Pages

செவ்வாய், பிப்ரவரி 15, 2011

உணவுநெருக்கடி: வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல் -5



இந்தியாவில் உணவு நெருக்கடியும்-பாதுகாப்பும்

     உலக உணவு நெருக்கடி மற்றும் விலை உயர்வு பின்னணியில் இந்தியாவில் உணவுப்  பாதுகாப்பு என்பது ஒரு அவசரமான அரசியல் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்திய அரசு சுற்றுக்குவிட்டுள்ள உணவுப் பாதுகாப்பு சட்டம் (Food security Act) அப்படியே நிறைவேறினால் அது உணவு பாதுகாப்பு சட்டம் என்பதைவிட உணவு பறிப்புச் சட்டமாகத்தான் இருக்கும். சட்டத்தின் ஓட்டைகளை காணுமுன் சாமானியன் நிலை என்ன என்று பார்க்க வேண்டும்.

  இந்தியாவில் ஒவ்வொருவருக்கும் தனிநபர் உணவின் அளவு 1950-55ல் ஆண்டுடில் 152 கிலோவாக இருந்தது. இது 1989-92-ல் 177 கிலோவாக உயர்ந்தது. நகர்புறத்தில் 155 கிலோவாகவும், கிராமபுறத்தில் 151 கிலோவாகவும் உள்ளது. இது அனைவருக்கும் சமமாக கிடைத்துவிடும் என்று நினைத்திடவேண்டாம். இது சராசரி அளவாகும்.

  கிராமப்புற, நகர்ப்புற மக்களின் சராசரி உணவின் அளவு இக்காலத்தில் குறைந்து கொண்டு வருகிறது. கிராமப்புறத்தில் 1993-94ல் 2153 கலோரியும் 60.2கிராம் புரதசத்தும் கிடைத்தது. இது 2004-05ல் 2047 கலோரியும், 57 கிராம் புரதசத்துமாக குறைந்துவிட்டது. இதே நிலைதான் சிறிது மாறுபாட்டுடன் நகர்புறத்தில் நீடிக்கிறது. இந்தியாவில் 30 சதவீத குடும்பங்கள் 1700 கலோரிக்கு குறைவாகவே உண்ணுகின்றனர். இது சர்வதேச குறைந்தபட்ச அளவான 2100 கலோரி என்பதைவிட குறைவானது.  வளர்ச்சியடைந்த மாநிலமாக கூறப்படும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் 1842 கலோரி கர்நாடகத்தில் 1845 கலோரியும், குஜராத்தில் 1923 கலோரியும் கிடைக்கிறது.

    உலகின் பட்டினிப் பட்டியலில் உள்ள 88 நாடுகளில் இந்தியா 66வது இடத்தில்  உள்ளது. பஞ்சாபில் பட்டினிப் புள்ளி 13.6 என்றால் இது மத்தியபிரதேரசத்தில்  30.9 புள்ளிகளாக உள்ளது.    மத்தியபிரதேசம், பீஹார், ஜார்கண்ட்  ஆகியமாநிலங்கள் பட்டினியில்  ஜிம்பாப்வே, ஹெய்டி ஆகியநாடுகளுக்கு கீழே உள்ளது.

    இந்தியாவில் 3 வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளில் 47 சதம் பேர்  எடை குறைவாக உள்ளனர். 46 சதம் வளர்ச்சி குன்றிய (Stunted) குழந்தைகள். 80 சதவீத குழந்தைகளும், பெண்களும் இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடிகள் அனைத்தும் இந்தியா கட்டமைப்பு சீரமைப்பு கொள்கையை கடைபிடித்ததன் பாதிப்புகள்தான் என்பதை இன்னும் உணரவில்லை. உணவு தானிய இருப்பைகூட உபரி இருப்பாக மத்திய அமைச்சர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 2002-03ல் கடுமையான  வறட்சி, வேலையின்மை பெருகியது. வாங்கும் சக்தி குறைந்ததால் 6.4 கோடி டன் தானியங்கள் சேமிப்பு கிடங்கில் இருந்தது. இக்காலத்தில்தான் பா.ஜ.க. அரசு 2 கோடி 20 லட்சம் டன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்தது. தற்போது உள்ள சேமிப்பும் உபரி அல்ல. வாங்க வழியற்ற மக்கள் பட்டினியால் இருப்பதாலும், பொதுவிநியோக முறையைவெட்டி சுருக்கியதாலும் கிடங்குகளில் உள்ளது.

   இதையெல்லாம் கணக்கில் எடுத்து உணவு பாதுகாப்பை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் உணவு உற்பத்தியை பெருக்குவது எளிதான விஷயம்தான்.  இந்தியா மற்ற அனைத்து நாடுகளையும்விட பட்டினிச்சாவு , வறுமை, சத்துக்குறைவு போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்ததாக தெரியவில்லை.
பட்டினியிலோ அல்லது பஞ்சம் என்ற  அச்சுறுத்தலில் மக்கள் வாழவேண்டிய அவசியம்  இருக்காது. என்பதுதான் உணவு பாதுகாப்பின் சுருக்கமான வரையறை, ஐக்கிய நாடுகள் சபை  இதை அனைத்து மக்களுக்கும் போதுமான அளவு, விரும்பும் வகையில், பாதுகாப்பான  முறையில் சத்துநிறைந்த, சுறுசுறுப்பும், நலமும் நிறைந்த வாழ்வு நடத்த தேவையான உணவை அளிப்பதுதான் உணவு பாதுகாப்பாகும்'' என்று விளக்கம் அளித்துள்ளது.

     இந்திய அரசு தானாக முன்வந்து உணவு பாதுகாப்பிற்கு துளியும் நடவடிக்கை எடுக்கவில்லை. 1948ம் ஆண்டு சர்வதேச மனித உரிமை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் பிறகு 1976 முதல் குடிமை , அரசியல் உரிமைகள் பற்றியும், சர்வதேச பொருளாதார , சமூக, கலாச்சார உரிமைகள், மற்றும் பெண்கள், குழந்தைகள், அகதிகள் உடல் ஊனமுற்றவர்கள் என்று பல பகுதி மக்களின் உரிமைகள் பற்றிய மாநாடுகளும் , தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 1996ம் ஆண்டு ரோம் நகரில் ஐ.நா.வின் சார்பில் உலக உணவு  உச்சி மாநாடு  நடைபெற்று உணவு பாதுகாப்பு அளிப்பதின் அவசியம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

        இதே காலத்தில் தென் ஆப்பிரிக்கா, நிகரகுவா, பெரு, உகாண்டா, மெக்சிகோ நாடுகளில் உணவு பாதுகாப்பு அடிப்படை உரிமையாக்கப்பட்டது. பெலாரஸ் , மால்டோவா ஆகிய நாடுகளில் உணவு பாதுகாப்பு அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக மாறியது. ஊட்டச்சத்தை வாழ்க்கை தரத்தை சட்டமாக்கின. இத்தனை நடவடிக்கைகளுக்கு பிறகும் இந்திய அரசு துளியும் அசையவில்லை, 
    அப்பாவி மக்களை பற்றி கவலைப்படவில்லை. ஜனநாயகசக்திகளும், இடதுசாரிகளும் தெருவில் இறங்கி உணவு பாதுகாப்பிற்காக போராடினர். சில தன்னார்வ குழுக்கள் சர்வதேச தீர்மானங்களை சுட்டிக்காட்டி உணவுப் பாதுகாப்பிற்காக பல வழக்குகளை தொடுத்தன. 2001ம் ஆண்டு ராஜஸ்தானில்  உள்ள ஒரு தன்னார்வ குழு கடும் வறட்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேமிப்பு கிடங்கில்(6.4கோடி டன்) உள்ள உணவை விநியோகிக்கக்கோரி வழக்கு தொடுத்தது. இதையேற்று உச்சநீதிமன்றம் பட்டினிச்சாவை தடுக்க கிடங்கில் உள்ள உணவை விநியோகிக்க உத்தரவிட்டது. இந்த காலத்தில்தான் அதுவரை இல்லாத அளவு 2.2 கோடி டன் உணவை பிஜேபி அரசு ஏற்றமதி செய்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

       மற்றொரு அமைப்பான பியுசிஎல் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பகவதி அரசியல் சட்டப் பிரிவு 21-ல் உள்ள வாழ்வதற்கான உரிமை என்பது உயிருடன் வாழ்வது என்பது மட்டுமல்ல, சுயமரியாதையுடன் வாழ்வது என்பதும் அடிப்படைத் தேவைகளான உண்ண உணவு , உடுக்க உடை , இருக்க வீடு இவைகளுடன் வாழ்வதும் என்பதுதான் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார். மத்திய அரசின் தற்போதைய உணவு பாதுகாப்புச் சட்டத்தில் இந்த அளவுகோல் எதுவும் கடைபிடிக்கப்படவில்லை.

