உயர்ந்தபோது சீனாவில் கடந்த ஆண்டைவிட குறைவாக கட்டுப்படுத்திவைத்துள்ளனர். தென்கொரியா தனது உணவு சேமிப்பை  சந்தைக்கு திறந்துவிட்டு விலை உயர்வை குறைத்தது. ஜப்பானும் இதே நடவடிக்கையில் இறங்கி தனது நாட்டின் விலை உயர்வை தடுத்தது. இதர ஆசியநாடுகளில் சாத்தியமில்லாமல் போனது இவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? 

      ஒன்று அவர்கள் தங்களது தேவைக்கு, தன்னிறைவான உணவு உற்பத்தியை வைத்துள்ளனர்,  இரண்டு உள்நாட்டு உற்பத்தியை முதலில் உள்நாட்டு சேமிப்புக்கு பயன்படுத்தினர், மூன்று இதனால் அவர்கள் சர்வதேச வணிக ஒப்பந்தங்களில் கவனமாக செயல்பட்டு தங்கள் நலனை பாதுகாத்துக் கொண்டனர். ஜப்பானில் அரிசியை ஒரு சரக்காக பார்க்காமல் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்துள்ளனர்.

      எனவே, இன்றைய உணவு நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும், விவசாய நிலம் குறைந்து வருவது, வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின்  மீது பழிபோட்டு, பட்டினிச்சாவை நியாயப்படுத்துவது நேர்மையற்ற வாதமாகும். இதற்கு பின்னால் வளர்ந்த நாடுகளின் ஏகபோக நிறுவனங்களின் நலன்களும், கொள்ளை லாப கொள்கைகளும் அடங்கியுள்ளன. இவைகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உணவு நெருக்கடிகளும், விலை ஏற்றத்திற்கும் பிரதான காரணமாகும். மற்றவை நீண்டகால திட்டத்தில் தீர்வு காணப்படக்கூடிய பிரச்சனைகள். இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் உணவுப்பிரச்சனை முக்கியத்துவம் பெறுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...