Pages

புதன், ஜனவரி 19, 2011

லெனின்: புதுயுக வழிகாட்டி

                                                  V.gh¡»a«
  
                     லெனின் மறைந்து 87-ஆண்டுகள் முடிந்து விட்டன. அவரின் 54 ஆண்டு வாழ்க்கைப்பதிவுகள் இன்றும் லெனினியம் என்ற பெயரில் நமக்கு வழிகாட்டியாக திகழ்கின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சிப்போக்குகளை துல்லியமாக மதிப்பீடு செய்து ஏகாதிபத்தியம் என்ற சங்கிலியின் பலவீனமான கண்ணியை தகர்த்தெரிந்த வர்க்கப் புரட்சிச்கு தலைமையேற்றார் லெனின். மார்க்சியம் என்ற கோட்பாட்டினை நடைமுறைப்படுத்த வித்திட்டார். இன்றை க்கும் ஏகாதிபத்தியம் நாடுகடந்த தன்மையை அடைந்து நிதிமூலதனம் என்ற பகாசூரனாக மாறி தேசங்களையும்,  உழைப்பாளிமக்களின் இரத்தங்களையும் உறிஞ்சுக்கொண்டிருக்கிறது. இன்றும் எண்ணற்ற தாக்குத்ல்களை சந்தித்து ஏகாதிபத்தியமயமாக்கப்பட்ட முதலாளித்துவத்திற்கு மாற்றாக மார்க்சிய-லெனினிய சிந்தாந்தங்கள் புதிய அனுபவத்தோடும் புரிதலோடும் வீறுகொண்டு எழுந்து நிற்கின்றது. எனவேதான்  2008-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி பதவிலகும் சிலநாட்களுக்கு முன்பு பொதுநிகழ்ச்சியில் கீழ்கண்டவாறு அலறினார்.       1900-ம்ஆண்டுகளில் நாடுகடந்து வாழ்ந்த ஒரு ஐரோப்பிய வழக்கறிஞர் என்ன செய்ய வேண்டும்? என்று பிரசுரத்தை வெளியிட்டார். ருஷ்யாவில் கம்யூனிச புரட்சியைநடத்தும் திட்டததை வெளியிட்டார்.ஆனால் உலகம் லெனினது வார்த்தைக்கு செவிசாய்க்கவில்லை ஆனால் அதற்குரிய கடும்விலையைகொடுத்தது ஏகாதிபத்திய இழப்பைத்தான் உலக இழப்பாக எடுத்துரைக்கின்றார். 2009-ம் ஆண்டு இதே புத்தகத்தை ஒபாமாவிற்கு அனுப்பிவைக்கிறேன் அதைப்படிக்க வேண்டும் என்று வெனிசூலாவின் அதிபர் சாவேஷ் தெரிவித்தார்லெனினது எழுத்துக்களும் கருத்துக்களும் இன்றும் சிம்மசொப்பனமாக திகழ்கிறது. லெனினியம் அவரது மூளையிலிருந்து உதித்த புனிதமானவையும் அல்ல, போதிமரத்தடியிலும்,கல்வாரி மற்றும் கைய்லாய மலைகளில தரிசித்துபெற்ற ஞானமும் அல்ல. மாறாக தான்படித்த தத்துவத்த் வரலாற்ற் ருஷ்ய சமூகத்துடன் இணைத்துப்பார்த்தார். மக்களை, தொழிலாளர்களை, விவசாயிகளை படித்தார், அவர்களுடன் இரண்டற வாழ்ந்தார், மாற்றுப்பாதைக் வந்தடைந்நதார்.



