Pages

புதன், மே 17, 2017

மோடியின் மூன்று ஆண்டுகள்-2


       இந்திய வரலாற்றில் இந்த அளவில் கார்பொரேட் கம்பெனிகள் வேகமாக வளர்ந்துமில்லை மக்கள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டதும் இல்லை. இத்தனை சாதனைகளும் சங்பரிவாரம் பாஜக ஆட்சியில்தான் நடைபெறும். 

      2014-15-ல் மோடி ஆட்சிபீடம் ஏறும்போது முற்றும் துறந்த முனிவர் பாபா ராம்தேவின் சொத்த மதிப்பு 2007கோடியிலிருந்து 2015-16-ல் 5000 கோடியாக உயர்ந்து 2016-17-ல் 10,561 கோடியை எட்டியுள்ளது.  

           வேகமாக  விற்பனையாகும் நுகர்பொருள் வணிகத்தில் 5வது இடத்தை பிடித்துள்ளார். தேசி நெய் விற்பனையில் 1467 கோடி, பற்பசை 940 , தலைக்கு தேய்க்கும் எண்ணெய் 825, குளியல் சோப் 574, கடுகு எண்ணெய் 522 , ஆட்டா 407, பிஸ்கட் 380, தேன் 385, துணிசோப் 325, தோல் மருந்து 231, முகம்கழுவும் ஆயில் 228 கோடிகள் , என 20க்கும் மேற்பட்ட தொழில் சாம்ராஜ்ஜியத்தை இந்த மூன்று ஆண்டுகளில் கட்டமைத்துள்ளார். 

            இந்தியாவின் மொத்த ஷாம்பூ வணிகத்தில் 15 சதமும், தேன் விற்பனையில் 50 சதமும், பாத்திரம் கழுவும் சோப்விற்பனையில் 35 சதத்தையும், பற்பசையில் 14 சதத்தையும் முகம்கழுவும் ஆயில் விற்பனையில் 15 சதம் பிடித்துள்ளார். இவை மந்திரமல்ல தந்திரமல்ல மோடி வித்தையால் மட்டுமே சாத்தியம்.

திங்கள், மே 15, 2017

மோடியின் மூன்றாண்டு- –மணித்துளி வளர்ச்சி?


      மோடியின் மூன்றாண்டு வளர்ச்சியை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். வளர்ச்சி அவர்களின் கார்பொரேட் ஆதரவாளர்களுக்கு பாதிப்பு மக்களுக்கு.பாதிப்புகளின் வளர்ச்சி வேகம் அதைவிட வேகமாக உள்ளது. இதோ பெண்கள் பாதுகாப்பு பற்றி தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் 2015-ன் நிலை பற்றி குறிப்பிட்டுள்ளது.

   நிர்பயா டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பிறகு மத்திய அரசும் மோடியும் பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய்கிழிய பேசினார்கள். ஆனால் நிலைமை எதுவும் மாறவில்லை. க்ஷபண்கள் மீதான தாக்குதல் இங்கொன்று அங்கொன்று என்பதில்லை எங்கெங்கு கானிணும் மணிக்கணக்கில் நடைபெறுகிறது. 

   ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதாவது 15.2நிமிடங்களுக்கு ஒருபெண் பலியாகிறாள்.2015- 34,651 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையங்கள் கயவர்கள் நிலையமாக மாறிவருகிறது. 4நாளைக்கு ஒரு பெண் காவல்நிலைய பாதுகாப்பில் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகிறாள்.2015-ல் 95 பெண்கள் காவல் நிலையத்தில் சூறையாடப் பட்டுள்ளனனர்.

   இக்காலத்தில் கூட்டு வன்புணர்வு பல்கிபெருகி வருகிறது. 2015-ல் 2113 பெண்கள் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் ஒரு வன்புணர்விற்கான முயற்சி நடைபெறுகிறது. 2015-ல் 4437 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு 19 மணிநேரத்திற்கும் 6வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறாள்.2015-ல் 451 குழந்தைகள் பலியாகி உள்ளன. 

    பதியப்படும் வழக்குகளில் 86 சதம் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளன. தண்டிக்கும் சதவிகிதம் 29 சதம் மட்டுமே. வளர்ச்சி நாயகளின் ஆட்சியில் இதுதான் நிலைமை.
-பாக்கியம்


ஞாயிறு, மே 14, 2017

மோடியின் மூன்றாண்டு- –மணித்துளி வளர்ச்சி?


         
           மோடியின் மூன்றாண்டு வளர்ச்சியை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர். வளர்ச்சி அவர்களின் கார்பொரேட் ஆதரவாளர்களுக்கு பாதிப்பு மக்களுக்கு.பாதிப்புகளின் வளர்ச்சி வேகம் அதைவிட வேகமாக உள்ளது. இதோ பெண்கள் பாதுகாப்பு பற்றி தேசிய குற்றப்பிரிவு ஆவண காப்பகம் 2015-ன் நிலை பற்றி குறிப்பிட்டுள்ளது.
   
     நிர்பயா டெல்லியில் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பிறகு மத்திய அரசும் மோடியும் பெண்கள் பாதுகாப்பு பற்றி வாய்கிழிய பேசினார்கள். ஆனால் நிலைமை எதுவும் மாறவில்லை. க்ஷபண்கள் மீதான தாக்குதல் இங்கொன்று அங்கொன்று என்பதில்லை எங்கெங்கு கானிணும் மணிக்கணக்கில் நடைபெறுகிறது. 

             ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 4 பெண்கள் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதாவது 15.2நிமிடங்களுக்கு ஒருபெண் பலியாகிறாள்.2015- 34,651 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையங்கள் கயவர்கள் நிலையமாக மாறிவருகிறது. 4 நாளைக்கு ஒரு பெண் காவல்நிலைய பாதுகாப்பில் பாலியல் வன்புணர்விற்கு உள்ளாக்கப்படுகிறாள்.2015-ல் 95 பெண்கள் காவல் நிலையத்தில் சூறையாடப் பட்டுள்ளனனர்.இக்காலத்தில் கூட்டு வன்புணர்வு பல்கிபெருகி வருகிறது. 

          2015-ல் 2113 பெண்கள் கூட்டுவன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கும் ஒரு வன்புணர்விற்கான முயற்சி நடைபெறுகிறது. 2015-ல் 4437 சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு 19 மணிநேரத்திற்கும் 6வயதுக்கு உட்பட்ட ஒரு குழந்தை பாலியல் வன்புணர்விற்கு ஆளாகிறாள்.2015-ல் 451 குழந்தைகள் பலியாகி உள்ளன. பதியப்படும் வழக்குகளில் 86 சதம் இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளன. தண்டிக்கும் சதவிகிதம் 29 சதம் மட்டுமே. வளர்ச்சி நாயகளின் ஆட்சியில் இதுதான் நிலைமை.
-பாக்கியம்


சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...