  ஒன்று மத்திய அரசு தற்போதைய சட்டத்தில்  5 கோடியே 91 லட்சம் குடும்பங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மானியத்தில்  உணவு வழங்கப்படும்; இதில் பரம ஏழைகளான அந்தோதயா அன்ன போஜனாவில் AAY) உள்ள 2.05கோடி குடும்பங்களும் அடங்கும் என்று அறிவித்துள்ளது, ஏற்கனவே இந்த அந்தோதயா அன்னதான திட்டத்தில் உள்ளவர்கள் மாதம் 35 கிலோ உணவு தானியங்களை ரூ.2/- விலைக்கு பெறுகின்றனர். தற்போது இச்சட்டத்தில் இவர்கள் அனைவருக்கும் மாதம் 25 கிலோ உணவுதானியங்களை ரூ.3/- விலைக்கு வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை வெட்டிச்சுருக்குவது மட்டுமல்ல, அளவையும் குறைத்து விலையையும் ஏற்றுவதுதான் ஒரே கல்லில் மூன்று மாங்காய் என்பதுபோல் உள்ளது.

   மத்திய அரசு ஏற்கனவே, 6 கோடியே 52 லட்சம் குடும்பங்களக்கு உணவுதானிய ஒதுக்கீடு செய்துவருகிறது. மாநில அரசுகள் 10 கோடி 68 லட்சம் குடும்ப அட்டைகளை வழங்கி உள்ளன. இதையும் இச்சட்ட வரைவு கவனத்தில் எடுக்கவில்லை. வறுமைகோடு என்பதை கிராமப்புறத்தில் ஒரு நபருக்கு ஒருநாள் வருமானம் ரூ. 11.80 என்றும் நகர்புறத்தில் ரூ.17.80 என்றும் அளவிட்டுள்ளனர். இதுவும் 1983ம்ஆண்டு விலைவாசி அடிப்படையில் என்று மத்திய அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த கணக்கின்படியே கூட இத்தகைய உண்மையான விபரங்களை சேகரிக்கவில்லை. மத்திய அரசு வறுமைகோட்டிற்கு கீழே உள்ளவர்கள் 28 சதவீதம் என்று கூறியுள்ளது. 

    ஆனால் தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் 40 சதவீதம் என்றும் ஊரக வளர்ச்சித்துறை 50 சதவீதம் என்றும் பேரா. அர்ஜீன்சென் குப்தா குழு 77 சதவீதம் என்றும் கூறியுள்ளன. இவை நான்குமே மத்திய அரசின் நிறுவனங்கள்தான். இந்த 11.80 மற்றும் 17.80 என்ற வருவாய் உணவுக்காக மட்டும் என்று மதிப்பிட்டுள்ளனர். இந்திய குடிமக்களுக்கு உடை, இருப்பிடம் தேவையில்லையா? கேட்டால் இவை அனைத்தும் அரசியல் சட்டத்தில் உரிமைகளாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.அதாவது ஏட்டுச் சுரைக்காயை சமைத்து சாப்பிட வேண்டும் என்று மன்மோகன் சிங் வகையறாக்கள் வாதிடுகின்றனர். எனவே இந்த உணவு பாதுகாப்பு வரைவுச் சட்டத்தில் வறுமைக்கோடு தொடர்பாக சமீபத்திய நிலைமைகளுடன் விஞ்ஞான பூர்வமான வகையில் முடிவெடுத்து இணைக்கப்படவேண்டும்.

   இரண்டாவதாக, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கையைவிட இந்தியாவில் சத்துக்குறைவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கூடுதலாகும். எனவே உணவு பாதுகாப்பு வரையறைக்குள் இவர்களையும் கொண்டுவந்திட வேண்டும். கேரளாவில் அனைத்து பழங்குடி, தாழ்த்தப்பட்டவர்கள், மீனவர் சமுதாயம் முழுவதும் அமைப்புசாரா தொழில் செய்வோரும்  மேலும் அனைவரும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என கணக்கிட்டு உணவுதானியங்கள் வழங்கப்படுகின்றன. இதே போன்று சத்தீஷ்கரில் அனைத்து பூர்வகுடி மக்களும் (70 சதம்) வறுமைக்கோட்டிற்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுபோன்று விரிவான வரையறை அவசியமானது.

   மூன்றாவதாக, வறுமைக்கோட்டிற்கு மேலே உள்ள மக்கள் எப்போதும் அதே நிலையிலேயே இருப்பது இல்லை. வறட்சி, வெள்ளம், விலையேற்றத்தால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதற்கான பாதுகாப்பாக விரிவான முறையில் பொதுவிநியோக முறையை கொண்டு வரவேண்டும். பொதுவிநியோக முறையின் நோக்கமே வெளிச்சந்தை விலையை கட்டுக்குள் வைப்பதுதான். ஆனால் தற்போது ரேஷன் கடைகளில்  உள்ள விலைகளுக்கும் வெளிச்சந்தை விலைகளுக்குமிடையேயான வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமிடையேயான வேறுபாடாக நீடிக்கிறது. இதில் அடிப்படையான மாற்றங்கள் காணவேண்டும்.

   நான்காவதாக, பொது விநியோக முறையை அனைவருக்கமான பொதுவிநியோக முறையாக மாற்றினால் கூடுதல் செலவு பிடிக்கும் என்று காரணம் காட்டி கைவிடப்படுவதை தடுத்திடவேண்டும். தற்போது மத்திய அரசு 2009-2010ல் நிதிநிலை (அறிக்கையில் பொதுவிநியோக முறைக்கு 52,484 கோடி ஒதுக்கிஉள்ளது. மேலும் ரூ.70,000-ம் கோடி ஒதுக்கினால் அனைவருக்கமான (Universal) பொது விநியோக முறையை அமுலாக்கலாம். இது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம் மட்டுமே. இதே காலத்தில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு 4 லட்சம் கோடி வரை மத்திய அரசு சலுகை வழங்குவதும், அம்பானிக்கு கடந்த 6 மாதத்தில் 45000 கோடி சலுகை வழங்குவதும் சாத்தியமாகிறபோது, பட்டினியை தடுக்க ரூ.70000ம் கோடி சாத்தியமே, ஆனால் இதைதடுப்பது எது? மத்திய அரசின் வர்க்க கொள்கைதான் இந்த பொதுவிநியோக முறையை பலப்படுத்தினால், பன்னாட்டு கம்பெனிகளுக்கும் இந்திய நிலபிரபுக்களுக்கும், பெரும் முதலாளிகளுக்கும் லாபவேட்டை சுருங்கும். அதனாலேயே தேவையான நிதி இருந்தும்கூட ஒதுக்க மறுக்கிறது.

    ஐந்தாவதாக, இந்தியாவில் உணவிற்காக பல திட்டங்கள் உள்ளன. மதிய 
உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுதிட்டம் போன்ற எட்டுக்கும் மேற்பட்ட திட்டங்களை மேலும் பலப்படுத்தி உணவு பாதுகாப்பை விரைவாக அமல்படுத்திட வேண்டும்.

  ஆறாவதாக உணவு பாதுகாப்பை பெற்றிட மூன்று முக்கிய அம்சங்கள் தேவை, 1) உற்பத்தி பெருகி உணவு  தட்டுபாடின்றி கிடைக்க வேண்டும் ((Availability) 2. உணவு தானியங்களை வாங்கும் சக்தி மக்களிடம்இருக்கவேண்டும் (Accessibility) 3. உண்டு பயனைடையும் ஆரோக்கியமான உடல்நலம் (Absorbability) இருக்கவேண்டும். உணவு உற்பத்தியை பெருக்கிட மத்திய அரசு விவசாயம் மற்றும் ஆராய்ச்சிக்கான பொதுமுதலீட்டை அதிகப்படுத்திட வேண்டும். பொது முதலீட்டை குறைக்கிறபோது மிகமோசமான உற்பத்திமுறை அதிகரிக்கிறது.  பீஹாரில் தற்போது ஒரு ஹெக்டேருக்கு 1287 கிலோவும், மேற்கு வங்கத்தில் 2509 கிலோவும் , பஞ்சாபில் 4.6 டன்னும் விளைகிறது. சீனாவில் இதுவே 6முதல்7 டன் உற்பத்தி ஆகிறது. மோசமான உற்பத்தி பெருகுவதற்கு இது போன்ற பல உண்மைகளை காணலாம்.

   எனவே மத்திய அரசு பொது முதலீட்டை அதிகப்படுத்துவது, விளைபொருட்களை கொள்முதல் செய்வது, இடுபொருட்களை மானிய விலையில் வழங்குவது, விளைநிலங்களை பாதுகாப்பது, கூட்டுறவு கடன்வசதிகளை ஏற்படுத்துவது அவசியமாகும். அதே நேரத்தில் அனைத்து அத்தியாவசியப்  பொருட்களின் மீது உள்ள முன்பேர ஊக வாணிபத்தை தடைசெய்வது  உணவு பாதுகாப்பின் அடிப்டைத்தேவையாகும்.

      எனவே உணவுக்கான உரிமை உணவுப் பாதுகாப்பு என்பது இன்றைய அரசு உறுதியாக அமுலாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போது உருவாக்கியுள்ள வரைவுச் சட்டமும் வறியவர்களை காத்திட உதவாது, மேற்கண்ட அம்சங்களை உள்ளடக்கி ஒரு விரிவான உணவு பாதுகாப்புத்திட்டத்தை உருவாக்கிடவேண்டும். மத்திய அரசு இந்தச் சட்டத்தை நிறைவேற்றிடவும், உறுதியாக அமுலாக்கிடவும் இந்தியாவின் பெருந்திரள் மக்கள் எழுச்சி பெற்று நிர்பந்தம் செலுத்தினால் மட்டுமே சாத்தியம். பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவே, நாங்கள் சாகவோ என்ற நிலைமாறிட வழிகாணவேண்டும்.   
                                                                       
                                                                    முற்றும்.

உதவிய கட்டுரைகள்

The world food crisis Historical Perspective- Philip Memichael
Orgins of the food crisis in India and Developing 
countries–Utsav Patnaik   Food Wars – Waldan Bello and Mara Baviera
Reducing Energy Inputs in the Agricultural Production  System-David Pinental
Last Opportunity in Bihar – EPW – Nov.21
Agriculture and Food in crisis-Fred Magdoff and Brian Tobar
Free Trade in Agriculture – Sophia Murphy

சனி, பிப்ரவரி 12, 2011

உணவுநெருக்கடி: வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல் -4



முன்பேர ஊக வாணிபம்:

     விலை ஏற்றத்திற்கு இதுவரை கூறிய காரணங்களுக்கு சமமான அளவில், அதைவிட கூடுதலாகவே  முன்பேர ஊக வாணிப முறை (குரவரசந கூசயனபே) பங்கு செலுத்தியுள்ளது. இந்தியா உட்பட வளரும் நாடுகள் நிதிக் கட்டுப்பாட்டை அகற்றியதும், புதிய நிதியாளர்களை சரக்கு பரிமாற்றத்தில் அனுமதித்ததும், முன்பேர ஊக வாணிபத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. சந்தை என்பது உற்பத்தியாளர்- நுகர்வோர் பேரம் பேசும் இடம் என்ற நிலைமாறி வர்த்தக சூதாடிகளும், நிதிநிறுவனங்களும் குறுகியகாலத்தில்  கொள்ளை லாபத்தை ஈட்டும் இடமாக மாறியது. 

   2007ம் ஆண்டு ரியல் எஸ்டேட் என்ற தொழில் வீழ்ச்சியடைந்தது. அமெரிக்காவில் வீட்டு அடமானமுறை திவாலாகியது. இதனால் நிதி முதலீடு செய்பவர்களும் தரகர்களும் (ளுயீநஉரடயவஎந ஹபநவேள) தங்களது நிதி மூலதனத்தை சரக்கு வர்த்தகத்தை நோக்கி அதாவது உணவுதானியங் களை நோக்கி திருப்பிட்டனர். இதனால் உணவுப் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்தது. இந்தியாவில் 2008ம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் ஜீன் 30 வரை மட்டும் முன்பேர ஊக வணிகம் 11,15,326.99 கோடி அளவிற்கு நடைபெற்றது. 2009ம் ஆண்டு இதே காலத்தில் 15, 64, 114.96 கோடி முன்பேர ஊக வணிகம் நடைபெற்றுள்ளது.  சரக்கின் அளவு மாறவில்லை. ஆனால் விலையை ஏற்றி 4, 48, 787.97 கோடியை லாபமாக சுருட்டி உள்ளனர். 

     2007ம் ஆண்டு அரிசி, கோதுமை, பருப்பு, சர்க்கரையை தற்காலிகமாக இந்திய அரசு தடைசெய்தபோது இப்பொருட்களின்விலை 20 சதவீதம் குறைந்தது நினைவிருக்கலாம். இந்த விலையேற்றத்தின் விளைவாக வால்ஸ்ட்ரீட் (றுயடட ளவசநநவ) 130 பில்லியன் டாலரை கூடுதலாக முன்பேர ஊக வாணிபத்தில் முதலீடு செய்துள்ளதாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை மதிப்பீடு செய்துள்ளது .  மற்றொரு அதிர்ச்சிதரும் தகவல், தற்போது உலக கோதுமைச் சந்தையில் இந்த முன்பேர ஊக வணிகர்கள் 50 முதல் 60 சதம் வரை கோதுமைக்கு முன்பணம் செலுத்தியுள்ளனர்.

     உணவு பொருட்களின் வர்த்தகத்தில்,  பட்டியல் நிதி, பட்டியல் வியாபாரிகள் என்ற புதிய வர்த்தக   கும்பல் உருவாகி குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் அடித்திடவும், விலையை ஏற்றிடவும் காரணமாக உள்ளது. தேசிய உணவு சேமிப்பு பல நாடுகளில் தனியார்மயமாகி பன்னாட்டு நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு விவசாயிகள் நலன் மற்றும் நுகர்வோர் நலனைவிட முன்பேர ஊகவாணிபமே முன்னுரிமையாக உள்ளது.

சைவமா ? அசைவமா?

  உணவு  நெருக்கடிக்கும், விலை ஏற்றத்திற்கும் இறைச்சி உணவை சாப்பிடுவது கூடுதலாகி உள்ளது ஒரு காரணம் என்று கூறுப்படுகிறது. எனவே, மாட்டிறைச்சி உண்பதை குறைத்துக்கொள்ளவேண்டும் என்று பொதுவாக போதிக்கப்படுகிறது. ஆனால் இறைச்சி உணவு தேவை இரட்டிப்பாகியுள்ளது உண்மைதான். இதிலும் வளர்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் உள்ள வேறுபாட்டை கவனிப்பது அவசியமாகும்.

