2026 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் சீனா மற்றும் ரஷ்யாவின் அச்சுறுத்தல்களை தடுக்க
கிரீன்லாந்து கட்டுப்பாட்டை அமெரிக்கா எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மீண்டும் மீண்டும்
ட்ரம்ப் கொக்கரித்துக் கொண்டிருக்கிறார். கிரீன்லாந்தை சுற்றி சீன மற்றும் ரஷ்ய கப்பல்கள்
எல்லா இடங்களில் இருப்பதாக பிரச்சாரம் செய்கிறார் உண்மை என்ன? சீனாவால் கிரீன்லாந்துக்கு ஏதேனும் அச்சுறுத்தல் உள்ளதா?
கிரீன்லாந்தில்
தற்போது வரை சீனாவின் எந்த அதிகாரப்பூர்வமான நிறுவனங்களும் இல்லை. முதலீட்டு திட்டங்களும்
இல்லை. குடியிருப்பு நிறுவனங்களும் இல்லை. கிரீன்லாந்தில் இருக்கின்ற
கடல்உணவு நிறுவனங்களில் 30 சீனத் தொழிலாளர் மட்டுமே பணிபுரிகின்றனர்.
சீனாவிற்கும் கிரீன்லாந்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு வர்த்தகத்தில் மட்டுமே உள்ளது.
அதிலும் குறிப்பாக கடல் சார் பொருட்களின் வர்த்தகம் மட்டுமே ஆகும்.
2025 ஆம் ஆண்டில் சீனாவிற்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக
மதிப்பீடு 429 மில்லியன் டாலர் ஆகும். இதில் கிரீன்லாந்து சீனாவிற்கு
ஏற்றுமதி செய்த தொகை 420 மில்லியன் டாலர். குறிப்பாக ஆர்டிக்
இறால் , ஹாலிபட், காட், சாதாரண இறால் மற்றும் பிற கடல் உணவுகள் மட்டுமே இதில் அடங்கும். சீனாவில் இருந்து
கிரீன்லாந்துக்கு சீனா ஏற்றுமதி செய்தது ஒன்பது மில்லியன் டாலர் மட்டுமே. இவற்றில்
தினசரி மக்கள் நுகரும் பொருட்கள்தான்.
கிரீன்லாந்துக்கு
வருகை தரும் சீன சுற்றுலா பயணிகளும் அதிகம் இல்லை சீனாவில் இருந்து அங்கு சென்று சேர்வதும்
எளிதல்ல.
2024 ஆம் ஆண்டில் சுமார் 3500 சீன சுற்றுப்பயணிகள்
மட்டுமே கிரீன்லாந்துக்கு சென்றுள்ளனர்.
கிரீன்லாந்துக்கு
அருகில் உள்ள கடல் முழுவதும் சீன கப்பல் இருக்கிறது என்று இது கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது
என்று அப்பட்டமான பொய்யை அமெரிக்கா பிரச்சாரம் செய்கிறது. ஜனவரி 16 அன்று கிரீன்லாந்தில் உள்ள டென்மார்க் கிரீன்லாந்து
கூட்டுப் படையின் மேஜர் ஜெனரல் சோரன் ஆண்டர்சன் கிரீன்லாந்துக்கு அருகில் சீன
கப்பலோ, ரஷ்ய கப்பல்களோ எதுவும் இல்லை என்று தெளிவுபட கூறினார்.
கப்பல் போக்குவரத்து கண்காணிப்பு தரவுகளும் கிரீன்லாந்துக்கு
அருகில் சீன கப்பல்கள் எதுவும் இல்லை என்பதை வெளிப்படுத்தியது. சீனாவில் இருந்து உடனடி
அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லாரஸ் லோக்கே ராஸ்மோசன்
ஊடகங்களுக்கு பலமுறை தெளிவுபடுத்தி விட்டார். டென்மார்க்கின் நாடாளுமன்ற பாதுகாப்பு
குழுவின் தலைவர் ராஸ்மஸ் ஜார்லோவ் கிரீன்லாந்திருக்கு
எதிரான சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து பெரிய அச்சுறுத்தல் என்ற கூற்று மாயையானது
என்று விளக்கியுள்ளார்.
கொள்கை
அளவிலும் உண்மையின் அடிப்படையிலும் சீனா கிரிலாந்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாது.
இன்னும் தெளிவாக சொல்வதென்றால் கிரின்லாந்தில் விமான நிலைய விரிவாக்கம், சுரங்க திட்டங்களில்
சீன நிறுவனங்களின் பங்கேற்பை டேனிஷ் அரசாங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி முழுமையாக
தடுத்து விட்டது. மேலும் எதிர்காலத்தில் சீன முதலீட்டை அனுமதிக்க கூடாது என்பதற்கான
முடிவுகளை எடுத்து அமலாக்கி வருகிறார்கள். இந்த உண்மையை மறைத்து அமெரிக்கா அப்பட்டமாக
பொய்களை ஊதி வருகிறது.
ஆர்டிக்
பிரதேசத்தில் அமெரிக்கா சர்வதேச சட்டங்களை மற்றும் மற்றும் ஐநா சாசனங்களை மீறி இயற்கை
வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. சர்வதேச ஒப்பந்தங்களை அமெரிக்கா மதிக்க வேண்டும், ஆர்டிக் நாடுகளின் இறையாண்மை, அதன் உரிமைகளையும், அதிகார வரம்பையும், பழங்குடி பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தையும் சீனா என்றென்றைக்கும் மதிக்கும்
என்று அந்த நாட்டின் ஆர்டிக் கொள்கையில் தெளிவுபட விளக்கி உள்ளது. அதையே நடைமுறைப்படுத்தி
வருகிறது. இவை அனைத்தையும் அப்பட்டமாக மீறி வருவது அமெரிக்கா ஆகும்.
சீனாவின்
பார்வையில் ஆர்ட்டிகின் எதிர்காலம் புவிசார் அரசியல் போட்டிக்கான போர்க்களமாக இருக்கக்
கூடாது மாறாக காலநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சியில் சர்வதேச ஒத்துழைப்புக்
கான பகுதியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறது.
சீனா
கிரீன்லாந்தை அச்சுறுத்துகிறது என்ற கூற்றுக்கள் பொய் பித்தலாட்டம் ஆகும்.
அ.பாக்கியம்
தகவல் ஆதாரம்.
குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிக்கையில்
பெய் சி 22.01.26.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக