Pages

வியாழன், மார்ச் 05, 2015

பாசிசம் அன்றும் - இன்றும்-7

-அ.பாக்கியம்-
இந்தியாவில் பாசிசம் : 
வேர்களும்- வளரும் விழுதுகளும்
இந்தியாவில் பாசிசம் வளர்வதற்கான சூழல் வேகமாக ஏற்படுகின்றது. இதற்கான வேர்களும்,அமைப்புகளும் இந்திய சமூகத்தில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. இத்தாலி, ஜெர்மனியில் யூத இனத்திற்கு எதிராக இது கட்டமைக்கப்பட்டது. இந்தியாவில் மதத்தை பயன்படுத்தி பாசிசம் கட்டி அமைக்கப்படுகிறது.

       
 

1857 -ம் ஆண்டு முதல் சுதந்திரப் போர் நடைபெற்ற போது, பிரிட்டிஷார் ஆட்டம் கண்டனர். இந்தியாவில் இப்படி ஒரு ஒற்றுமை அவர்களுக்கு எதிராக உருவாகும் என எதிர்பார்க்கவில்லை. “அந்த எழுச்சியில்  சிசுக்கொலை புரியும் இராசபுத்திரரும், குருட்டு பிடிவாத பிராமணர்களும், பிற்போக்கான முஸ்லீம்களும் ஒன்றாக போராடினர். பசுவை வழிபடுவோர்களும், பசுவை உண்பவர்களும், பன்றியை வெறுப்பவர்களும், பன்றியை சமைப்பவர்களும் வாளேந்தி பிரிட்டிஷாருக்கு எதிராக களம் கண்டனர்.” இந்த ஒற்றுமை அவர்கள் தொடர்ந்து ஆட்சி செய்ய உதவாத என கருதி மதரீதியாக பிரித்தாளும் சூழ்ச்சியை கையாண்டனர். இதற்கு இஸ்லாம் மற்றும் இந்து மதத்தில் இருக்கக் கூடிய பிற்போக்கான சக்திகள், வகுப்புவாதிகள் உதவி செய்தனர்.
   ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகும் முன்பே, இந்துராஷ்டிரம் என்ற பேச்சுகளும், கருத்துக்களும் இருந்தன. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகி, அச்சுறுத்தும் வடிவத்துடன் இதே கருத்துக்களை முன்வைத்தது. எனினும் 1939 -ல் அன்றைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர் “நாங்கள் அல்லது எங்கள் தேசிய தன்மையின் இலக்கணம்” என்ற நூலை எழுதி வெளியிட்டார்.
     அந்நியர்கள் இந்துக் கலாச்சாரத்துடன் கலந்து விட வேண்டும். அல்லது வெளியேற வேண்டும். இந்துஸ்தானத்தில்தான் இந்து தேசம் வாழ்கிறது, வாழ வேண்டும். இந்து இனம், மதம், கலாச்சாரம், மொழி இல்லாதவர்கள் ஒதுங்கிட வேண்டும் என்று இப்புத்தகம் மூலம் அறைகூவல் விடுத்தார். காலங்காலமாக உருவாகி வந்த இனரீதியிலான வேறுபாட்டில் கலப்பு, ஒற்றுமை ஏற்படுத்த முடியாது என்று ஹிட்லர் நிலைநாட்டினார். இனத்தூய்மையை பாதுகாத்தார். ஜெர்மனியின் இந்த பாடத்தை இந்துஸ்தானில் உள்ள நாமும் கற்றுக் கொண்டு பயன்பெற வேண்டும் என அந்த புத்தகத்தில் எழுதினார். அன்று முதல் இந்த சிறு புத்தகம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வேத நூலாக, வழிகாட்டி நூலாக  அமைந்துவிட்டது.
       இந்த புத்தகம் வந்துவிட்ட பிறகு இரு ஆண்டுகள் கழித்து 1941 ஆகஸ்ட் 26ல் மௌலானா அபுல் அலா மௌதுதி  ஜமைத்-இ-இஸ்லாம் அமைப்பை உருவாக்கி இஸ்லாம் நாடு, இஸ்லாம் அரசு பற்றி பேச ஆரம்பித்தார்.
   
இந்துராஷ்ரம் பற்றி கருத்துக்கள் உருவாகி அதையே காங்கிரஸ் கட்சியில் தீர்மானமாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. எனினும், 1931 -ல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் சுதந்திர இந்தியா மதச்சார்பற்ற இந்தியா என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் எதிரொலியாகத்தான் காந்தியின் படுகொலை நடைபெற்றது.

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...