         முதலில், உணவு தானியங்களுக்கும், இறைச்சி உணவுக்கும் இடையேயான எரிசக்தி (உயடடிசல) சமன்பாடுகளை பொருளாதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் எடுத்துக்கூறியுள்ளார். ஒரு கிலோ கோழிக்கறிக்கு இரண்டு கிலோ உணவு தானியங்கள் தேவைப்படுகிறது. கோழிக்கறியிலிருந்து கிடைக்கும் கலோரி 1090-ம் புரதசத்து 250 கிராமும் ஆகும். இதற்காக உணவு தானியங்கள் மூலம் செலவாகும் கலோரி 6900ம் மற்றும் புரதசத்து 200 கிராம் ஆகும். இதே போன்று ஒரு கிலோ மாட்டு இறைச்சிக்கு ஏழு கிலோ உணவு தானியங்கள் மூலமாக 24150 கலோரியும்,  700 கிராம் புரதசத்தும் செலவழிக்கப்படுகிறது. இதிலிருந்து பெறப்படும் கலோரி 1140-ம் , 226 கிராம் புரதசத்தும்தான். 
     
    ஒரு கிலோ பன்றி இறைச்சிக்கு மூன்று கிலோ உணவு தானியங்கள் மூலமாக 10350 கலோரியும், 300 கிராம் புரதசத்தும் செலவழித்து , 1180 கலோரியும், 187 கிராம் புரதசத்தும் பெறப்படுகிறது. அமெரிக்காவில் ஒவ்வொருவருக்கும் ஆண்டுக்கு சராசரி 1046  கிலோ உணவு தானியம் கிடைக்கிறது. ஐரோப்பாவில் 552 கிலோவும், சீனாவில் 291 கிலோவும், இந்தியாவில் 155 கிலோவும் உணவு தானியங்கள் கிடைக்கிறது. பரம ஏழைநாடுகளில்  இது 130 கிலோ மட்டுமே.

     அமெரிக்கர் ஒருவர் வருடத்திற்கு ஒரு டன் உணவு  தானியத்தை உண்ண முடியுமா? முடியாது. அங்கு நேரடி நுகர்வைவிடமறைமுக நுகர்வான இறைச்சி உண்பதுதான் அதிகம். அங்கு 5ல் 4 பங்கு மறைமுக நுகர்வாக உள்ளது. இன்றைக்கும் உலகில் அதிகமான அளவு உணவுதானியங்கள் நுகர்வது அமெரிக்காதான். 16 சதவீதம் மக்கள் தொகையை மட்டுமே கொண்ட வளர்ந்த நாடுகள் உலகின் 40 சதவீத உணவு தானியங்களை(உநசநயடள) எடுத்துக்கொள்கின்றன. பிரேசில் அல்லது அமெரிக்காவில் அரைபவுன்ட் மாட்டிறைச்சி பர்ஜெருக்கு  (க்ஷரசபநச)  ஈடாக உண்பதை, அதற்காக செலவாகும் தானியத்தை இந்தியாவில் தினசரி மூன்றுபேர்களுக்கு போதிய எரிசக்தியும் புரதசத்தும் பெறும் வகையில் உண்ணலாம்.

    எனவே வளர்ந்த நாடுகளின் இறைச்சி உணவிற்காக கூடுதலான தானியங்கள் செலவாகிறது. அங்கும் பெரும் அளவில் இறைச்சி தொழிற்சாலைகளும், அதற்கான கால்நடை பண்ணைகளும் உள்ளன. இந்த கால்நடைகளுக்கு உணவு தானியங்களே உணவாக கொடுக்கின்றனர். 

       இந்தியாவிலும் வளரும் நாடுகளிலும் இறைச்சி சாப்பிடுவதில்லையா என்ற கேள்வி எழலாம், உண்மைதான் இங்கு இறைச்சி உணவு உற்பத்திக்கு உணவுதானியங்களை சார்ந்திருப்பது மிக மிக குறைவாகும்.அதற்கு மாறாக இயற்கை புல்வெளிகளைத்தான் அதிகம் சார்ந்து உள்ளனர். கணிசமான இறைச்சி உணவு வேட்டையாடுதலை சார்ந்து உள்ளது. வளரும் நாடுகளில் உள்ள ஏழைகள் நவீன இறைச்சி உற்பத்திமுறையை சார்ந்து இல்லை. அதற்கு மாறாக ஆதிவாசிகள் உட்பட காடுகளில் விலங்குகளையும், பறவைகளையும், மீன்பிடித் தொழில் மூலமாகவும் கூடுதலான இறைச்சி உணவை பெறுகின்றனர்.

         எனவே இங்கு இறைச்சிக்கான உணவு தானியங்கள்செலவிடுவது மிகமிக குறைவே (சூநயச ஷ்நசட யயீடிடிசநஉடிடிஅல) என்று பட்நாயக் தெளிவுபடுத்தியுள்ளார்.

     இந்த உணவு நெருக்கடியும், விலையேற்றமும், சீனா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளையும் பாதிக்கவில்லை. பிலிப்பைன்ஸ் நாட்டில் இக்காலத்தில் 200 சதம் விலை உயர்ந்தபோது சீனாவில் கடந்த ஆண்டைவிட குறைவாக கட்டுப்படுத்திவைத்துள்ளனர். தென்கொரியா தனது உணவு சேமிப்பை  சந்தைக்கு திறந்துவிட்டு விலை உயர்வை குறைத்தது. ஜப்பானும் இதே நடவடிக்கையில் இறங்கி தனது நாட்டின் விலை உயர்வை தடுத்தது. இதர ஆசியநாடுகளில் சாத்தியமில்லாமல் போனது இவர்களுக்கு எப்படி சாத்தியமாயிற்று? 

      ஒன்று அவர்கள் தங்களது தேவைக்கு, தன்னிறைவான உணவு உற்பத்தியை வைத்துள்ளனர்,  இரண்டு உள்நாட்டு உற்பத்தியை முதலில் உள்நாட்டு சேமிப்புக்கு பயன்படுத்தினர், மூன்று இதனால் அவர்கள் சர்வதேச வணிக ஒப்பந்தங்களில் கவனமாக செயல்பட்டு தங்கள் நலனை பாதுகாத்துக் கொண்டனர். ஜப்பானில் அரிசியை ஒரு சரக்காக பார்க்காமல் ஒரு வாழ்க்கை முறையாகவே வைத்துள்ளனர்.

      எனவே, இன்றைய உணவு நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும், விவசாய நிலம் குறைந்து வருவது, வறட்சி, வெள்ளம், பருவநிலை மாற்றம் போன்றவற்றின்  மீது பழிபோட்டு, பட்டினிச்சாவை நியாயப்படுத்துவது நேர்மையற்ற வாதமாகும். இதற்கு பின்னால் வளர்ந்த நாடுகளின் ஏகபோக நிறுவனங்களின் நலன்களும், கொள்ளை லாப கொள்கைகளும் அடங்கியுள்ளன. இவைகளால் உருவாக்கப்பட்டதுதான் இந்த உணவு நெருக்கடிகளும், விலை ஏற்றத்திற்கும் பிரதான காரணமாகும். மற்றவை நீண்டகால திட்டத்தில் தீர்வு காணப்படக்கூடிய பிரச்சனைகள். இந்தப் பின்னணியில்தான் இந்தியாவின் உணவுப்பிரச்சனை முக்கியத்துவம் பெறுகின்றது.

வியாழன், பிப்ரவரி 10, 2011

உணவுநெருக்கடி:வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்-3




சுதந்திரச்  சந்தை , சுதந்திர வர்த்தகம்:

   இதுகாலம் வரையான வர்த்தக ஒப்பந்தங்களிலிருந்து உணவு தானியங்கள் விலக்கிவைக்கப்பட்ட சகாப்தத்தை 1986ல் டெல்லில் நடைபெற்ற உருகுவே சுற்றுப் பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு கொண்டுவந்தது. அதைத்தொடர்ந்து 1994, 1995-களில் ஏற்பட்ட விவசாய ஒப்பந்தம் விவசாய விளை பொருட்களுக்காக சுதந்திர சந்தையை தீவிரமாக்கின.
         இதன் உச்சகட்டமாக 1996ல் உலக உணவு உச்சி மாநாடு (WORLD FOOD SUMMIT) ரோமில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட  அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அதிலும் சுதந்திர வர்த்தகம் அவசியம் என வலியுறுத்தின. அனைத்து நாடுகளையும் நிர்ப்பந்தித்து இதை ஏற்கவைத்தன.

