Pages

புதன், நவம்பர் 22, 2023

வேலை நாள் என்றால் என்ன?

 தொழிற்சங்கவாதிகள் மட்டும் இல்லாமல் ஐடி துறை, இதழியல் துறை, பயோடெக்னாலஜி என இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் உருவாகியுள்ள எந்த துறைகளில் எல்லாம் இளைஞர்கள் பணியாற்றுகிறார்களோ அவர்களெல்லாம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான கையேடு இந்த புத்தகம். 

எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்கள் எழுதியுள்ள வேலை நாள் எனும் புத்தகம். அவர் எழுதிய புத்தகங்களிலேயே சிறந்த ஒன்று என கூறலாம்.

வேலை நாள் என்றால் என்ன?


இந்த கேள்விக்கு பொதுவாக எத்தனை நாட்கள் ஒரு வாரத்தில் வேலை செய்கிறோம் என்று நாம் பதில் கூறுவோம் .ஐடி தொழிலாளி என்றால் திங்கள் முதல் வெள்ளி வரை என்றோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ,என்றால் அவர்கள்  வேலை செய்ய கூடிய நாட்களை குறிப்பிடுவார்கள்.. தூய்மை காவலர்கள் உள்ளிட்ட தொழிலாளர்கள் எங்களுக்கெல்லாம் நாளும் கிழமையும் கூலியும் கிடையாது கூப்பிட்டவுடன் ஓட வேண்டும் என்று கூறுவார்கள்.

இங்கு வேலை நாள் என்பது வேலை நேரம் தான். இந்த வேலை நேரம் தான் ஒரு தொழிலாளியின் வாழ்வையும் முதலாளியின் மூலதன  குவிப்பிற்கும் பாதை போட்டு தருகிறது .

இதை முறையாக கையாளும் போது தொழிலாளிக்கு பாதிப்புகளை பெருமளவு நம்மால் குறைக்க முடியும் அதுவே கையாலும் சக்தி முதலாளியிடம் செல்லும்போது தொழிலாளி வர்க்கத்தையே நாசம் செய்து விடுகிறது.

இந்த வேலை நாளுக்குள் தான் வேலை முறையும் வேலை செய்யக்கூடிய சூழலின் ஆரோக்கியம் என அனைத்தும் அடங்கி இருக்கிறது.

பொதுவாகவே சுரண்டலை புரிந்து கொள்ள இந்த வேலை நேரத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனவே மார்க்ஸ் ஏங்கெல்ஸ் எழுத்துக்களையும் மூலதனத்தையும் நாடுகிறோம்.

உலக தத்துவவாதிகள் இந்த உலகம் எப்படி இயங்குகிறது என்று பேசிக் கொண்டிருந்தபோது உலகம் எப்படி பட்டதாக மாற வேண்டும் என்று எழுதிய மார்க்ஸ் தனது மூலதனத்தில்  முதலாளிகளின் ஆதிக்கத்திற்கு அடிப்படையாக இருக்கக் கூடிய இந்த வேலை நாளையும் (நேரத்தை) உபரி மதிப்பையும்  மிகத் தெளிவாக பகுப்பாய்வு செய்து இந்த உலகின் கண் முன்னே கொடுத்துள்ளார்.

இயல்பில் அந்தப் புத்தகத்தை நேரடியாக புரிந்து கொள்வது மிக கடினமான ஒன்றுதான் அதற்கு கூட்டு வாசிப்பு அவசியம். அதற்கு முன்னதாக சில புத்தகங்களை நம் வாசித்து சில அடிப்படைகளை புரிந்து கொண்டு அதன் பிறகு முழுதனத்திற்குள் செல்வது எளிமையாக இருக்கும்.

ஆனால் புதிதாக சில அடிப்படைகள் தெரிந்து கொண்டவர்கள் தொழிலாளர்களை இந்த முதலாளிகள் எப்படி சுரண்டு கொழுத்து போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளவும், தொழிலாளர்கள் மீதான சுரண்டல் அதற்கு எதிரான போராட்டங்கள் வேலை நேரம் குறைப்பின் வரலாறு சட்ட பாதுகாப்புக்கான முதல் அடி இப்படியெல்லாம் சட்டங்கள் பரிணமித்து வந்தன இந்தியாவின் நிலை என்ன? இந்தியாவில் தொழிலாளர் சட்டங்களுக்கு நீர்ந்துள்ள கதி என்ன? நவீன தாராளமயம் மற்றும் இன்றைய சூழலிலா இந்தியா என வரிசையாக புரிந்து கொள்ள எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்களின் இந்த வேலை நாள் புத்தகம் நன்றாக கை கொடுக்கிறது.

எட்டு மணி நேர வேலை குறித்தான வரலாற்றை அறிந்து கொள்ள நிறைய புத்தகங்கள் உள்ளன. ஆனால் வேலை நாளுக்கு பின்னே உள்ள வரலாற்றை வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் நாம் புரிந்து கொள்வதற்கான புத்தகங்கள் மிக மிக குறைவுதான். இந்தக் குறையை எழுத்தாளர் அ.பாக்கியம் அவர்களின் இந்த புத்தகம் நிவர்த்தி செய்யும் இடத்தில் இருக்கும் என்று நம்புகிறோம்.

ஏனென்றால் இந்த வேலை நாள் குறித்த வரலாற்றில் குழந்தை தொழிலாளர்கள் மீதான  மனசாட்சியே இல்லாத கொடூரமான சுரண்டல் நிலை துவங்கி, வேலை நேரத்திற்கான உரிமை கேட்ட போராட்டங்களின் வரலாறு, தொழிலாளர் உரிமைக்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்ட வரலாற்று தகவல்கள் இந்திய முதலாளிகள் பிரிட்டிஷ் முதலாளிகள் உடைய எவ்வாறு கொடூரமாக இருந்தார்கள் என அனைத்தையும் எளிமையாகவும் வேகமாகவும் வாசித்துக் கொள்ளக்கூடிய 150 பக்கத்தில் கொடுத்திருப்பது சாதாரண விஷயம் அல்ல.

 இந்தப் புத்தகத்தை ஆழ்ந்து புரிந்து கொள்வதற்கு முதல் அத்தியாயம் மிக அவசியமான ஒன்று. நீங்கள் அடுத்தடுத்த அத்தியாயம் செல்லும் போது முதல் அத்தியாயத்தை மீண்டும் மீண்டும் ஒரு பார்வை பார்க்கும் வகையில் இருக்கும். இது வரவேற்க தகுந்தது.

குழந்தை தொழிலாளர் மீதான சுண்டல் குறித்து வரலாற்றுத் தகவல்களை படிக்கும்போது எந்த ஒரு மனிதனுக்கும் நெஞ்சம் குமுறி விடும். சிமினியை சுத்தம் செய்வதற்கு நான்கு வயது குழந்தைகளை பயன்படுத்திய கொடுமை இந்த முதலாளித்துவத்தின் அகோரத்தை கண்முன்னே காட்டுகிறது. தமிழ்நாட்டின் கீழ் தஞ்சையில் எப்படி நம் குழந்தைகள் மாடுகளை மேய்க்கவும் பண்ணை அடிமையாகவும் இருந்தாரோ அதுபோன்ற உலகம் முழுவதும் இந்த முதலாளித்துவ சமுதாயத்தில் நில உடமை சமுதாயத்தில் நிலவியுள்ளது.

for link :

வேலை நாள் - புத்தக அறிமுகம் - Tamil Marx

tamilmarx.org/2023/11/20/%E0…

Bakkiam  

#article

#tamilmarx #workers #labourer

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...