சாகசம் மட்டும் சாத்தியமில்iy
         
             ஸ்ம்பீர்க் என்ற கிராமத்தில் 1870-ஏப்-22-ல் லெனின் பிறந்தார். தற்போது அக்கிராமம் லெனின் இயற்பெயரான உலியானவ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. லெனினின் பாட்டனார் குபர்னிகா என்ற பழங்குடிஇனத்தின் வழிவந்தவர். தாய் மருத்துவக்குடும்பத்தைச் சேர்ந்தவர். தந்தை ஆசிரியர். லெனினுடன் பிறந்தவர்கள் ஐந்துபேர்கள். சிறுவயதிலேயே லெனின் படிப்பார்வம் மிக்கவராக திகழ்ந்தார். புதினங்களை விரும்பி படித்தார். சென்னிஷேவ்ஸ்கியின் என்ன செய்வது?என்ற புத்தகம் லெனினை வெகுவாக கவர்ந்தது.  பெரிய அறிஞர். ஜார் ஆட்சியை எதிர்த்து சமரசமற்ற யுத்ததை நடத்தினார் என்று பின்னாட்களில் லெனின் இவரைப்பற்றி குறிப்பிட்டார். தனது 16-வது வயதில் தந்தையை இழந்தார். 17-வது வயதில்  தனது அண்ணன் அலெக்சாந்தரை இழந்தார்.அவர் பீட்டர்ஸ்பர்க் பல்கலையில் படிக்கும்போது சக மாணவர்களுடன் இணைந்து ஜார் மன்னனை கொலை செய்வதற்கு முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு  1886-மே மாதம் தூக்கிலிடப்பட்டார். இது லெனினுக்கு பேரிடியாக இருந்தது. பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் லெனின் வாழ்க்கை புரட்சிப்பாதையில் செல்வதை இது தடுக்கவில்லை. மேலும் உறுதிப்படுத்தியது. ஆனால் தனது அண்ணன் சென்ற பாதை தனது பாதை அல்ல  என்பதை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டார். தனது அண்ணன் மற்றும் சகமாணவர்களின் வீரத்தையும், தியாகத்தையும், உறுதியையும் பாராட்டிய அவர் அவர்களது பாதையை புறக்கணித்து விடியலுக்கான புதிய பாதையை தேடினார்.  சுகசம் மட்டும் சமுதாய மாற்றத்திற்கு சாத்தியமில்லை என்று கருதினார். இத்தேடல் அவரை மார்க்சியம் என்ற விஞ்ஞான தத்துவத்திற்கு அழைத்துச்சென்றது.  நம்பத்தகாத புள்ளிகள்
உயர்நிலைப்படிப்பில் தங்கப்பதக்கம் பெற்று தேர்வுபெற்றார். 1887-ல் கசான் பல்கலைக்கழகத்தில் சட்டப்பிரிவில் சேர்ந்தார். ழுல்லைக்கழகத்தில் புரட்சிகர மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டதால் கைது செய்யப்பட்டார். லெனின் கொக்காஷ்கினோ என்ற கிராமத்தில் சிறைவைக்கப்பட்டார். இது இப்போது அவரது பெயரால் லெனினோ கிராமம் என்றழைக்கப்படுகிறது இந்த ஓராண்டு சிறைவாசத்தை லெனின் தனது அறிவுதாகத்தை தீர்ப்பதற்காக பயன்படுத்தினார். இந்த ஓராண்டில் படித்ததுபோல் அதற்கு பின்னால் நான் சைபீரியாவில்கூட இப்படி படிக்கவில்லை என்று எழுதினார். லெனின் விடுதலைக்குப்பிறகு பல்கலையில் சேர முயன்றார், வெளிநாடு சென்று படிக்கவும் முயன்றார். அரசு அவரை நம்பத்தகாத புள்ளிகள் பட்டியலில் சேர்த்து அனுமதி மறுத்தது. அக்காலத்தில் கசானில் புரட்சிகர சூழல் நிலவியது. ருஷ்யாவின் முதல் புரட்சிகர மார்க்சிய வாதிகளில் ஒருவாரான பெதோசேயேவுடன் லெனின் தொடர்பு கொண்டார். இந்த தொடர்பை பயன்படுத்தி மார்க்சீய நூல்களை படித்தார்.  சலிப்பற்ற , ஓய்வற்ற தொடர்ந்த படிப்பு என்றுகூட கூறலாம். காலையில் தேநீர் அருந்திவிட்டு  புத்தக சுமையுடன் எலுமிச்சை தோட்டத்தில் மூலையில்  கிடந்த நாற்காலியில்  ஏதோ கண்டிப்பான ஆசிரியர் காத்திருப்பதுபோல் சென்றுவிடுவார். மாலைவரை படிப்பு, இக்காலத்திலேயே சில ஆய்வுகளையும் கட்டுரைகளையும் எழுதஆரம்பித்தார். நான்காண்டு பல்கலை படிப்பை ஒன்றரை ஆண்டுகளில் முடித்தார். 1891-ல் பீட்டர்ஸ்பர்க் கல்கலை கழகத்தில் சட்டத்துறையில் முதல்மாணவனாக தேர்வு பெற்றார்.  1892-ல் சமரா மாவட்டத்தில் வழக்கறிஞராக தனது பணியை துவக்கினார். அவரது கட்சிக்காரர்கள் பெரும்பகுதி விவசாயிகளே, இந்தச்சூழலில்தான் லெனினுடைய அரசியல் நடவடிக்கையின் அடுத்த கட்டம் துவங்கியது. சமராவின் முதலாவது மார்க்சிய வட்டத்தை 1892-ல் லெனின் உருவாக்கினார். இந்தக்குழுவினர் மார்க்சியத்தை செயல்முறையில் பரப்பும் வேலைசெய்தார்கள். தனது 23-வது வயதில் இந்த நடவடிக்கையில் லெனின் குதித்தார். மற்றொரு திருப்பத்தையும் இங்கே சந்தித்தார். தனது எதிர்கால மனைவி, நண்பர் நதேழ்தா குரூப்ஸ்கயாவை போராட்டங்களில் ஈடுபட்டிருக்கும்போது சந்தித்தார். இவர் தொழிலாளர்களுக்காக மாலை நேரத்திலும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் பாடம் சொல்லிகொடுக்கும் ஆசிரியப் பணியில் இருந்தார். பொதுவாழ்க்கை இருவரையும் இணைத்தது.
இக்காலத்தில் லெனின் மேற்கு ஐரோப்பா சென்று தொழிலாளிவர்க்கம் பற்றி அறிந்து வரும்பொருட்டு வெளிநாட்டு மார்க்சிய குழுவினரால் அனுப்பபடுகிறார். முதலில் சுவிட்சர்லாந்து சென்று 1883-ம் ஆண்டே ருஷ்யாவில்உழைப்பு விடுதலைக்குழுவை உருவாக்கிய பிளக்கனாவுடன் பேசுகிறார். பிறகு பெர்லினக்கும், பாரீசுக்கும் சென்று தொழிலாளாகள் கூட்டங்களில் கலந்துகொள்றிர். பாரீசில் காரல்மார்க்சின் மருமகனான போல் லபார்க்குடன் சந்திப்பு நடத்துகிறரர். இங்கே லெனினுக்கு நிகழவிருந்த தலையான சந்திப்பு இயற்கையால் முடக்கப்படுகிறது. எங்கல்சை சந்திக்க முயற்சித்தபோது, எங்கல்சின் கடும் உடல்நல பாதிப்பால் அவரை சந்திக்கமுடியாமல் மரணச்செய்தி மட்டுமே கேட்கமுடிகிறது. லெனின் மீண்டும் ரஷ்யாவிற்கு திரும்பியபோது ஏராளமான மார்க்சிய நூல்களை அதிகாரிகளுக்கு தெரியாமல் எடுத்துவந்தார். ரஷ்யா முழுவதும் இப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டது.