   உணவு பாதுகாப்பிற்கு உணவு வர்த்தகம் அடிப்படை என்பதை நாங்கள் ஏற்கிறோம். எங்களது உற்பத்தியாளர்களும், நுகர்வாளர்களும் பொருளாதார ரீதியில் பலமடைய அனைத்து ஆதாரங்களையும் பயன்படுத்தும் வகையில் நாங்கள் உணவு வர்த்தகத்தையும் இதர வர்த்தக கொள்கைகளையும் கடைபிடிப்போம் என்று சொல்லிக்கொண்டு கையெழுத்திட்டனர். 

   ஆனால், உணவு பாதுகாப்பிற்காக கூடிய மாநாடு அதற்கான தீமானத்தை இயற்றியதுடன், உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்குமான வழிவகையுமே துரதிர்ஷ்டவசமாக உருவாக்கிவிட்டது. எனவே உணவு பாதுகாப்பிற்காக உள்நாட்டில் இருந்த தடைகளும், நாடுகளுக்கு இடையேயான தடைகளும் உடனடியாக நீக்கப்பட்டன.

      இன்றைய உணவுச் சந்தையை அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள்தான் கட்டுபடுத்துகின்றன. இவர்களின் இளைய கூட்டாளிகளாக ஆஸ்திரேலியா, அர்ஜன்டைனா ஆகிய நாடுகள் உள்ளன. இந்நாடுகளின் பெரும் நிறுவனங்கள் இச்சந்தைகளில் கோலோச்சுகின்றன. இந்த நாடுகள் இருவகைளில் உலக சந்தையை கைப்பற்றுகின்றன. ஒன்று உணவுதானியங்களுக்கு கூடுதலான மானியங்கள் கொடுப்பது மூலம் ஏழைநாடுகளை போட்டியிலிருந்து வெளியேற்றுகின்றனர்.

     இரண்டாவது தொழில்மயமான இறைச்சி உற்பத்தி முறையால் சுதந்திரமான மற்றும் சிறுஉற்பத்தியாளர்கள் அழியும் நிலையை உருவாக்கிவிடுகின்றனர்.
அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும், மாட்டிறைச்சிக்கு கூடுதல் மானியம் வழங்கி உலகச் சந்தைக்கு கொண்டுவந்ததால் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் இறைச்சி வணிகம் துடைத்தெறியப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில் போன்ற நாடுகளில் அதிகமானிய உதவியுடன் ஏற்றுமதி செய்ததால் கானா நாட்டில் 90 சதவீதமும், செனகல் நாட்டில் 70 சதவீதமும் கோழிப்பண்ணை தொழில் அழிந்தது. இதே காரணத்திற்காக இங்குள்ள பருத்தி வளர்ப்போர்களின் சாகுபடி வீழ்ந்து, பருத்தி விவசாயத்திலிருந்து பலர் விரட்டப்பட்டனர்.

   இறைச்சி உணவு தயாரிப்பில் நவீனத் தொழில்மய முறைகளை பெரும் நிறுவனங்கள் புகுத்துகின்றன. இதற்கான கால்நடை வளர்ப்பு இதர வசதிகளை அருகாமையில் ஏற்படுத்திக்கொள்கின்றனர்.அமெரிக்காவில் உள்ள நான்கு பெரும்நிறுவனங்கள்2005-ம் ஆண்டில் மாட்டிறைச்சியை 83.5 சதவீதம் கட்டுப்படுத்தின. டைசன்(TYSON) நிறுவனம் ஒருநாளைக்கு 36000 மாடுகளை வெட்டுகின்றது. இதேபோல் கார்கில் (CARGILL) 28300 மாடுகளையும். ஸ்விப்ட் அண்ட் கோ (SWIFT & CO) 16759 மாடுகளையும்.நேஷனல் பீப் பேக்கர்ஸ்  13000 மாடுகளையும் வெட்டுகின்றன. பன்றி இறைச்சியில் ஸ்மித்பீல்ட்   என்ற அமெரிக்க நிறுவனம் ஏகபோகமாக உள்ளது. ஒருநாளைக்கு இருநிறுவனங்களும் 102900 பன்றித் தலைகளை வெட்டுகின்றன. இதனுடன் டைசன். கார்கில். ஸ்விப்ட் சேர்ந்து 64 சதவீதம் சந்தையை கட்டுப்படுத்துகின்றன.

    இதனால் அமெரிக்காவிலேயே சிறிய இறைச்சி உற்பத்தியாளர்கள் சந்தையிலிருந்து துடைத்தெறியப்பட்டுள்ளனர்ஸ்மித்பீல்ட்  என்ற அமெரிக்க நிறுவனம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு தனது திட்டத்தை விரிவுபடுத்தியது. அங்கு பெரும் இறைச்சி உற்பத்தியில் ஈடுபட்டதால் ருமேனிய நாட்டின் 90 சதவீதமும், போலந்து நாட்டின் 56 சதவீதமும் உற்பத்தியாளர்கள் பன்றி, மாடு, கோழி தொழிலிருந்து விரட்டப்பட்டுள்ளனர். 

    இந்த ஸ்மித்பீல்ட் நிறுவனம் போலந்து அரசிடமிருந்து ஏற்றுமதி மானியத்தை பெற்றுக்கொண்டு பன்றிக்கறிகளை லைபீரியா, கினியா, ஐவரிகோஸ்ட் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து உள்ளூர் விலையைவிட சரிபாதி குறைத்து கொடுக்கிறது. இதனால் அந்நாட்டு தொழில்கள் படுத்துவிட்டன. இந்த சுதந்திர வணிகத்தால் 90ம் ஆண்டுகளில் மெக்சிகோ விவசாயிகள் 1.5 கோடிபேர்கள் விவசாயத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.இந்த சுதந்திர வணிகத்தால் கடந்த பல ஆண்டுகளில் மூன்று கோடி விவசாயிகள் நிலத்தை இழந்துள்ளனர்.

      இந்த உலகச் சந்தையில் வளரும் நாடுகள் வளர்ந்த நாடுகளுடன் சமமாக போட்டியிடமுடியுமா? அனைத்து வளரும் நாடுகளிலும் வளர்ந்த  நாடுகளின் பெரும் நிறுவனங்கள் சூப்பர்மார்க்கெட் மூலமாக ஊடுருவி வருகின்றன. உலகில் சூப்பர் மார்க்கெட் மூலம் விற்பனையாகும் பலசரக்குகளில் 50 சதவீதத்தை ஐந்து நிறுவனங்கள் வைத்துள்ளன . 

   இதில் வால்மார்ட்  பிரதானமானது. உலக சில்லரை வர்த்தகத்தை பத்துக் கம்பெனிகள் கையில் வைத்துள்ளன. அதிலும் குறிப்பாக வால்மார்ட், குரேகர் (முசுடீழுநுசு) பிரெஞ்சு கம்பெனி கேர்போர் (ஊயசசநகடிரச) பிரிட்டிஷ் கம்பெனி டெஸ்கோ ஆகியவற்றின் ஆதிக்கம் அதிகம்.  உலகில் விதை விற்பனையில் 47 சதவீத விதைகளின் உரிமை மன்சேட்டா, டுபான்ட்,  சைசென்டா கம்பெனிகளுக்கு சொந்தமானது. 2007ம் ஆண்டு நெஸ்ட்லே (சூநளடவடந) உணவு கம்பெனியின் லாபம் 9.7 பில்லியன் டாலர் ஆகும். இது 65 ஏழைநாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட (ழுனுஞ) அதிகம். 2009 ஜனவரி 31 முடிய வால்மார்ட் கம்பெனியின் லாபம் 13.3 பில்லியன்(1 பில்லியன் 100 கோடி) டாலராகும். இது 88 ஏழைநாடுகளின், (உலகில் சரிபாதி நாடுகள்) மொத்த உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகம். 

  இந்த நிலைமையில் உலகச் சந்தையில் ஏழைநாடுகள் எப்படி போட்டியிடமுடியும்?  வளர்ந்த நாடுகளும், அதன் ஏகபோக நிறுவனங்களும், வளரும் நாடுகளின் சந்தையை கைப்பற்றி கொள்ளை லாபமடித்து, உணவு நெருக்கடியையும், விலையேற்றத்தையும் ஏற்படுத்துகின்றன. இதே காலத்தில் நீண்ட கால நோக்குடன் வளரும் நாடுகளின் உணவு முறையை தங்களது உற்பத்திகளை உண்ணும் உணவு பழக்கத்திற்கு மாற்றி அமைத்திடும் காரியங்களையும் இந்நாடுகள் திட்டமிட்டு செய்கின்றன.

உயிரியியல்  எரிசக்தி:

        விலை உயர்வுக்கும் உணவு நெருக்கடிக்கும் மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது உயிரியியல் எரிசக்தி தயாரிப்பாகும். உணவு கணிசமான அளவு தானியங்களை எத்தனால் மற்றும் பயோ டீசல் தயாரிக்க அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் திருப்பிவிட்டன. 2007ம் ஆண்டு அமெரிக்கா தனது நாடாளு மன்றத்தில் எரிசக்தி சட்டத்தை (நுநேசபல ஐனேநயீநனேநஉந யனே ளுநஉரசவைல ஹஉவ) நிறைவேற்றியது. எதிர்காலத்தில் 20 சதம் எரிசக்தியை இந்த உயிரியியல் எரிசக்தியிலிருந்து தயாரிப்பது என்று முடிவு செய்தது. 

              2008ம் ஆண்டு மட்டும் சோள உற்பத்தியில் 30 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க ஒதுக்கீடு செய்தது. சுமார் 135க்கும் மேற்பட்ட உயிரியியல் எரிசக்தி சுத்திகரிப்பு ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன.  மேலும் 74 ஆலைகள் உடனடியாக அமைக்கப்பட்டு வருகின்றன. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் எண்ணெய் வித்துக்களை உயிரியியல் எரிசக்தி தயாரிக்க திருப்பிவிட்டுள்ளன. 

           பிரேசில் தனது கரும்பு உற்பத்தியில் 50 சதவீதத்தை எத்தனால் தயாரிக்க பயன்படுத்துகின்றது. மேலும் இதற்காக கரும்பு விளைச்சளை அதிகப்படுத்த அமேசான்காடுகளை அழிக்கும் நடிவடிக்கைகளும் தொடர்கின்றன.

   உயிரியியல்  எரிசக்திக்கு உணவு தானியங்களை திருப்பிவிட்டது கடுமையான விலை உயர்வை ஏற்படுத்தியது.  இதை முதலில் அமெரிக்கா மூடிமறைத்தது. அமெரிக்கா இதனால் விலை உயர்வு முப்பது சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது. ஐஎம்எப் 20 முதல் 30 சதம் மட்டுமே கூடியுள்ளது என்றது. ஆனால் உலக வங்கியின் இரகசிய அறிக்கை  மூலம் 141 சதவீதம் விலை உயர்வில், அமெரிக்கா, ஐரோப்பிய கூட்டமைப்பின் இந்த எரிசக்தி திட்டத்தால் மூன்றில் ஒரு பகுதி விலைஏற்றம் ஏற்பட்டது என்று அம்பலப்பட்டது.

       வளர்ந்த நாடுகளின் இந்தப் போக்கு எதிர்காலத்தில் வளரும் நாட்டு மக்களை பட்டினிக்கு தள்ளிவிடும். ஏற்கனவே அமெரிக்காவில் எக்சான்மொபில் (நுஓஓடீசூ ஆடீக்ஷஐடு), ஆர்ச்சர் டேனியல் மிட்லேன்ட் (ஹனுஆ) கார்கில் கம்பெனிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சோளத்தை பயிரிட்டு உயிரி எரிசக்திக்கு வழங்குகின்றன. 
    
      தற்போது வளரும் ஏழைநாடுகளின் நிலங்களை எல்லாம் வளைத்துப்போடும் (டுயனே டுநயளந ளலளவநஅ டிக  சபைவ யீரசஉயளந) தொழில் வேகமாக பரவி உள்ளது. 2006ம் ஆண்டு முதல் இதுவரை 2 கோடி ஹெக்டேர் நிலங்கள் பிலிப்பன்ஸ், பாகிஸ்தான்,  வங்கதேசம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் விற்பனை ஆகியுள்ளது. இது ஜெர்மனியின் மொத்த விவசாய நிலத்தைவிட இருமடங்கு அதிகமாகும். 

       தென்கொரியாவின் தேவூ என்ற நிறுவனம் ஆப்பிரிக்காவின் மடகாகஸ் நாட்டில் 99 வருட வாடகைக்கு 30 லட்சம் ஏக்கர் வாங்கியது, இதில் உயிரி எரிசக்திகான பயிர்களை பயிரிட திட்டமிட்டு, தற்போது அந்நாட்டு மக்களின் எதிர்ப்பால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரட்ஸ்,  மற்றும் பிலிப்பைன்சில் ஒரு லட்சம் ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளது. எகிப்து மற்றும் உகாண்டாவில் 20 லட்சம் ஏக்கரில் சோளம், கோதுமை விளைவிக்க நிலம் வாங்கி உள்ளது. இந்தியாவின் 80 முதலாளிகள் எத்தியோப்பியாவில் 75 லட்சம் ஹெக்டேர் நிலத்தை வாங்கி உணவு தானியத்தை பயிரிட்டு பல நாடுகளில் விற்கின்றனர்.

         பல நாடுகளில் இந்த நிலத்தை வாங்கினாலும் இதில் குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களே இதில் பெரும் பங்குதாரர்களாக உள்ளன. அமெரிக்காவின் (ளுரடேயஅ சீஎயவந நளூரவைல) நிறுவனம் , சவுதி அரசி ணநயீலச கரனே நிறுவனமும், பிரிட்டனின் ஊனுஊ நிறுவனமும் முக்கிய பங்குதாரர்களாகும். இந்த நிலம் வாங்கும் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்துவது நுஅநசபநவே ஹளளநவள ஆயயேபநஅநவே என்று சொல்லப்படும் பிரிட்டிஷ் நிறுவனம்தான்.  
             
       ஆப்பிரிக்காவில் வாங்கியுள்ள நிலத்தில் எரிசக்தி தயாரிக்க தேவையான தாவர எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளனர். ஆப்பிரிக்காவில் அதிக குறைவான விலையில் நிலமும்  குறைந்தகூலிக்கு தொழிலாளர்கள், போக்குவரத்திற்கு சுலபமான கடல்மார்க்கம் என்பதால்தான் அங்கு இந்த ஏகாதிபத்திய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் நிலத்தை பெருமளவில் வாங்குகின்றன. எதிர்காலத்தில் ஆப்பிரிக்கா மேலும் பட்டினியால் சாகும். அமெரிக்கா, ஐரோப்பா எரிசக்தி உபரியில் மிதக்கும்.

      இந்த உயிரி எரிசக்தியால் கடுமையான விலை ஏற்றம் மட்டுமல்ல. உலக வெப்பநிலையும் கூடுதலாகும். உணவு தானியங்களின் பயிரிடும் பரப்பளவு குறையும். அனேகமாக உலகில் உணவு தானிய இருப்பு என்ற நிலை மறைந்துபோகும் அபாயமும் உள்ளது.

