Pages

திங்கள், ஏப்ரல் 30, 2018

ஹே மார்க்கெட்: தூக்குமேடைக்காட்சிகள்


                  1886-மே மாதம் 4-ம் தேதி சிக்காகோவின் ஹேமார்கெட்டில் நடைபெற்ற சம்பவத்திற்கு 31 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் 8 பேருக்கு தூக்குதண்டனை வழங்கப்பட்டது. இவர்களில் சாமுவேல், பெல்டன், ஷவாஸ் ஆகியோருக்கு கவர்னர் மன்னிப்பு வழங்கினார். லூயிலிங்க்ஞு தூக்குதண்டனைக்கு முதல்நாள் சிறைச்சாலையில் டைனமைட் குண்டுவெடித்து இறந்தார். மற்ற நால்வரும் ஆல்பர்ட் பார்சன்ஸ், ஆல்காட் ஸ்பைஸ், ஃபிஷர், எங்கேல் ஆகிய நால்வரும் 1887- நவம்பர் மாதம் 11-ம் தூக்கிலிடப்பட்டனர். 

      சிக்காகோவின் குக் கவுண்டி நீதிமன்றத்திற்கும் சிறைச்சாலைக்கும் இடையில் உள்ள டியர்பார்சன் தெருவின் நடைபாதையில் தூக்குமேடை அமைக்க்கப்பட்டது. மறுநாள் நால்வருக்கும் தூக்குதண்டனை. முதல்நாள் இரவு தூக்கும் வருமா? அவர்கள் நன்கு உறங்கினார்கள். காரணம் அந்த மரணத்தை மகத்தானது என நினைத்தார்கள்.ஆல்பர்ட் பார்சன் மட்டும் தனக்கு மிகவும் பிடித்தமான பாட்டை பாடிக்கொண்டிருந்தார். காலை எழுந்தவுடன் அவர்கள் விரும்பிய உணவு வழங்கப்பட்டது. 

              காவலர்கள் மதுவேண்டுமா? என்று கேட்டனர் பார்சன்ஸ் “இல்லை நான் தெளிவோடு செல்ல விரும்புகிறேன். மிதமான குடிப்பழக்கம் உள்ளவர்கள்  இரக்கத்தால் ஒரு துளி கண்ணீர் சிந்தலாம்” என்றார். தூக்கிலிடும்போது கண்ணீர்வரக்கூடாது எனபதில பார்சன்ஸ் உறுதியாக இருந்தார்.  காபியும் பிஸ்கெட்டும் கேட்டார். அவைகொடுக்கப்பட்டது. குடித்து முடித்தவுடன் பார்சன் “இப்போது நன்றாக  உணர்கிறேன் நாம் விஷ்யத்தை முடித்துவிடலாம்“ என்று  தூக்கிற்கு தயாராக சென்றனர். காலை 11.30 மணிக்கு bஷ்ரிஃப் மாட்சன். ஜெயிலர் ஃபோல்ஸ், குக்கவுண்டி மருத்துவர்,  மற்றும் பல காவலர்கள் முன்னிலையில் நால்வரும் அழைத்துவரப்பட்டனர். அங்கு மரணதண்டனை உத்திரவு வாசிக்கப்பட்டு தூக்கு தண்டனையை பார்க்க  அனுமதிக்கப்பட்ட  200 பேர்கள் கூடியிருந்த தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.  அந்தக் காட்சியை நேரில் பார்த்த நிருபர் இவ்வாறு எழதிஉள்ளார்.



          “எவ்வித கவலையுமின்றி  நாள்வரும் தங்கள்ல இடத்தில் நின்றார்கள்.கழுத்தில் மாட்டப்பட்ட கயிறை சரிசெய்ய ஃபிஷ்ர் உதவினார். ஸ்பைசின் கயிறு இறுக்கமாக இருந்தது.அது சற்று வசதியாக சரிசெய்யப்பட்டவுடன் அவர் புன்னகையுடன் “நன்றி“ என்றார். பின்னர் ஸ்பைஸ் பேசினார் “இன்று நெறிக்கும் எங்கள் குரல்களைவிட எங்கள் மவுனம் மிகவும் சக்திமிக்கதாக மாறும் காலம் ஒன்று வரும்” என்று உரக்க கூறினார். இதுதான் என் வாழ்வின் மகிழ்ச்சியான தருணம் என்றார் எங்கேல். பார்சன்ஸ் கடைசியாக  பேசினார் “ஓ! அமெரிக்கர்களே! நான் பேச அனுமதிக்கப்படுவேனா? ஃbஷ்ரிப் மாடிசன் என்னை பேசவிடுங்கள்! மக்களின் குரல் கேட்கட்டும்!” என்றார். பின்னர் மதியத்திற்கு சில நிமிடங்கள் முன்னதாக அடிப்பலகை உருவப்பட்டது.

             தங்கள் மரணத்தைப்பற்றி கிஞ்சிற்றும் அஞ்சாமல் சிரித்த முகத்துடன் பெருமிதத்துடன் எதிர்கொண்டனர்.அடுத்த நாள் அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. நவம்பர் 13-அன்று தொழிலாளர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று தியாகிகளின் உடல்களை பெற்றுக்கொண்டனர். இறுதிநிகழ்வில் 5 லட்சம் மக்கள் அணிதிரண்டனர். தியாகிகளின் 5 உடல்களையும் அடக்கம் செய்யும் அவர்களின் வழக்கறிஞர் கேப்டன் பிளாக்கின் இவ்வாறு பேசினார் 

இங்கே நாம் குற்றவாளிகளின் உடல்ளின் அருகே நிற்கவில்லை. அவர்கள்  மரணத்தில் அவமானப்பட எதுவுமில்லை. அவர்கள் சுதந்திரத்திற்காக , சிந்தனையில், செயலில் கட்டுப்படுத்தப்படாத பேச்சுரிமைக்காக, மனிதாபிமானத்திற்காக உயிர் நீத்தார்கள்.அவர்களின் நண்பர்களாக இருந்ததில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்று குறிப்பிட்டார்.

             (வில்லியம் அடல்மன் மேதின தியாகிகளின் மகத்தான வரலாறு புத்தகத்திலிருந்து)

               தொழிலாளர் வர்க்கம் இன்று அடைந்துள்ள அனைத்து வசதிகளும் வரலாறு முழுவதும் வழிந்தோடிய இரத்தாலும், எண்ணற்றவர்களின் உயிரிழப்புகளாலும், உடமைகள் இழப்புகளாலும் பெறப்பட்டவையே. ஆளுவோர்களும் முதலளாளித்துவ சிந்தனையுள்ள கட்சிகளும் தொழிலாளர்களை வாக்குவங்கியாக பயன்படுத்துகிறார்கள். பல குழுக்கள்  தொழிற்சங்கத்தை தொழிலாக மாற்றிவருகின்றனர். சீர்திருத்த சிந்தனையில் சிக்கித்தவிக்கின்றனர். பெற்ற சலுகைகளை பாதுகாக்கவும் சமுக மாற்றம் காணவும் தொழிலாளர்களை அணிதிரட்டவேண்டும் .வர்க்கப் பாசறையாக பரிணமிக்க வேண்டும்.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...