Pages

வியாழன், மார்ச் 22, 2018

மோ(இ)டி அரசு?

.
       

          மோடி அரசு மேலும்  மேலும் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டே போகிறது. அவர்களின் சாதனைகள் மக்களுக்கு வேதனைகளை அளித்துவருகின்றன. ஆட்சிக்கு வந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக தொடர்ந்து அழித்தல் தொழில்கள் சாதனை படைத்து வருகிறார்.

இந்தியாவில்  அழகுபடுத்தல் என்ற பெயரில்

               ஒரு நாளைக்கு 147 வீடுகள் இடிக்கப்படுகிறது அல்லது ஒரு மணி நேரத்திற்கு 6 வீடுகள் இடிக்கப்படுகின்றன. 2017-ம் ஆண்டு கணக்குபடி தினசரி 700 மக்கள்  அப்புறப்படுத்தப் படுகிறார்கள். 2017-ல் மத்திய மாநில அரசுகளால் 53,700 வீடுகள் இடித்து தள்ளப் பட்டுள்ளன. 2 கோடியே 60 லட்சம் மக்கள் கிராமபுறத்திலும்,நகர்புறத்திலும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப் பட்டுள்ளனர். 

                41 மணி நேரத்திற்கு ஒரு குடிசைபகுதி காலிசெய்யப் படுகிறது. 2017-ம் மொத்தம் 213 குடிசை பகுதிகள் அப்புறப்படுத்தப் பட்டுள்ளன. இதில் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 99 பகுதிகளும், வளர்ச்சித்திட்டம், சாலை விரிவாக்கம், திட்டத்தின் கீழ் 53 பகுதிகுளும், வனப்பகுதி திட்டத்தின் கீழ் 30 பகுதிகளும் பேரிடர் பாதிப்பு திட்டத்தின் கீழ் 16 பகுதிகளும் , எந்தக்காரணமும்  இல்லாமல் 15 பகுதிளும் வலுக்கட்டாயமா மாற்று இடமின்றி காலி செய்யப்பட்ள்ளன. 

                 டெல்லியில் மேம்பாலத்தின் கீழ்பகுதியை அழகுபடுத்திட 1500 பேர்களை கடந்த ஆகஸ்ட்- நவம்பர் மாதத்தில் வீடற்றறவர்களாக் மாற்றினர். இதைவிட கொடுமையானது  இந்தூரில் கழிப்பிட வசதி இல்லை என்பதற்காக 700 வீடுகள் இடிக்கப்பட்டு அம்மக்கள் துரத்தப்பட்டார்கள். அஸ்ஸாமில் வனச்சரனாலயம் என அறிவித்து 1000 குடும்பங்களின் வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. 

                      டெல்லியில் கத்புட்லி காலனியில் இடிக்கப்பட்ட 2000 வீடுகளில் 754 குடும்பங்களுக்கு வீடுகொடுக்கப் படவில்லை. மும்பையில் டான்சா பைப்லைன் திட்டத்திற்காக இடிக்கப்பட்ட 16717 வீடுகளில் 7674 குடும்பங்கள் மட்டுமே மாற்று இடம் பெற தகுதியானவர்கள் என்று அறிவித்து மற்றவர்கள் வீடற்றவர்களாக விட்டுவிட்டனர். 


                      கல்கத்தாவில் புத்தக காட்சி நிலையம் அமைக்க 1200 வீடுகளை காலி செய்து, அதில் 123 குடும்பங்களுக்கு மட்மே மாற்று இடம் பெற தகுதியானவர்கள் என்று அறிவித்து விட்டனர். மத்திய மாநில அரசுகளால் இடிக்கப்ட்ட வீடுகளில் 60 சதம் குடும்பங்பளுக்கு வீடுகள் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கின்றனர்.
 Housing and Land Rights Networks india

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...