செவ்வாய், பிப்ரவரி 08, 2011

உணவு நெருக்கடி வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்-2




btËpL:

ghuâ ò¤jfhya«
421, m©zhrhiy,
njdh«ng£il, br‹id-600018
bjhiyngá-04424332424-
                 04424332924
Kjšgâ¥ò. #dtÇ-2010 



பெரும்  நிறுவனங்களின் லாபவேட்டைகள் :

   பன்னாட்டு நிறுவனங்கள் தங்களை நிலைப்படுத்திக்கொண்டு உணவு விலையை ஏற்ற ஆரம்பித்தன. இந்நிறுவனங்கள் விவசாய சந்தைகளையும், உணவு உற்பத்தியையும் இணைத்து விலை நிர்ணயிப்பதில் வெற்றிகண்டன.  தாராளமயம்   மற்றும்  தனியார்மயத்தால் உணவு சுழற்சியை உலகமயமாக்கியதாலும், உணவு உற்பத்தி கட்டமைப்பை மாற்றியதாலும். இவர்களுக்கு இது சாத்தியமானது. 

   2007ம் ஆண்டு கார்கில் (உயசபடைடள) கம்பெனி விவசாய வணிகத்தில் (ஹபசரெளநேளள) 36 சதம் லாபம் ஈட்டியுள்ளது. ஏடிஎம்(ஹனுஆ) 67 சதவீதமும், பங்கி (க்ஷரபேநள) 49 சதவீதமும் லாபமடைந்துள்ளன. 2008ம் ஆண்டு முதல் மூன்றுமாதத்தில் கார்கில் கம்பெனியின் மொத்த வருமானம் 86 சதம் உயர்ந்துள்ளன. ஏடிஎம்  நிறுவனத்தின் மொத்த லாபம் 55 சதமும், பங்கி கம்பெனியின் மொத்த லாபம் 189 சதமும் உயர்ந்துள்ளது. உரக் கம்பெனிகளில் 2007ல் பொட்டாஷ் கார்பொ ரஷன் 72 சதவீத லாபமும், மொசைக் (ஆடிளயஉள) 141 சதம் லாபமும் ஈட்டியுள்ளன.  2008 முதல் மூன்று மாதம் மட்டும் பொட்டாஷ் கார்பொரேஷன் நிகர வருமானம் 186 சதம் அதிகரித்துள்ளது. மொசைக் உர நிறுவனத்தின் நிகர வருமானம் 1200 சதம் அதிகரித்துள்ளது. விதைகள் மற்றும் உரங்கள் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் தயாரிக்கும் (ஹபசடிஉநஅஉயட) நிறுவனங்களான மன்சோட்டா(ஆயளேயவேடி) 44 சதமும், டூபான்ட் 19 சதமும், சைன்ஜென்டா(ளுலபேநவேய) 28 சதமும் லாபம் ஈட்டியுள்ளன.

   இந்த விலையேற்றங்கள் எதுவும் சிறுவிவசாயிகளுக்கு எந்தவிதமான பலனையும் தரவில்லை. காரணம் இன்றைய உணவு வர்த்தக சட்டத்தை இயற்றுவதும், சந்தையை கட்டுபடுத்துவதும், நிதி கட்டுப்பாட்டை மேற்கொள்வதும் இப்பெரும் நிறுவனங்கள்தான். எனவே இதன் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காது.

  மேலும்  விவசாயத்தை தொழில்மயமாக்குவது  (ஊயயீவையடளைவ ஐனேரளவசடைளைநன ஹபசஉரடவரசந) ஒருபுறம் நடைபெறுகிறது. இதன் தாக்கமாக உணவுப்பொருட்களைசர்வதேசமயமாக்கி செயல்படுத்தும் போக்கு விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகும்.   

   உதாரணமாக இன்றைய உணவு வகைகள் சமையல் ஆவதற்கு முன்பு  சராசரியாக 1300 மைல் பயணம் செய்கிறது. பழங்களையும், காய்கறிகளையும் குளிரவைத்து, மெழுகு தடவி, வர்ணம் பூசி, பிரகாசிக்கச் செய்து, நறுமணம் கமழும் முறையில் பெட்டிக்குள் அடைத்து கப்பலேற்றுவது வரை பணிகள் தொடர்கின்றன. இந்த நடவடிக்கை அனைத்தும் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளின் தரத்தை உயர்த்துவதில்லை. 

   மாறாக நீண்டதூர விநியோகத்திற்கும் அதன் அலமாரி வாழ்வுக்குமே இந்த நடவடிக்கை உதவுகிறது என்று டேனியல் இம்மோப் கூறுகின்றார். இந்த முதலாளித்துவ தொழில்மய விவசாயம், உற்பத்திக்கும், உண்பதற்கும் இடையிலான பணிகளுக்காக ஒரு கலோரி எரிசக்தி உணவை பெறுவதற்கு 10 கலோரி எரிசக்தியை செலவிடுகின்றது. எனவே, இந்த விலையேற்றம், வளர்ந்த நாடுகளும், பன்னாட்டு நிறுவனங்களும், இவர்களால் இவர்களுக்கு இவர்களே ஏழைநாட்டு மக்களிடமிருந்து சூறையாடிய லாப வேட்டையாகும்.

முதலில் ஏற்றுமதி  அடுத்து உணவு:

       எப்பொழுதெல்லாம் உணவு தானியங்கள் வணிகமய
மானதோ அப்பொழுதெல்லாம் பட்டினிச்சாவுகள்  அரங்கேறி யுள்ளன. இந்தியாவிற்கு பிரிட்டிஷ்காரர்கள் வந்ததையொட்டி ஏற்பட்ட போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புமுறைகள் புதிய வாய்ப்புகளை உருவாக்கின. உணவுப்பொருட்களின் ஏற்றுமதிக்காக இந்திய விவாசாயிகளை தங்களுடைய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யுமாறு நிர்பந்தித்தனர். 

    இதனால் உணவுப்பற்றாக்குறை ஏற்பட்டு1875 முதல் 1900வரை இந்தியாவின் 1.20 கோடி முதல் 2.90 கோடிவரை மக்கள் பட்டினியால் மடிந்தனர். இக்காலத்தில்தான் இந்தியாவின் தானிய ஏற்றுமதி 30 லட்சம் டன்னிலிருந்து 100 லட்சம் டன்னாக உயர்ந்தது. 1840ம் ஆண்டு அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைகிழங்கு பஞ்சமும், 1943ல் வங்கப்பஞ்சமும் இதே வகையைச் சேர்ந்ததுதான்.  

   தற்போது இந்தியாவில் உணவுதானிய பொருட்கள் வணிகமயமாகி விட்ட நிலைமையில்தான் தற்கொலை எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிச்சென்று கொண்டிருக்கிறது. அரிசி ஏற்றுமதி செய்த பிலிப்பைன்சும் சோளம் ஏற்றுமதி செய்த மெக்சிகோவும் தற்போது இறக்குமதிக்கு தள்ளப்பட்டுள்ளன.
இந்தியா, சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்சு, தாய்லாந்து, வியட்நாம், ஈரான், எகிப்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய 11 நாடுகள் உலகத் தானிய உற்பத்தியில் 40 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன. இந்நாடுகளில் கடந்த 13 ஆண்டுகளில் அதாவது, 1989-91 முதல் 2003-04வரை தானிய உற்பத்தி 1.1 சதவீதம் மட்டுமே ஆண்டுதோறும் வளர்ச்சி அடைந்துள்ளது.

    இதற்கு மாறாக  ஏற்றுமதிக்கான வணிகப்பயிர்கள்(நுஒயீடிசவ உசடியீள) உற்பத்தி இக்காலத்தில் 10 மடங்கு அதிகமாக இந்நாடுகளில் விளைந்துள்ளது. இதற்கான நிலப்பரப்பும், முதலீடும் திருப்பிவிடப்பட்டுள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக உணவு தானியத்தை வணிகப்பயிர்கள் கபளீகரம் செய்ய ஆரம்பித்துள்ளன. 