சிறையே செயல்தளமா

            வெளிநாடு சென்று திரும்பிய லெனின் முன்னிலும் தீவிரமாக புரட்சி நடவடிக்கையில் ஈடுபட்டார். 1895-ல் அனைத்து மார்க்சிய குழுக்களையும் இணைக்கும் முயற்சியில் இறங்கினார். தொழிலாளி வர்க்க விடுதலைக்கான போராட்ட ஐக்கியம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். ரஷ்யாவில் புரட்சி நடத்தவேண்டுமென்றால், மார்க்சியத்தை ரஷ்யநிலைக்கு ஏற்றவகையில் கடைபிப்பதும், ஒரு உறுதியான கட்சியை கட்டுவதும் அவசியம் என்பதை இக்குழுவின் மூலம் வலியுறத்தினார். இக்குழு தொழிலாளர்களை வேலைநிறுத்தத்தில் இறக்கியது, இதனால் பல கொந்தளிப்புகள் ஏற்பட்டது. லெனின் உட்பட இக்குழுவின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் தனிக்கொட்டடியில் அடைக்கப்பட்டனர். சிறையில் தனி கொட்டடியில் அடைக்கப்பட்டாலும் தனது புரட்சிகர நடவடிக்கையை அவர் கைவிடவில்லை. சங்கேத மொழியில் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டார். செய்தித்தாள்கள் மற்றும் சிறை நூலகத்திலிருந்து எடுக்கப்பட்ட நூல்களின் இடையில் தனக்கு கொடுக்கப்படும் பாலின் மூலமாக எழுதி செய்தி பரிவர்த்தனைகளை செய்தார். இதற்காக ரொட்டியாலான மைக்கூடுகளை பாலில் தோய்த்து பயன்படுத்தினார். காவலர்கள் வந்துவிட்டால் பால்கூடை வாயில் போட்டு சாப்பிட்டுவிடுவார்.  1897-ல் பிப்ரவரி மாதம் லெனினை சைபீரியகாட்டிற்கு மூன்று ஆண்டுகள்  ஜார் அரசாங்கம் நாடு கடத்தியது. சைபீரியா என்றாலே கொடூரம், அதிலும் சைபீரியாவில் பலநூறு கிலோமீட்டர் தூரத்தில் லெனினை சிறைவாசம் வைத்தனர்.  1897 மே மாதம் லெனின் சைபீரியாவின் ஜீஷென்கோயே கிராமத்திற்கு வந்தார். அங்குள்ள விவசாயிகளுடன் தொடர்பு கொண்டு அவர்களுக்கான வக்கீலாக செயல்பட்டு உதவினார்.(இங்கு லெனின் தங்கியிருந்த வீடு 1938-ல் நினைவகமாக மாற்றப்பட்டது). ஓராண்டு கழித்து குரூப்ஸ்கயாவும் கைது செய்யப்பட்டு லெனின் மணமகள் என்பதால் லெனின் தங்கியிருந்த கிராமத்திற்கு அனுப்பப்பட்டார். இங்குதான் இருவருக்கும் திருமணம் நடந்தது.

லேனா லெனின் ஆனார்
              1900-ம் ஆண்டு லெனின் விடுதலையாகி பீட்டர்ஸ்பெர்க் நகரம் வந்தபோது ஜார் அரசு மீண்டும் கைது நடவடிக்கையில் இறங்கியது. உலியானோவ்-வை காட்டிலும் பெரியவர் எவரும் புரட்சியில் இப்போது இல்லை என்று ஜார் மன்னனின் ரகசிய அறிக்கை கூறியது. எனவே லெனின் 1900 ஜீலை மாதம் ரஷ்ய எல்லையை கடந்து ஜெர்மனி வந்து சேர்ந்தார். சைபீரியாவில் இருந்தபோது கட்சியின் அமைப்பாளன் போன்று இருக்ககூடிய பத்திரிக்கை ஒன்றை துவங்கிட யோசித்தார். ஜெர்மனி வந்தவுடன் டிசம்பர் மாதம் அதற்கான பணிகளை துவக்கி, முதல் இதழை வெளியிட்டார். தீப்பொறி என்று பொருள்படும் இஸ்க்ரா என்று பெயரிட்டார். இப்பத்திரிக்கையில் பிளக்கனாவ் வோல்கா என்ற நதியின் பெயரில் கட்டுரைகளை எழுதினார். லெனின் லேனா என்ற நதியின் பெயரில் கட்டுரைகளை எழுதினார். இதுவே பிற்காலத்தில் லெனினாக மாறியது. இப்பத்திரிக்கை தீப்பொறி பெரும் தீயாக மாறியதால் ஆட்சியாளர்களின் அடக்கு முறையால் 1902-ம் ஆண்டு லண்டனுக்கம், 1903-ம் ஆண்டு ஜெர்மனிக்கும் மாற்றவேண்டிய நிலைமை ஏற்பட்டது. 1900 முதல் 1905-ம் ஆண்டுவரை வெளிநாட்டில் லெனின் தங்கியிருந்து புரட்சிப்பணிகளில் ஈடுபட்டார். 1905ம் ஆண்டு ரஷ்யாவில் புரட்சி வெடித்தது. லெனின் பீட்டர்ஸ்பர்க் சென்று புரட்சிக்கு நேரடியாக தலைமையேற்றார். இரண்டரை ஆண்டுகளக்கு பிறகு புரட்சி தோல்வி அடைந்தது. பெரும் படிப்பினைகளுடன் லெனின் பின்லாந்து சென்று தங்கினார். அங்கு ஜார் அரசின் படைகள் முற்றுகையிட்டபோது ஆபத்து நிறைந்த பனிப்பாறைகள் மத்தியில் பல மைல்கள் நடந்து தப்பி ஸ்டாக்ஹோம் சென்றார். லெனின் தனது தாயை மூன்றாண்டுகளாக சந்திக்கவில்லை. 1910-ம் ஆண்டு 75 வயது நிரம்பிய தாய் ஸ்டாக்ஹோம் வந்து மகனை சந்தித்தார். மகனின் உரையையும் தாயார் கேட்டார்.  அதன்பிறகு லெனின் தாயார் ரஷ்யாதிரும்விட்டார். 1917-ல் லெனின் ரஷ்யா திரும்பியபோது அவரது தாய் உயிருடன் இல்லை. 1916-ம் ஆண்டிலேயே அவர் மரணமடைந்திருந்தார்.
 
