Pages

ஞாயிறு, ஜனவரி 15, 2023

கவுண்டமணி கம்பெனியை தோற்கடிக்கும் ஒன்றிய அரசு.

 





2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம்  3 டிரில்லியன் டாலராக இருக்கும். அடுத்த ஏழு ஆண்டுகளில் 7 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று ஒன்றிய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி.ஆனந்த நாகேஸ்வரன் தெரிவித்தார்.

2024-25 ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக மாறும் என்று 2019 ல், பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மத்திய அமைச்சர்கள் பலரும் இதையே பேசினார்கள்

இந்த ஆண்டின் தொடக்கத்தில், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் டெப்ராய், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2047-ல் 20 டிரில்லியன் டாலராக இருக்கும் என்று கூறினார்.

கடந்த ஆண்டு டிசம்பரில், வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 2025ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறுவது மட்டுமல்லாமல், குறிப்பிடத்தக்க உற்பத்தி மையமாகவும் மாறும் என்று கூறினார்.

2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்று பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பரில், மத்திய எண்ணெய் மந்திரி ஹர்தீப் சிங் பூரி, 2030 ஆம் ஆண்டில் இந்தியா 10 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்றார்.  2047 இல் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று கூறினார்.

மோடியின் மந்திரிகள் பேசுவதை கடந்து அதிகாரிகளும் அளந்து விட தொடங்குகிறார்கள். அம்பானி அதானிகளுக்கு வேண்டுமானால் இது சாத்தியமாகலாம்.

இந்தியாவில் வேலையின்மை வறுமை பட்டினி சாவு வாழ்விட இழப்பு என அனைத்தும் டங்குவார் அறுந்து போய் கிடக்கையில் மோடியின் அமைச்சர்கள் அதிகாரிகள் கதை அளந்து கொண்டு இருக்கிறார்கள்.
அ.பாக்கியம்
https://thewire.in/economy/five-trillion-dollar-economy-ind

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...