Pages

திங்கள், நவம்பர் 02, 2015

சென்னையின் மறுபக்கம்; “பெண்ட கழட்டுவதில்” பெஸ்ட் சென்னை மாநகராட்சி.



        சென்னை வாசிகள் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை இது. சண்டைவந்து விட்டால் பெண்ட கழட்டி விடுவேன் என்பார்கள். சவடால்விடும்போதும் இந்த வார்த்தை சரளமாக வந்து விழும். அதிமாக வேலைவாங்கி விட்டால் பெண்ட நிமித்தி விட்டான் என்பார்கள். இது அதிகமாக நடக்கிறதோ இல்லையோ?  சென்னை மாகராட்சி  சாலைகள் பலரின் பெண்ட கழட்டும் பணிகளை சிறப்பாக செய்து கொண்டு  இருக்கிறது. இந்த பணியைதான் 93 சதம் பணிகள் முடிந்து விட்டதாக மாநகராட்சி அறிக்கை தம்பட்டம் அடிக்கிறதுபோலும்.
           
           சென்னை மயிலாப்பூரை சேர்ந்த பெண் மருத்துவரிடம் சென்றபோது முதுகுதண்டு இடம்மாறி இருப்பதாக கூறினார்.  நான் தினசரி வேலைக்கு ஆட்டோவில் சென்று வருவதுதான் காரணம் என்றார்.மிகவும் மோசமான சாலைகளாக உள்ளது.அவற்றை தவிர்க்க வேண்டும் என்றார். அதுவரை எனக்கு எனது முதுகுதண்டு பாதிப்பிற்கு சாலைகள்தான் காரணம் என்று தெரியாது என்கிறார்.
           
            சென்னையில் உள்ள ஒரு நரம்பியல் மருத்துவர் தன்னிடம் முதுகுதண்டு,  இடுப்பு  வலிக்காக வருகிற இளம்நோயாளிகளிடம்  இருசக்கர வாகனம் ஓட்டுவதை நிறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறுவதாக தெரிவிக்கிறார்.இதற்கு மிகமோசமான சாலைகள்தான் காரணம். பொதுபோக்குவரத்து இல்லாதபோது இருசக்கரம்தான் வாழ்விற்கு அடிப்படையாக உள்ளது.
              
             ஊனமாக்குவதிலும் உயிர்பறிப்பதிலும் சென்னை மாநகராட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. சென்னையில் நடைபெறும் விபத்துக்ளில் 40 சதம் இருசக்கர வாகம் தொடர்பானது. இதற்கு  வேகத்தடை , மேடு பள்ளம், முக்கிய காரணம். 
              
        சென்னையில் உள்ள மருத்துவ  மனைகள் தினசரி 100 முதல் 125 பேர்கள்வரை சாலை விபத்தால் தலைக்காயம் ஏற்பட்டு மருத்துவ மனைக்கு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் மதிப்பீடு செய்கின்றனர். இவை அனைத்தும் முறையாக பதிவு செய்யப்படுவதில்லை என்பதையும் தெரிவிக்கின்றனர்.
              
              சாலைவிபத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெற்று செல்லும் 55 முதல் 60 சதம் நோயாளிகள் முழுமையாக குணமடைவதில்லை என சென்னை பொதுமருத்துவமனை நரம்பியல் மருத்துவர் கூறுகிறார். 
          
          மரணசாலைகள் போட்டியில் சென்னை சாலைகள்  இரண்டாவது இடத்தையும், விபத்தில் முதல் இடத்ததையும்  பிடித்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய்யம் இந்த ஆய்வை வெளியிட்டுள்ளது. தேசிய குற்றவியல் பதிவுத்துறை கணக்குபடி 2012-ல் சென்னையில்  9663 விபத்துக்களும் 1401 மரணங்களும் நிகழ்ந்துள்ளது.  2014--ம்  ஆண்டு 9465 விபத்துக்கள் நடைபெற்றுறுள்ளது. சவக்குழிக்கு மாற்றாக சென்னை சாலைகள் உள்ளன.
            
          93 சதம் பணிகள் நிறைவடைந்ததோ இல்லையோ 93 சதம் சாலைகள் வெயில் காலங்களில்கூட காணமுடியாது. மழைகாலங்களில் கேட்கவே வேண்டாம். சனிக்கிழமை(31.10.2015) பெய்த மழை அடைமழையோ அசாதாரண மழையோ அல்ல அது அற்பமழைதான். ஆனாலும் 93 சதம் சாலைகள் மூழ்கிவிட்டன. அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் தேங்கும் மழைநீருக்கு சொற்பமாக பெய்தமழையை திட்டித்தீர்க்கின்றனர். சென்னை வானிலை மைய்யம் இது அற்பமழைதான் என்கிறது. .( Chennai Corporation Blames Rain Intensity for Flooding; Met Dept Says 'This Was Nothing'. The new IE.1.11.2015)
              
