Pages

ஞாயிறு, ஜனவரி 14, 2018

வளர்ச்சியின் பெயரால் வன்முறை ............... புத்தகத்தைப் பற்றி...........




வசந்தகோகிலன்


     ட்டம்,நீதி, நிர்வாகம், அதிகாரம் எல்லாம் எளியவர்க ளைத்தான் ஏறி மிதிக்கும்; பணம் படைத்த வர்க ளிடம் பல்லிளித்து சேவகம் புரியும். இது நடைமுறை எதார்த்தம். காலம்தோறும் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் ஏழை, எளியவர்கள் மீது அதிகார வன்முறை பிரயோகிக்கப்ப டுகிறது. அவர்கள் காலம் காலமாக குடியிருந்த வாழ்விடங்களில் இருந்து, வயிற்றைக் கிழித்து சிசுவை வெளியே எடுத்து வீசி எறிவதைப் போல் தொலை தூரத்திற்கு தூக்கி எறியப்படுகிறார்கள். குடிசைப் பகுதி மக்களை அப்புறப்படுத்துவது என்பது ஆட்சியாளர்களின், அதிகார வர்க்கத்தின் குஷியான விஷயமாகி விட்டது. இந்த அதிகார வன்முறை எல்லாம் வளர்ச்சியின் பெயரால் நடைபெறுகிறது.

       ழைகளின் படிப்பு, வேலை, தொழில் வாய்ப்பு பறிக்கப்படுகிறது. அத்துடன் பழக்கமான சூழலும் பறிக்கப்படுகிறது. இதைவிட படுபாதகமான செயல் வேறு ஏதுமில்லை. சூழல் என்பது அவர்களின் உணர்வோடு சம்பந்தப்பட்டது. அந்த உணர்வில் அமிலத்தை வீசுகின்றனர் ஆட்சியாளர்கள். குச்சு வீட்டில் இருந்து மச்சு வீட்டிற்கு மாற்றும் நடவடிக்கையா இது? சத்தியமாக இல்லை. மச்சு வீடு என்று ஏமாற்றும் நடவடிக்கை. குச்சு வீட்டில் இருந்தபோது கிடைத்த வாழ்வாதாரத்தை பறித்து அதைவிட மோசமான வாழ்விடத்துக்கு சென்னை மக்கள் நகர்த்தப்படுகிறார்கள். அகற்றப்படும் மக்களுக்கு சில ஆயிரங்கள் நஷ்டஈடு தரலாம். அந்த நஷ்டஈடும், நாய் வாலை அறுத்து நாய்க்கு சூப்பு வைத்த கதைதான். இந்த நஷ்டஈடு, காலம் காலமாக அவன் வசித்த சூழலை விட்டுப் பிரியும் மன வேதனைக்கு மருந்தாகுமா? அவர்களுடைய சென்டிமென்ட் முன்பு இவையெல்லாம் செல்லாக் காசுகள் அல்லவா?

    லைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் குடிசைப்பகுதி மக்களை சென்னையின் பூர்வகுடிகள் என்றே சொல்ல வேண்டும். அந்த பூர்வகுடிமக்களின் குடியிருப்பு உரிமை பறிப்பை அலசுகிறது இந்த நூல். இதற்காக சிஏஜி அறிக்கை உள்பட பல்வேறு ஆதாரங்கள் இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ளது. குடிசைப் பகுதி மக்கள் வெளியேற்றப்படுவதின் பின்னணி, வளர்ச்சி என்பது உண்மையா? உண்மையென்றால் அது யாருக்கான வளர்ச்சி? உண்மையான ஆக்கிரமிப்பாளர்கள் யார்? ஏரிகளை ஆக்கிரமித்து கல்லூரிகள், வணிக வளாகங்கள் கட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? என்பதையெல்லாம் விரிவாக அலசுகிறது இந்த நூல்.

    ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆகிவிட்டால் ஒப்பப்பர் ஆகி விடுவார் என்ற எண்ணத்திற்கு வலு சேர்க்கிறது வளர்ச்சியின் பெயரால் வன்முறை என்ற இந்த நூல்.

ஆசிரியரை பற்றி
        நூலாசிரியர் அ.பாக்கியம் சமூக, அரசியல் செயற்பாட்டாளர். குடிநீர், கழிவுநீர், போக்குவரத்து, குடிசை பகுதி மக்களின் பிரச்சனைகள், சூழலியல், கார்பரேட் மருத்துவ களவாணித்தனம், காவிய அரசியலின் கயமத்தனம் என பல களங்களில் கட்டுரைகள் எழுதி உள்ளார். வேலைதேடி, உலக இளைஞர் எழுச்சியும்-இயக்கமும், உணவுநெருக்கடி:வளர்ந்த நாடுகளின் புதிய சுரண்டல், கழக ஆட்சிகால் களவாடப்பட்ட பள்ளிக்கரணை நன்னீர் சதுப்பு நிலம், முகமது அலி ஒரு கருப்பின போராளி,பசு பாதுகாப்பு : பாசிச அணிதிரட்டல், உள்பட சில நூல்களை எழுதியுள்ளார். தொலைக்காட்சி விவாத மேடைகளில் வெற்றுக்கூச்சல்கள், காட்டுக் கத்தல்களுக்கு இடையே அமைதியாக ஆணித்தரமாக பிரச்சனைகளுக்கு தீர்வுகாண கருத்துக்களை முன்வைப்பவர்.
bakkiamblogspot.com                                         bakkiam1960@gmail.com

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...