Pages

திங்கள், மே 21, 2018

போலி தேசபக்தர்களின் துப்பாக்கி முனையில் மாணவர்கள்:



  •    போலிகள் தங்கள் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அதீத நிஜம்போல் நடிப்பரர்கள், அப்படித்தான் இப்போது பாஜக கட்சியும் ஆட்சியும் நடந்துகொள்கிறது, மத்திய பிரதேசத்தில் பள்ளிக்கூடங்களுக்கு அந்த மாநில அரசு புதிய உத்திரவை மே 15 அன்று பிறப்பித்துள்ளது
  • ஆசிரியர்கள் வருகைப்பதிவேடு அழைக்கிறபோது மாணவர்கள் ஜெய் இந்த் என்றுதான் பதில்சொல்ல வேண்டும் என அந்த உத்திரவு கூறுகின்றது,  மாணவர்கள் மத்தியில் தேசபற்று படிப்படியாக ஆழமாக வளர்க்க இந்த உத்திரவாம். அந்த மாநிலத்தில் உள்ள 1.22 லட்சம் பள்ளிக்கூடங்களும் இதை கடைபிடிக்கவேண்டுமாம்
  • கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துவதைவிட தங்களின் போலி தேசபக்தியை நிருபிக்க பாடுபடுகின்றனர், கடந்த ஆறு ஆண்டுகள் போதுமான நிதியை ஒதுக்கியும்  94 சதமான பள்ளிகள் அடிப்படை கட்டுமான வசதிகளை ஏற்படுத்தவில்லை, பணங்கள் பதுக்கப்பட்டதை மறைக்கவும் இவர்களுக்கு ஜெய் இந்த் தேவைப்படுகிறது, 


வியாழன், மே 17, 2018

இதுவும் நடக்கும்?



கர்நாடக தேர்தல் முடிந்து வழக்கபோல் பாஜக தனது வித்தைகளை காட்ட ஆரம்பித்து விட்டது. வகுப்புவாத அரசியல் ஊழல் பேர்வழிகளையும், கிரிமினல் குற்றவாளிகளையும், கார்போரேட் கோடீஸ்வரர்களையும் ஊக்குவிக்கும் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவுகள்  மேலும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது,

           தேர்ந்தெடுக்கப்பட்ட 221 சட்டமன்ற உறுப்பினர்களில் 77பேர்கள்(35%) கிரிமினல் குற்றவாளிகள். அதிலும் 54 பேர்கள் கொலை மற்றும் கொலைமுயற்சி என கடுமையான குற்றப்பின்ன்னி கொண்டவர்கள். 2008ம் ஆண்டு இந்த குற்றப்பின்ன்னி 24சதமாக இருந்த்து, இதிலும் வழக்கபோல் பாஜகதான் முன்னனி. மொத்தமுள்ள 77 போர்களில் 41பேர்கள் பாஜகவினர். 23 பேர்கள் காங்கிரஸ், 11பேர்கள் மஜக ஆகும்,

              221 சட்டமன்ற உறுப்பினர்களில் 215பேர்கள் கோடீஸ்வரர்கள். இதிலு 50சதத்தினர் 10கோடிக்குமேல் சொத்துள்ளவர்கள். (இது வேறு வழியில்லாமல் தெரிவித்த்து). அதாவது 93 சதம்விகிதம் சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வர்ர்கள்,  2008ம் ஆண்டு 63 சதவீத சட்டமன்ற உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...