பச்சை அலுவல் அறை
               1917-ம் ஆண்டில் புரட்சி நடைபெற்று ஜார் ஆட்சி தூக்கியெறியப்பட்டு கெரன்ஸ்கி தலைமையில் இடைக்கால அரசு உருவாகியிருந்தது. எனினும் லெனின் அதிகாரம் அனைத்தும் மக்களுக்கே என்ற கோஷத்தை முன்வைத்து புரட்சியை தொடர்ந்தார். இக்காலத்தில் அடைக்கால அரசும் லெனினையும் மற்ற போல்ஷ்விக்குகளையும் வேட்டையாடியது. லெனின் பெட்ரோகிராட்டில் தொழிலாளர் குடியிருப்பில் புல் அறுக்கும் பின்லாந்துகாரன் போல் வேடமணிந்து தங்கினார். அரிவாள், கோடாரி, கவர்கோல், தூக்குகோணி என சகல கருவிகளுடன் வேடமணிந்து சுற்றினார். புதர்களில் ஒருஇடத்தில் சதுரமாக செடியை சுத்தம் செய்து அந்தப் பகுதியை தனது அலுவலகமாக பயன்படுத்தினார். இந்த இடத்தை லெனின் பச்சை அலுவல் அறை என்று வர்ணித்தார். இடைக்கால அரசை அகற்ற புரட்சி உக்கிரமாக நடந்தபோது லெனின் ஸ்மோலானியாவில் புரட்சி நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.  அக்டோபர் 25 இரவு இடைக்கால அரசின் குளிர்கால அரண்மனையை கைப்பற்ற லெனின் உத்தரவிட்டார். அரோரா கப்பல் வெடியுடன் தாக்கியது, இடைக்கால பூர்ஷ்வா அரசின் கடைசி அரணும் தகர்ந்தது. 1917 அக்டோபர் 25(நவம்பர்-7) சோசலிச அரசு நிறுவப்பட்டது. புதிய சோசலிச அரசை அழித்தொழிப்பதற்காக ஜெர்மனி, அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன் உட்பட 14 நாடுகள் கடும் தாக்குதலை தொடுத்தனர். உள்நாட்டு பிற்போக்குவாதிகளும் இதற்கு உதவினர். சோசலிச தாயகம் ஆபத்தில் இருக்கிறது என லெனின் மக்களக்கு அறைகூவல் விடுத்தார். தொழிலாளர்களும், இளைஞர்களும் போர்முனை நோக்கி விரைந்தனர். நாடே யுத்த களமாக மாறியது. இந்தச்சூழலில் 1918 ஆகஸ்டு 30ல் கப்ளான் என்ற பிற்போக்கு வாதி விஷம் தடவிய துப்பாக்கியால் லெனினை சுட்டான், லெனின் படுத்த படுக்கையானார். ஆனாலும் போர்முனை செய்திகள் அவரை குணமாக்கிக்கெண்டிருந்தது. செப்டம்பர் 12-ல் லெனின் சொந்த ஊரான ஸ்ம்பர்க்சை செம்படை மீட்டது. விரைவில் அடுத்தடுத்து ஏகாதிபத்திய படைகளை தோற்கடித்து, செம்படை வெற்றிகண்டது. லெனின் காயம் ஆறிய பிறகு சோசலிசத்தை கட்டுவதில் அக்கரை செலுத்தினார், பொருளாதார கொள்கைகளில் கவனம் செலுத்தினார், லெனனின் கடின உழைப்பும், துப்பாக்கிக்குண்டும் அவரது உடலை சேதாரப்படுத்தியது, கடுமையாக நோய்வாய்ப்பட்டு கோர்க்கி கிராமத்தில் இருந்தார். 1923 நவம்பரில் தொழிலாளர்களை சந்தித்து பேசினார். இதுவே தொழிலாளர்களுடன் அவரது கடைசி சந்திப்பாகும். 1924-ம் ஆண்டு ஜனவரி மாதம் 21-ம் தேதி மாலை 6 மணி 50 நிமிடத்தில் மூளையின் ரத்த நாளம் வெடித்து லெனின் உயிர் மூச்சு நின்றது. ஜனவரி 27 மாலை 4 மணிக்கு லெனின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. செஞ்சதுக்கத்தில் அவரது உடல் விசேஷமாக நிர்மானித்த சமாதியில் வைக்கப்பட்டது. சோவியத் மற்றம் சர்வதேச உழைப்பாளி மக்கள் தங்களது தலைவன், நண்பன், ஆசான், தோழனாகிய லெனினுக்கு ஐந்து நிமிடம் எல்லா வேலைகளையும் நிறுத்தி வைப்பதென பிரகடனம் செய்தனர். ஆம், அந்த ஐந்து நிமிடம் இயற்கை அசைவுகளைத் தவிர  ஆலைகள், வாகனங்கள், ரயில்கள், அலுவலகம் என அனைத்தும் அசைவற்று இருந்து தனது அஞ்சலியை செலுத்தினர்.