               சென்னை மாநகராட்சி  353.94 கி.மீ நீளமுள்ள 1160 பேருந்து செல்லும் சாலைகளை பராமரிக்கின்றது. 1292.54 கி.மீ சிமென்ட் சாலைகள் உட்பட மொத்தம் 5563.06 கி.மீ நீளமுள்ள உட்புற சாலைகளை பராமரிக்கின்றனர். இவை தவிர புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளில் 1292.54 கி,மீ.நீளமுள்ள சாலைகளும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. 
               85 சதம் தரமற்ற சாலைகள்தான் தற்போது சிங்கார சென்னையை அலங்கரித்து கொண்டிருக்கிறது. – உலகத்தரம் என ஓயால் பேசிப்பேசி உலகத்தரம் எது? உள்ளுர் தரம் எது? என்று புரியவில்லை. மனிதர்கள் நடப்பதற்கும் வாகனங்கள் செல்லும் தரம் இருந்தாலே போதுமடா சாமி  என்றாகிவிட்டது.
               சாலைகளின் தரப்பரிசோதனையில் 85 சதம் தரம்மற்றவை என்று வெளிபட்டுள்ளது.(2014.கநb-15 கூடீஐ) 172 மாதிரிகளை சேகரித்து 27 மாதிரிகளை பரிசோதித்த போது 4 மட்டுமே தரமாக இருந்தன. தரமற்ற சாலைகளை மறுபடியும் போடச்சொல்லி தரப்பரிசோதனை செய்த 12 சாலைகளில் 3மட்டுமே தேரியது என்றால் நிர்வாக லட்சணத்தை பாருங்கள்.
               
      தமிழக அரசு 400 கோடி ஒதுக்கி 10000 சாலைகள் போட திட்டமிடப்பட்டது. அனைத்தும் போடவில்லை என்றாலும் போடப்பட்ட சாலைகள் ஒரு மாததில் காணாமல் போய்விட்டதாக பொதுமக்களிடமிருந்து புகார் குவிந்தது.
                   
          அதிகமான தொகைக்கு ஒப்பந்தம் எடுத்து தரமற்றதாக போடுவதற்கு ஒப்பந்ததாரர்களிடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளது.அதிகாரிகள் கான்ட்ராக்ட் காரர்களை குறைசொல்லுகின்றனர். ஆனால் கான்ட் காரர்கள் கவுன்சிலர்களும் அதிகாரரிகளும் கேட்கின்ற கமிஷ்ன் கொடுத்துவிட்டு மீதிதொகையில் சாலை போடுவதற்கு கட்டுபடியாகவில்லை என்கின்றனர். மொத்ததில் மொட்டையடிக்கப்படுவதும் உயிரிழப்பதும் பொதுமக்கள்தான்.
           
                கரடு முரடு, குண்டும் குழியும்,தீடீர் பள்ளங்கள்  என அனைத்தையும் ஓர சேர காணவேண்டுமா? சாதாரண காலங்களில் சிங்கார சென்னையை சுற்றி வாருங்கள். சாக்டைகளும் மழைநீரும் கலந்து ஓடும் காட்சியை காண வேண்டுமா மழை தூரல் போடும் காலத்தில் சென்னையில் காணவாருங்கள
                                                                                
                                                                              ஏ.பாக்கியம்
    
  

4 கருத்துகள்:

  1. பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதும் விபத்துகள் நடப்பதும் சாலைகளின் மூலமே.....

    பதிலளிநீக்கு
  2. பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுவதும் விபத்துகள் நடப்பதும் சாலைகளின் மூலமே.....

    பதிலளிநீக்கு
  3. சாலைகள் போடுவதில் மேலிருந்து கீழ்வரை கமிசன் வாங்குவதே,நமது உடலில் மேலிருந்து கீழ்வரை பெண்டை கழட்டுகிறது.நான் இரண்டுமுறை ஆர்த்தோ டாக்டரைப்பார்த்தேன் “ஏன் சார் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த சென்னையில் இந்த வயதில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவீர்கள்?என்று கேட்டுவிட்டு “நீங்கள் இந்த சாலைகளில் இப்படி வாகனம் ஓட்டினீர்கள் என்றால் பின்பு நடக்கவே முடியாத நிலமை வந்தால் என்னிடம் மட்டும் மீண்டும் வராதீர்கள் ”என்றார்....சோ.சுத்தானந்தம்.

    பதிலளிநீக்கு
  4. சாலைகள் போடுவதில் மேலிருந்து கீழ்வரை கமிசன் வாங்குவதே,நமது உடலில் மேலிருந்து கீழ்வரை பெண்டை கழட்டுகிறது.நான் இரண்டுமுறை ஆர்த்தோ டாக்டரைப்பார்த்தேன் “ஏன் சார் எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த சென்னையில் இந்த வயதில் இரண்டு சக்கர வாகனம் ஓட்டுவீர்கள்?என்று கேட்டுவிட்டு “நீங்கள் இந்த சாலைகளில் இப்படி வாகனம் ஓட்டினீர்கள் என்றால் பின்பு நடக்கவே முடியாத நிலமை வந்தால் என்னிடம் மட்டும் மீண்டும் வராதீர்கள் ”என்றார்....சோ.சுத்தானந்தம்.

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...