Pages

வியாழன், ஆகஸ்ட் 30, 2018

மோடியின் பயனற்ற பணமதிப்பு நீக்கம்



                பலகோடி மக்களை படுபாதாளத்தில் தள்ளி நுற்றுக்கும் மேற்பட்ட மக்களை வரிசையில் நிற்கவைத்து பழிவாங்கிய மோடியின் பணமதிப்பு நீக்கம் எந்தவித பயணும் தரவில்லை என்று ரிசர்வ் பாங்க் ஆப் இந்தியாவின் வருடாந்திர அறிக்கை(ஆக.29) தெரிவித்துள்ளது.
2016 ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி மோடி இரவு எட்டுமணிக்கு 1000 ருபாய் 500 ருபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார், கறுப்பு பண்ம் பிடிபடும், கள்ளப்பணம் மறையும், ஊழல் அழியும், தீவிரவாதம் ஒழியும் என்று மார்தட்டினார் மோடி. 50 நாட்களில் இது நடக்கவில்லை என்றால் என்னை நடுரோட்டில் நிற்கவைத்து கேளுங்கள் என்றார், இதில் எதுவும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல முன்பைவிட அதிகமாகி உள்ளது.
பணமதிப்பு நீக்கம் அறிவிப்பின்போது புழக்கத்தில் இருந்த இந்த நோட்டுகளில் மதிப்பு 15.44 லட்சம் கோடிகள் ஆகும். இதுவரை ரிசர்வ் பாங்க ஆப் இந்தியாவிற்கு திரும்பி வந்த்து 15.31 லட்சம் கோடிகள் ஆகும். இது மோடி அரசு எதிர்பார்த்த்தைவிட 10 லட்சம் கோடிகள் அதிமாகும்.  அதாவது 99 சதவிகிதம் பணங்கள் திரும்பிவந்துவிட்டது.
நோட்டுகளின் புழக்க மதிப்பு ஏற்கனவே இருந்த்தைவிட 37.7 சதம் அதிகமாகி 2018 மார்ச் கணக்குபடி 18.03 லட்சம் கோடியாக உயந்துவிட்டது. அரசு எதிர்பார்த்த அளவிற்கு மின்ன்னு பண பரிமாற்றம் உயரவில்லை.
  • ·         100 க்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
  • ·         தீவிரவாதம் குறையவில்லை அதிகமாகி உள்ளது,
  • ·         ஊழல் குறையவிலை நோட்டுக்கள் அச்சடிப்பதிலும்    பரிமாற்றத்திலும்    அதிமாகி உள்ளது,
  • ·         கள்ளநோட்டுகள் 7,62,072 மட்டுமே வங்கியில் கண்டறியப்பட்டுள்ளது, இது 20,4 சதம் மட்டுமே அதிமாகும்.
  • ·         2018 நிதியாண்டு ஏப்ரல் ஜுன் மாத காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 5,7 சதமாக குறைந்துள்ளது. கடந்த முன்றாண்டுகளில் இதுவே குறைவானதாகும்.
  • ·         நோட்டுக்கள் அச்சடிக்க 2015/16ம் ஆண்டைவிட 2016/17 ல் இரட்டிப்பாகி உள்ளது, அதாவது ரு 3420 கோடியிலிருந்த ரு 7965 கோடியாக உயர்ந்துள்ளது. இது வங்கிக்கு திரும்பாத ரு 8,900 கோடியைவிட சற்று குறைவானதாகும்.
  • ·         இக்காலத்தில் ஆர்பிஐ வருமானம் 23.56 சதம் குறைந்து செலவுகள் 107.84 சதம் அதிகரித்துள்ளது.
  • ·         பணமதிப்பு நீக்கத்திற்கு பிறகு பொதுத்துறை வங்க்கிகளில் வாராக்கடன்  பலமடங்கு அதிகமாகி உள்ளது. முதலீடு குறைந்துள்ளது,
  • ·         2017 ஜனவரி ஏப்ரல் மாத்த்தில் 15 லட்சம் பேர்கள் உடனடியாக வேலை இழந்தனர்.
  • ·         மோடி ஆட்சியில் பணமதிப்பு நீக்கம் படுதோல்வி அடைந்த்து மட்டுமல்ல இன்றளவும் இந்திய மக்களை பாடாய்படுத்தி வருகிறது.
  • அ.பாக்கியம்
  •  


சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...