Pages

வெள்ளி, டிசம்பர் 30, 2011

தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துக்கள்


தமிழகத்தில் சாதி சமத்துவப் போராட்டக்
கருத்துக்கள்

ஏ. பாக்கியம்

             தமிழகத்தின் சிறந்த ஆயவாளர்களில் ஒருவரான காலம் சென்ற பேரா. நா. வானமாமலை அவர்களால் எழுதப்பட்டு 1960ம் ஆண்டுகளில் ஆராயச்சி மற்றும் தாமரை இதடிநகளில் வெளியிடப்பட்டு புத்தகமாக வடிவம்பெற்றது. இவை எழுதப்பட்ட காலத்திற்குப் பிறகு சமூக தளத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இப்புத்தகத்தின் கருத்துக்களும், முன்வைத்துள்ள விவாதங்களும் இன்றும் பொருத்தப்பாடு உடையதாக
உள்ளது.

     இவ்வெழுத்துக்களுக்குப் பிறகு, தமிழகத்திலும், பிறமொழியிலும் சாதிபத்தின் தோற்றம் மற்றும் கட்டமைப்பு, அதன் வளர்ச்சி போக்குகள் பற்றி
மாறுபட்ட கோணத்தில் பல புத்தகங்கள் வந்துள்ளன. எனினும், மார்க்சிய பார்வைகள் வந்துள்ள புதிய வரவுகளும், தரவுகளும் நா.வா.வின் கருத்துக்களுக்கு வலுசேர்ப்பவைகளாகவே அமைந்துள்ளது. இன்றைய தமிழக சமூக சூழலும், பல சாதிய அமைப்புகலும் தங்களை இட ஒதுக்கீடு வளையத்திற்கு கொண்டுவர பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களாக நிலைநிறுத்திட தயங்குவதில்லை. இன்றைய உலகமய சூழலில், பொருளாதார ரீதியில் பலன் அடைந்தவர்கள், அரசு அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலமே இதனைப் பெற்றுள்ளனர். பொருளாதார பலன் அடைவோர்கள், அதிகாரம் அழுத்தம் கொடுக்க வேண்டிய சாத்தியப்பாட்டிற்கு, சாதிய அணி திரட்டலை அடிப்படையாகக் கொண்டுள்ளனர். உலகமய, தாராளமய கொள்கையால் பாதிக்கப்பட்ட மக்களை, இட ஒதுக்கீடு என்ற ஒற்றைத் தளத்தில் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்ற மாயையை உருவாக்குகின்றனர். அதே நேரத்தில், தங்களது சாதியத்தின் தொன்மைக் கதை மேன்மைகளைக் கருத்தாக்கி, சாதிய அணிதிரட்டல்களை செய்து
வருகின்றனர்.

 பேராசிரியரி  நா.வா.வின் தமிழ் நாட்டில் சாதி சமத்துவ போராட்டக்கருத்துக்கள், இப்பின்னணியுடன் பார்க்க வேண்டியுள்ளது. 1900ம் ஆண்டுகளில் இந்திய வரலாற்று இயலில் புதிய போக்குகள் தலைதூக்கியது.
பிரிட்டிஷார் இந்திய வரலாறுபற்றி எழுதும்போது, காட்டுமிராண்டிகள் என்று சித்தரிக்கும்போது, அதை எதிர்ப்பது என்ற கோணத்தில் பண்டைய இந்திய
வரலாற்றை பொற்காலமாக சித்தரிக்கும் போக்கு வளர்ந்தது. இந்த இரண்டுவிதமான போக்குகளுக்கும் மாறாக இயங்கியல் பொருள் முதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்ட ஆடீநுவு முறைகள் உருவாகின. இந்த ஆடீநுவு முறையின் வழிநின்று
தமிடிநச்சமூக வரலாற்றில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பை நா,.வா. இப்பத்தகத்தின் மூலமாக செடீநுதுள்ளார். வருண சிந்தாமணி (1901) சத்திரியகுல விளக்கம் (1904) பரதவர் புராணம் (1909), நாடார் மன்னரும், நாயக்க மன்னரும் (1937) கிளைவளப்பமாலை ஆகிய ஐந்து நூல்களை சாதிகளின் வரலாறு பற்றிய ஆடீநுவுக்கு உட்படுத்தியுள்ளார். இந்த ஐந்து நூல்களிலிருந்தும் பொதுவான அம்சங்களை விளக்கியுள்ளார்.

 சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள் எந்தப் பகுதியினரால் முன்வைக்கப்பட்டது? ஏன் இக்கருத்துக்கள் உருவானது? என்ற கேள்விக்கு சமூக பொருளாதார பின்னணியுடன் வர்க்க நிலைபாட்டிலிருந்து விடைகண்டுள்ளார். சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள் சாதி ஒழிப்பு என்ற நல்லெண்ண நோக்கிலிருந்து எழவில்லை
மாறாக சமூகத்தில் உயர்நிலை பெற்றுவிட்ட பிராமணர்கள் அல்லாத இதர சாதிகளில் பொருளாதார ரீதியில் மேன்மை அடைந்தவர்கள் தங்களின் சமூக
அந்த°தை உயர்த்திக்கொள்ள இக்கருத்துக்கள்முன்வைக்கப்பட்டன. மேலே குறிப்பிட்ட ஐந்து புத்தகங்களை எழுதியவர்கள் இச்சாதிகளில் செல்வம் படைத்தவர்கள். இவர்கள் தங்களது உயர்நிலையை நிலைநாட்டிட பல மூல நூல்களை தேடினர் அல்லது புதிய நூல்களை

      உருவாக்கினர். பிராமணர்கள் ஆரியவேதத்தை உயர்த்திப்பிடித்துள்ளனர். இவர்களுக்கு மாறாக இதர சாதிகளில் பொருளாதார வளம் பெற்றவர்கள் திராவிட வேதத்தை முன்வைத்தனர். திராவிட வேதத்தில் தாங்களே உயர்ந்தவர்கள் என்று வாதாடியது மட்டுமல்ல தங்களுக்கு கீழேயும் சாதிகள் இருக்க வேண்டும் என்றனர். இவர்கள் நான்கு வேதங்கலை வரவேற்றும்,
புராணங்களையும், மறு °மிருதிகளையும் எதிர்த்தனர். இதற்கான வர்க்க பின்னணி என்ன? என்பதை அன்றைய உற்பத்தி முறையில் ஏற்பட்ட வளர்ச்சியுடன் இணைத்து விளக்கப்பட்டுள்ளது அன்றைக்குப் புதிய
பார்வையாகும்.

         1818ம் ஆண்டு சித்தூர் அதாலத் கோர்ட் தீர்ப்பும், அதற்கு முன்பும், பிறகும் நடைபெற்ற நிகடிநவுகள், சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்களின் பின்னிருந்த வர்க்க உறவுகளை வெளிப்படுத்தும். இப்புத்தகத்தின் மற்றொரு முக்கய அம்சம், வலங்கை, இடங்கை சாதிகள் பற்றிய பார்வைகள் விளக்கப்பட்டுள்ளது. சோழர்கள் ஆட்சியில் பெரும் நில உடைமை தோன்றிய 11ம் நூற்றாண்டு முதல் 18ம் நூற்றாண்டுகள் வரை தமிழகத்தில் வலங்கை இடங்கை சாதிகளின் மோதல் தொடர்ந்தும், பரவலாகவும் நடைபெற்றது

    . வரலாற்றாசிரியர் கே.கே. பிள்ளை அவர்கள் இம்மோதல்கள் பற்றி விரிவாக
விளக்கியுள்ளார். ஆனால் இந்த இடங்கை, வலங்கை சாதிகளின் மோதல்கள் எப்படி உருப்பெற்றன, எப்படி மறைந்தன என்ற வியப்போடுதான் தனது எழுத்தை முடித்துள்ளார். ஆனால், பேரா நா.வா. அவர்கள் இப்புத்தகத்தில் இம்மோதல்களின் காரணத்தையும், உருவாக்கத்தையும், உற்பத்தி முறைகளின் வளர்ச்சியோடு இணைந்து வெளிப்படுவதை விவரித்துள்ளார்.
சோழர்காலத்திய நில உடமைகளும், அதனைச் சார்ந்தகைவினைஞர்கள் உருவாக்கமும் தோன்றியது.

 மறுபுறத்தில் பெரு வணிகம் தோன்றியது. இந்த இரு பிரிவினர்களுக்குமிடையே மோதல் ஏற்பட்டது. ஆளும் நிலபிரபுத்துவ அரசு இம்மோதல்களைப் பயன்படுத்தியது. வளர்த்தெடுத்தது. சோழர்கள் நிலத்தில் சாதி அடிப்படையிலேயே சலுகைகள் கொடுப்பதும், வரிகள் விதிப்பதும் நடைபெற்றது. பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்கள் பெரும்பாலும் சாதி அடிப்படையிலேயே நடைபெற்றது. மன்னர்கள், நிலப்பிரபுக்கள் தங்களது நலனை பாதுகாக்க, இந்தப் பிரிவினையை கெட்டிப்படுத்தினர். “உடன் கூட்டம் ரத்து” என்ற சட்டத்தின் மூலம் இவர்கள் ஒன்று சேர்வதை தடுத்தனர்.

     எனவே, வலங்கை, இடங்கை சாதிய மோதல்கள் வெறுமனே சாதிக்கலவரங்கள் அல்ல. வர்க்க முரண்பாடுகளின் வெளிப்பாடுகள். நிலவுடைமை வர்க்கமும் வணிக வர்க்கமும் தங்களுக்கு ஆதரவான மக்களை இணைத்துக்கொண்ட நிகடிநவுகளாகும். இப்புத்தகம் தமிழகம் சாதிய கட்டமைப்பை ஊடுருவிப் பார்க்கவல்ல பேராயுதம். வரலாற்றியல் பொருள் முதல்வாத கண்ணோட்டங்களை உள்ளடக்கியது. பலமுறை இப்புத்தகம் வெளிவந்திருந்தாலும் பாரதி புத்தகாலயத்தின் மூலம் பரவலான வாசகர்களை அடையும்..

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...