லெனின் 54 ஆண்டுகளே வாழ்ந்தார், அவரின் உயிர் இருந்த காலத்தில் ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு அசைவும் புரட்சி, புதுவாழ்வு என்பதை கட்டி அமைத்தது. 15-வது வயதில் துவங்கிய அவரது புரட்சி பயணம் இன்னம் நிறுத்தப்படவில்லை, லெனினியம் என்ற பெயரால் தொடர்ந்து நடைபோடுகிறது,                                      

3 கருத்துகள்:

  1. A fantastic collection has been given to us Mr.A.BAKKIAM. CONGRATULATIONS..

    But >>>one>>>word>>>the lengthy paras gives some negative feelings>>>all leftists select long, lengthy paras only..It is not comfortable to readers..They should understand the minds of readers..small, little paras will encourage the readers to go without any tired feelings... whatever may be the quality of articles. will the writer note this expectation please.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாக இருக்கிறது தோழர் பாக்யம்.

    பதிலளிநீக்கு
  3. அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள்.
    அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
    தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது. எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
    வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CREDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
    நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் ஈட்டுக் கடன்கள் மூலம் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், உலக நிதிச் சந்தையில் உண்மையான உற்பத்தி சம்பத்தப்பட்ட நிதி பரிவர்த்தனைகள் வெறும் 1 சதவீதமாகவும், 99 சதவீதமான பரிவர்த்தனைகள் பந்தய ஒப்பந்தங்களும் ஊக வணிகங்களாகவும் (FUTURES & DERIVATIVES) மாறிவிட்ட தற்போதைய சூழ்நிலைகளில் “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும் காலாவதியான தகவல்களினதும் குவியல்களாக மாறிவிட்டன.
    உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான சர்வவல்லமை பொருந்திய ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் "பணநாயகம்" அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடும்.
    அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

    - நல்லையா தயாபரன்

    பதிலளிநீக்கு

சீனாவின் விண்வெளி வளர்ச்சியும் அமெரிக்காவின் சிவப்பு பயமும்

உலக அரங்கில் சீனா-9 அ .  பாக்கியம் இன்றைய புவிசார் அரசியலில் அமெரிக்கா, சீனாவின் வளர்ச்சியை கடுமையாக அடக்கி விட துடிக்கிறது . சீன...