   பொருளதார அறிஞர் உஸ்த்தவ் பட்நாயக் கூறுவதுபோல் காலனியாதிக்க ஆட்சியின்போது இந்திய விவசாயிகள் இங்கிலாந்திற்கு கோதுமையை கொடுத்துவிட்டு தாங்கள் பட்டினியாக கிடந்தனர். நவீன இந்திய விவசாயிகள் மேலைநாட்டினருக்கு ஊறுகாய்க்கான வெள்ளரியையும், ரோசாப்பூவையும் பயிரிட்டு ஏற்றுமதி செய்துவிட்டு பற்றாக்குறை உணவை எடுத்துக்கொள் கின்றனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், பிப்ரவரி 07, 2011

உணவு நெருக்கடி :வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல்-1










வெளியீடு:
பாரதி புத்தகாலயம்
421, அண்ணாசாலை,
தேனாம்பேட்டை, சென்னை-600018
தொலைபேசி-04424332424-04424332924
முதல்பதிப்பு. ஜனவரி-20


       உணவு  பற்றாக்குறையால் மனித நாகரிகம் வீழ்ந்துவிடுமா? என்ற கேள்வியை 20 ஆண்டுகளுக்கு முன்னால் எழுப்பினால் நகைப்பார்கள். இன்றோ, அது நடந்துவிடுமோ என்ற அச்சத்துடன்தான் அனைவரும் எதிர்நோக்குகின்றனர். 2008-ஆம் ஆண்டு, உலகம்  பட்டினிச் சுனாமி என்ற பெரும் தாக்குதலாலேயே விழித்தெழுந்தது. இதுவரை இல்லாத நெருக்கடியும், விலையேற்றமும் உலகில் கொந்தளிப்பை உருவாக்கியது. 
    
   உணவு விலைப் பட்டியல் தயாரிக்கப்பட்ட 1845-ஆம் ஆண்டு முதல் கணக்கெடுத்தால் இப்படியொரு விலையேற்றத்தை உலகமக்கள் இதுவரை சந்தித்தது இல்லை. 2005 முதல் உணவு தானியங்களின் விலை 75 சதவீதம் உயர்ந்திருந்தாலும், அரிசி உட்பட சில அத்தியாவசிய பொருட்களின் விலை 150 சதம்வீதம் உயர்ந்துள்ளது. இதனால் உடனடியாக பட்டினி உலகத்திற்குள் 2008-ஆம் ஆண்டு மட்டும் 12.5 கோடி மக்கள் தள்ளப்பட்டனர். 2007-இல் 84.8 கோடியாக இருந்த பட்டினியாளர்கள் 2008-இல் 92.3 கோடியாக உயர்ந்தனர். மேலும் 100 கோடி மக்கள் ஊட்டச்சத்துக்குறைவால் (undernurished) பாதிக்கப்பட்டுள்ளனர். 
           
  இதன்விளைவு உலகில் உணவுக்கான சண்டைகள் (food wars) தீவிரமடைந்துள்ளன. ஆப்பிரிக்காவின் போஸ்ட்வானா முதல் பிலிப்பைன்ஸ் வரை 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் உணவுக் கலவரங்கள், சூறையாடல்கள் நடைபெற்றுள்ளன. மேலும் சில நாடுகளில் பெரும் எழுச்சியான ஆர்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.  சில சின்னஞ்சிறு நாடுகளில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டுள்ளத
        
  இந்த உணவு நெருக்கடிக்கும், விலையேற்றத்திற்கும் காரணம் என்ன? தேவைக்கும், அளிப்புக்கும்  இடையில் ஏற்பட்ட இடைவெளி முக்கிய காரணம் அல்ல. பெட்ரோல் விலை 40 டாலரிலிருந்து 150 டாலர் வரையில்  ஏறுவது , பிறகு 40 டாலர் வரை இறங்குவது என்பதை சந்தையில் அளிப்புக்கும், தேவைக்கும் உள்ள முரண்பாடு தீர்மானிப்பது இல்லை என்பது தெளிவாகும். 1950-ஆம் ஆண்டு உலக உணவுஉற்பத்தி 60.31 கோடி டன்களாகும். அன்றைய மக்கள் தொகை 200.54 கோடியாகும். 2007-ஆம் ஆண்டு உலக உணவு உற்பத்தி அளவு 207.60 கோடிடன்னாகும். இக்காலத்தில் மக்கள் தொகை 2.6 மடங்கு உயர்ந்துள்ளது. உணவு தானிய உற்பத்தி 3.3 மடங்கு உயர்ந்துள்ளது.
   
  சராசரியாக ஒவ்வொருவருக்கும் வருடத்திற்கு 314 கிலோ உணவு கிடைக்கவேண்டும். ஆனால் வளர்ந்த அமெரிக்காவில் 1042 கிலோ வீதம் கிடைக்கிறது ஆனால், ஆப்பிரிக்காவில் 162 கிலோதான் கிடைக்கிறது. எனவே இந்த 2007-2008-இல் ஏற்பட்ட நெருக்கடி என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட அதுவும் வளர்ந்த நாடுகளினால் உருவாக்கப்பட்ட நெருக்கடியாகும்.

கட்டமைப்பு  சீரமைப்பின் சீரழிவு: 
   
   கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னால், உலகவங்கியும், சர்வதேச நிதிநிறுவனமும் சுமார்  90 நாடுகள் மீது கட்டமைப்பு சீரமைப்பு (ளுவசரஉவரசயட ஹனதரளவஅநவே ) திட்டத்தை திணித்தன. இதை அமுலாக்கிய அனைத்து நாடுகளிலும் இந்த உணவு நெருக்கடி தற்போது தீவிரமாகியுள்ளது. இத்திட்டத்தின் தொடர்ச்சியாக உலகவர்த்தக அமைப்பு (றுகூடீ) 1995-இல் உருவாகி, வளரும் நாடுகளின் வணிகம் மற்றும் விவசாயத்தின் மீது தாக்குதல் தொடுத்தன. தொடர்ச்சியாக அடுத்த சில ஆண்டுகளில் விவசாய ஒப்பந்தம் (ஹழுசுநுநுஆநுசூகூ டீசூ ஹழுசுஐஊருடுகூருசுநு) உருவாக்கப்பட்டது.
      
    மேற்கண்ட திட்டங்களின் சாராம்சம், விவசாயத்தில் பொது முதலீடு குறைப்பு, தாராளமயம், தனியார்மயக் கொள்கை  ஆகியவை மூலமாக விவசாயப்பொருட்கள் வணிகத்திலும் உணவுச் சந்தையிலும், பன்னாட்டு நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டன; இதனால் விவசாயிகளுக்கு ஆதார விலை கிடைக்கும் வகையில் ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த வணிகக்கட்டுப்பாடுகள், உற்பத்திக் கட்டுப்பாடு, மற்றும் அரசு கொள்முதல் ஆகியவை விவசாய ஒப்பந்தம்  (ஹடீஹ) மூலம் தளர்த்தப்பட்டன
.      
     விவசாயத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளுக்கு தாராளமாக அனுமதி அளிக்கப்பட்டன. இதன் விளைவாக சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளின் சந்தைகள் ஒழித்துக்கட்டப்பட்டன. சந்தைகளே விவசாய உற்பத்தியை தீர்மானிக்கும் இடமாகவும் மாறியது. பெரும் நிறுவனங்கள் இந்த இடத்தை அபகரித்து கொள்ளைலாபங்களை ஈட்ட ஆரம்பித்தன. இந்த உலகமய பின்னணியில் ஒரு விவசாயி நிலைமாற்றம் குறித்து திருமிகு வந்தனாசிவா அவர்களின் கூற்று கவனிக்கத்தக்கது   
     
     ஒரு விவசாயி சமூக, பண்பாடு மற்றும் பொருளாதார ரீதியில் தான் ஒரு உற்பத்தியாளன் என்ற அடையாளத்தை இழந்து நிலபிரபுக்கள், வட்டிக்கடைகாரர் ஆகியோர் மூலமாக சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களிடம் விதை, உரம் ஆகிய இடுபொருட்களை வாங்கும் நுகர்வாளனாக மாறிவிட்டான் என்பதுதான் கட்டமைப்பு சீரமைப்பின் விளைவு.  இக்கொள்கைதான் நெருக்கடிக்கும், விலை உயர்வுக்கும் அடிப்படைக்காரணம்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...